ஞாயிறு, 31 மார்ச், 2013

"வியர்வை "சிந்த எண்ணியவை

ரொம்ப நாட்களுக்குப்பின்னர்  நேற்று ஊர்  மக்கள்    ஒன்று சேர்ந்து பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர்.
அதிகாரிகளும்-காவல்துறையினரும் வந்து அதை வழக்கமான் பேச்சு வார்த்தைகளை நடத்தி பேருந்துகளை விடுவித்துள்ளனர்.
சிறை பிடிக்க காரணம் .18 மணி நேர மின்தடைதான் .இலங்கை பிரச்னையை முடக்கி விடும் வலிமை வாய்ந்ததாக மீண்டும் வந்துள்ளது.சிறை பிடித்த ஊரில் ஒன்றரை நாட்களாக மின்சாரம் தலையை காட்டவில்லையாம்.
இப்போதுதான் கோடை தலையை காட்டுகிறது.அதற்குள் தமிழகம் எங்கும் மின்தடை நேரம் 12 முதல் 18 மணி நேரம் என்றாகி விட்டது.
இன்னமும் காலமிருக்கிறதே .
வரும் வெயிற்கால இரவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஆனால் இதை கண்டு தமிழக அரசு மிரளவில்லை என்பதோடு.அதை பற்றிய கவலையும் கொண்டதாகவோ ,அதை தீர்க்க வழி செய்வதாகவோ தெரியவில்லை.
இந்த வரவு-செலவு அறிகையில் கூட  அத ற்காக ,மின் உற்பத்திக்கு புதிய திட்டங்களுக்காக ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நடக்கும் மின்தடை பற்றியோ,மக்கள் படும் அவதியை பற்றியோ ,அதனால் எழும் போராட்டங்களை பற்றியோ இதுவரை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
ஒரு வேளை தமிழகத்தில்  மின்தடை இருப்பதே அல்லது மின் வெட்டு இவ்வளவு கொடுமையாக மக்களை வியர்வை சிந்த துன்பப்பட வைப்பதையும் ,அதனால் பலர் வேலையை இழந்திருப்பதுமே அவருக்குத் தெரியாதோ?
அவர்தான் தான் செய்தித்தாட்களையே  படிப்பதில்லை என்று பெருமையாக சொல்லியிருக்கிறாரே. அப்படி அவர் தவறி படிக்கும் செய்திதா ட்களான தினமலர்,தினமணி களில் இந்த தடை பற்றிய செய்திகள் அதிகமாக தலை காட்டுவதில்லையே.
முன்பு மைனாரிட்டிக்காரர்கள் ஆட்சிகாலத்தில் காலை இரண்டு மணிநேரம் மின்தடை சொன்ன காலத்தில் வந்து சென்றதுக்கு மக்கள் எழுப்பிய போர் குரல் இப்போது மங்கி ஒலிப்பதும் காரணமாக இருக்கலாம்.
ஆற்காடு வீராசாமி என்றால் மின்துறை அமைச்சர் என்று ஊரெல்லாம் தெரிந்து அவரை திட்டியவர்கள் ,அன்றைய முதல்வரையும்  திட்டியவர்கள் இன்று காணாமல் போனதுக்கு காரணம்  தினம் மாறும் அமைச்சரவையில் இன்று மின்துறை அமைச்சர் யார் என்று திட்ட தெரியாமல் விழிப்பது கூட காரணமாக இருக்குமோ?
ஜெயலலிதா ஆட்சியில் ஏறியதும்  கூறியவைகளில் ஒன்று."வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி கருவூலத்தையே  காலி செய்து விட்டார்.மைனாரிட்டி முதல்வர் கருணாநிதி.அதில் ஊழல் நடந்திருக்கலாம்."என்பது.
இப்போது இன்றைய நிலவரப்படி மின்துறை அமைச்சராக இருப்பவர் நத்தம் விசுவநாதன் [என்று நினைக்கிறேன் ]கூறியதாக செய்தி தாளில் வெளியான செய்தி "அரசு மத்திய அரசிலும்,வெளி மாநிலங்களிலும் அதிக விலையில் மின்சாரம் வாங்கி இந்த மின்தடையை சரி செய்ய எண்ணுகிறது.ஆனால் மின்சாரம் கொண்டு வர மின் தடம் வழி அமைக்கப்படவில்லை.விரைவில் சரி செய்ய திட்டமிட்டுள்ளோம்.அப்போதும் திட்டம் மட்டும்தான் போட்டுள்ளார்களா?சரி செய்ய ஆரம்பிக்க வில்லையா?
இன்று மின்சாரம் கொண்டு வர தடம் இல்லை என்கிறார் மின் அமைச்சர் .அப்படி என்றால் கருணாநிதி அவர் ஆட்சிகாலத்தில் முறைகேடாக அதிக விலையில் வெளியெ வாங்கி மின்சாரத்தை எப்படி தமிழகத்திற்கு கொண்டு வந்து ஊழல் செய்தார்?
கண்டெய்னர் லாரிகளிலா?பெட்ரோல் டாங்கர் போன்ற லாரிகளிலா?
எப்படியோ அடுத்த தேர்தல் நெருங்கும் வரை இப்படியே சமாளித்து கடைசி நேரங்களில் மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கி இந்த ஏமாளி மக்களிடம் வாக்குகளை பிடுங்க்கிக்கொள்ளலாம் என்ற ஒரே நோக்கம்தான் இன்றைய ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.

மின் உற்பத்திக்கு மைனாரிட்டி கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் 14 வரை இருப்பதாகவும் அதில் இப்போது மூன்று திட்டங்கள் செயல்படுவதால்தான் கொஞ்சம் மின்தடை குறைகிறது.
மற்றவற்றை இந்த ஆட்சியாளர்கள் கருணாநிதி மீதுள்ள தீண்டாமையால் ஒதுக்கி குப்பையில் போட்டு விட்டதாகவும் தெரிகிறது.இப்போது செயல் படும் திட்டங்கள் 95% முடிந்ததால் வேறு  வழி  இல்லாமல் செயல்படுகிறது என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிகிறது.
 மத்திய அரசுடன் இணைந்து உடன் குடியில் செயல் பட வெண்டிய திட்டத்தை ஆட்சிக்கு வந்த உடன் நிறுத்தி தமிழக  அரசு மட்டும் செயல்படுத்தும் என்றும் அதற்கு 300 கோடிகள் ஒதுக்கப் படும்   என்று கூறிவிட்டு இன்றுவரை இரண்டாண்டுகளாக ஒரு பைசா கூட ஒதுக்காததும்.உடன் குடியில் இந்த திட்டத்துக்காக எடுக்கப்பட்ட-சீர் செய்ய ப் பட்ட நிலம் தற்போ து பழையபடி உடங்காடாக மாறி விட்டது என்றும் தெரிகிறது.இன்னும் சில நாட்களில் சிங்கம் புலி புகலிடமாக மாறி விடலா ம் என்றும் அஞ்சப்படுகிறது .
என்ன செய்தாலும் -எப்படி அடித்தாலும் இவர்கள் தாங்கிக் கொண்டு பழைய படியும் நமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்களிடம் மித மிஞ்சி இருக்கிறது.அது ஒரு வகையில் உண்மையும் கூட.பொடாவில் பிடித்து சிறையில் அடைத்து அசிங்கப்படுத்தினாலும்  தோட்டத்தின் வாசலில் பூச்செண்டுடன் நிற்பவர்கள்  நிறைந்த "வை"யம்தானே இது.
இரவுமுழுக்க  மின்தடையால் வியர்வை சிந்த  எண்ணியவை [மின்தடை நேரத்தையும்தான்.]
------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 30 மார்ச், 2013

கட்ஜு க்கு என்னவாயிற்று....?

 -----------------------------------------

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதுவரை கூறிய கருத்துக்கள் பெரும்பாலான  இந்தியர்களின் கருத்துக்களுடன் ஒத்து போவதாக இருந்தது.ஆனால் இப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னாள் நீதிபதியாக இருந்தவரின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .சஞ்சய்தத் பெற்ற தண்டனை பற்றிய பற்றிய கருத்துக்கள் முரணானவை.
சில மாதங்களுக்கு முன் 90 சத இந்தியர்கள் முட்டாள்கள் எனவும், 90 சத நீதிபதிகள் முட்டாள்கள் ‌எனவும் கருத்து தெரிவித்தார்.
 பின்னர் காங்., மற்றும் பா.ஜ. முதல்வர்களை விமர்சித்தார் . 
மார்க்கண்டேய கட்ஜு 
இப்போது மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அதையே பலவழிகளில் கூறியும் வருகிறார்.

இப்போது ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றில் :-

" நான் பேசும் கருத்துக்கள் விளம்பரம் தேடுவதற்காக அல்ல. மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
 நாட்டில் எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான். [முன்பு இந்த சதவிகிதம் 90 ஆக இருந்தது.]
தேர்தலில் நான் ஓட்டளிக்கமாட்டேன். ஏனென்றால் எனது ஒரு ஓட்டினால் எந்த பிரயோஜனமும் இல்‌லை. விளம்பரம் தேடிக்கொள்வதற்காக [?]நான் எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை. 
ஆனால் அது போன்ற சூழ்நிலை என்னை தொடர்ந்து வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும். நாட்டில் நடந்து வரும் தற்போதைய சூழ்நிலையை வேடிக்கை பார்க்க நான் செவிடனோ, ஊமையோ அல்ல.
 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய்தத் பெரும் மனவருத்தத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் அவருக்கு ஆறுதலாக இருக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. அவரது தந்தை சுனில் தத் முன்னாள் காங். எம்.பி.யாக இருந்தார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதுவும் செய்யவில்லை. "
என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தண்டனை விதிக்கப்பட்டால் மனவருத்தம் கொள்ளாமல் எப்படி இருப்பார்.?அதற்காகத்தானே தண்டனையே வழங்கப்படுகிறது.மார்க்கண்டேய கட்ஜு சஞ்சாய் தத் குற்றம் இழைக்கவில்லை என்கிறார்.மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது,ஆயுதங்களை மறைவாக ஒளித்து வைக்க உதவியது,வெடி பொருட்களை வைத்திருந்தது எல்லாம் தேச பக்தி செயல்களா?மும்பையில் குண்டு வெடிப்பில் என்ன காரணத்தினால் தான் இப்படி உடல் சிதறி சாகிறோம் என்று தெரியாமலேயே உயிரை விட்டா நூற்றுக்கணக்கானொர் சிந்திய ரத்தத்தில் சஞ்சய்தத் கைகளும் கறை படிந்திருப்பது ஏன் கட்ஜுக்கும் ,இங்குள்ள நடிகர் ரஜின்காந்துக்கும் தெரியவில்லை.
இப்போது தண்டனையைப்பார்த்து அழுவதாலும் ,மனவருத்தம் அடைவதாலும் சஞ்ச்சய்த்துக்கு விடுதலை அளிக்க வெண்டும்.அவர் அப்பா காங்கிரசு மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பதாலும் விட முடியுமா?
அதுவும் நீதியை கட்டிக்காத்த இடத்தில் இதுவரை அமர்ந்திருந்தவர் சொல்லுகிற வசனமா இது.?

எதற்கென்று தெரியாமல்,யார் என்று தெரியாமல் வீட்டை வடைகைக்கு கொடுத்த பொருளை கொண்டு சென்ற பேரறிவாளன் போன்றோருக்கு தூக்குத்தணடனை விதிக்கப்பட்டு நாளை என்னிக்கொண்டிருக்க்கிரார்களே அவர்களை பற்றி இந்த ரஜினியும்-கட்ஜும்இதுவரை கருத்து கந்தசாமிகளாக மாறாததுஏன் ?  
சஞ்சய் தத் தெரிந்தே தவறு செய்துள்ளார்.கையுங் களவுமாக மாட்டியும் உள்ளார்.ஆதாரங்களும் உள்ளன.குற்றமும் நிருபிக்கப்பட்டுள்ளது.ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளெ உள்ளனர்.அவர்கள் கையும் களவுமாக மாட்டவும் இல்லை.
நடிகர் என்றால் ஒரு வழக்கு அப்பாவி மக்கள் என்றால் ஒரு வழக்கா?கசாப்,அப்சல் குருக்கள் கூட எதோ லட்சியத்துக்காக் போராடுவதாகத்தான் சொல்லி குண்டுகளை வேடிக்கச்செய்தார்கள் அவர்களை தூக்கில் போட்டது தப்பான செயலா?
இந்திய சுதந்திரத்துக்காக ,இந்தியமக்களை கொன்று குவித்ததற்காக குண்டு வீசிய பகத்சிங்-சுகதேவ்-ராஜகுருவை கூட இங்கு காரணமே கேட்காமல் தூக்கில்தான் போட்டார்கள்.அதற்கு இங்கிருந்த காந்தியும் துணைதானே போனார்.விடுதலைப்போராட்ட வீரர்களுக்கே இந்த தண்டனை .அப்படியென்றால் தீவிரவாதிகளுக்கும் அதற்கு துணை போன-போகிறவர்க ளுக்கும் எப்படிப்பட்ட தண்டனை வழங்க வே ண்டும்.

----------------------------------------------------------------------------------------------

வைரஸ்களிடமிருந்து தப்பிக்க....  

 நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், அந்த தகவல்களை தேவையான நேரம் பார்வையிடவும் -பயன்படுத்தவும் ,தகவல்களை எளிதாக  எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனை வசதி மிக்க பென் டிரைவகளை கணினி வைரஸ்கள் எளிதாக தாக்கி விடுகின்றன.பலர் நாம் கொடுக்கும் பென் டிரைவ்களை கையால் வாங்கி தங்கள் கணினிகளில் பயன்படுத்த மறுக்கிறார்கள். பென் டிரைவ்களை    வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது .
உங்களையும் உங்கள் பென் டிரைவ்களையும் காக்கும் ஒரு மென்பொருள் பாதுகாக்கிறது.
மேலும் தொடர 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நச்சு ஆலைக்கு மூடு விழா?

" தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 ஸ்டெர்லைட்  நச்சு ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு அடிக்கடி சட்டவிரோதமாக வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடிகோட்டாட்சியருக்கு  உத்திரவிடப்பட்டது.
அவர் பரிந்துரை மற்றும் நகர மக்களின் கடுமையான் போராட்டம் காரணமாக  ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்தார்.அதை  அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது.. முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்ட து.
 முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹோலி "சாயம் பூசிவிளையாடி ன களைப்புதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு நடப்பு பார்க்கிற மாதிரியா இருக்கு?

வெள்ளி, 29 மார்ச், 2013

கல்யாணம் நின்னு போச்சு...

குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து வளங்களும் பெற்று மக்கள் வாழ்வதாகவும் அதனால் அவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி வழிபாடுகள் நடந்து வருகின்றன.அமெரிக்காவே அவரின் ஆளும் திறமையில் மயங்கி தங்கள் நாட்டுக்கு வரக்கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
வினவு 
ஆனால் அவர் தனது திறமையை காட்டி ஆளும் குஜராத்தில் பல இளைஞர்கள்  திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.அதற்கு காரணம் குஜராத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடுதான்.
குடிநீர் தட்டுப்பாடு- அதனால் இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிப்பதும் தெரிய வந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இவர்கள் தாகத்தை போக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 அம்ரேலி மாவட்டத்தில்  டிடன் கிராமமும் உள்ளது. அங்கு  2012ம் ஆண்டு 56 சதவிகித மழை மட்டுமே மழை பெய்ததால் நிலத்தடி நீர் வற்றி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
தண்ணீருக்காக மக்கள் தினசரி போராடி வருகிறார்கள். நகரின் முக்கிய இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த நேரம் தான் குடிநீர் விடப்படுகிறது. சில இடங்களில் 500 லிட்டர் குடிநீர் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பார்த்து வாரக்கணக்கில் ஆகிறது என்று மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த கிராமத்தில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு குடிநீர் வழங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது.
 மக்கள் குடிநீர் கேட்டு போராடுவதால்  அதிகாரிகளுக்கும்- மக்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்படுகிறது.  அம்மோதலால் தண்ணீர் வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் தண்ணீரை தேடி அலைகிறார்கள்.
இங்குள்ள பெண்கள் தினசரி 5 கிலோமீட்டர் நடந்து சென்று பக்கத்து கிராமங்களில் உள்ள வற்றிபோன கிணறுகளில் இருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் எடுத்து தலையால் சுமந்து வருவது பரிதாபமாக உள்ளது.
இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மற்ற பகுதிகளில்  இடங்களில் உள்ளவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
படம்:தீக்கதிர்.
 ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 4 இளைஞர்களின் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியும்  விட்டார்கள்.
இந்த பரிதாப நிலை குஜராத் இளைஞர்கள் மத்தியில் அரசு மீது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் மோடியை குற்றம் சொல்லி பயன் இல்லை.
இன்று குஜராத்தில் உள்ள நிலைமை விரைவாக மற்ற மாநிலங்களுக்கும் பரவ காத்திருக்கிறது.
இனி தண்ணீரால்தான் மோதல்களும்,கலவரங்களும், போர்களும் வரவிருக்கின்றன.
தங்கத்தை விட தண்ணீர் விளைமதிக்கக் கூடிய பொருளாகிக்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் நீர் பிடிப்பு பகுதிகள்,குளங்கள்,ஏரிகள் ,குட்டைகளை அரசும்,மக்களும் தூர்த்து மனைகளாக்கி பணம் சம்பாதித்து வருவதுதான்.சுற்றுப்புற சூழலை கெடுத்துக்கொண்டு மழை பெய்யும் அளவை குறைத்து விட்டதும்தான்.
பெய்கின்ற மழை நீரையும் சேர்த்து நிலத் தடி நிராகமாற்றாதது அரசு முதல் மக்கள் வரையிலான தவறு.
அதுவும் போக ஸ்டெர்லைட் போன்ற விட வாயு வெளியிடும்,நிலத்தையும் இருக்கும் குடி நீர் ஆதாரங்களையும்  கெடுக்கும்  நாசகார ஆலைகளை தனிப்பட்ட மனிதர்களின் நலனுக்காக அனுமதித்து மக்கள் நலனையே பலி கொடுப்பதும்தான்.
தெரிந்தே அரசு இத்தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.கிடைக்கும் தண்ணீரையும் தனியார்களிடம் ஒப்படைத்து காசு பார்க்கும் ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு கல்யாணத்தையும்-கருமாதியையும் நல்லபடியாக செய்ய எண்ணுவது மக்களின் தவறு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

"இந்தி" [ய] ஆட்சிப் பணி

இ.ஆ.பணி [ஐ.ஏ.எஸ்.] இ.கா.ப.[ஐ.பி.எஸ் ]அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையம் [யு.பி.எஸ்.சி.], புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
 அதில் ஆங்கிலம்-இந்தி மொழிகள் தவிர்த்து மற்ற இந்திய மாநில  மொழியில்,ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர தேர்ந்தெடுக்கும் மொழியை குறைந்தபட்சம் 25 பேராவது தேர்ந்தெடுத்திருந்தால்தான் தேர்வு எழுத இயலும்.
தங்கள் தாய் மொழி  இலக்கியத்தை  தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும்.
 அனைத்து தேர்வாளர்களும்,ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. இதற்கு இந்தியாவில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிராத பகுதிகளில் இருந்து கடும் எதிப்பு கிளம்பி மக்களவையில் எதிரொலித்தது.
இந்த புதிய முறையை கொண்டுவர காரணம் என்ன?
மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர்கள்  வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மீதி ஒருவர் மட்டும் தென் பகுதியை சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்.மற்ற முக்கிய மொழிகள் மாநி லங்களைச் சேர்ந்தவர்களோ - தமிழ் நாட்டிலிருந்தோ உறுப்பினர்  ஒரு வரும் இல்லை. 
இதை  தருமபுரி மக்களவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில்  எடுத்துச் கூறி "இந்த ஒன்பது இந்திக்காரர்கள் மத்திய தேர்வானையத்தையே இந்திக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கவும் அவர்கள் மட்டுமே இதில் பலன் அடையும் படியும் மாற்றங்களை செய்கிறார்கள்.மற்ற தென் மாநிலங்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும் ஒதுக்குகிறார்கள்."
என்பதையும் சுட்டிக்காட்டியுஅள்ளார். 
இது இந்திய அளவில்  முக்கியமான பிரச்சினை.
 இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த இந்திய ஆட்சிப்பணியாளர்கள்  [அய்.ஏ.எஸ்.] போன்ற பதவிகளுக்கான தேர்வு செய்யும் இடத்தில்  பெரும் பாலும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.
இந்தி பேசுவோர் ஆதிக் கத்தில் இந்த ஆணையம் இருப்பதால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண் டவர்களுக்குச் சாதகமான முறையில்  தேர்வு முறைகள் சிந்திக்கப்பட்டு செயல் வடிவமும் அளிக்கப்படு கிறது.
 புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில்  உள்ளவர் கள் தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட் டு இப்போது கடும் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக இருக்கிறார்களா?
இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டும் தங்கள்  திறமையால் புகழ் பெற்றுள்ளார்களா?
வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். ஆனால் அதில் இந்தியில் தேர்வு எழுதி இ.ஆ.ப பணியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் ஆங்கிலத்தில் பேச-எழுத தெரியாமல் முழிக்கிறார்கள். தடுமாறுகிறார்கள்.மற்ற நாடுகளில் பணி புரிய பயப்படுகிறார்கள்.இன்றைய நிர்வாக சீர்கேடுகளுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத மாநிலங்களிலி ருந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.அந்த நிலைதான்  பெரும்பாலும் இந்திக்காரர்கள் உறுப்பினராக இருக்கும்  தேர்வாணையத்தின் மற்ற இந்திய மொழிகளை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க காரணம்.  இது போன்ற பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் உரிய பங்கு இருக்க வே ண்டும்.
அது தான் பல  மொழிகள்-பல இனங்களைக்கொண்ட இந்தியாவுக்கு  அவசியம்.

வியாழன், 28 மார்ச், 2013

சிங்கள விஷ[ம]ம்இலங்கை ராஜபக்சேக்கு எதிரான உலகத்தமிழர் எழுச்சி இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.
அதனை தனது குள்ளநரி தனத்தால் இந்திய ஒற்றுமைக்கே உலை வைக்கும் விதமாக கையாலத்துவங்கி விட்டது.
அதன் விஷமப்பிரச்சாரத்தை இந்தியாவில் தூதர் என்பவர் மூலமே ஆரம்பித்து விட்டது.
டெல்லியில் உள்ள இலங்கைக்கான் தூதர் வட இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தனிப்பட்ட கவனத்துக்கு என்று அனுப்பியுள்ளார்.
"இலங்கை மக்கள்தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவழியினர் எனக் கருதி கவலைப்படக் கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவழியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும் .
இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களின் பூர்வீகக் குடிமக்கள்.
அசோக சக்கரவர்த்தி ஆட்சி நடைபெற்ற போது , அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே  வட இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இருந்த உறவுகள் பதிவாகி உள்ளன. அப்போது புத்தமதத்தை பரப்ப வட இந்தியாவில் இருந்து சென்ற வட இந்தியர்கள்தான் இன்று சிங்களர்களாக உள்ளனர்.
அதன் பின்னர் வந்த முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதை தற்போது சிங்கள மக்கள் புதுப்பித்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் இலங்கையர்கள் இந்தியா வந்து செல்கின்றனர். வட இந்தியாவுடன் வரலாற்று தொடர்புள்ள இனம்தான் சிங்களர்.
கரிய வாசம் 
இந்தி, வங்காளி, ஒரியா ஆகியவற்றின் மூல மொழி சமஸ்கிருதம். அதுதான் சிங்களத்துக்கும் மூலம்.அதை சிங்களரால் பேசவும் எழுதவும் முடியும்."
என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு.
இதைத்தானே இலங்கையில் செல்வநாயகம் முதல் மாவீரன் பிரபாகரன் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்.வந்தேறிகள்தான் சிங்கள காடையர்கள் என்று. 
வங்கம்,ஒரிசா,பீகார் என்று பிழைக்க வந்தவர்கள் தான் இவர்கள்.அவர்களின் ஒற்றுமையும் கலப்பும்தான்  இவர்கள் ஒரு புது இனமாக -சிங்களனாக வடிவெடுத்து விட்டன ர்.
அனால் பழைய வரலாறை சொல்லி வட இந்தியர்களிடம் ஆதரவு தேடுவது  தமிழர்களை கொன்று குவித்ததற்கான பாதுகாப்பு தேடி எழுப்பப்படும் பிரசாரம்.ஆனால் இந்திய அரசும் ,வட இந்தியத் தலைவர்களும் இப்போதும் சிங்கள வெறியர்களுக்கு ஆதரவாகத்தானே செயல்படுகிறார்கள்.
இந்த கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் வட இந்திய முதல்வர்களுக்கும்-அங்குள்ள எதிர்கட்சித்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அசோகர் காலத்தில்தான் இலங்கையில் வடஇ ந்தியர்கள் அதாவது இன்றைய சிங்களர்கள் இலங்கையில் பிழைக்கப் போனது  வெளிச்சத்துக்கு வந்து விட்டது.அதற்கு முன் இருந்தே தமிழன் இலங்கையை ஆண்டு வந்ததும் சிங்களன் வாயாலே வெளி வந்து விட்டது.
ஒண்ட வந்த பிடா ரி ஊரில் உள்ளவர்களை விரட்டிய கதை உலக்குக்கு எடுத்துகாட்டப்பட்டு விட்டது.
கரிய வாசமும் இலங்கை அரசும் இந்த பிரச்னையை இப்போது கையில் எடுத்தாலும்.அதனால் தமிழர்களுக்கு ஒரு துன்பமும் புதிதாக வந்து விடப்போவதில்லை.
காரணம் வட இந்தியர்கள் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.
ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்து தமிழர்கள் மனதை நோக அடித்தவர்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இலங்கைக்கு எதிராக மக்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரக்கூட விடாமல் வட இந்திய கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது சமீபத்திய செய்திதான்.
இந்தியாவில் தமிழன் தனித்தீவகத்தான் உள்ளான்.
காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த குடி மக்கள் இன்று  சொந்த நாடற்ற இனமாக உள்ளதுதான்.இறக்கும் தமிழ் நாட்டையும் வட இந்தியனிடம் அடகு வைத்து அவனின் வென்கொற்றக்  குடையின் கீழ்தான் காலம் தள்ளுகிறான்.தமிழன்.
கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் தமிழர்களுக்கு எதிராக பயன் படுவது போல் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான உரிமையையும் ஒரு பக்கம் எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனாலும் ஒன்றுபட்ட இந்தியாவில் தூதராக இருந்து கொண்டு ஒற்றுமையை சிதைக்கும் கரிய வாசம் போன்றவர்கள் ஒரு நாட்டின் தூதராக இருக்க உரிமை இழந்து விட்டார்.அவரை வெளியெற்றுவதுதான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு நல்லது.புதன், 27 மார்ச், 2013

சரியான வழியல்ல .....,

'மாணவர்கள் போராட்டம் இதுவரை சரியான வழியில் தான் பொய் கொண்டிருக்கிறது.ஆனால் அதை திசை திருப்பி வன்முறையால் தடம் மாறி சென்று விடும் அபாயம் இப்போது வருகிறது.அப்படி சென்றால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்ட மரியாதை மரியாதையை இழந்து விடும்.
காங்கிரசுக்காரனை எதிர்த்து போராடலாம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் திசைமாறிட செய்திடக்கூடாது.

பேனர்களை கிழிப்பது மாணவர்களிடம் காங்கிரசின் மேல் இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.அதை வெளிக்காட்டும் முறையில் சில கட்சியினரால் குறிப்பாக நாம்தமிழர் கட்சியினரால் வன்முறை பாதையை மா ணவர்களுக்கு காட்டி வருவது பயத்தை தருகிறது.
காரணம் இருபக்கமும் கூர்மையான ஆயுதம் வன்முறை.
அதானால் மாணவர்கள் கைது .அதனால் அவர்கள் போராட்டத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.காவல்துறை -அரசு நடவடிக்கைகள் என்று பல வழிகளில் போராட்டம் சென்று அதன் நோக்கமே சின்னாபின்னமாகிவிடும்.
ஈழப்பிரச்னையை மட்டுமே வைத்து தங்கள் அரசியலை செய்து வருவோர் மாணவர்களை தங்கள் கையில் எடுக்க இப்படி இளம்வயது வேகத்தை வன்முறை -பரபரப்பு என்று கொண்டு சென்று விடுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது போராட்ட நோக்கமான ஈழத்தமிழர் நலமும்,மாணவர்களின் எதிர்காலமும்தான்.
மத்திய அரசை வழியுறுத்த இதுவரை மாணவர்கள் கூறிய வரிகொடா இயக்கம்,மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை.பூட்டுதல்.
ஆங்காங்கே மத்திய காங்கிரசு அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்துவது சரியான முறைகள்தான்.
ஆனால் தமிழனாக இருந்தாலும் காங்கிரசு கட்சியில் இருப்பதால் ஈழப்பிரச்னையில் தவறாக நடந்துவரும் தமிழர்களுக்கு உணர்வைஉண்டாக்கும் விதம் நடந்து கொள்ளுங்கள்.
வரும் தேர்தலில்  காங்கிரசு என்று கூறிவாக்கு கேட்டு வரும் உணர்ச்சியற்ற ஜென்மங்களை  தெருவில் நுழைய விடாமல் துரத்துங்கள்.உங்கள் பகுதியில் அதற்கு ஆதரவாக ஒரு வாக்குகூட விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த மனித தன்மையற்ற காங்கிரசுடன் கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் அதற்கும் தேர்தல் முன்பணத்தை[டெபாசிட்] வாங்கமுடியாத அளவு செய்யுங்கள்.அதற்காக உழியுங்கள்.உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்கள் பெற்றொர்,உறவினர்கள்,தெரிந்தவர்கள் வாக்குகளையும் மொத்தத்தில் பதிவாகும் வாக்குகள் ஒவ்வொன்றையும் காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளாக பதிவாக ச்செய்யுங்கள்.
பின்னர் பார்ப்போம் .காங்கிரசுக்கு விழும் மரண அடி அடுத்து மத்தியில் வரும் ஒவ்வொரு அரசுக்கும் தமிழர்கள் கற்று தந்த பாடமாக அமையட்டும்.
இந்த முறையால் முன்பு இப்போதைய முதல்வருக்கு மக்களவை தேர்தலில் தமிழம் 40க்கு 40 என்று பாடம் கற்பித்ததும்,அவரை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவில் இல்லையா?
மனித தன்மை-யோசனை இல்லாமல் காங்கிரசுக்காரனிடம் மோதுவதும் ஒன்றுதான் உணர்ச்சியற்ற குட்டிச்சுவரில் மோதுவதும் ஒன்றுதான்.வலி மோதியவனுக்குத்தான் .குட்டி சுவர் அசையாமல்தான் இருக்கும்.
மனிதாபிமானமும்-தமிழன் என்ற உணர்வும் இருந்தால் சோனியா போன்ற தமிழின விரோதிகள் செய்யும் இத்தனையையும் கண்டபின்னரும் காங்கிரசில் இருப்பானா? அப்படி இருப்பவனும் மனிதனாக இருப்பானா?
கடைசியில் மாணவர்களுக்கு  சொல்ல விரும்புவதெல்லாம் சில பரபரப்பு அரசியல்வாதிகள் கையில் சிக்கி வன்முறை பாதைக்கு திரும்பி விடாதிர்கள்.இந்த வயதில் அது கவர்ச சியான ஒன்றாகக் கூட இருக்கும்.இது போன்ற பேனர் கிழிப்பு,கல்வீசுதல் போன்றவற்றை அக்கட்சியினரையே செய்து கொள்ளச்சொல்லிவிடுங்கள் .கைகளில் நீங்கள் கற்களையும்-கம்புகளையும் தொடாதீர்கள்.அது உங்களை எங்கேயோ கொண்டு சென்று விடும்.இதுவரை உங்களின் மற்றைய போராட்டங்கள் ,பேருந்து நாள் கொண்டாட்டங்கள் உங்களை பற்றி மக்கள் மனதில் உருவாக்கியிருந்த பிம்பங்கள் இப்போதைய போராட்டங்கள் மூலம் கரைந்து உங்கள் மீது மதிப்பையும்,நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறது.
திருச்சி சம்பவம் உங்கள் போராட்டத்தையும்-கூடவே  வாழ்க்கையையும் திசை மாற்றிவிடும்.
திருச்சியில் நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

"தமிழகத்தில்  முன்னொடி யாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையைதேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் கலைத்து முதல் விதையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்."
இதையே அனைத்து ஊர்களிலும் வழி மொழிவோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும்
 ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.
http://www.world-english.org/ 


நடிகை சுகுமாரி .......,

தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகை சுகுமாரி மரணமடைந்தார்.
அவருக்கு வயது 74.
சென்னை தி.நகரில் வசித்து வந்தார் சுகுமாரி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விளக்கேற்றும்போது தவறுதலாக அவர் புடவையில் தீப்பற்றியது. பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
suran
 இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை சுகுமாரி இறந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி உட்பட பழம்பெரும் நடிகர், நடிகைகளுடன் நடித்ததோடு இந்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துவந்தார்.
கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தினார்.
ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
நாகர்கோவிலில் 1938ல் பிறந்த சுகுமாரி, ‘ஓரிரவு‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பீம்சிங் பிரபல திரைப்பட இயக்குனர். தமிழில் பல படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார்.
சுகுமாரி மலையாளப்படங்கள் பலவற்றில் நடித்து கேரளா மக்களின் வரவேற்பை பெற்றவர்.

 ‘பூவெல் லாம் உன் வாசம்’,  ‘அலைபாயுதே’,  ‘வேட்டைக்காரன்’,  ‘யாரடி நீ மோகினி’ படங்களிலும்  நடித்துள்ளார்.

வேடங்கள் கலைகிறது.

இந்தியாவிலேயே  முதன் முறையாக பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள்  நடந்ததாக உலகையே அதிர வைத்த முறைகேடுகளின் ராசா இப்போது புதிய வழியில் நடைபோடுகிறது.அதில் இதுவரை உத்தமர்களாகவும்-புனிதர்களாகவும் வேடமணிந்தவர்கள் வேடங்கள் கலைகிறது. களைந்து விடாமல் இருக்க குற்றம் சாட்டப்பட்டவரை வாயைத்திற்க்கவிடாமல் செய்ய முயற்சிக்கிறார்கள் .
ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்த  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகளை பிரதமர் அலுவலகம் முன்னதாகவே  ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு முறைகேடுகளும் மன்மோகன் சிங் ,சோனியா ,ப.சிதம்பரம் உட்பட முக்கிய காங்கிரசு தலைகள் பங்களிப்புடனெ நடந்திருப்பதும் , இம்முறைகேடுகளில் ஆ.ராசா வை விட அதிகமான் பங்கு இருப்பதும் ஆ.ராசா.,திமுக இதில் பலியாடுகள் தான் என்பதும் இப் போ து வெட்ட வெளிச்சமாகி விட்டது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் தனியார் தொலைபேசி நிறு வனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ற முடிவை 2008ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான திமுகவின் ஆ.ராசா மேற்கொண்டார்.

இந்த ஊழல் ஒதுக்கீடு நடை பெறுவதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி கள் ராசாவின் பல செயல் பாடுகள் மீதான கோப்புகளை ஆதரித்துள்ளனர்.பல வழிகாட்டுதல்களையும் செய்துள்ளனர்.

2008ம் ஆண்டு எடுக்கப் பட்ட இந்த முடிவுகளே பின் னரும் கடைப்பிடிக்கப்பட்டுள் ளன என்று 2012ம் ஆண்டு பிப் ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

நாட்டின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) மதிப்பீடு செய்த ஆய்வின்படி ரூ.1.76 லட்சம் கோடியை ஆ. ராசா, அவரது மூத்த அதிகாரி கள் மற்றும் தொழிலதிபர்கள் கிரிமினல் சதி செய்து மோசடி செய்துள்ளனர் என மத்தியக் குற்றப் புலனாய்வுக்கழகம் (சி பிஐ) குற்றம் சாட்டியது.


ஆ.ராசா பிரதமருக்கு எழு திய கடிதங்கள் குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக இருந்த நிலையில், அதனை உடனடி யாக ஆய்வு செய்யவேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிவைத்தார்.

ராசாவின் இந்தக் கடிதங் களின் விவரங்களை 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று நடந்த 2ஜி அலைகற்றை ஒதுக் கீடு ஊழலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அப்போது மேற்கொள்ளப் பட்ட முடிவுகள்தான் பொது நலனுக்கு எதிரானதாகவும், நம் பிக்கைகளை மீறுவதாகவும் உள்ளன என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிரதமர்அலுவலகத்தின் கோப்பு எண் 180/31/சி/26/ஓ.எஸ். இ.எஸ்.ஐ. பாகம் 4ல் 2007ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அறி வுறுத்தப்பட்ட ‘முதலில் வரு பவர்களுக்கு முன்னுரிமை’, கொள் கையை லாவகமாக கடைப் பிடிக்கும் நோக்கத்துடன், பிர தமருக்கு தகவல் தெரிவிக்க டிசம் பர் 26ம் தேதியன்று ராசா எழு திய கடித விபரம் உள்ளது. இந்த கடித விபரத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பிர தமர் அறிவுறுத்தினார்.

பின்னர் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டி.கே. ஏ.நாயர், பிரதமர் அலுவலக செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் ராசா கடிதத்தின் முடி வால் ஏற்படும் விளைவுகள் மற் றும் பரிந்துரைகள் குறித்து விவா தித்தனர்.

2ஜி ஊழல் நடைபெறு வதற்கு முன்னர், ஆ.ராசா பரிந் துரைத்த அம்சங்களில் 4 பரிந்து ரைகளை பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஆ.ராசாவின் நடவடிக்கை யில் பொதிந்துள்ள பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளை எச்சரிப்பது தொடர்பாக பிர தமர் உறுதியற்ற தன்மையில் இருந்துள்ளார். மேலும், ராசாவை கட்டுப்படுத்தவும் தவறியுள்ளார்.
2ஜி ஊழல் நடைபெறுவ தற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக புலோக் சாட்டர்ஜியும் தொ லைத் தொடர்புத்துறையின் புதிய செயலாளராக வந்த சித் தார்த் பெகுராவும் ஆ.ராசாவின் முடிவுகள் தொடர்பாக விவாதம் நடத்தியுள்ளதும் இந்தக் கோப்பு கள் மூலம் தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான ஆய்வு விவரமும், பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய 6 பக்க கடிதமும் இந்த கோப்பில் ‘மிகவும் ரகசியம்’ என்ற குறிப்புடன் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலை வருமான பிரணாப் முகர்ஜியின் குறிப்பும் இடம்பெற்றிருந்தன. பிரணாப் முகர்ஜி தலைமையி லான அமைச்சர் குழுவின் குறிப்பு 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியிட்டதாக இருந்தது.

2007ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று பிரதமர் அலுவலகத் தின் மூத்த அதிகாரியாக இருந்த சாட்டர்ஜி, கோப்பின் 1/என்ற பக்கத்தில் எழுதிய ரகசிய உள் குறிப்பில், “முதன்மைச் செயலா ளர் முடிவுப்படி, நான் வெளி யுறவுத்துறை அமைச்சர் அளித்த குறிப்பை முழுமையாக பார்வை யிட்டேன். மேலும் சி மற்றும் ஐ.டி.துறை அமைச்சர் குறிப்பை யும் பார்த்தேன். அதேபோன்று தொலைத்தொடர்பு விவகாரம் தொடர்பான முந்தைய குறிப்பும் பார்வையிடப்பட்டது. இந்த ஆவணங்கள் கீழே தரப்பட்டுள் ளன.

இது தொடர்பாக பரிந்துரை களின் விபரத்தை தயாரித்துள் ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் இந்த 4 பக்க ஒப்பீடு, புதிய உரி மங்கள் பற்றி கையாளுவதாக உள்ளது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில் 2ஜி ஒதுக்கீடு முடிவுகளில் பிரதமர் அலு வலகம் ஒப்புக்கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்தான், தனது முடிவு ஆலோசிக்கப்பட்டே எடுக்கப்பட்டதாக ஆ.ராசா கூறி வருகிறார்.

2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிபிஐ அளித்த குற்றப்பத் திரிகை ஆ.ராசாவை குற்றம் சாட் டியிருக்கிறது.

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட் சம் கோடி ஊழல் நடைபெற்ற தாக சிஏஜியின் 2010ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று தந்த அறிக்கை அடிப்படையில் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி யன்று 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீடு தரப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அலைக்கற்றை ஒதுக்கீட் டுக்கு நுழைவுக்கட்டணம் திருத் தப்படாமல் சாதாரண கட்ட ணத்தில் அளிக்கும் முடிவுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது எனவும் தற் போது தெரியவந்துள்ளது.

ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பின்னணியில் நடைபெற்ற தகவல்களை பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ . ராசா கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
 இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி தவறான தகவலை கூறியதாகவும் அவர் அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
 2ஜி ஸ்பெக்டம் ஒதுக்கீடு விவகாரத்தில் எழுந்த முறைகேடு தொடர்பான ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ கடந்த 23-ம் தேதி கூறினார். அந்த அறிக்கையில் ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கத்தைப் பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 
ஆ. ராசா என்ன கூறினார் என்பதை வெளியிட சாக்கோ மறுத்து விட்டார்.ஆனால் சாக்கோவுக்கு ராசா எழுதிய 17 பக்க கடிதத்தின் விவரம் வெளியெ  வந்துள்ளது.
 சாக்கோ எழுப்பிய ஐந்து கேள்விகளுக்கான பதிலை ஐந்து பக்கங்களில் தனியாகவும், அட்டர்னி ஜெனரலின் வாக்குமூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பின்னணியை விவரிக்கும் நிகழ்வுகளை 12 பக்கங்களிலும் ராசா விவரித்துள்ளார்.
 2007-ம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் கேட்டும், கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக் கோரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பான வழக்கை மத்திய தொலைத்தொடர்பு வழக்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (டிடிசாட்) 2007 அக்டோபரில் விசாரித்தது. சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் (கூலம் இ. வாகனவதி) ஆஜராகி வந்தார். அந்த அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து, அப்போதைய வெளியுறவு அமைச்சர் (பிரணாப் முகர்ஜி), சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் 2007 டிசம்பரில் ஆலோசனை நடத்தினேன். செய்திக்குறிப்பில் திருத்தம் அப்போது தனது கருத்தை விளக்கி வெளியுறவு அமைச்சரிடம் சொலிசிட்டர் ஜெனரல் ஒரு குறிப்பை அளித்தார். அதை பிரதமருக்கு வெளியுறவு அமைச்சர் அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புக் கொள்கை முடிவுகள் குறித்து பிரதமருக்கு 2007 டிசம்பர் 26-ம் தேதி உள்ளிட்ட பல்வேறு தேதிகளில் கடிதங்களை எழுதினேன். அந்தப் பின்னணியில்தான் அலைக்கற்றை விண்ணப்பங்கள் பரிசீலனை தொடர்பாக 2008 ஜனவரி 7-ம் தேதியிட்ட குறிப்பை மத்திய தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்தனர். 
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கொள்கை தொடர்பான கருத்தை அறிவதற்காகத்தான், சொலிசிட்டர் ஜெனரலின் பார்வைக்கு அந்தச் செய்திக்குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ாகுறிப்பைப் பார்த்து விட்டேன்; எல்லாம் வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் உள்ளனா என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார். முன்னதாக, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்த குறிப்புக்கு நான் ஒப்புதல் தெரிவித்தேன். அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் நான் கூறியதற்கு முரணாக வரைவுச் செய்திக்குறிப்பின் கடைசி பத்தி இருப்பது தெரியவந்தது. 
வானகவதி கூறுவது பொய் அதனால் திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு என்ற வாசகத்தை அதில் நான் எனது கைப்பட பேனாவில் எழுதினேன். 
அதன் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் மூலம் அந்த வரைவுச் செய்திக்குறிப்பு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் தற்போது கூறுவது போல, அவர் பார்வையிட்ட பிறகு வந்த குறிப்பில் நான் திருத்தம் செய்ததாகக் கூறுவது தவறாகும். 
சொலிசிட்டர் ஜெனரலிடம் சிபிஐ விசாரித்தபோது, 2007 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பு வெளியான பிறகுதான், அந்த நிகழ்வு நடைபெற்றதை சொலிசிட்டர் ஜெனரல் நினைவு கூர்ந்தார். அப்போதும் கூட அந்தக் கூட்டம் முத்தரப்பாக அல்லாமல் வெளியுறவு அமைச்சருடன் அவரும் நானும் தனித்தனியாகப் பேசியதாக வாகனவதி கூறினார். ஆனால், அவர் கூறியதற்கு முரணாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றதை வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார். 
மேலும் உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், தொலைத்தொடர்புத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒருமுறை கூட மத்திய தொலைத்தொடர்புத் துறையின் வரைவுச் செய்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனக்குத் தெரியாமல் நடைபெற்றது என வாகனவதி கூறவில்லை. இந்த உண்மையை தற்போது அவர் மறைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விளக்கம் தர விருப்பம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான செய்திக் குறிப்பு விவகாரம் மட்டுமின்றி அலைக்கற்றை நுழைவுக் கட்டணம், அலைக்கற்றைக் கட்டணம், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் நிர்ணயம், கூடுதல் அலைக்கற்றை அனுமதிக்கான நடைமுறை, இரட்டை தொழில்நுட்ப அனுமதி வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. 
அலைக்கற்றை விண்ணப்பதாரர்களின் தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரத்தில் கூட சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தை நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற பல விஷயங்களின் பின்னணியை நேரில் விளக்க விரும்புகிறேன். எனவே, நாடாளுமன்றத்தில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு இந்த உண்மைகளை நேரில் விளக்க எனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று தனது கடிதத்தில் ஆ. ராசா கூறியுள்ளார்.
கலக்குங்க ராசா.கலக்குங்க.
"இப்போது வூடு கட்டி அடிக்க வே ண்டியது உங்க முறை." 
கூட்டனிதான் இப்போது கிடையாதே.இப்போவிட்டால் காங்கிரசு உங்களை விடவே விடாது .புலி வாலை  பிடிச்சிருக்கிங்க .மறந்திறாதீங்க .
நன்றி படம் தந்தவர்களுக்கு.
----------------------------------------------------------------------------------------------------------------
suran

"முகத்தில் 2ஜி கறை பூசப்பட்ட திமுக.இப்போது காங்கிரசு மீது கறையை பூசி விளையாடுவதாக இப்படத்தைப்பார்த்து நீங்களா க ஏதும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்."
இது ஹோலி விளையாட்டு . 

செவ்வாய், 26 மார்ச், 2013

நச்சு ஆலை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை  ஸ்டெர்லைட் உள்ளது .
இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும்  என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு  தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார்.
பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது.
அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது.
அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த ]ந்ததால்  நழுவி விட்டனர்.
போராடிய மக்களை நடுத்தெருவில் விட்டதுடன்.சிலர் ஆலை  ஏகப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பையும் ,நல்ல வாழ்வையும் தருகிறதாக வேறு பேசவும்,சுவரொட்டிகளை அவ்வப்போது பணம் வரும் போதும்.மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போதும் ஓட்ட ஆரம்பித்து கைகூலிகளாகவே  ஆகி விட்டனர்.
 ஸ்டர் லைட் ஆலை இயங்க ஆரம்பித்தவுடனே அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்து விட்டது.அருகில் உள்ள கிராமங்கள் நிலங்கள் விசத்தன்மையுடன் பாலையாகி விட்டது.செடிகள்-பயிர்கள் கருகி விட்டன.
அப்பகுதில் உள்ள குட்டைகளில் நீர் அருந்திய கால் நடைகள் நூற்றுக்கண க்கில் மடிந்து விழுந்தன.
ஆனால் அப்பகுதில் உள்ளவர்கள் கோரிக்கைகள்-குறைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை.
தனது ஆட்சியில் ஜெயலலிதா அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டியது முதல் அடுத்து வந்த கலைஞர் ஆட்சியிலும் ஆலை ஆட்சியினரால் பாதுக்காக்கப்பட் டதே  ஒழிய மக்கள் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இப்போது அரசியல் கட்சி என்று பார்த்தால் நல்ல கண்ணுவும் ,வைகோவும் தான் ,ச்டேர்லைடை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஸ்டெர்லைட் டுக்கு எதிரான வழக்கில் வைகோ வாதாடியும் வருகிறார்.
இந்த ஆலையில் இருந்து விசா வாயுக்கள் வருவதையும்,நிலத்தடி நீர் விசமானதையும்,நிலங்கள் சாகுபடிக்கு பயனின்றி விசத்தன்மையுள்ளதாக மாறிவருவதாகவும் முதலில் அறிக்கை தந்த மத்திய அரசின் மாசு தொடர்பான ஆய்வு நிறுவனம் "நீரி"வழக்கு எதிர்ப்பு என்றானதும் அரசு துறைக்கே உரிய குட்டிக்கரணம் போட்டு ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து மக்களை அரசின் பாதுக்காப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டது.
ஸ்டெர்லை ஆலையால் சுற்றுப்புறம் மட்டும் உயிர் இழக்கவில்லை.மனிதர்களும் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அவ்வப்போது ஆலை வெளியிடும் நச்சுக்காற்றால் சிறு வயதினரும்-வயதானவர்களும் திடீரென இறந்து வருகிறார்கள்.
ஆலையில் தினசரி விபத்து வாடிக்கையான ஒன்று.வார,வாரம் யாரா வது தொழிலாளி இறந்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்கு விபத்து எற்பட்டால் உடனே மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டூ சென்று  விடுவார்கள்.இறந்ததும் அப்படியே வழியனுப்பி வைத்து விடூவார்கள்.90 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்கள்.அதுவும் வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் இங்கு தமிழகத்தில் அதிர்வுகள் தெரியாதூ.இறந்தவர் குடு ம்பத்திற்கு ஒரு தொகை அவர்கள்வாயை அடைக்க கொடுத்தும் விடுகிறார்கள்.
அதையும் அதாண்டி மதாமாதம் ஒரு விபத்து என்ற பெயரில் ஸ்டெர்லைத செய்யும் கொலைகள் வெளியே  வந்து ம்விடுகிறது.அது அரசின்-காவல்துறையின் ஒத்துழைப்புடன் மறைக்கவும் பட்டு விடுகிறது.
இதை மறைப்பதிலும் -ஸ்டெர்லைட் பற்றிய எதிர்மறை செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் ஆலையை விட பத்திரிக்கைகளும்-அரசும்தான் ஆர்வம் காட்டுகிறன.
தினத்தந்தி,தினகரன் ,மாலைமுரசு பொன்ற பத்திரிகைகள் மறந்தும் ஸ்டெர்லை ஆலை ஆளைக் கொன்று விட்டது.அதில் இருந்து விசா வாயு கசிவு என்று போடுவதில்லை.ஒரு ஆலையில் இருந்து கொஞ்சம் வாயு கசிவு ,ஒரு ஆலையில் வேலை பார்த்தவர் விபத்தில் மரணம்.இவ்வாறுதான்  செய்திகளை  வெளியிடுவார்கள்.
பத்திரிக்கை முதலாளிகளுக்கு ஸ்டெர் லைட் தரும் விளம்பரம்-நிரு பருக்கோ ஸ்டெர்லைட் தரும் புத்தாண்டு உடைகள்,காலண்டர்,டைரி ,இனிப்பு,அப்புறம் முக்கியமான கவர் ,இது தவிர அவ்வப்போது உற்சாகப்பான விருந்து,நல்ல நாள் -பொல்லாத நாள்களில் தரும் கவர்-அன்பளிப்புகள்,வெள்ளி,தங்க நாணயங்கள் போதாதற்கு விளப்பரங்க்கள் மூலம் கிடைக்கும் கழிவுத்தொகைகள் இவ்வளவு ஸ்டெர்லைட் தரும்போது வாயைத்திறக்க மனாசாட்சியுள்ள நிருபருக்கு முடியமா?ஸ்டெர்லைடில் இறந்த தொழிலாளியோ அல்லது இறக்க காத்திருக்கும் மக்களோ இப்படி அள்ளி தருவார்களா?
அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் மூலம் இந்த கிராமத்தில் இந்த நற்பணி செய்யப்பட்டது என்ற செய்திகள் மட்டும் பரவலாக வரும்.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியின் போது தாமிரத்தாதுமணலில் தாமிரத்தை பிரிக்கும்போது தாமிரம் மட்டும் கிடைப்பதில்லையாம்.உடன் தங்கம்,பிளாட்டினம்,வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களும் கிடைக்கும்.ஆனால் அவற்றை அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது கடத்தி விடுகிறார்கள்.இப்படி கடத்தும் போது பலமுறை பிடிபட்டும் இருக்கிறது.ஆனால் வழக்கம் போல் அரசும் ஸ் டெ ர்லைட்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வழக்குகள் என்னவாயிற்று என்றெ தெரியாமல் பொய் விட்டன.வரி எய்ப்பு,வழமையான ஒன்று .இப்படி மக்களையும் ,அரசையும் ஒரே நேரம் ஏமாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன்தான்.
இரு நாட்களுக்கு முன் இந்த ஆலை செய்த வேலை.இப்போது இந்த ஆலைக்கு எதிராக மக்களை மீண்டும் போராட தட்டி எழுப்பியுள்ளது.
காரணம் தன் உற்பத்திக்கு அதிகமாக உள்ள விஷவாயுவை அவ்வப்போது திறந்து விடும்.அதுவும் அதிகாலையில்.ஒரு கன மீட்டருக்கு 80 மெக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று மக்கள் நல அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அப்படி திறக்கும்போதுதூக்ககலக்கத்தில்  கொஞ்சம் அதிகம் திறந்து விட்டது.
அன்று குறைவாக 65 மெக்ரோ கிராம் மட்டுமே கந்தக டை ஆக்சை டு வெளியேறி இருப்பதாக தமிழ் நாடு   மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்.
ஆனால் அதற்கே தூத்துக்குடியின் பலபகுதிகளில் மக்கள் சுவாசிக்க முடியாமல்,துன்பப்பட்டனர்.இருமல்,மூக்கடைப்பு,உடல் அரிப்பு ,கண்களில் எரிச்சல் பார்க்கமுடியாமலும்-சுவாசிக்க முடியாமலும்-பே சக்கூட முடியாமலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் புக அங்கு மருத்துவருக்கும் அதே தொல்லை.
இதை விட அபாயம்.செடிகள்,மரங்கள் கருகி விட்டது.ஸ்டெர்லைட் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மரங்கள் இலைகள் கருகி மொட்டையாகி விட்டன.
ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசின் சொல்படியோ அல்லது ஸ்டெர்லைட் ஆளை சொல்லிக்கொடுத்தபடியோ
" ஒரு ஆலையில் இருந்து அனுமதித்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் கந்தக் தை ஆக்சைடு வாயு வெளியேறியுள்ளது.அதனால் மக்கள் சிறிது பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான் .அதனால் மார்ச் 28-ம் தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்."
-என்று அறிக்கை விட்டுள்ளார்.
முதலில் வழக்கம் போல் தனது ஆலையில் இருந்து எந்த வாயு கசிவும் இல்லை என்ற ஸ்டெர்லைட் பின்னர் வெறு வழியில்லாமல் வாயை மூடி க்கொண்டுள்ளது.வாயு வெளியேறுவதற்கு முதல் நாள்தான் ஆலையில் பாஸ்பரிக் அமிலத்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி அதில் விழுந்து இறந்து போய் மக்கள் சாலை மறியல் செய்து ஓய்ந்திருந்தார்கள்.
ஆக .ஆலை என்ன விளக்கம் தரும்."நான்தான்  குற்றம் செய்து விட்டேன்.நான்தான் வாயுவை திறந்து அல்லது கசிய விட்டேன் என்றா? "
கண்முன்னே பல ஆதாரங்கள் கிடைத்தும் ஸ்டெர்லைட்  ஆலைக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொள்கிறது.இதில் மட்டும் என்ன விதி விலக்கு இருக்கும்.விசாரணை என்ற பெயரில் இந்த குற்றம் பல நாட்கள் கழித்திடும்.வழக்கம் போல் மக்கள் இச்சம்பவத்தை தங்கள் அன்றாட பணிகளில் மறந்திடுவார்கள்.அப்போது பெயருக்கு ஒரு சின்ன கண்டிப்புடன் ஸ்டெர்லைட் விட்டு விடப்படும்.அதுவும் பத்திரிக்கைகளை வராமல் ஸ்டெர்லைட் பார்த்துக்கொள்ளும்.அவ்ளோதான்.
அனுமதிக்கப்பட்ட கந்தக டை  ஆக்சைடு வாயுவை வெளி யெற்றும் 80 மேக்ரோகிராமில் 15 கிராம் பாக்கியிலேயே  இந்த பாதிப்பு என்றால்?
80 கிராமும் வெளியானால்???
இப்போது மாசுக்கட்டுப்பாடுக்கும் ,அரசுக்கும்  வர வேண்டிய கேள்வி .அனுமதிக்கப்பட்ட அளவு பற்றி மறு பரிசீலனை செய்யவது.அல்லது வாயுவின் கடுமை குறிப்பிட்டத்தை விட கடுமையான அடர்த்தியில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்து வழக்கம்போல் ஏமாற்றி வருகிறதா?என்பதை ஆய்வு செய்வது.!

இப்போது இந்த சம்பவத்தி னால் கொஞ்சம் ஓய்ந்திருந்த ஸ்டெர்லை எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாகியுள்ளனர்.
ஆனால் அது இந்த விலை போன அரசுகளை என்ன செய்யும்.?
அணில் அகர்வாலின் கவனிப்பை இந்த வாக்குகள் மட்டுமே போடும் மக்களால் தர இயலுமா?
மராட்டிய மாநில இரத்தினபுரி மக்கள் இதே ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மண்ணில் இருந்து விரட்ட எடுத்த ஆயுதங்களை தமிழக மக்களும் எடுப்பதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாகுமா?
அதைத்தான் ஸ்டெர்லைட் அணில் அகர்வாலும்,மத்திய-மாநில அரசுகளும் விரும்புகின்றனவா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையான செல்பேசிகளின்  எண்ணிக்கை 21.8 கோடிகள்  என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது 2011-ம் ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும்.
ஆசிய கண்டத்தில் செல்பேசிகளின்  விற்பனையைக் கண்காணிக்கு ம் ஐ.டி.சி. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டில் ஸ்மார்ட் செல்பேசி  விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 1.63 கோடியாக 48 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டிலும், ஸ்மார்ட் செல்பேசி  விற்பனை மிக வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில்  ஸ்மார்ட் செல்பேசிகளின்  விற்பனை மட்டும் 70 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஸ்மார்ட் செல்பேசி விற்பனை 54 லட்சமாக உயர்ந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. இந்த சந்தையில், இந்திய  தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட  பங்கினைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, ரூ.5,000 என்ற விலை அளவில் ஸ்மார்ட் செல்பேசிகளை  அதன் அடிப்படை வசதிகளுடன் விற்பனை செய்ய அவை முயற்சிகள் செய்து வருகின்றன.
ஸ்மார்ட் செல்பேசிகளில் அதன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பின்னர்தான் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். , விண்டோஸ் இயங்குதள செல்பேசிகள் விற்பனை ,உபயோகம்  வருகின்றதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------