சரியான வழியல்ல .....,

'மாணவர்கள் போராட்டம் இதுவரை சரியான வழியில் தான் பொய் கொண்டிருக்கிறது.ஆனால் அதை திசை திருப்பி வன்முறையால் தடம் மாறி சென்று விடும் அபாயம் இப்போது வருகிறது.அப்படி சென்றால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்ட மரியாதை மரியாதையை இழந்து விடும்.
காங்கிரசுக்காரனை எதிர்த்து போராடலாம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் திசைமாறிட செய்திடக்கூடாது.

பேனர்களை கிழிப்பது மாணவர்களிடம் காங்கிரசின் மேல் இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.அதை வெளிக்காட்டும் முறையில் சில கட்சியினரால் குறிப்பாக நாம்தமிழர் கட்சியினரால் வன்முறை பாதையை மா ணவர்களுக்கு காட்டி வருவது பயத்தை தருகிறது.
காரணம் இருபக்கமும் கூர்மையான ஆயுதம் வன்முறை.
அதானால் மாணவர்கள் கைது .அதனால் அவர்கள் போராட்டத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.காவல்துறை -அரசு நடவடிக்கைகள் என்று பல வழிகளில் போராட்டம் சென்று அதன் நோக்கமே சின்னாபின்னமாகிவிடும்.
ஈழப்பிரச்னையை மட்டுமே வைத்து தங்கள் அரசியலை செய்து வருவோர் மாணவர்களை தங்கள் கையில் எடுக்க இப்படி இளம்வயது வேகத்தை வன்முறை -பரபரப்பு என்று கொண்டு சென்று விடுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது போராட்ட நோக்கமான ஈழத்தமிழர் நலமும்,மாணவர்களின் எதிர்காலமும்தான்.
மத்திய அரசை வழியுறுத்த இதுவரை மாணவர்கள் கூறிய வரிகொடா இயக்கம்,மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை.பூட்டுதல்.
ஆங்காங்கே மத்திய காங்கிரசு அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்துவது சரியான முறைகள்தான்.
ஆனால் தமிழனாக இருந்தாலும் காங்கிரசு கட்சியில் இருப்பதால் ஈழப்பிரச்னையில் தவறாக நடந்துவரும் தமிழர்களுக்கு உணர்வைஉண்டாக்கும் விதம் நடந்து கொள்ளுங்கள்.
வரும் தேர்தலில்  காங்கிரசு என்று கூறிவாக்கு கேட்டு வரும் உணர்ச்சியற்ற ஜென்மங்களை  தெருவில் நுழைய விடாமல் துரத்துங்கள்.உங்கள் பகுதியில் அதற்கு ஆதரவாக ஒரு வாக்குகூட விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த மனித தன்மையற்ற காங்கிரசுடன் கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் அதற்கும் தேர்தல் முன்பணத்தை[டெபாசிட்] வாங்கமுடியாத அளவு செய்யுங்கள்.அதற்காக உழியுங்கள்.உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்கள் பெற்றொர்,உறவினர்கள்,தெரிந்தவர்கள் வாக்குகளையும் மொத்தத்தில் பதிவாகும் வாக்குகள் ஒவ்வொன்றையும் காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளாக பதிவாக ச்செய்யுங்கள்.
பின்னர் பார்ப்போம் .காங்கிரசுக்கு விழும் மரண அடி அடுத்து மத்தியில் வரும் ஒவ்வொரு அரசுக்கும் தமிழர்கள் கற்று தந்த பாடமாக அமையட்டும்.
இந்த முறையால் முன்பு இப்போதைய முதல்வருக்கு மக்களவை தேர்தலில் தமிழம் 40க்கு 40 என்று பாடம் கற்பித்ததும்,அவரை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவில் இல்லையா?
மனித தன்மை-யோசனை இல்லாமல் காங்கிரசுக்காரனிடம் மோதுவதும் ஒன்றுதான் உணர்ச்சியற்ற குட்டிச்சுவரில் மோதுவதும் ஒன்றுதான்.வலி மோதியவனுக்குத்தான் .குட்டி சுவர் அசையாமல்தான் இருக்கும்.
மனிதாபிமானமும்-தமிழன் என்ற உணர்வும் இருந்தால் சோனியா போன்ற தமிழின விரோதிகள் செய்யும் இத்தனையையும் கண்டபின்னரும் காங்கிரசில் இருப்பானா? அப்படி இருப்பவனும் மனிதனாக இருப்பானா?
கடைசியில் மாணவர்களுக்கு  சொல்ல விரும்புவதெல்லாம் சில பரபரப்பு அரசியல்வாதிகள் கையில் சிக்கி வன்முறை பாதைக்கு திரும்பி விடாதிர்கள்.இந்த வயதில் அது கவர்ச சியான ஒன்றாகக் கூட இருக்கும்.இது போன்ற பேனர் கிழிப்பு,கல்வீசுதல் போன்றவற்றை அக்கட்சியினரையே செய்து கொள்ளச்சொல்லிவிடுங்கள் .கைகளில் நீங்கள் கற்களையும்-கம்புகளையும் தொடாதீர்கள்.அது உங்களை எங்கேயோ கொண்டு சென்று விடும்.இதுவரை உங்களின் மற்றைய போராட்டங்கள் ,பேருந்து நாள் கொண்டாட்டங்கள் உங்களை பற்றி மக்கள் மனதில் உருவாக்கியிருந்த பிம்பங்கள் இப்போதைய போராட்டங்கள் மூலம் கரைந்து உங்கள் மீது மதிப்பையும்,நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறது.
திருச்சி சம்பவம் உங்கள் போராட்டத்தையும்-கூடவே  வாழ்க்கையையும் திசை மாற்றிவிடும்.
திருச்சியில் நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.





"தமிழகத்தில்  முன்னொடி யாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையைதேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் கலைத்து முதல் விதையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்."
இதையே அனைத்து ஊர்களிலும் வழி மொழிவோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும்
 ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.
http://www.world-english.org/ 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?