நடிகை சுகுமாரி .......,

தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகை சுகுமாரி மரணமடைந்தார்.
அவருக்கு வயது 74.
சென்னை தி.நகரில் வசித்து வந்தார் சுகுமாரி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விளக்கேற்றும்போது தவறுதலாக அவர் புடவையில் தீப்பற்றியது. பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
suran
 இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை சுகுமாரி இறந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி உட்பட பழம்பெரும் நடிகர், நடிகைகளுடன் நடித்ததோடு இந்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துவந்தார்.
கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தினார்.
ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
நாகர்கோவிலில் 1938ல் பிறந்த சுகுமாரி, ‘ஓரிரவு‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பீம்சிங் பிரபல திரைப்பட இயக்குனர். தமிழில் பல படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார்.
சுகுமாரி மலையாளப்படங்கள் பலவற்றில் நடித்து கேரளா மக்களின் வரவேற்பை பெற்றவர்.

 ‘பூவெல் லாம் உன் வாசம்’,  ‘அலைபாயுதே’,  ‘வேட்டைக்காரன்’,  ‘யாரடி நீ மோகினி’ படங்களிலும்  நடித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?