"இந்தி" [ய] ஆட்சிப் பணி
இ.ஆ.பணி [ஐ.ஏ.எஸ்.] இ.கா.ப.[ஐ.பி.எஸ் ]அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான,
மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையம் [யு.பி.எஸ்.சி.], புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில் ஆங்கிலம்-இந்தி
மொழிகள் தவிர்த்து மற்ற இந்திய மாநில மொழியில்,ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும்
தேர்வாளர தேர்ந்தெடுக்கும் மொழியை குறைந்தபட்சம் 25 பேராவது
தேர்ந்தெடுத்திருந்தால்தான் தேர்வு எழுத இயலும்.
தங்கள் தாய் மொழி இலக்கியத்தை
தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க
வேண்டும்.
அனைத்து தேர்வாளர்களும்,ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல்
பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. இதற்கு இந்தியாவில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிராத பகுதிகளில் இருந்து கடும் எதிப்பு கிளம்பி மக்களவையில் எதிரொலித்தது.
இந்த புதிய முறையை கொண்டுவர காரணம் என்ன?
இந்த புதிய முறையை கொண்டுவர காரணம் என்ன?
மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின்
உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மீதி ஒருவர்
மட்டும் தென் பகுதியை சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்.மற்ற முக்கிய மொழிகள் மாநி லங்களைச் சேர்ந்தவர்களோ - தமிழ் நாட்டிலிருந்தோ உறுப்பினர் ஒரு வரும் இல்லை.
இதை தருமபுரி மக்களவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில் எடுத்துச் கூறி "இந்த ஒன்பது இந்திக்காரர்கள் மத்திய தேர்வானையத்தையே இந்திக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கவும் அவர்கள் மட்டுமே இதில் பலன் அடையும் படியும் மாற்றங்களை செய்கிறார்கள்.மற்ற தென் மாநிலங்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும் ஒதுக்குகிறார்கள்."
என்பதையும் சுட்டிக்காட்டியுஅள்ளார்.
இது இந்திய அளவில் முக்கியமான பிரச்சினை.
இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த இந்திய ஆட்சிப்பணியாளர்கள் [அய்.ஏ.எஸ்.] போன்ற பதவிகளுக்கான
தேர்வு செய்யும் இடத்தில் பெரும் பாலும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.
புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர் கள்
தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட்
டு இப்போது கடும் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில்
தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற
பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக இருக்கிறார்களா?
இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டும் தங்கள் திறமையால் புகழ் பெற்றுள்ளார்களா?
வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு
டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். ஆனால் அதில் இந்தியில் தேர்வு எழுதி இ.ஆ.ப பணியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் ஆங்கிலத்தில்
பேச-எழுத தெரியாமல் முழிக்கிறார்கள். தடுமாறுகிறார்கள்.மற்ற நாடுகளில் பணி புரிய பயப்படுகிறார்கள்.இன்றைய நிர்வாக சீர்கேடுகளுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள்
அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத
மாநிலங்களிலி ருந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.அந்த நிலைதான் பெரும்பாலும் இந்திக்காரர்கள் உறுப்பினராக இருக்கும் தேர்வாணையத்தின் மற்ற இந்திய மொழிகளை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க காரணம். இது போன்ற
பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் உரிய பங்கு இருக்க வே ண்டும்.
அது தான் பல மொழிகள்-பல இனங்களைக்கொண்ட இந்தியாவுக்கு
அவசியம்.