கல்யாணம் நின்னு போச்சு...
குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து வளங்களும் பெற்று மக்கள் வாழ்வதாகவும் அதனால் அவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி வழிபாடுகள் நடந்து வருகின்றன.அமெரிக்காவே அவரின் ஆளும் திறமையில் மயங்கி தங்கள் நாட்டுக்கு வரக்கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
ஆனால் அவர் தனது திறமையை காட்டி ஆளும் குஜராத்தில் பல இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.அதற்கு காரணம் குஜராத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடுதான்.
குடிநீர் தட்டுப்பாடு- அதனால் இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிப்பதும் தெரிய வந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இவர்கள் தாகத்தை போக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அம்ரேலி மாவட்டத்தில் டிடன் கிராமமும் உள்ளது. அங்கு 2012ம் ஆண்டு 56 சதவிகித மழை மட்டுமே மழை பெய்ததால் நிலத்தடி நீர் வற்றி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
தண்ணீருக்காக மக்கள் தினசரி போராடி வருகிறார்கள். நகரின் முக்கிய இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த நேரம் தான் குடிநீர் விடப்படுகிறது. சில இடங்களில் 500 லிட்டர் குடிநீர் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பார்த்து வாரக்கணக்கில் ஆகிறது என்று மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த கிராமத்தில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு குடிநீர் வழங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது.
மக்கள் குடிநீர் கேட்டு போராடுவதால் அதிகாரிகளுக்கும்- மக்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்படுகிறது. அம்மோதலால் தண்ணீர் வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் தண்ணீரை தேடி அலைகிறார்கள்.
இங்குள்ள பெண்கள் தினசரி 5 கிலோமீட்டர் நடந்து சென்று பக்கத்து கிராமங்களில் உள்ள வற்றிபோன கிணறுகளில் இருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் எடுத்து தலையால் சுமந்து வருவது பரிதாபமாக உள்ளது.
இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மற்ற பகுதிகளில் இடங்களில் உள்ளவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 4
இளைஞர்களின் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியும் விட்டார்கள்.
இந்த பரிதாப நிலை குஜராத் இளைஞர்கள் மத்தியில் அரசு மீது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் மோடியை குற்றம் சொல்லி பயன் இல்லை.
இன்று குஜராத்தில் உள்ள நிலைமை விரைவாக மற்ற மாநிலங்களுக்கும் பரவ காத்திருக்கிறது.
இனி தண்ணீரால்தான் மோதல்களும்,கலவரங்களும், போர்களும் வரவிருக்கின்றன.
தங்கத்தை விட தண்ணீர் விளைமதிக்கக் கூடிய பொருளாகிக்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் நீர் பிடிப்பு பகுதிகள்,குளங்கள்,ஏரிகள் ,குட்டைகளை அரசும்,மக்களும் தூர்த்து மனைகளாக்கி பணம் சம்பாதித்து வருவதுதான்.சுற்றுப்புற சூழலை கெடுத்துக்கொண்டு மழை பெய்யும் அளவை குறைத்து விட்டதும்தான்.
பெய்கின்ற மழை நீரையும் சேர்த்து நிலத் தடி நிராகமாற்றாதது அரசு முதல் மக்கள் வரையிலான தவறு.
அதுவும் போக ஸ்டெர்லைட் போன்ற விட வாயு வெளியிடும்,நிலத்தையும் இருக்கும் குடி நீர் ஆதாரங்களையும் கெடுக்கும் நாசகார ஆலைகளை தனிப்பட்ட மனிதர்களின் நலனுக்காக அனுமதித்து மக்கள் நலனையே பலி கொடுப்பதும்தான்.
தெரிந்தே அரசு இத்தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.கிடைக்கும் தண்ணீரையும் தனியார்களிடம் ஒப்படைத்து காசு பார்க்கும் ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு கல்யாணத்தையும்-கருமாதியையும் நல்லபடியாக செய்ய எண்ணுவது மக்களின் தவறு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
வினவு |
குடிநீர் தட்டுப்பாடு- அதனால் இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிப்பதும் தெரிய வந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இவர்கள் தாகத்தை போக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அம்ரேலி மாவட்டத்தில் டிடன் கிராமமும் உள்ளது. அங்கு 2012ம் ஆண்டு 56 சதவிகித மழை மட்டுமே மழை பெய்ததால் நிலத்தடி நீர் வற்றி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
தண்ணீருக்காக மக்கள் தினசரி போராடி வருகிறார்கள். நகரின் முக்கிய இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த நேரம் தான் குடிநீர் விடப்படுகிறது. சில இடங்களில் 500 லிட்டர் குடிநீர் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பார்த்து வாரக்கணக்கில் ஆகிறது என்று மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த கிராமத்தில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு குடிநீர் வழங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது.
மக்கள் குடிநீர் கேட்டு போராடுவதால் அதிகாரிகளுக்கும்- மக்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்படுகிறது. அம்மோதலால் தண்ணீர் வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் தண்ணீரை தேடி அலைகிறார்கள்.
இங்குள்ள பெண்கள் தினசரி 5 கிலோமீட்டர் நடந்து சென்று பக்கத்து கிராமங்களில் உள்ள வற்றிபோன கிணறுகளில் இருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் எடுத்து தலையால் சுமந்து வருவது பரிதாபமாக உள்ளது.
இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மற்ற பகுதிகளில் இடங்களில் உள்ளவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
படம்:தீக்கதிர். |