வேடங்கள் கலைகிறது.

இந்தியாவிலேயே  முதன் முறையாக பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள்  நடந்ததாக உலகையே அதிர வைத்த முறைகேடுகளின் ராசா இப்போது புதிய வழியில் நடைபோடுகிறது.அதில் இதுவரை உத்தமர்களாகவும்-புனிதர்களாகவும் வேடமணிந்தவர்கள் வேடங்கள் கலைகிறது. களைந்து விடாமல் இருக்க குற்றம் சாட்டப்பட்டவரை வாயைத்திற்க்கவிடாமல் செய்ய முயற்சிக்கிறார்கள் .
ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்த  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகளை பிரதமர் அலுவலகம் முன்னதாகவே  ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு முறைகேடுகளும் மன்மோகன் சிங் ,சோனியா ,ப.சிதம்பரம் உட்பட முக்கிய காங்கிரசு தலைகள் பங்களிப்புடனெ நடந்திருப்பதும் , இம்முறைகேடுகளில் ஆ.ராசா வை விட அதிகமான் பங்கு இருப்பதும் ஆ.ராசா.,திமுக இதில் பலியாடுகள் தான் என்பதும் இப் போ து வெட்ட வெளிச்சமாகி விட்டது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் தனியார் தொலைபேசி நிறு வனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ற முடிவை 2008ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான திமுகவின் ஆ.ராசா மேற்கொண்டார்.

இந்த ஊழல் ஒதுக்கீடு நடை பெறுவதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி கள் ராசாவின் பல செயல் பாடுகள் மீதான கோப்புகளை ஆதரித்துள்ளனர்.பல வழிகாட்டுதல்களையும் செய்துள்ளனர்.

2008ம் ஆண்டு எடுக்கப் பட்ட இந்த முடிவுகளே பின் னரும் கடைப்பிடிக்கப்பட்டுள் ளன என்று 2012ம் ஆண்டு பிப் ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

நாட்டின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) மதிப்பீடு செய்த ஆய்வின்படி ரூ.1.76 லட்சம் கோடியை ஆ. ராசா, அவரது மூத்த அதிகாரி கள் மற்றும் தொழிலதிபர்கள் கிரிமினல் சதி செய்து மோசடி செய்துள்ளனர் என மத்தியக் குற்றப் புலனாய்வுக்கழகம் (சி பிஐ) குற்றம் சாட்டியது.


ஆ.ராசா பிரதமருக்கு எழு திய கடிதங்கள் குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக இருந்த நிலையில், அதனை உடனடி யாக ஆய்வு செய்யவேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிவைத்தார்.

ராசாவின் இந்தக் கடிதங் களின் விவரங்களை 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று நடந்த 2ஜி அலைகற்றை ஒதுக் கீடு ஊழலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அப்போது மேற்கொள்ளப் பட்ட முடிவுகள்தான் பொது நலனுக்கு எதிரானதாகவும், நம் பிக்கைகளை மீறுவதாகவும் உள்ளன என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிரதமர்அலுவலகத்தின் கோப்பு எண் 180/31/சி/26/ஓ.எஸ். இ.எஸ்.ஐ. பாகம் 4ல் 2007ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அறி வுறுத்தப்பட்ட ‘முதலில் வரு பவர்களுக்கு முன்னுரிமை’, கொள் கையை லாவகமாக கடைப் பிடிக்கும் நோக்கத்துடன், பிர தமருக்கு தகவல் தெரிவிக்க டிசம் பர் 26ம் தேதியன்று ராசா எழு திய கடித விபரம் உள்ளது. இந்த கடித விபரத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பிர தமர் அறிவுறுத்தினார்.

பின்னர் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டி.கே. ஏ.நாயர், பிரதமர் அலுவலக செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் ராசா கடிதத்தின் முடி வால் ஏற்படும் விளைவுகள் மற் றும் பரிந்துரைகள் குறித்து விவா தித்தனர்.

2ஜி ஊழல் நடைபெறு வதற்கு முன்னர், ஆ.ராசா பரிந் துரைத்த அம்சங்களில் 4 பரிந்து ரைகளை பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஆ.ராசாவின் நடவடிக்கை யில் பொதிந்துள்ள பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளை எச்சரிப்பது தொடர்பாக பிர தமர் உறுதியற்ற தன்மையில் இருந்துள்ளார். மேலும், ராசாவை கட்டுப்படுத்தவும் தவறியுள்ளார்.
2ஜி ஊழல் நடைபெறுவ தற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக புலோக் சாட்டர்ஜியும் தொ லைத் தொடர்புத்துறையின் புதிய செயலாளராக வந்த சித் தார்த் பெகுராவும் ஆ.ராசாவின் முடிவுகள் தொடர்பாக விவாதம் நடத்தியுள்ளதும் இந்தக் கோப்பு கள் மூலம் தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான ஆய்வு விவரமும், பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய 6 பக்க கடிதமும் இந்த கோப்பில் ‘மிகவும் ரகசியம்’ என்ற குறிப்புடன் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலை வருமான பிரணாப் முகர்ஜியின் குறிப்பும் இடம்பெற்றிருந்தன. பிரணாப் முகர்ஜி தலைமையி லான அமைச்சர் குழுவின் குறிப்பு 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியிட்டதாக இருந்தது.

2007ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று பிரதமர் அலுவலகத் தின் மூத்த அதிகாரியாக இருந்த சாட்டர்ஜி, கோப்பின் 1/என்ற பக்கத்தில் எழுதிய ரகசிய உள் குறிப்பில், “முதன்மைச் செயலா ளர் முடிவுப்படி, நான் வெளி யுறவுத்துறை அமைச்சர் அளித்த குறிப்பை முழுமையாக பார்வை யிட்டேன். மேலும் சி மற்றும் ஐ.டி.துறை அமைச்சர் குறிப்பை யும் பார்த்தேன். அதேபோன்று தொலைத்தொடர்பு விவகாரம் தொடர்பான முந்தைய குறிப்பும் பார்வையிடப்பட்டது. இந்த ஆவணங்கள் கீழே தரப்பட்டுள் ளன.

இது தொடர்பாக பரிந்துரை களின் விபரத்தை தயாரித்துள் ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் இந்த 4 பக்க ஒப்பீடு, புதிய உரி மங்கள் பற்றி கையாளுவதாக உள்ளது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில் 2ஜி ஒதுக்கீடு முடிவுகளில் பிரதமர் அலு வலகம் ஒப்புக்கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்தான், தனது முடிவு ஆலோசிக்கப்பட்டே எடுக்கப்பட்டதாக ஆ.ராசா கூறி வருகிறார்.

2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிபிஐ அளித்த குற்றப்பத் திரிகை ஆ.ராசாவை குற்றம் சாட் டியிருக்கிறது.

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட் சம் கோடி ஊழல் நடைபெற்ற தாக சிஏஜியின் 2010ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று தந்த அறிக்கை அடிப்படையில் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி யன்று 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீடு தரப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அலைக்கற்றை ஒதுக்கீட் டுக்கு நுழைவுக்கட்டணம் திருத் தப்படாமல் சாதாரண கட்ட ணத்தில் அளிக்கும் முடிவுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது எனவும் தற் போது தெரியவந்துள்ளது.

ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பின்னணியில் நடைபெற்ற தகவல்களை பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ . ராசா கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
 இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி தவறான தகவலை கூறியதாகவும் அவர் அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
 2ஜி ஸ்பெக்டம் ஒதுக்கீடு விவகாரத்தில் எழுந்த முறைகேடு தொடர்பான ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ கடந்த 23-ம் தேதி கூறினார். அந்த அறிக்கையில் ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கத்தைப் பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 
ஆ. ராசா என்ன கூறினார் என்பதை வெளியிட சாக்கோ மறுத்து விட்டார்.ஆனால் சாக்கோவுக்கு ராசா எழுதிய 17 பக்க கடிதத்தின் விவரம் வெளியெ  வந்துள்ளது.
 சாக்கோ எழுப்பிய ஐந்து கேள்விகளுக்கான பதிலை ஐந்து பக்கங்களில் தனியாகவும், அட்டர்னி ஜெனரலின் வாக்குமூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பின்னணியை விவரிக்கும் நிகழ்வுகளை 12 பக்கங்களிலும் ராசா விவரித்துள்ளார்.
 2007-ம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் கேட்டும், கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக் கோரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பான வழக்கை மத்திய தொலைத்தொடர்பு வழக்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (டிடிசாட்) 2007 அக்டோபரில் விசாரித்தது. சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் (கூலம் இ. வாகனவதி) ஆஜராகி வந்தார். அந்த அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து, அப்போதைய வெளியுறவு அமைச்சர் (பிரணாப் முகர்ஜி), சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் 2007 டிசம்பரில் ஆலோசனை நடத்தினேன். செய்திக்குறிப்பில் திருத்தம் அப்போது தனது கருத்தை விளக்கி வெளியுறவு அமைச்சரிடம் சொலிசிட்டர் ஜெனரல் ஒரு குறிப்பை அளித்தார். அதை பிரதமருக்கு வெளியுறவு அமைச்சர் அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புக் கொள்கை முடிவுகள் குறித்து பிரதமருக்கு 2007 டிசம்பர் 26-ம் தேதி உள்ளிட்ட பல்வேறு தேதிகளில் கடிதங்களை எழுதினேன். அந்தப் பின்னணியில்தான் அலைக்கற்றை விண்ணப்பங்கள் பரிசீலனை தொடர்பாக 2008 ஜனவரி 7-ம் தேதியிட்ட குறிப்பை மத்திய தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்தனர். 
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கொள்கை தொடர்பான கருத்தை அறிவதற்காகத்தான், சொலிசிட்டர் ஜெனரலின் பார்வைக்கு அந்தச் செய்திக்குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ாகுறிப்பைப் பார்த்து விட்டேன்; எல்லாம் வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் உள்ளனா என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார். முன்னதாக, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்த குறிப்புக்கு நான் ஒப்புதல் தெரிவித்தேன். அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் நான் கூறியதற்கு முரணாக வரைவுச் செய்திக்குறிப்பின் கடைசி பத்தி இருப்பது தெரியவந்தது. 
வானகவதி கூறுவது பொய் அதனால் திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு என்ற வாசகத்தை அதில் நான் எனது கைப்பட பேனாவில் எழுதினேன். 
அதன் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் மூலம் அந்த வரைவுச் செய்திக்குறிப்பு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் தற்போது கூறுவது போல, அவர் பார்வையிட்ட பிறகு வந்த குறிப்பில் நான் திருத்தம் செய்ததாகக் கூறுவது தவறாகும். 
சொலிசிட்டர் ஜெனரலிடம் சிபிஐ விசாரித்தபோது, 2007 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பு வெளியான பிறகுதான், அந்த நிகழ்வு நடைபெற்றதை சொலிசிட்டர் ஜெனரல் நினைவு கூர்ந்தார். அப்போதும் கூட அந்தக் கூட்டம் முத்தரப்பாக அல்லாமல் வெளியுறவு அமைச்சருடன் அவரும் நானும் தனித்தனியாகப் பேசியதாக வாகனவதி கூறினார். ஆனால், அவர் கூறியதற்கு முரணாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றதை வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார். 
மேலும் உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், தொலைத்தொடர்புத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒருமுறை கூட மத்திய தொலைத்தொடர்புத் துறையின் வரைவுச் செய்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனக்குத் தெரியாமல் நடைபெற்றது என வாகனவதி கூறவில்லை. இந்த உண்மையை தற்போது அவர் மறைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விளக்கம் தர விருப்பம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான செய்திக் குறிப்பு விவகாரம் மட்டுமின்றி அலைக்கற்றை நுழைவுக் கட்டணம், அலைக்கற்றைக் கட்டணம், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் நிர்ணயம், கூடுதல் அலைக்கற்றை அனுமதிக்கான நடைமுறை, இரட்டை தொழில்நுட்ப அனுமதி வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. 
அலைக்கற்றை விண்ணப்பதாரர்களின் தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரத்தில் கூட சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தை நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற பல விஷயங்களின் பின்னணியை நேரில் விளக்க விரும்புகிறேன். எனவே, நாடாளுமன்றத்தில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு இந்த உண்மைகளை நேரில் விளக்க எனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று தனது கடிதத்தில் ஆ. ராசா கூறியுள்ளார்.
கலக்குங்க ராசா.கலக்குங்க.
"இப்போது வூடு கட்டி அடிக்க வே ண்டியது உங்க முறை." 
கூட்டனிதான் இப்போது கிடையாதே.இப்போவிட்டால் காங்கிரசு உங்களை விடவே விடாது .புலி வாலை  பிடிச்சிருக்கிங்க .மறந்திறாதீங்க .
நன்றி படம் தந்தவர்களுக்கு.
----------------------------------------------------------------------------------------------------------------
suran

"முகத்தில் 2ஜி கறை பூசப்பட்ட திமுக.இப்போது காங்கிரசு மீது கறையை பூசி விளையாடுவதாக இப்படத்தைப்பார்த்து நீங்களா க ஏதும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்."
இது ஹோலி விளையாட்டு . 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?