திங்கள், 30 ஏப்ரல், 2012

குறைகள்

நமது குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் பதவி காலம் முடியும் போது ஒரு மன்க்குறையுடன் இருப்பதாக தெரிகிறது .இன்னமும் மூன்று நாடுகளுக்கு செல்ல வேண்டும் கால அவகாசம் இல்லை.பதவிகாலம் முடிகிறது.வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றே செல்கிறேன். அரசு தரப்பில் இன்னும் மூன்று நாடுகள் சுற்றுங்கள் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால்போதிய கால அவகாசம் இல்லாததால், இது சாத்தியமில்லை என்றுள்ளார்.
சுரன்


இன்னமும் மூன்று நாடுகளை அவர் சுற்றிப்பார்த்து விட்டு வரும் வரை குடியரசுத்தலைவர் தேர்தலை ஒத்திப்போட சட்டத்தில் வழியிருக்கிறதா என்று ஆய்வு செய்ய ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் என்ன?
குடியரசுத்தலைவர் போட்டிக்கு தாங்கள் ஆளை கூறவில்லை என்று இலங்கைப்பயணம் புகழ் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.ஆனால் அமீது அன்சாரி,பிரணாப் என்று யாராவது கூறினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
முலாயம் -ஜெயலலிதா கூறுவது போல் அப்துல் கலாம் என்றால் சரிதான் என்று கூடுதலாகக் கூறியும் இருக்கிறார்.
அதுதான் அப்துல் கலாம் என்று கூறி விட்டு நாங்கள் யாரையும் முன்னிருத்தவில்லை என்ற பேச்சு.
சுரன்


அப்துல் கலாமை விட அமீது அன்சாரி.இப்போதைய துணை கு.தலைவர் தான் பொருத்தமானவர்.மக்கள் நலன் பற்றி கொஞ்சம் கவலை கொண்டவர்.சுற்று சூழல்,விலைவாசி பற்றி மக்கள் நலன் பேணும் கருத்துடையவர்.
இது போன்ற நல்ல குணங்கள் இருப்பதாலும் கொஞ்சம் இடது சாரி உள்ளம் கொண்டவர் என்பதாலும் அவர்தான் இந்திய இன்றைய நலனுக்குகந்தவர்,ஆனால் இதுதான் அவருக்கு பாஜக ,காங்கிரசு உட்பட பல கட்சிகளின் ஆதரவை பெறமுடியாத அளவுக்கு பலவீனமும் கூட.
அப்துல்கலாம் அணு உலை பற்றிய கருத்துக்களும்,விலைவாசி உயர்வுக்கு ஆதரவான பேச்சுக்களும் இக்கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தரும் பலமாக உள்ளது.
சுரன்


அப்துல் கலாம் நல்ல அறிவியல் நிபுணர்.ஆனால் சிறந்த நிர்வாகியல்ல.இதைதான் சென்ற குடியரசுத்தலைவர் பதவிகாலத்தில் நிருபித்துள்ளார்.ஆனால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு தலையாட்டுபவர்கள்தானே வேண்டும்?


இத்தாலிக்கப்பலை சோனியா அரசு விடுவிக்க முழு ஒத்துழைப்பைக்கொடுத்தாலும் உச்ச நீதிமன்றம் விடுவிக்க தடை கல்லாக ஆணையிடும் என்றே தெரிகிறது.
சுரன்


கேரள உம்மன் சாண்டி அரசு சோனியா வழிக்கட்டுதலில் இத்தாலியக்கப்பலை விடுவிக்க தடை இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டுள்ளது.
"இத்தாலியர்கள் இந்திய சட்டமைப்புடன் விளையாடுகிறார்களா?கப்பலை விடுவிக்க கேரள அரசு எந்த முறையில் தடையின்மை சான்று தருகிறது.இது நம் இந்திய சட்டத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் கேலிக்குரியதாக்கும் செயல்"என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இனியாவது இத்தாலி என்றவுடன் காங்கிரசார் தமிழக அமைச்சர்கள் போல் குனிந்து சுருங்காமல் இருக்கட்டும்.

ஈழமக்கள் ஒழிப்புபோரின் இறுதிக்கட்டங்களில் தாம் உண்ணா நோன்பு மேற்கொண்டும் மஹிந்த ராஜபக்ச அரசால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
சுரன்

அவர் ஏமாற்றப்பட்டது பக்‌ஷேவால் அல்ல.அவரின் படுகொலைகளுக்கு துணை போன காங்கிரசு அரசால்.அப்போது கருணாநிதி எடுத்த தவறான முடிவுகள்தான் அவருக்கு இலங்கை பிரச்னையில் கறையை ஏற்படுத்தி விட்டது.போர் நடக்கும் போது இந்திய படைகள் உதவுகிறது என்று பகிரங்கமான பின்னும் 2ஜி பயத்தில் காங்கிரசை பகைக்காமல் பாலுக்கும் பூனைக்கும் காவல என்ற நிலையில் இருந்ததுதான் அவர் செய்த மகாதப்பு.ஆனால் அதே நேரம் புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா சரியான முறையில் அறிக்கைகள் மட்டும் விட்டு நல்ல பெயரை பெற்று விட்டார்.சட்டமன்றத்தேர்தல் முடிவுகளுக்குஈழமும் ஒருகாரணி.
முகத்தில் கரியை பூசிகொண்டு இலங்கைதமிழர்கள்-ஈழ ஆதரவாளர்களிடம் துரோகிக்கொப்பான பெயரை பெற்றுக்கொண்டு இப்போது டெசோ அமைப்பதும் தனி நாடு வாக்கெடுப்பும்சரியான செயலாகத்தெரியவில்லை.இன்றைய நிலயில்முகாம்களில்கைதிகள் போல் ராணுவக்காவலில் இருக்கும் தமிழர்களால் தன்னிச்சையாக வாக்களிக்க இயலுமா?தாய்லாந்து முன்பு நடத்திய வாக்கெடுப்பு போல்தானே இருக்கும்.
[ஹிட்லர் நடத்திய வாக்கெடுப்புதான் இப்போது ஞாபகம் வருகிறது.தேர்தல் அறிவித்த ஹிட்லரை புகழ்ந்து கொண்டு வாக்குச்சீட்டு வாங்கியவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாம்.சீட்டில் நாஜி சின்னம்மட்டும்தான் அச்சாகியிருந்ததாம்.பின் என்ன அனைத்து வாக்குகளும் ஹிட்லருக்குத்தான்.சூப்பர்-டூப்பர் வெற்றி.எதிர்த்தவர்கள்[?]சங்கரன்கோவில் போல் காப்புத்தொகை இழந்துவிட்டார்கள்.வேறுவழி?]
அதுவும் இப்போது மரண அமைதியில் உள்ள தனி ஈழம் அங்குள்ள தமிழர்கள் அவசரத்தேவையாக இல்லை.
சொந்த இடத்தில் மீள குடியமர்த்திடலும்-முகாம்கள் முற்றிலும் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கையுமே அவர்களின் இன்றைய தேவை.அதற்கு டெசோ வழி செய்யட்டும்.வாக்கெடுப்பு பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
_________________________________________________________________________________
சுரன்
இந்தியா வல்லரசாகிறது.இத்தாலிய விசுவாசம்

கேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட  அரபிக் கடல் பகுதியில் கடந்த பெப்ரவரி 15 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது "என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுரன்


இக் கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களை கைது செய்து தண்டிக்கவும் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு எதிர்மாறாக இத்தாலியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் வளைந்து கொடுத்து தனது இத்தாலிய விசுவாசத்தை போபர்சுக்குப்பின்2ம் முறையாக நிரூபித்துவிட்டது.
இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது எச்சரிக்கை செய்த போதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால் கடற் கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கைகளைத் தட்டிக் கழித்துள்ளார். 
ஆனால் கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்து விடும்.
இது எச்சரிக்கையாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது.


சர்வதேசக்கடல் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொய்யான தகவலைக்கூறிஇந்திய சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்படமுடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராக கூறியுள்ளார்.
இவற்றை நிராகரித்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.
இத்தாலிய தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி 4 நாட்களின் பின்னர் கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர்கிரோனே என்ற இரண்டு பாதுகாப்பு படை சிப்பாய்களை சரணடையுமாறு கேரள போலிஸ் கோரியது. ஆனாலும் கெடு முடிந்து 8 மணி நேரத்திற்குப் பின்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் விசாரணைஎன்ற பெயரில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி 22 டில்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும் அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இத்தாலிய சட்டப்படி தான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரிப்ப்து போல் பேசி சென்றார்.. 
சுரன்


இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டு கள் முதலானவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறி விட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யும் இந்திய அரசு ஏகாதிபத்திய நாட்டை சேர்ந்தவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டால் கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச் சம்பவத்துக்கு தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும் அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.
அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற் கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்திராத நிலையில் சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஒரு வித பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமே ஒழிய சிங்கள இராணுவத்தைப் போல் வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு ஏற்ப தினமணி எழுதியுள்ளது.
துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும் போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து மீன்பிடிப் படகுகளைக் குறுக்கே கொண்டு போய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப்போகச் சொல்வார்கள் என்பதால் ஒரு மீன் பிடி படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில் இத்தாலியக் கப்பலில் இருந்து பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.
தற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத் தனமும் இத்தாலிய,பயமும் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே மேலை நாடுகள் என்றாலே தனது பயபக்தியை இந்தியா காட்டி வாலை சுருட்டிக்கொள்ளும்.
சுரன்


1995 டிசம்பரில் மே. வங்கத்தின் புரூலியாவில் இரகசியமாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர், ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய தூதரக பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபல்யமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதும் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்ட போதும் இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு தனது இத்தாலிய-அமெரிக்க விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே இத்தாலியக் கப்பல் விவகாரம் போபர்ஸ் ஊழலுக்குப்பின் மீண்டும் நிரூபித்துள்ளது.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வரப்போகும் வாழ்க்கை சரித்திரம்.


பிரதிபா பாட்டீலின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதிஅன்றுடன் முற்றுப்பெருகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது 50 வருட பொது வாழ்க்கை குறித்து அவர் சுயசரிதை எழுதப் போவதாக இந்திய மக்களை மிரட்டியுள்ளார்.
அதற்கு முன்னர் சிறிய அவரின் வாழ்வுக்குறிப்பு இதோ': 
1962-ல் சாலிஸ்கோனில் நடைபெற்ற 'சத்ரிய மகா சபையின்' மாநாட்டில் பிரதீபாவின் சொற்பொழிவை கேட்ட அன்றைய மராட்டிய முதல்வர் யஷ்வந்த்ரோ சவான், பிரதிபாவைமராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். முதன் முறையாகத்தேர்தலில் போட்டியிட்ட பிரதீபா பாட்டீல் ஜல்கோன் சிட்டி தொகுதியிலிருந்து ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பின்னர் 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை எட்லபாட் தொகுதியிலிருந்தே பிரதீபா ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1990 வரை அவர் மாநிலங்களவையி பதவி வகித்தார். 1991-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதீபா அமராவதி தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக மக்களவை எம்.பி ஆனார்.
சுரன்
அரசியலில் ஈடு பட்டதில் இருந்து தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரதீபா பாட்டீல் போட்டியிட்ட தோல்வி அடைந்ததேயில்லை என்பது செங்கோட்டையிலோ,குடியரசுத்தலைவர் மாளிகை சுவரிலோ பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டியது.
கல்லூரியில் படித்தபோது மேசை பந்தாட்டத்தில் போட்டியில் பங்குகொண்டு, நிறைய பதக்கங்களையும் பிரதீபா வென்றுள்ளார். ச.ம.உ.ஆன பின்பும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் தனது படிப்பை பிரதீபா படித்து வந்துள்ளதாகத்தெரிகிறது.தேர்வைப்பற்றி விபரம் தெரிய வில்லை.ஏற்கனவே பணம் படைத்த வசதியான வீடுகள்,நில-புளன் கள் கொண்டவர்தான் பிரதீபாபாட்டில் 
ஆனால் லட்சாதிபதியான பிரதீபா ஓய்வுக்கு பிறகு புதிய வீடு கட்ட மத்திய அரசிடம் ரூ.85 லட்சம் பணம் கேட்டது ஆச்சரியமானது.
இதுவரை எந்த குடியரசு தலைவரும் இப்படி தங்க இடம் கோடியை எட்டும் பணம் கேட்டது கிடையாது.
ஆனால் இதுவரை பதவியில் இருந்த எந்தகுடியரசுத்தலைவரும் இவரைப்போல் மக்கள் அதுதான் அரசு பணத்தை தண்ணீராக செலவழித்தது கிடையாது.இவரின் பயணச்செலவு பற்றி பல தடவை விவாதங்கள் எழுந்துள்ளது. இவரது வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் இதுவரை இந்தியஅரசு ரூ.180 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது.
சுரன்

எண்ணை முழுக்கு


என்ன. இத்தனை நாளாகி விட்டது இன்னமும் பெட்ரொல்-டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்று நேற்றுதான் கனவு கண்டேன்.அன்றே"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், டீசல், சிலிண்டர், மண்ணெண்ணெய் விலைகளை கடந்த ஓராண்டாக உயர்த்தவில்லை என்றும், இவற்றின் விலைகளை “மாற்றி அமைக்க” வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக"நமது இந்திய விலைவாசி உயர்வு அமைச்சர்[பிரதமர் என்று கூட சொல்லலாம்]மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
சுரன்

மேலும்அவர் மக்கள் மீதுள்ள பாசத்தில் “மக்கள் பாதிக்கப்படாத அளவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றின் விலையை மத்திய அரசு நீண்ட நாட்களாக உயர்த்தாமல் இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி விலை உயர்த்தப்படாததால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அது பின்னர் அரசின் தலையில் விழும். இந்தியாவின் இறக்குமதிகளில் 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே விலை உயர்த்தப்படாமல் இருந்தால், அது நாட்டின் இறக்குமதி திறனை வெகுவாகப் பாதிக்கும்” என்றுள்ளார்.
இதன் மூலம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட்டதைப் போல, டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் விலை நிர்ணயத்தையும் விட்டுவிடப் போவதைமன்மோகன் மறைமுக மாகசொல்லி விட்டார்.
சுரன்

மக்களை பாதிக்காத வகையில் எப்படி விலையை கூட்டப்போகிறார் என்பதை அந்த பொருளாதார மேதைதான் விளக்கவேண்டும்.இவற்றை பொது மக்கள் வாங்காமல் இருந்தால் மட்டுமே இதன் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்போது சமையல் எரிவாயு உருளை 70 நாட்களில் வருவதை 140 நாட்களுக்குத்தான் என்றால் கொஞ்சமாக பாதிக்கும்.
இந்தியாவில் இருக்கு கிருஷ்ணா-கோதாவரி எண்ணை,இயற்கை எரிவாயு படுகைகளை அடிமாடு விலைக்கு அம்பானிக்கு கொடுத்து விட்டு யானை விலைக்கு அதையே அவர்களிடம் இருந்து திருப்பி வாங்கும் பொருளாதார மேதன்மை மூலம் விலையை குறைக்கவும் வழி கண்டு பிடிக்க முடியாமலா போகும்.
சுரன்

ஈரானில் இருந்து எரிவாயுவை குழாய் மூலம் குறைந்த விலைக்கு கொண்டு வருவதையும் அமெரிக்காவின் எதிர்ப்பால் நிறுத்தி வைத்திருப்பதை மிக உயரிய ராஜதந்திரமாகக் கொண்டாடலாம்.
நல்ல வேளை அமெரிக்கா சொன்னதை கேட்டு ஈரானிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோலையும் வாங்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் தண்ணீரில் ஓடும் வாகனங்களைத்தான் பயன் படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் அதற்கும் கூட மான்டேக்சிங் அலுவாலியா தேசீய தண்ணீர் கொள்ளை மன்னிக்கவும் கொள்கை என்று ஒன்றை கொண்டு வந்து இந்திய நீராதாரங்களை எல்லாம் தனியார்,அந்நியர்கள் கையில் ஒப்படைத்து ஆப்பு வைக்க முயற்சிக்கிறாரே?
இனி ===கழுவ கூட பணமும்.சேவை வரியும் கட்டவேண்டும் என்ற இனிய நிலை இந்தியாவில் வந்துவிடும். .

ராம்தேவ் சாமியாரும,பால்தாக்கரேயும் சச்சின் மாநிலங்களவை உறுப்பினரானதற்கு வாழ்த்துக்களுடன்ன்காங்கிரசில் சேர்ந்து விடக்கூடாது என கவலையௌம் தெரிவித்திருக்கிறார்கள்.அவர் காங்கிரசில் சேர்வதால் என்ன நடந்து விடப்போகிறது.அடுத்த உலக மட்டைப்பந்து போட்டியில் கோப்பையை இந்தியா வெல்லமுடியாமல் போய்விடுமா என்ன.?
அல்லது அவரால் வாக்குகள் முழுக்க காங்கிரசுக்கு விழுந்துவிட போகிறதா.அல்லது பணவீக்கம் இன்னும் கூடி வெடிக்கப்போகிறதா/
பத்தோடு பதினொன்று எம்பிக்கள் காங்கிரசுக்கு அவ்ளோதான்.
சுரன்

மதுரை ஆதீனமாக அண்ணன் நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நியமித்ததற்கு இந்து மக்கள் கட்சியினர் கடுமையாக எதிர்த்து நித்தி-ரஞ்சிதா ரசிகர் மன்றத்தினருடன்[நித்தியானந்தா சீடர்கள்] வாக்குவாதத்தில் ஈடுபட
காவல்துறையினர் வந்து சமராசி செய்து வைத்திருக்கிறார்கள்.
போலீசாருக்கு இதுவும் ஒரு வேலையாக போய் விட்டதே.ஏற்கனவே திமுக காரர்களை பிடித்து கைது செய்து விட்டு பிறகு காரணம் தேடும் பணியை தலைமேல் வைத்துக்கொண்டு பணிச்சுமையில் தள்ளாடுகிறார்கள்.இது வேறா.
பழைய மதுரை ஆதினம் அருணகிரியார் சரியான குசும்பு பிடித்த ஆள்தான்.
ஒரே ஒரு லட்சம் லஞ்சம் அதுவும் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக்கொண்ட லஞ்சத்திற்கு பங்காரு லட்சுமணனுக்கு ஒருலட்சமும்-4 ஆண்டுகள் தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சுரன்
அப்படியானால் லட்சம் கோடி என்று 2ஜி அலையில் மிதந்தவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்.என் கால்குலேட்டர் பழுது.
பங்காருவும் தனக்கு வயதாகிவிட்டது,இரண்டு முறை இதய அறுவை செய்யப்பட்டுள்ளது.என்று வாதிட்டுள்ளார்.அவரின் பாஜக ஆட்சியில் இல்லாததால் அவரின் சமதானங்கள் தள்ளிவிடப்பட்டுவிட்டன.
கடைசியாக 'தான் இதற்கு முன் இது போன்ற லஞ்சங்கள் வாங்கியதில்லை"
என்றும் கூறியிருக்கிறார்.அதிலாவது நீதிபதி மனங்கசிந்திருக்கலாம்.
முதல் தடவை என்பதால்தான் இப்படி எசகுபிசகாக மாட்டிவிட்டார்.
யாராவது காங்கிரசுக்காரரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.
பங்கு போய்விடும் என்ற பயமாக இருந்திருக்கலாம்.

சுரன்


சனி, 28 ஏப்ரல், 2012

புதிய கோட்டை

என்னதான் நாம் தமிழக இடைத்தேர்தல்களை பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல செய்திகளையும் படித்து மக்கள் மனதை பற்றி அலசி அறிந்து கொண்டது போல் எழுதினாலும் ஒட்டு மொத்தமாக நம் முகத்தில் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கரியை பூசி விடுகிறார்கள்.அதற்காக நாம் சும்மா இருந்து விட முடிகிறதா?
மீண்டும் இடைத்தேர்தல்கள் வந்து நம் ஆய்வு மனப்பான்மையை தட்டி எழுப்பிவிடுகிறதே?
சங்கரன் கோவிலில் விலைவாசி உயர்வு,பேருந்து கட்டண -பால் விலைஉயர்வு
இவை எல்லாவற்றையும் விட கண்ணைக்கட்டி இருட்டில் விட்ட மின்வெட்டு இவைகளை மக்கள் சகிக்காமல் வாக்குகள் ஆளுங்கட்சியை விட்டுமாறி விழும் 
என்று பக்கம்,பக்கமாக எழுதினால் மக்கள் கண்ணை மின் வெட்டு மறைக்காமல் இலவச மிக்சி,கிரைண்டரும்-வீட்டில் கவரில் வைக்கப்பட்டு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மறைத்து விட்டது.விளைவு முகத்தில் கரி.

புதுக்கோட்டையாவது புதிய முடிவைத்தருமா?
இடைத்தேர்தல்கள் என்றாலே திண்டுக்கல் தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படா விதி உள்ளதே.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தனது விதிகளை வைத்துக் கொள்கிறது.[திமுக வுக்கு மட்டும் விதி விலக்கு .நரேஷ் குப்தாவுக்கும்,பிரவீண்குமாருக்கும் திமுக வாடை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று குடும்ப மருத்துவர் கூறியுள்ளாராம்]
ச.ம.தேர்தலில் திமுகவை ஓட ,ஓட விரட்டியதில் அதிமுக ஜெயலலிதாவை விட ஆணைய பிரவீண்குமாருக்குத்தான் அதிக பங்கு.
இதுவரை இல்லாதபடி அதிமுக ஆட்சியேற்பு விழாவில் முன் வரிசையில் உட்கார்ந்து ரசித்த பெருமையும் பிரவீண்குமாருக்குத்தான் உண்டு.
சேஷன்,ஓசா,குப்தா என்று யாருமே ஆட்சி ஏற்பு விழாவில் இதுவரை கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சுரன்

ஜெயாயூனிஸ்ட் மன்னிக்கவும் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற புதுக்கோட்டையை கூட்டணி தர்மம் என்று ஏமாளித்தனமாக மீண்டும் தா.பா,கட்சிக்கே கொடுக்காமல் தன்கட்சிக்காரரையே போட்டியிட வைத்து விட்டது அதிமுக.இது நிச்சயம் என்று எதிர்பார்த்ததுதான்.
ஆனால் தன் கட்சிக்கேதருவார் என்று கடைசிவரை காத்திருந்ததாக தா.பா.சொல்வது அவர் இன்னும் தமிழக அரசி[யலை]யை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது.
அதில் அவருக்கு நட்டமும் இல்லை.அவரின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக வின் கிளை அமைப்பாக மாறி நாளாகிவிட்டதே.திமுக கூட்டணியில் இருக்கையிலேயே அம்மா ஆதரவாகத்தானே தாபா கட்சி இருந்தது.
நடிகர் விஜய் காந்தை பொறுத்தவரை சங்கரன்கோவில் முடிவுக்குப்பின் நாக்கை மடித்து சூளுரைப்பதை விட்டு விட்டார் என்றே தெரிகிறது.
புதுக்கோட்டையில் தாபா கட்சி போட்டியிட்டால் ஆதரவை தார்மீகமாக தெரிவித்து விட்டு கோடை சுற்றுலா போய் விடலாம் என்றிருந்தவருக்கு தாபா தன் கட்சி அம்மாவை எதிர்த்து போட்டியிடாது என்பதால் கொஞ்சம் தர்மசங்கடம்.
விரைவில் யாராவது மாட்டியவரை காப்புத்தொகை திரும்பாவிட்டால் கவலை அடையாதவராகப் பார்த்து அறிவிப்பார்.
திமுக வுக்கும் தாபா கட்சி போட்டியிட்டால் அவர்கள் வென்ற தொகுதி என்பதால் தாங்கள் போட்டியிடவில்லை என்று கொஞ்சம் ஓய்ந்திருக்க வாய்ப்பாக இருந்திருக்கும் .அதர்கு வழியில்லை என்பதால் போட்டியிடுவதை
தவிர வேறு வழியில்லை.
சுரன்

ஆனால் சென்ற தேர்தலில் பெரியண்ணன் மரணித்த முத்துக்குமாரை விட வெறும் மூவாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாகப்பெற்றிருந்தார் என்பதால் அவரையே மீண்டும் கொம்பு சீவி விட்டு மோத வைக்கலாம்.
மின் தடை,2ஜி,ஈழம் அலையிலேயே குறைந்த வாக்கு வித்தியாசம்தான்.இப்போது அதைவிட அதிக மின் தடை ,விலைவாசி உயர்வுகள் திமுக வுக்கு சாதகமாகலாம்.
அதிமுக வேட்பாளர் பழைய மன்னர் குடும்பத்துக்காரர் என்ற மக்கள்ஆதரவு
ஆணைய ஆதரவு,பண-படை பல ஆதரவு என்று இறங்குகிறார்.
ஏற்கனவே பல இடைதேர்தல்கள் நமக்கு தந்த ஆளுங்கடசி வெற்றி என்ற செய்தி இவைகளை வைத்து நான் சொல்லப்போவது உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஆனாலும் மக்கள் உண்மையிலேயே பணத்துக்கு அடிமையாகாமல் நடைமுறை வாழ்வை கணக்கிட்டால் முடிவுகள் மாறிவிடும்.
ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு அது நம்மிடம் கொள்ளையடித்தப்பணம்தானே என்று சிந்தித்து வாக்குகளை விற்காமல் இருந்தால் நிலை வேறுதான்.
சுரன்


ஆளுங்கட்சி தொகுதியை பளபளப்பாக ஆக்கிவைத்திருப்பதும்.அமைச்சர்கள் வாசலில் வந்து குறை கேட்பதும் வாக்குப்பதிவு நாள்வரைதான் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாலே போதும்.
எதற்கும் சங்கரன்கோவில் நிலையை தேர்தலுக்கு.முன் .தேர்தலுக்கு,பின் என பார்த்தாலே போதுமானது.
அது சரி உங்கள் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் என்று யோசிக்கிறீர்களா?
இடைத்தேர்தல் வர ச.ம.உறுப்பினர் பதவி விலகினாலே போதும்.
_________________________________________________________________________________
சுரன்

ஒரு லட்ச வணக்கங்கள்.


இணையத்தில் செய்தி களை வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்துவந்தேன்.சில இதழ்கள் நமது கருத்துக்கள் அவர்களை இடிப்பது போல் இருந்தால் மதிப்பாய்வுக்கு பின் அதை வெளியிடாமலேயே குப்பையில் போட்டது.
அப்போதுதான் எல்லோரையும் போல் நாமும் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலவ விட்டால் என்ன என்ற நப்பாசை.யார் அதை படிக்கப்போகிறார்கள்.என்ற எண்ணமும் இருந்தது.அப்படி படிக்காததே நமது அரைவேக்காடு எழுத்துக்கும் நல்லது என்ற எண்ணமும் வர இந்த "சுரன்' உருவானது.
இப்போது 'சுரன்'உருவாகி கிட்டதட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன.
இதுவரை 1,00,080 முறை சுரன் பார்வையிடப்பட்டுள்ளது.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் நிகழ்வு.
எனது கருத்துக்களைத்தான் இதுவரை தந்து வந்துள்ளேன்.பிற தளங்களில் இருந்து என்னை கவர்ந்த பிறர் படிக்க வேண்டும் என்று நான் எண்ணிய கட்டுரைகளை-செய்திகளை நன்றி: என்று குறிப்பிட்டு மறு பதிவிட்டுள்ளேன்.
அது மற்றவர்களை கவர்ந்ததா,படித்தார்களா என்பது வேறு விடயம்.அதை தொடர்ந்து செய்யவிருப்பம்.

சுரனில் கருத்திட்டவர்கள் கருத்தை அப்படியே வெளியிட்டு வந்துள்ளேன்.அதை எனக்கு ஆதரவாக திருத்தியமைக்கவில்லை.அதுவும் தொடரும்.
மற்றவை பின்னர்,
என்றும் அன்புடன்
சுரன் சுகுமாரன்
28-04-2012.


_________________________________________________________________________________

2-வது இடம்

மதுரை என்றாலே வில்லங்கங்கள் அதிகம்தான்.உலகம் முழுக்க இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக சானல் மூலம் ஒளிபரப்பான  நடிகை ரஞ்சிதாவுடன் டூப் போடாமல் கட்டில் காட்சிகளில் நடித்த நாயகன்
நித்தியானந்தாவை பாரம்பரியமிக்கமதுரை ஆதீனத்தின்293 வது ஆதினமாக முடிசூட்டி வைத்துள்ளார்.அருணகிரியார்.
மதுரை மக்களுக்கு ஆசி வழங்க புது ஆனந்தா சாமியார் தயார்.இப்படி சிற்றின்ப குற்ற சாட்டில் சந்தி சிரித்த சாமியாரை மக்களுக்கு பேரின்பம் வழங்கும் இடத்தில் அமர்த்தியவரை என்னவென்று சொல்வது.ஒரு வேளைபழைய ஆதினம்அருணகிரியார் சிடி பார்த்தது முதல் நித்தியானந்தாவின் ரசிகராகியிருப்பாரோ?
அதை விட அதி நவீன விளக்கம் அருணகிரியார் தந்துள்ளார்.

"மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார்.[கைலாயத்தில் சன் டிவி தெரிகிறதா?]
அப்போதுதான் நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.[பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடியதுக்கா இவ்வளவு பெரிய பொறுப்பு?]
மதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.
நித்தியானந்தா பதவியேற்பின் போது நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சுரன்

292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அவர் முரசொலியில் வேலை பார்த்துவந்ததாக கூறப்படுகிறது.தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பதவியில் அமர்ந்தவுடன் நித்தியானந்தா அறிவித்த அறிவிப்புகள் வருமாறு"முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் "என்றார்.
சுரன்

இவர் மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு யாரும் தடை செய்யாதீர்கள்.அப்புறம் அவர் தகர்த்து எறிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த பதவியை வைத்தாவது சன் டிவி யை ஏதாச்சும் செய்யமுடியுமானு பாருங்கள் மகாசன்னிதானம் நித்தியானந்தா ஞான தேசிக பரஹம்சர் அவர்களே. 

___________________________________________
2 -ம் இடம்,
+++++++
லகில் இப்போது முதலிடம் பின்லாந்திடமிருந்து தென்கொரியாவுக்கு போய்விட்டது.செல்பேசி யில்தான்.
நோக்கியா வை இரண்டாம் இடத்துக்கு தள்ளி விட்டு சாம்சங் முதலிடம் வந்துவிட்டது.
பதினான்கு ஆண்டுகள் உலக செல்பேசி சந்தையில் நாற்பது சதவீத்தை கையில் வைத்துக்கொண்டு முதலிடம் வகித்த நோக்கியா இரண்டாம் இடம் போனது மிக வருத்தம்தான் .அவர்களுக்கு.
சுரன்

ஆப்பிள் ஐ போன்,சாம்சங்கின் காலக்சி போன் கள் விற்பனை அதிகரித்ததுதான் இப்படி இரண்டாம் இடம் போக காரணம்.இலாபமும் குறைந்து விட்டது.
ஆனால் மைக்ரோசாப்ட்நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் வசதியுடன் செல்பேசிகள் தயார்த்தடன் மூலம் சந்தை இறக்கத்தை மேலும் கீழே போய்விடாமல் வைத்திருக்கிறது நோக்கியா.
உலகில் பல இடங்களில் விற்பனை சரிந்திருந்தாலும் ஆசிய கண்ட நாடுகளில் இன்னமும் நோக்கியாதான் முதலிடம்.ஆனால் இரண்டாம் இடத்துக்கான வித்தியாசம் மிகக்குறைவாகத்தான் உள்ளது.
சுரன்

சீனத்தயாரிப்புகள் விலையைப்பொறுத்தவரை மிக மலிவாகவும்.வசதிகளைப்பொறுத்தவரை மிக அதிகமாவும் விற்பனை அதிகரிப்பும் நோக்கியாவின் முதலிட அடித்தளத்தை ஆட்டிவைத்த காரணிகளில் ஒன்றாக அமைந்து விட்டது.
இரண்டாம் இடத்தை சாக்காக வைத்து அதைக்கூறியேதனது நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வை குறைத்து.சிலரை பணி நீக்கமும் செய்துள்ளது நோக்கியா.
_________________________________________________________________________________
சுரன்
மே-2 ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்ட வீடு.


வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சில நினைவுகள்,,,,,,.

இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஓசாமாவை ஓபாமா போட்டுத்தள்ளியதுதான்.ஓசாமாவை படுகொலை செய்த ஓராண்டு நிறைவு வருகிறதாம்.எனவே தனது அமெரிக்க மக்களை கொஞ்சம் பத்திரமாக இருக்ககூறியுள்ளது அமெரிக்கா.


பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் சொகுசு ஓட்டல்களில் சென்று வருவதையும் மக்கள் அதிகமாக உள்ள கடைத்தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.மே முதல்வாரம் தான் ஒசாமாவின் மரண நாள் வருகிறது.
அல்கொய்தாவினர் இதைக்குண்டு வெடித்துக் கொண்டாட ஏதாவது திட்டம் வைத்திருக்காமலா இருப்பார்கள்.அவர்கள் அப்படி கொண்டாடும் இடப்பட்டியலில் இந்தியா இல்லாமல் இருக்க அல்லாவை வேண்டிக்கொள்வோம்.
ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டாலர்தானாம்.
அதென்ன மூன்று .ஒன்று எவ்வளவு என்று கடையில் விசாரித்தால் சில்லறை தட்டுப்பாட்டில்தான் மூன்றாக ரவுண்ட் செய்து விற்கிறார்களாம்.டாலர் மதிப்பு இப்படி குறைந்து விட்டதா என்பவர்களுக்காக.ஜிம்பாப்வேயிலும் அமெரிக்க பாணியில் பணத்துக்கு டாலர் என்றுதான் பெயர்.
சுரன்
மிட்டாய் வாங்க செல்லும் சிறுவன்[ஜிம்பாப்வே]
முன்பு அந்நாட்டின் டாலர் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராகத்தான் இருந்தது.ஆனால் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் காரணங்களால் இப்போது பணவீக்கம் 231 மில்லியன் சதமாக உயர்ந்துவிட்டது.
ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டாலர் இப்போது இரண்டு அமெரிக்க டாலருக்குத்தான் சமம்.
பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் என்று உச்சக்கட்டத்தில் டாலர்களை அச்சிட்டு வாரியிறைத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டாலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன்டாலர் கள்தான்கட்டணம் இங்கு சைக்கிள் நிறுத்த 5ரூபாயை கொடுக்கவே நாம் கவலைப்படுகிறோம்.
சுரன்

மூன்று முட்டைகள் வாங்க 100 பில்லியன் டாலர் கொடுத்தால் போதும். அந்நாட்டில் பணத்தின் மதிப்பு சரிந்து கொண்டே போனதால், பெரும்பாலான இடங்களில் ஜிம்பாப்வே நாணயங்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு அமெரிக்க டாலர்களைத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இப்போது அமெரிக்க டாலருக்கு சில்லறை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகில் எட்டு நாடுகள் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகிறது.
ஆனால் இந்த நாடுகள் உள்ளூர் நாணயங்களை சில்லறைக்கு பயன்படுத்துகின்றன. ஈக்வடார் நாட்டிலும் ஜிம்பாப்வேபிரச்னை தான். அங்கும் அமெரிக்க டாலரைத் தான் பயன்படுத்துகின்றனர்.ஆனால்அவர்கள் தங்கள் நாட்டு நாணயத்தை தாராளமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதால் சில்லறைக்கு பிரச்னையில்லை. ஆனால் ஜிம்பாப்வேயில் உள்ளூர் நாணயம் கிடையாது. தென் ஆப்ரிக்க நாணயங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
அதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.எந்த கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை என்ற கதைதான்.
சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க, கடைகளில் சாக்லெட், பேனா, சிகரெட்,  தக்காளி, வெங்காயம்,புளியை கொடுத்து சமாளித்துவருகின்றனர்..
சுரன்

இதற்கெல்லாம் காரணம் விலைவாசியைக்கட்டுப்படுத்த அரசு வியாபாரிகள் ,தொழிலதிபர்களுக்கு சில கட்டுப்பாடுகளைக்கொண்டு வராமல் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போவதாலும் அதை சமாளிக்க அதிக பணத்தை அச்சிட்டு வெளியிட்டதாலும் உண்டான வீககம்தான்.
இந்தியாவும் வணிகர்கள்,தொழிலதிபர்களுக்கு சலுகைகளைக் கொடுத்தும் அதன் பலன் அவர்கள் தயாரிப்பு விலையை குறைக்காமல் உயர்த்திக்கொண்டே போவதை கட்டுப்படுத்தாமல் உள்ளது.இதன் பலன் நாமும் இனி கறிவேப்பிலை வாங்க 100ரூபாய் தாளை கொடுக்க வேண்டிய நிலையில் கொண்டுபோய் விடும்.அந்த இனிய நாளை மன்மோகன் சிங் -மான்டேக் சிங் கூட்டம் கொண்டுவந்த தாராளமயமாக்கல் வெகு விரைவிலேயே கொண்டு வந்து விடும்.
----------------------------------------------------------------------------------------------------------

நேசனல் ஜியாகிரபி தேர்ந்தெடுத்த 2011 ஆண்டில் சிறந்த படங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல்-2011 ஜப்பான் சுனாமி அலங்கோலம்.
அழிந்து வரும் காண்டாமிருகங்கள்
தின வாழ்வு

லிபியா கடாபி மோதல்
6 வயது மணமகள்,25 வயது கணவர்.
வட கொரிய தலைவர் கிம் மறைவை அடுத்து
போலார் கரடி இரை தேடுகிறது.
ஏமன் போராட்டத்தில் தாக்கப்பட்ட கணவருடன்
பழைய பாதை?

வியாழன், 26 ஏப்ரல், 2012

அணை வலுவானதுதான் .

முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது. அங்கு புதிய அணை ஒன்றையும் அமைக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி அது தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து கருத்துக் கேட்டது.

அந்த வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை முத்திரையிட்டஉறையில் 25.4.12அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும்தற்போதைய அணை வலுவாக இருக்கிறது, அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் கருத்தொற்றுமை நிபுணர்களிடையே உள்ளதாகவும், வேறு சிலவற்றில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.அதன் அடிப்படியிலேயே வழ்க்கும்-தீர்ப்பும் அமையும்.ஆனால் சாண்டி யின் கேரள அரசு தீர்ப்பை மதித்து செயல்படுத்த மத்திய அரசுதான் இரு மாநிலங்களையும் கட்டாயப்படுத்தவேண்டியதிருக்கும்.
_________________________________________________________________________________
சுரன்
ஊழல் நடந்து 25 ஆண்டுகளாக குறைட்டை விட்டு விட்டு இப்போது போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ் காந்தி பணம் பெற்ற தற்கான சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை வெளியிட்டு ஊழல் குற்ற சாட்டில் இருந்து ராஜீவையும்.இத்தாலி ஆயுத முகவர் குவாத்ராச்சி விடுவிக்க முயற்சி நடக்கிறது.ஆதாரம் கிடைத்தால் மட்டும் செத்துப்போனவர் மீது நடவடிக்கை எடுத்துவிடாவா போகிறார்கள்.

போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் 64 கோடி ரூபாய் [இலஞ்சம் ] கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் நட்க்கவே இல்லை.
சுரன்

அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த "இந்து" இதழிச்சேர்ந்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உ தவியாக இருந்தவர்தான் ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துபேட்டிகொடுத்துள்ளார்.
", இந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான சரியான ஆதாரம் இதுவரைகிடைக்க வில்லை.ஆனால் ஊழல்வாதி குவாத்ராச்சிய காப்பாற்ற ராஜீவ் காந்தி இந்தியாவிலும்,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்த் போன்ற நாடுகளிலும் கடுமையாக செயல்பட்டார்.அதன் காரணம் புரியவில்லை" என்று பேட்டியில்கூறியுள்ளார். 
லின்ட்ஸ்ட்ராமின் இத்தனை ஆண்டுகள்கழித்துராஜிவ் காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது சரிதான்.
னால் ராஜீவுக்கும்,குவாத்ராச்சிக்கும்லஞ்சம் வாங்கியதில் தொடர்பில்லை என்று கூறவியலாது. இந்திய இராணுவத்துக்கு தனது பீரங்கிகளை விற்க போபர்ஸ் நிறுவனம் ஏன் 64 கோடி ரூபாவை இலஞ்சமாக தர வேண்டிய நிலை ஏற்பட்டது?அது யாரால் கேட்கப்பட்டது.யாருக்கு எகொடுக்கப்பட்டது.என்பதை கவனிக்க வேண்டும்.லொட்டஸ் என்ற பெயரில் பணம் கணக்கில் வழங்கப்பட்டதே அது யார் கண்க்கு?

இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ராச்சிக்கு எதற்காக போபர்ஸ் பணம் கொடுத்தது?அவருக்கஊழலில் தொடர்பில்லை என்றால் பணம் வழங்கத்தேவை என்ன வந்தது.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விசாரணையில் சோனியா காந்தியையும் சேர்த்திருக்க வேண்டும். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடததப்படவில்லை.நடந்திருந்தால் இந்த இலஞ்சம் தொடர்பான்உண்மைகள் வெளியாகியிருக்கும்.
ஆனால் போபர்ஸ் ஊழலை மறைக்க இந்தியா, ஸ்வீடன் , சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் நடந்தன. வெகு சாமார்த்தியமாக இந்திய ஆட்சியாளர்களால் குவாத்ராச்லித்தாலிக்கு தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.அவரை இந்திய அரசு சரியான முறையில் விசாரிக்கவே இல்லை.அவரை காப்பாற்றிடவே காங்கிரசு ஆட்சியினர் நடவடிக்கைகளை அமைத்திருந்தனர்.
சுரன்

லஞ்சம் தரப்பட்டதற்கான பின்னணியில் சோனியா இருக்கிறார்.இத்தாலி ஆயுத முகவரை ராஜீவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சோனியாதான். என்ற கருத்தை இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர்சித்ரா சுப்பிரமணியதெரிவித்துள்ளார்.
இந்த ஊழலை 25 ஆண்டுகளாக ஆறவைத்து சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் தப்பிக்க வைத்து விட்டு இப்போது ஆதாரங்களை தேடினால் எங்கிருந்து கிடைக்கும்?அதை இன்னுமா விட்டு வைத்திருப்பார்கள்?
சுப்ரமணியசாமி இந்த நிலை பற்றிகூறியிருப்பதாவது:போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குட்ரோச்சிக்கும், சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து சோனியாவை விசாரிக்க அனுமதிக்க கோரி, சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி தரமறுத்தது.லின்ட்ஸ்ரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் நான்சி.பி.ஐ.,க்கு அனுப்பினேன். 
சிபிஐ யோபோபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தி குட்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி வைத்துவிட்டது.ஆனால் லின்ட்ஸ்ரோம் கூறிய உண்மையை ஆதாரமாக வைத்து, நான் மீண்டும் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்போகிறேன்.என்று கூறியுள்ளார்.
_________________________________________________________________________________
சுரன்
54 வயதான,வியட்நாம் போர் வீரரான தனக்கு வேலை வாய்ப்பு கேட்கும் அமெரிக்கர்.
சுரன்
செர்னோபிள் அணு உலை விபத்தின்26 ஆன்டு நினைவு.