நச்சு கருத்து

பிச்சை எடுத்தால் கூடவோ,அல்லது பிச்சை எடுத்தோ கூட கல்வி கற்க வேண்டும் என்பது தமிழக முது மொழி.ஆனால் ஆப்கன் தாலிபான்களுக்கு அந்த பழமொழிகள் எல்லாம் கிடையாது.அதுவும் பெண்கள் கல்வி பயீல்வது அவர்களுக்கு ஆபத்தான ஒன்று.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாஹர் மாவட்டத்தில் உள்ளது ரஸ்டாக் நகரம். இங்குள்ள மகளிர் பள்ளியில் குடிநீர் தொட்டியில் இருந்த நீரை குடித்த100 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை சோதித்ததில் அவர்கள் குடித்த நீரில் நச்சு கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடுஞ்செயலை. தலிபான்கள்தான் செய்ததாக தெரிகிறது. இச்செயலுக்கு ஆப்கானில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.
நச்சுகலந்த குடிநீரை அருந்திய மாணவிகளில் பலர் பிழைத்து விட்டாலும். சிலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. 


ஆப்கானிஸ்தான் தலிபான்களின் பழமைவாத ஆட்சியில்இருந்த போது பெண்கள் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும்,வெளியே தனியே நடமாடவும் கூடதடை விதிக்கப்பட்டிருந்தது.
2001-ல் நேட்டோ படை தலிபான்களை ஒடுக்கி ஆப்கானிஸ்தானை மீட்டபின்தான் பெண்கள் படிக்கவும், வேலைக்கு செல்லவும் செய்கின்றனர்.அது தாலிபான்களின் கண்ணை உறுத்தி வருகிறது.
_________________________________________________________________________________


நூற்றில் ஒருவர்.
_________________



வேறு வேலை இன்றி"டைம்' இதழ் வெளியிட்டிருக்கும் 2012-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பிடிதிருக்கிறார்.

மம்தா

அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பெரும் பணக்காரர் வாரன் பஃபட்,ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோரின் உரிமைக்காகப் போராடி வரும் வழக்குரைஞர் அஞ்சலி கோபாலன் மட்டுமே மம்தாவை தவிர, இந்தப் பட்டியலில் இடம்பிடிதிருக்கும் இன்னொரு இந்தியராவார்.
மம்தா இடம் பிடிக்க காரணம் என்னவாக இருக்கும்?.அதிரடி துக்ளக் முடிவுகள்.ஊடகங்கள் மீதான தாக்குதல்.
தொண்டர்களை கொத்தடிமைகள் போன்று நடத்துவது.மற்ற கட்சியினரை தீண்டத்தகாதவர்களாக பாவிப்பது போன்றவைகளுக்காக தரப்பட்ட இடமாக இருக்கலாமோ?
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?