இறங்கும் இந்திய நிதி தரம்
இந்தியா பொருளாதார நிலையில் வீழ்ச்சி அடையும் நிலை தென்படுவதாக உலக அளவில்'கடன்பெறும் தகுதியை' தரப்படுத்துகிற நிதி நிதி மேலாண் நிறுவனமொன்று எச்சரிக்கை செய்துள்ளது.
மோசமடைந்துவரும் பட்ஜெட் துண்டுவிழும் தொகையும் இறங்கிக்கொண்டு வரும் பொருளாதார வளர்ச்சி குறிகளும் இந் நிலையை ஏற்படுத்தி இருப்பதாகஸ்டாண்டர்ட் &புவர்'ஸ்நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவால் கடன்பெறும்தகுதி தரம்[BBB]என்ற தரத்திலேயே தக்க வைத்திருந்திருந்தாலும், நாட்டின் பொருளாதார புறச்சூழ்நிலையை 'நிலையானது' என்ற தரத்திலிருந்து 'பலவீனமானது' என்ற தரத்திற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
2011-12 நிதியாண்டில் இந்திய அரசு உத்தேசித்த 7 % பொருளாதார வளர்ச்சி வீதம், அதை விட குறைவாக 5.3 % என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்றும்ஸ்டாண்டர்ட் &புவர்'ஸ்குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார வளர்ச்சியை 7 வீதமாக காத்துக்கொள்ளமுடியும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
இந்த புதிய தரப்படுத்தலை பார்த்து யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றுஅவர் கூருகிறார்.
அரசுக்கு கிடைக்கின்ற (கடன்கள் தவிர்ந்த) வரி வருமானத்துக்கும் செலவினத்துக்கும் இடையிலான பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 % ஆக அமையும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஆனால் இந்தியாவின் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் மிதமான வளர்ச்சியை காட்டுவதாகவும் அதன் நடைமுறைக் கணக்கில் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும்ஸ்டாண்டர்ட் & புவர்'ஸ்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதனாலேயே நீண்டகாலமாக தக்கவைக்கப்பட்டிருந்த இந்தியாவின் பொருளாதார நிலையை 'நிலையானது' என்ற தரத்திலிருந்து 'பலவீனமானது' என்ற தரத்திற்கு கொண்டு வந்துவரையறை செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
2011-12 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 வீதத்துக்கும் குறைவாகச் செல்லும் போக்கை பெப்ரவரி மாத பொருளாதார விகிதம் காட்டியுள்ளது.
இந்தியாவின் தொழில், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட மந்த நிலையும்,விலை வாசி உயர்வும். இந்த புதிய தரப்படுத்தலின் மூலம் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி அடிக்கடி வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துக்கொண்டு போனதேஇந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதாரஆய்வர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2010 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை13 தடவைகள் வட்டி வீதங்களை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
இதுவும் அரசு விவசாய மானியங்களைக் குறைத்ததுமே விலை வாசிகள் உயர்ந்து பணவீக்கத்தை ஏற்படுத்தி இந்திய பொருளாதாரத்தை உலக தரப்படுத்தலில் கீழிறக்கி உள்ளது.
_________________________________________________________________________________

பிரவுசர்கள் புதுசு
===============
கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர்களின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன. சில நாட்களாக பிரவுசர் வெளியிடும் போட்டி நடந்து வந்ததில் தற்போது உபயோகிப்பாளர்களுக்குசிறப்பான தருணம்.
கூகுள் தன் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி உள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும். இதன் மூலம் சி.பி.யுவின் வேலைப் பளு குறையும். அந்தப் பணியை இனி ஜி.பி.யு. எனப்படும் கிராபிக்ஸ் சிப்செய்துவிடும். இந்த வசதி ஏற்கனவேகுரோம் பிரவுசரின் முந்தைய பதிப்புகளில் தரப் பட்டதுதான். ஆனால், சில நாட்களில் இது மாறா நிலையில் முடக்கிவைக்கப்பட்டிருந்தது.

தற்போது வந்திருக்கும் புதிய பதிப்பில் இது இயங்கும் நிலையில் நமக்கு தரப்பட்டுள்ளது. இதன் இயக்கத்திற்குத் தேவையான மற்றும்இணக்கமான கிராபிக்ஸ் ஹார்ட்வேர் இருக்கும் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இது இயங்கும் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் இது இயங்குமா எனத் தெரிந்து கொள்ள “chrome://gpu” என குரோம் பிரவுசர் யு.ஆர்.எல். விண்டோவில் தட்டச்சு செய்தால் தெரிந்து விடும்.
இந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டியின் மூலமாக, தகவல்களைப் பெற்றது.அதில் குறைகள் எதுவும் தெரிவிக்ப்படாததினால், இப் பதிப்பு வெளி யாகியுள்ளது.
இந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டியின் மூலமாக, தகவல்களைப் பெற்றது.அதில் குறைகள் எதுவும் தெரிவிக்ப்படாததினால், இப் பதிப்பு வெளி யாகியுள்ளது.
இப் புதிய பதிப்பில், விளையாட WebGL, ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி முப்பரிமாண காட்சி எனப் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றாலும், இந்த பிரவுசர் இயங்கும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் சில காட்சி இயக்கங்கள் மட்டும்கிடைக்காது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு முறைக்கான இந்த பிரவுசர் பதிப்புகள்http://www.google.com/ chrome என்ற தளத்தில் இப்போது கிடைக்கிறது.
மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 10 ஐ பிப்ரவரி முதல் வெளியிட்டுள்ளது. இது பெரும்பாலும் பழைய பதிப்பில் இருந்த குறைகள் திருத்தப்பட்ட பதிப்பாகவும், சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கிடைக்கிறது.

- . Back பட்டனை ஒருமுறை அழுத்திய பின்னரே Forward பட்டன் கிடைக்கும்.
- . வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களில், முழுத்திரையையும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
- . WebGL graphics மற்றும் CSS3 3D ஆகியவற்றிற்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது.
- . பெரிய அளவிலான ஜாவா ஆப்லெட்களை இயக்கும் போதும், புக்மார்க்குகளை சீரமைக்கும்போதும், பிரவுசர் கிராஷ் ஆவதில்லை.
- விண்டோஸ் இயக்கத்திற்கான பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த பதிப்பை http://www. mozilla.org/products/download.html?product=firefox10.0&os=win&lang=enUS என்ற தளத்தில் தரவிறக்கிக்கொள்ளலாம்.
- புதிய பிரவுசர்கள் மூலம் சுறு சுறுப்பாக கணினியை இயக்குங்கள்.
- _________________________________________________________________