தொடரும்

ராணுவ ஊழல்கள்,

போபர்ஸ் பீரங்கி ,கார்கில் சவப்பெட்டி,

0அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1980 - களில் நடைபெற்ற போப்போர்ஸ் பீரங்கி ஊழல்..ராஜீவ் காந்தியும் அவரது குடும்பம் மற்றும் இத்தாலிய நாட்டு தொழிலதிபர் கோட்ரோச்சி சம்பந்தப்பட்ட ஊழல்... இன்றைக்கு அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்து விட்டார்கள். இன்று போப்போர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை என்பது புதைக்குழிக்குள்  போய்விட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள். 
                   
அடுத்து 1991 - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியாட்சியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் மரணமடைந்த நமது நாட்டுப் படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு அன்றைய பாஜக அரசு சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது.

( நம் நாட்டில் சவப்பெட்டி செய்வதற்கு ஆளில்லையாம் ) சாதாரணமாக ஒரு பெட்டிக்கு ஆகிற விலையை விட பலமடங்கு தொகையை கொடுத்து இறக்குமதி செய்தது. சவப்பெட்டியிலேயும் பல கோடி ஊழல். சவப்பெட்டியிலேயும், சுடுகாட்டுக்கூரையிலேயும் ஊழல் செய்கிற ஆட்சியாளர்களைத் தான் நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள். அவங்க வெட்கப்படுகிறார்களோ இல்லையோ நாம் வெட்கப்படவேண்டும். இப்போது அந்த சவப்பெட்டி ஊழல் விசாரணை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள்.

அதே பாஜக கூட்டணியில் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மெகா ஊழல்.... அது ஆயுத பேர ஊழல்... அந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசின் ''தோழி'' ( GIRL FRIEND ) ஜெயா ஜெட்லி என்ற அம்மையார் பெர்னாண்டசின் படுக்கையறையில் ஆயுத வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம் பெற்றதை நாமெல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அந்த ஊழல் விசாரணையும் காற்றோட போயாச்சி... மக்களும் அதையும் மறந்துவிட்டார்கள்...

இப்போது மன்மோகன் சிங் அலங்கோல ஆட்சியில் நடைபெறும் ஊழல் அலங்கார அணிவகுப்பில் இன்னொன்றும் புறப்பட்டு கிளம்பியுள்ளது. இது இந்திய இராணுவத்தில் இன்னொரு புதுவகையான ஊழல். இது இராணுவ  அணிவகுப்பில் வைக்கப்பட்ட கண்ணிவெடி போன்றது. இதற்காக தேசமே தலை குனிகிறது.

ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனப் பிரதிநிதி தனக்கு ரூ. 14 கோடி இலஞ்சம் தர முன் வந்ததாக இந்திய இராணுவத்தலைமைத்தளபதியே வெளிப்படையாக பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதைக் கண்டு நாடே அதிர்ந்துள்ளது. 

ராணுவம் நிர்ணயித்துள்ள தரத்தை விட குறைவான தரத்தில் உள்ள 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் ரூ. 14 கோடியைத் தருவதாக அந்த குறிப்பிட்ட நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும், இராணுவத் தலைமைத் தளபதியிடமே ஒரு நபர் வந்து இலஞ்சம் அளிப்பது தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றால் அவருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தனது பேட்டியில் இராணுவத்தலைமைத்தளபதிஜெனரல் வி. கே. சிங்தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பிருந்தவர்கள் இப்படித்தான் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனக்குப் பிறகு வருபவர்களும் பணம் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்ஜெனரல் வி. கே. சிங்குறிப்பிட்டிருக்கிறார்.
இது மட்டுமல்ல இன்னொரு அதிர்ச்சியான தகவலை
யும் கூறியிருந்தார். இலஞ்சம் கொடுக்க முன்வந்த இந்த விஷயத்தை 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். 

              
நியாயமானகேள்விகள்...?         
1. இத்தனை மாதங்களாக பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மத்திய அரசோ இலஞ்சம் கொடுக்க வந்த நபர் மீது ஏன் விசாரணை நடத்த உத்திரவிடவில்லை...?
    
2 . தளபதி இந்த தகவலை என்னிடம் சொல்லும் போது அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்... உறைந்து போனேன்... என்றெல்லாம் சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் நியாயமாக - உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டாமா...?

3.இத்தனை மாதங்கள் கழித்து இப்போது இந்த விஷயத்தை வெளியிட்ட தலைமைத் தளபதி ஏன் முன்பே வெளியிடவில்லை...? தனது வயது பிரச்சனையில் அரசு தனக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்போது இந்த விஷயத்தை வெளியாக்கிவிட்டாரோ..?

           
4.பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் தேஜீந்தர் சிங் தான் தனக்கு 14 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க வந்தவர் என்று அப்போதே தெரிந்திருந்தும் மத்திய அரசும், பாதுகாப்புத்துறை அமைச்சரும், தலைமைத் தளபதியும் இன்று வரை அவர் மீது விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காததேன்...?
           
இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன. மத்திய அரசு தான் பதில் சொல்லவேண்டும்.எல்லா விபரமும் தெரிந்த தலைமை தளபதி சிங் இவ்வளவு நாட்கள் வாயை இறுக்க மூடிக்கொண்டிருந்தது ஏன்?ராணுவ அமைச்சகம் நடவடிக்கையில் இறங்காதது ஏன்?போன்ற கேள்விகள் இவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கி விட்டது.மொத்தத்தில் இந்திய ராணுவம் போருக்கு செல்லாமலேயே மண்ணைக்கவ்வி அசிங்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் புலிகள்-?
தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் இலங்கை திரும்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே இவர்களின் இலக்கு என்று அந்நாட்டு காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
திருகோணமலை குச்சவெளியில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகபநபர்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தாம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக இவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை திரும்பும் முன்பு இவர்கள் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளை பெற்றுள்ளனர். மீனவர்கள் போன்று வேடமிட்டுக் கொண்டு வடக்கு,கிழக்கில் இரகசிய நடவடிக்கைளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இந்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஈபிடிபி உறுப்பினரின் சடலத்துக்கு அருகே, கிடந்த துண்டுக் காகிதம் ஒன்றில், “துரோகிகளுக்கு மரணம்: நாங்கள் மீண்டும் வந்துள்ளோம் – விடுதலைப் புலிகள்“ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் ஐலன்ட் நாளெடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை மற்றொரு கொழும்பு ஆங்கில நாளேடான ‘டெய்லி மிரர்‘, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளான மூன்று சந்தேகநபர்களும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களா என்று உறுதிப்படுத்துதவதற்காக விசாரணைகள் நடைபெறுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
“சந்தேகநபர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. அவ்வாறு தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்களை நாம் நிராகரிக்கவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன“ என்று இலங்கை காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குச்சவெளி பெரியகுளம் பகுதியில் கடந்த மார்ச் 18ம் நாள் கொலை செய்யப்பட்ட முத்து எனப்படும் ரகுநாதன் என்ற ஈபிடிபி உறுப்பினரின் சடலம் அருகே போடப்பட்டிருந்த “விடுதலைப் புலிகள்“ என்ற காகிதம், விசாரணையைத் திசை திருப்புவதற்காக போடப்பட்டிருக்கலாம் என்றே இலங்கை காவல்துறையினர் ஆரம்பத்தில் சந்தேகித்திருந்தனர் என்றும் ‘டெய்லி மிரர்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
ஈபிடிபியில் கடந்த 15-20 ஆண்டுகளாக முன்னணி உறுப்பினராக இருந்த முத்து, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால் சிலகாலம் மறைந்த வாழ்ந்துள்ளார். இவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தகவல் வழங்குனராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சசிகலா!

சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை[?]ஜெயலலிதா திரும்ப பெற்றதால் சின்னம்மா சசிகலா,இளவரசியுடன் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்தார். அவருடைய மற்ற உறவினர்கள் விரைவில் திரும்புவார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
இது துபாய். இரவில் விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம்.

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?