வெற்றி தொடரட்டும்......
1993ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனால் அங்கு எதிர்ப்புக் கிளம்பியதால் வேறு இடத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. 1994ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. நாளடைவில் ஆலை அமைக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் உடல் நிலை மோசமடைந்ததால் தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ஆம் ஆண்டு ஆலையை மூடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சட்டப் போராட்டங்கள்: அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆலை இயங்க அனுமதி பெற்றது. அதன்பின் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி, ஆலையை மூடும்படி உயர் ந...