சனி, 31 மே, 2014

"தில்"லான மோகனாம்பாள்?

வேண்டிய 

எளிய வழிமுறைகள்

பல சிறு தொழிலதிபர்கள் செய்யும் முக்கியமான தவறு என்னவென்றால், தங்களது வரவு செலவையும் தொழிலின் வரவு செலவையும் பின்னிப் பிணைந்து குழப்புவதுதான். உங்களின் வரவு செலவுக்கென்று தனியாக ஒரு வங்கிக் கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தொழிலின் வரவு செலவுக்கும் தனியாக வங்கி கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புரொப ரைட்டர் முறையில் தொழில் செய்யும் பட்சத்தில் உங்களுக் கும் தொழிலுக்கும் சேர்ந்து ஒரே வரிதாக்கல்தான். இருந்த போதிலும் உங்கள் தொழில் கணக் கில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு, சொந்த செலவிற் காக மாத மாதம் மாற்றிக் கொள்ளுங்கள். இத்தொகை தொழில் ஆரம்பித்த காலத்தில் குறைவாகவும், தொழில் வளர வளர அதிகமாகவும் இருக்கும். இப்பணத்தை உங்களின் குடும்பச் செலவுகளான பள்ளிக் கட்டணம், மளிகை, காய்கறிகள், மருத்துவம், துணிமணிகள் போன்ற செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தொழில் நல்ல லாபத்தில் நடந்து வரும் பட்சத்தில், உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட செலவுகளான வாகனம், பிரயாணம், தொலை பேசிகள் மற்றும் பிற தொழில் சார்ந்த செலவுகளை தொழில் வங்கிக் கணக்கிலிருந்து / பணப் பெட்டியிலிருந்து செலவழி யுங்கள். இவ்வாறு பிரித்து செலவழிக்கும்போது தொழில் பாதிப்படையாமல் இருக்கும். மேலும் தொழிலுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்ற அளவும் கிட்டும்.
உங்கள் தொழிலில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய லாபத்தைப் பொருத்து, இவ் வகை செலவுகளை நீங்கள் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டுக் கொள்ளலாம். இவ் வாறு திட்டமிட்டுக் கொள்ளும் பொழுது உங்கள் தொழில் சார்ந்த வங்கி கணக் கில் இருந்து காசோலை திருப்பி அனுப்பப்படுவதோ, அல்லது கடைசி நிமிடத்தில் வெளியில் அதிக வட்டிக்கு சென்று பணம் வாங்கும் நிலையோ ஏற்படாது. உங்களின் டென்ஷனும் குறையும். அதே போல் நீங்கள் புரொபரைட்டர் முறையில் தொழில்செய்யும் பொழுது, உங்கள் தகுதிக்கு மீறி கமிட்மெண்டை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அதிகமான புரொபரைட்டர்கள் தனது தொழில் இவ்வருடம் நன்றாக இருக்கும், இவ்வருடம் லாபம் நன்றாக இருக்கும் என்று எண்ணி நகைகளை/ இடங்களை வாங்குவார்கள் அல்லது இன்ஷூரன்ஸ் போன்ற திட்டங்களில் வரம்புக்கு மீறி கமிட் செய்து விடுவார்கள். பிறகு அத்தவணைத் தொகை வரும் பொழுது பணம் கட்டுவதற்கு திக்குமுக்காடுவார்கள்.
suran
இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் நாம் ஏற்கெனவே கூறியது போல நிதித்திட்டமிடல் அவசியமாகிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் உங்களின் வருட லாபம் உங்களுக்குப் புரியும். அதிலிருந்து நீங்கள் 65%-ற்கு சரி செய்து கொள்ளலாம். 
நீங்கள் திட்டமிட்டதைப்போல் லாபம் இருக்கும் பட்சத்தில் அவ்வருடம் முடிவில் மீதி 35%-ஐ மொத்த முதலீடாக செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை அவ்வருடம் லாபம் சிறிது குறைகின்ற பட்சத்தில், உங்களின் கமிட்மெண்ட் 65%-தான் என்பதால் உங்களுக்குக் கவலை இருக்காது.
அதைப்போல நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொழில் சார்ந்த செலவிற்கும் ரசீது வைத் துக் கொள்வது சாலச் சிறந்தது. முடிந்தவரை வங்கிக் கணக்கு மூலமாக வரவு செலவை செய்து கொள்ளுங்கள். 
ஏனென்றால் அது உங்களுக்கு ஒரு பதிவாக இருக்கும். மேலும் நமக்கோ அல்லது நீங்கள் பணம் கொடுத்தவருக்கோ மறதி ஏற்படும்போது வங்கி பாஸ்புக் அல்லது ஸ்டேட்மெண்ட் உங் களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் சில செலவுகளுக்கு பணமாகத் தான் கொடுக்க வேண்டி இருக்கும். அதுபோல் நீங்கள் பணப்பெட்டியில் இருந்து எடுத்து செய்யும் சில செலவு களுக்கு ஒரு நோட் வைத்து உடனடியாகக் குறித்துக் கொள் ளுங்கள்.
பண இருப்பையும்,செலவு குறிப்பையும் அடிக்கடி சரி பாருங்கள்.செலவினத்துக்கு சீட்டுகள் வாங்கி வைப்பது மிக நல்லது.
suran
அதேபோல் உங்களது செலவுகளை வகைப்படுத்தி கணினியிலும், அட்டை ஃபைல்களிலும் ரசீதுகளையும் பிற விவரங்களையும் சேகரித்து வைப்பது வருட முடிவில் உங் களுக்கு உதவியாக இருக்கும். அதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ரெக்கார்டு வைத்துக் கொள்ளுங் கள். உதாரணத்துக்கு உங்கள் தொழிலில் வேலை செய்யும் உதவியாளரிடம் சில சரக்கை உங்கள் வாடிக்கையாளர் களுக்கு கொடுத்து அனுப்பு கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
எடுத்துச் செல்லும் உங்கள் உதவியாளரிடம் ஒரு அக்னா லட்ஜ்மெண்ட் (acknowledgement) காகிதத்தையும் கொடுத்து அனுப் புங்கள். 
உங்களது உதவியாளர், உங்கள் வாடிக்கையாளரிடம் சரக்கைக் கொடுத்த பிறகு டெலிவரி செய்ததற்கு அடை யாளமாக, உங்கள் வாடிக்கை யாளர் நீங்கள் கொடுத்த அனுப்பிய அக்னாலட்ஜ்மெண்ட் காகிதத்தில் கையெழுத்திட்டு சீல் போட்டு வாங்கி வரட்டும். அந்த அக்னாலட்ஜ்மெண்டை உங்கள் ஃபைல்களில் வைத்துக் கொள்ளுங்கள். 
இது போன்ற சின்ன சின்ன செயல்களை செய்யும் பொழுது உங்கள் தொழிலில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக நடக்கும்.

நன்றி:இந்து 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தில்"லான மோகனாம்பாள்?
கரகாட்ட குடும்ப பின்னணியை கொண்ட மோகனாம்பாள் திருமண மாகாதவர். 20 ஆண்டுகளாக வட்டி தொழிலை சைடு பிசினஸாக செய்துவந்துள்ளார். இதன்மூலம் லட்சங்கள் புரண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மோகனாம் பாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார். யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருக்க கரகாட்ட மோகனாம்பாளாகவே இருந்தார்’’ .
செம்மர கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய டிரான்ஸ்போர்ட்டர் சரவணனின் பின்னணியில் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் இருந்துள்ளார். செம்மர கடத்தல் தொழிலில் சம்பாதித்த பணத்தில் மோகனாம்பாள் வட்டி தொழிலில் முதலீடு செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவில் கரகாட்ட பெண் கலைஞர் மோகனாம்பாள் (50) என்பவரது வீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப் பணம், 73 பவுன் தங்க நகைகள், 81 கிராம் வெள்ளி, வீட்டு அடமான பத்திரங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸார் பணத்தை பறி முதல் செய்த தகவலை அடுத்து மோகனாம்பாள், அவரது சகோதரி, சரவணன் ஆகியோர் தலை மறைவாகி விட்டனர். அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
suran-சரவணன், மோகனாம்பாள்
இது ஒரு பக்கம் இருந்தாலும், காட்பாடி வீட்டில் பறிமுதல் செய்யப் பட்ட பணம் செம்மர கடத்தல் தொழிலில் சேர்த்த பணம் என கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சாதாரண திருட்டு வழக்கில் கைதான சரவணனுக்கு செம்மரக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திர மாநில காடுகளில் இருந்து வெட்டி கடத்தப்படும் செம்மர கடத்தல் சம்பவங்களில் முக்கிய புள்ளியாக சரவணன் இருந்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த ஒரு நபருக்காக சரவணன் செம்மரங்களை வெட்டி கடத்தியுள்ளார். போளூர் புள்ளியை ஏமாற்றி குறுகிய காலத்தில் 30-40 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் பார்த்துள்ளார். இதனை அறிந்த போளூர் புள்ளி சரவணனை கடத்திச் சென்று பணத்தை செட்டில் செய்யும் படி மிரட்டியுள்ளார். வேறு வழியில்லாமல் தனது ஹோண்டா சிட்டி கார், நகைகள், ஆடம்பர பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் என அந்த முக்கிய புள்ளியிடம் கொடுத்து சரவணனை மீட்டுள்ளார் அவரது தாய்.
suran
தனது சொத்துகளை பறித்துக் கொண்ட போளூர் பிரமுகரை வேலூர் ஓட்டலில் வரவழைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி னார் சரவணன். இந்த சம்பவத்தில் சரவணன், வேறு ஒரு வழக்கில் அவரது தாய் நிர்மலா, சித்தி மோகனாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சற்று அடக்கி வாசித்த சரவணன், மோகனாம்பாள் உதவியுடன் செம்மரக் கடத்தல் தொழிலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்காகவே காட்பாடியில் ஜமுனாவின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு தங்கியுள்ளனர். செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கிடைத்த பணத்தை அந்த வீட்டில் பதுக்கியதாகவும், சரவணனின் கடத்தல் தொழி லுக்கு மோகனாம்பாளும் உடந்தையாக இருந்துள்ளார் என்று விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது கதை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


வெள்ளி, 30 மே, 2014

அனுப்பிய இ -மெயிலை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் தவறாக sent பண்ணிய இ-மெயிலை  unsent பண்ண முடியும்
நீங்கள் தவறாகவோ அல்லது நபர் மாற்றியோ ஒரு மெயிலை  அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும்.

முதலில் உங்கள்... மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும்.
suran
 அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும்.

இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு இ மெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும்

அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்..
suran
--------------------------------------------------------------------------------------------------------------------- 
 
நம்  முன்னோர்கள்   எந்த தொழில் நுட்பத்தில்
கிணறு வெட்டினார்கள்???

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய...
கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில்
கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான டெக்னாலஜி இதோ..
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

நீரூற்று நல்ல நீரூற்று என
அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .
பும்உள்ளது ஆனால் இவற்றிற்கெல்லாம்எளிய இலகுவான டெக்னாலஜி இதோ..மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்நீரூற்று தோன்றும் என்கின்றனர்.நீரூற்று நல்ல நீரூற்று எனஅறிவது எப்படி ?நவதானியங்களை அரைத்து கிணறு வெட்டவேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூயசிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்இருக்கிறது என்று அறிவது எப்படி ?கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும்பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின்குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும்இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில்தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்....!

வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின்
குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் .
அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
suran
-----------------------------------------------------------------------------------------------------------------------
குறட்டை
---------------- 
 
நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

·         * தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.

·         *  பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.

·         * நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
suran

*      புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

*    மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.

*     சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால்குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

·         * தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
=========================================================================
suran

அலை அல்ல " வலை."

“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள்.
 இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம்.
தீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது மாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7)
suran
ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லஅந்த ஆறு வீரர்களும் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள்என்றும் சரடு விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றின் செய்தியென அந்தப்பத்திரிகை கூறுகிறது.ஹிராத் நகரில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இந்திய ராணுவவீரர்கள் தில்லி வந்து விருந்தில் கலந்து கொண்டிருந்தால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தில்லிவந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணத்தில் இது எவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும். இது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மாலைமலர் ஏடு இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தியா? அல்லது விளம்பரமா? என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் நரேந்திர மோடியை சூப்பர் மேனாகப் காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின்போது அவர் ஹெலிகாப்டரில் துணிச்சலுடன் போய் 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டார் என்று புருடாவிடப்பட்டது. நாடே அல்ல உலகமே இந்தப் புனைச்சுருட்டு செய்தியை வியப்புடன் பார்த்தது. பலமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் தீவு தீவாகப் பரிதவித்து நின்றனர். இவர்களில் குஜராத்தியர்களை மட்டும் கண்கொத்தி பாம்புபோல் நரேந்திர மோடி எப்படி பொறுக்கி எடுத்து மீட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பிறகு தான் கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரம் வெளிச்சத்துக்குவந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர்ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டுத்திரும்பினார் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதேபோன்ற பொய் மூட்டையைத் தான் இன்றும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
suran
உருளுகின்ற பொய்களை நம்பிக்கால்வைத்து தங்கள் வலையில் விழுகின்ற வரைலாபம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.உண்மையில் நடந்ததாக வெளியான செய்திகளைப் பார்ப்போம்.ஹிராத் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த நான்கு தீவிரவாதிகள் முயற்சி செய்தனர்.
இவர்களில் ஒரு தீவிரவாதி இந்திய தூதரகத்தின் சுவர் மீது ஏறினான். அந்தச்சுவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் அவனது பை சிக்கிக் கொண்டது. அந்தத் தீவிரவாதியை கவனித்த - தூதரகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவனைச் சுட்டு வீழ்த்தினர். அவன் ஒரு சில அடிகள் ஓடி தப்பிக்க முயன்றும் முடியாமல் சுருண்டுவீழ்ந்து செத்தான். மற்ற மூன்று தீவிரவாதிகள் பக்கத்துக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
இதனை கவனித்த ஆப்கன் பாதுகாப்புப்படையினர் அவர்கள் மூவரையும் சுட்டுவீழ்த்தினர். இதனை இந்திய - திபெத் எல்லைப்பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் சுபாஷ் கோஸ்வாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் (டைம்ஸ்ஆப் இந்தியா- 24/5/ ;பக். 12)இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியைக் கேள்விப்பட்டவுடன் ஹிராத் நகரில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் நரேந்திரமோடி தொடர்புகொண்டார்.
ஹமீத் கர்சாயுடனும் பேசினார். தூதரகத்தைத் தாக்க முயன்ற 3 தீவிரவாதிகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார். இதற்கும் மேலாக இந்திய வீரர்களிடம் மோடியே பேசினார் - அதுவும் யாருடைய உத்தரவுக் காகவும் காத்திருக்க வேண்டாம் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று ரிமொட் கண்ட்ரோல் உத்தரவு போட்டார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்திய ராணுவ வீரர்களால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அதீக கற்பனைதான் உத்தரகாண்ட் மோசடி செய்தியை நினைவுபடுத்துகிறது.
இந்திய ராணுவவீரர்கள் எந்த நிலைமையையும் தீரத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தான். அதற்காக மோடி தான் அவர்களின் மூளை சக்தி என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. நரேந்திரமோடியை மாவீரனாகக் காட்டும் முயற்சியை ஊடகங்கள் தொடர்கின்றன என்பதன் வெளிப்பாடு தான் இந்தச் செய்தி. செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இப்படிப்பட்ட சாகச செய்திகள் உலவ விடப்படுகின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் திரிக்கப்படுமோ இது போன்ற மோ(ச)டிக் கயிறு.
suran
மோடி தரும் பணத்துக்காக தேவையே இல்லாமல் மோடி பற்றி கோயபல்ஸ் செய்திகள்,விளம்பரங்கள் ஊடகங்களில் பரவி இந்த தேர்தலை ஒரு வழ செய்து விட்டது.
வீசியது மோடி அலை அல்ல.மோடி பெயரால் காகித,மின்னணு ஊடகங்கள் விரி த்த வலை.
அதில் சிக்கி உண்மையிலேயே மக்களுக்கு உழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் ஓரங்க்கட்டப்பட்டு விட்டனர்.
மோடி இமாசல சுனாமி என்ற கேதார்நாத் நிலச்சரிவில் குஜராத்திகளை ஒருமணி நேரத்தில் சூப்பர் மேனாக செயல்பட்டு காப்பாற்றினார் என்று ஊடகங்கள் செய்தியை திட்டமிட்டு பரப்பின.அதை  சற்று நேரங்கழித்து உமிய அல்ல என்றும் தெரிந்தாலும் அந்த பொய் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதற்கு மறுப்போ,மன்னிப்போ கேட்கவில்லை.

பணத்துக்காக செய்திகளை வெளியிடும் கார்பரேட் ஊடகங்கள் போன்ற இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே “தீரவிசாரிப்பதே மெய்” என்று சொல்லியிருக்கிறார்கள். .

                                                                                                                           - மயிலைபாலு
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மஞ்சள் மகிமை...1
நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. அதனால்தான் மஞ்சள் இல்லாத தென்னிந்திய சமையலே இருப்பதில்லை. மற்ற பகுதிகளோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் புற்றுநோய் பாதிப்பின் அளவும் குறைவு. காரணம், நமது சமையலில் பிரதானமாக இடம்பெறுகிற மஞ்சள். மஞ்சளுக்கு புற்றுநோயை விரட்டும் சக்தி உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  மஞ்சளில் சிஹிஸிசிஹிவிமிழி என்கிற நொதி இருப்பதே அதன் அத்தனை நல்ல குணங்களுக்கும் காரணம். என்ன இருக்கிறது?   100 கிராமில்...
ஆற்றல்    349 கிலோ கலோரிகள்
புரதம்     6.3 கிராம்
கொழுப்பு    5.1 கிராம்
நார்ச்சத்து    30.3 கிராம்
இரும்பு    67.8 கிராம்

மஞ்சளால் வேறென்னவெல்லாம் பலன்?


எங்கே புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து அதை ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்.  நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகளுக்கு அந்த இடத்தின் மேல் மஞ்சள் தடவுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைக்க உதவுகிறது.  நீரிழிவால் பாதிக்கப்பட்டோர், காலையில் வெறும் வயிற்றில் 1 கரண்டி தயிரில், சிட்டிகை மஞ்சள்தூளையும், கால் டீஸ்பூன் வெந்தயத் தூளையும் கலந்து குடித்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.  இதை எடுத்துக் கொண்ட அரை மணி நேரத்துக்குப் பிறகே காபியோ, டீயோ குடிக்க வேண்டும்.

suran

முதியவர்களை பாதிக்கிற முக்கியமான பிரச்னைகளில் ஒன்று அல்சீமர் நோய். நம்மூர் முதியவர்களுக்கு அந்தப் பாதிப்பும் குறைவாகக் காணப்பட காரணம் மஞ்சளே. சமையலில் மஞ்சளைத் தவிர்க்காததால்தான், நம்மூர் முதியவர்களில் பலரும் 95, 100 வயது வரைகூட நல்ல நினைவாற்றலுடன் நடமாடுகிறார்கள். மஞ்சளானது அல்சீமர் நோயைத் தவிர்க்கும் அல்லது தள்ளிப்போடும்.

வயிற்றுப் புண்களை ஆற்றுவதிலும் மஞ்சளுக்கு இணையே இல்லை. அதனால்தான் அம்மை நோய் வந்தவர்களுக்கு மஞ்சள் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுடன், வெளிப்பூச்சுக்கும் மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துப் பூசச் சொல்கிறார்கள். சமையலுக்கு விரளி
மஞ்சளையும் வெளிப்பூச்சுக்கு கஸ்தூரி மஞ்சளையும் உபயோகிப்பதே சரியானது. மஞ்சள் காமாலையால் பாதிக் கப்பட்டோருக்கும், கல்லீரலை சுத்தப்படுத்த மஞ்சள் பரிந்துரைக் கப்படுகிறது.

ரத்தத்தில் அரிப்பு, நச்சுக் கலப்பு என எந்தப் பிரச்னை இருந்தாலும்,  பாலில் மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் குணம் தெரியும். தொண்டைக் கரகரப்புக்கும் இதே சிகிச்சைதான்.  ரத்தக் கொழுப்பை குறைப்பதில்கூட மஞ்சள் பெரிய பங்கு வகிப்பதால், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமுள்ளோர், மஞ்சளை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  கணையத்தில் பிரச்னை உள்ளவர்கள், அதாவது, கல்லோ, வீக்கமோ இருப்பவர்கள் மட்டும் மஞ்சள் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்ற எல்லோருக்கும் மஞ்சள் மகத்தானது.


suran

 

புதன், 28 மே, 2014

நரேந்திர மோடி & அமைச்சர்கள் .

மத்திய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
. பிரதமராக  நரேந்திர  மோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்ற அமைச்சர்கள் துறைவாரி  விபரம்:
கேபினட் அமைச்சர்கள்1.ராஜ்நாத் சிங்- உள்துறை
2.அருண் ஜெட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு
4.வெங்கய்யா நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை
5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை
7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை
9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை
10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை
11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை
12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை
13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை
14.உமா பாரதி- நீர் வள மேலாண்மை
15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை
17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்பு
18.ஜூவல் ஓரம் - பழங்குடியினர் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங்- விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா- ரயில்வே
suran

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை
2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4.ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை
8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்து
2. மனோஜ் சின்ஹா- ரயில்வே
3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை
4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை
5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை
6. கிரண் ரிஜிஜூ- உள்துறை
7. கிரிஷன் பால் குஜ்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை
8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல்
. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியினர் விவகாரத் துறை
10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை
11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை
12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை
suran

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முசாபர் நகர் கலவரத்திற்கு தலைமை தாங்கிய சஞ்சீவ்குமார் பாலியானும் இடம்பெற்றுள்ளார்.
 முசாபர் நகர் கலவரத்தினால் உருவான மதவெறி அணிசேர்க்கை உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு தேடிக்கொடுத்த வெற்றிக்கான பரிசாகத்தான் சஞ்சீவ் பாலியானுக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர், விவசாயத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். முசாபர் நகரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஜாட் சமுதாயத்தினரின் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் மதவெறியை கிளறிவிடும் வகையில் பாலியான் உரையாற்றினார். இதனால் இவர் 27நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 50 சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்ட இந்த மதக்கலவரத்தில் கால்நடை மருத்துவரான இவர் வகித்த பங்கிற்காகத்தான், இவரை முசாபர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தியது. தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் மாநிலத்தின் வளர்ச்சிபற்றியோ மக்களின் முன்னேற்றம் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை.
suran
அவரது பிரச்சாரம் முழுவதும் ‘இந்துத்துவா’ பெருமைபற்றியதாகவே இருந்தது. இந்நிலையில் 4.1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் எம்.பியான காதிர் ராணாவை பாலியான் தோற்கடித்தார். முசாபர் நகர் கலவரத்தினால் ஏற்பட்ட வகுப்பு வாத அணி சேர்க்கையை மக்களவை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தும் திட்டத்துடன்தான் கலவரத்திற்குதலைமை தாங்கியவர்களுக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பிஜூனோரிலும் ஹைராணாவிலும் பாஜக சீட்டு கொடுத்தது.
ஹைராணாவில் குக்கூம் சிங்கும், பிஜ்னோரில் பாரதேந்து சிங்கும் 2லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். பிஜ்னோரில் முதலில் அறிவிக்கப்பட்ட ராஜேந்திர சிங்கை மாற்றிவிட்டு பாரதேந்து சிங்கை களத்தில் இறக்கியது பாஜக. மேற்கு உ.பியில் மொத்தமுள்ள 25 இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது..
=========================================================================
suran

செவ்வாய், 27 மே, 2014

"எலுமிச்சை" - மருத்துவ பயன்கள்

suran


எலுமிச்சம் பழமானது மங்களகரமான பழம் மட்டுமல்லாமல் உடலுக்கும் சத்துக்களை தருகிறது.
இதோ எலுமிச்சை தரும் மருத்துவ பயன்கள்:
* கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
* எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
* ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
* வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
* எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தரும். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர்.
suran
இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
* எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

==========================================================================
ஜவகர்லால் நேரு ...

நினைவு நாள்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார்.

சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெறவேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.

ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.

ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.

1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.

suran நேரு நினைவு தினம்: மே 27, 1964
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.

நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது.  இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.
suran

இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார்.
1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.

சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.
1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.

அவர் 1964 மே மாதம் 27 ம் தேதி  அதிகாலை இயற்கை எய்தினார்.
 முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.
நேருவின் சாம்பல் இந்தியா முழுக்க அவரது ஆசையின்படியே தூவப்பட்டது.
suran

=========================================================================

ஆம்வே மோசடி-
நிறுவன தலைவர்
மீண்டும் கைது.

உலகின் பிரபல மோசடி நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பிங்க்னி  கைது செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற ஆம்வே மோசடி பண சுழற்சி வியாபாரத்துக்காக இரண்டாம் முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ‘ஆம்வே’ தனது கிளைகளை உலகமெங்கும் உருவாக்கி பலரையும் ஏமாற்றி தனது முறைகேடான பண ச்சுழற்சி வியாபாரம் மூலம் தனது வியாபரத்தை நடத்தி வருகிறது.இந்த ஆம்வேயின் மோசடி பற்றி முன்பே நமது சுரனில் செய்தி வந்துள்ளது.
இப்போது ஆம்வேயின்  இந்திய கிளை தலைவர்
வில்லியம் எஸ் பிங்க்னி-என்பவரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
suran
ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் என்று  தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் ...அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னியை ஆந்திர காவல்துறையினர் குர்கான் நகரில் கைது செய்தனர்.

ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கர்நூல் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதே முறைகேடுகள் செய்து வியாபாரம் செய்ததற்காக சென்ற  ஆண்டு கேரள காவல்துறையினர் இவரை கைது செய்து, நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருப்பது  பிணையில் இப்போது இருப்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஆம்வேயின் முறைகேடான வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர் ஆம்வே மூலம் 5 கோடி சேர்த்துவிட்டார்,வெளிநாட்டு பயணம் சென்றார்.மாதம் 4லட்சம் இப்போது அவருக்கு கமிசன் வருகிறது என்று ஏமாற்றும் வேலை ஆம்வே தொடர்ந்து செய்துதான் வருகிறது.
 
ஆனால் அதில் தொடர்ந்து பணம் சம்பாதிப்பவர் ஒருவரும் இல்லை என்பதுதான் உண்மை.கடைக்காரர்களுக்கு கழிவுதராமல் விலையை குறைத்து வைத்திருப்பதாகக் கூறினாலும் ஆம்வே பொருட்களின் விலை அதே தரத்துடனான மற்ற பொருட்களைவிட  அதிகம் என்பதுதான் உண்மை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran 

மூட்டுவலிக்கு சில ஆலோசனைகள்...

அனேகமாக உலகில் அதிகமாக வயதானோர் பா திக்கப்பட்டுள்ள நோயாக மூட்டு வலிதான் இருக்கும்.
வயது ஏற,ஏற கால்,கை இணைப்புகளில் உள்ள எண்ணைப்பசை குறைவாகி விடுவதாலேயே இவ்வலிகள் உண்டாகிறது.
முன்பை விட இப்போது அதிகம் பேர்களை மூட்டு வலி பாதிக்க காரணம்.நாம் எண்ணைக்குளியலை மறந்ததும் ஒன்று.
முன்பு சனி,ஞாயிறுகளில் உடல் முழுக்க எண்ணை பூசிக்கொண்டு குளிக்க  தயாராக இருப்பவர்களை அதிகம் பார்க்கலாம்.ஆனால் இன்று தலையில் கூட எண்ணைப்பசையுடன் இருப்பவர்களை பார்க்க இயலவில்லை.

இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை.

உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விரைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விரைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உணரப்படலாம். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகினால், நோயின் தீவிரத்தை கண்டறிந்து, குணப்படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தினால், மூட்டுகளில் வீக்கம், அதிக வலி, மூட்டுகள் தேய்வடைந்து முற்றிலும் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மூட்டு வலி

குறிப்பிட்ட இடைவெளிகளில் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும், நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது என்பதையும் சில ரத்தப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான மூட்டுவலி ஒருவரது எலும்புகளை மட்டுமின்றி, இதயத்தையும் பாதிக்கக் கூடியது. மூட்டு மட்டுமின்றி, முதுகெலும்பு, முழங்கால், கணுக்கால்களிலும் வலி உணரப்படும். எனவே, சிகிச்சையையும் பயிற்சிகளையும் பாதியில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தால் எலும்புகள் நெகிழ்வுடன் காணப்பட்டு, வலி குறையும். பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே மெதுவாக, குறைவாகத் தொடங்கவும்.

உணவில் மூன்றில் 2 பங்கு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்தது. அசைவத்தில் மீன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் சாலமன் மற்றும் டுனா மீன்கள் சிறந்தவை. அவற்றில் உள்ள ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் வலியைக் குறைக்க உதவும். காய்கறிகள் தவிர, பழங்கள், தானியங்களும் முக்கியம். ஸ்ட்ராபெர்ரி பழமும், ஆலிவ் ஆயிலும் நல்லவை. உணவில் கால்சியம், செலினியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கோழி இறைச்சி, வாட்டப்பட்ட உணவுகள் (க்ரில்), துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்திய உணவுகள் போன்றவை வலியை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நோய்க்கு, இதய நோயுடன் தொடர்புண்டு என்பதால் கொழுப்பு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்

மிகப்பரவலாகக் காணப்படுகிற முக்கியமான நோய் இது. முழங்கால், இடுப்பு, இடுப்பு மூட்டு, முதுகெலும்புப் பகுதிகளில் வலி இருக்கும். வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிற இது, 90 சத விகிதம் எலும்புத் தேய்மானத்தால் வருகிறது. வயதின் காரணமாக எலும்புகளில் உண்டாகிற தேய்மானம், மூட்டில் எப்போதோ ஏற்பட்ட விபத்து, அடி, காயம், பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை போன்றவையே பிரதான காரணங்கள். வலி மருந்துகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் நிவாரணம் பெறலாம். தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இப்போது தீவிர வலி நிவாரண சிகிச்சையின் மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைக் கூடத் தவிர்க்க முடிகிறது. ரேடியோ அலை சிகிச்சை முறை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறைகளும் உதவியாக இருக்கும்.

ஆங்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ்


முதுகெலும்பிலுள்ள சிறு சந்திப்புகளிலும் இடுப்பிலும் உணரப்படுகிற வலி இது. முக்கியமாக இடுப்புவலி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகிற குழப்பம் காரணமாகவே வரும். அதி தீவிர வலி நிவாரண சிகிச்சை முறையின் மூலம் வலியைக் குறைத்து, பயிற்சிகளையும் தொடர்வதன் மூலம் வேதனையிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இடுப்பெலும்பில் மருந்தைச் செலுத்தியும் வலியைக் குறைக்கலாம்.

கவுட் ஆர்த்ரைட்டிஸ்

உடலிலுள்ள யூரிக் அமிலம் எனப்படுகிற ரசாயனம், மூட்டில் படிவதே இந்த வலிக்கான காரணம். கை, கால்களில், கால் பெருவிரல்களில், கணுக்கால்களில், முழங்கை சந்திப்புகளில் அதிக வலி தெரியும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைச் சரி பார்த்து, அதைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பயிற்சிகளும் அவசியம். அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இந்த வகை நோய்க்கு வழி வகுக்கலாம் என்பதால் அதுவும் வேண்டாம். குடிப்பழக்கம் கூடாது. அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், மைதாவில் செய்த உணவுகள் போன்றவையும் ஆபத்து.

இவற்றுக்குப் பதிலாக, சுத்தமான பழச்சாறுகள், முழு தானிய உணவுகள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த பால் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 16 டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்...

அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது.

உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.
"It's our responsibility to bring friendship and love from all different places around the world and to live together in peace."
 

திங்கள், 26 மே, 2014

மின்தடை நீங்கும் ?

தூத்துக்குடியில்  புதிய அனல் மின் நிலையத்தில் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதால், விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.மின்வெட்டு குறையும் நிலையம் வந்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது.
இந்த அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க சென்ற திமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசு அனுமதியளித்ததன்படி, இப்போது உள்ள அனல் மின் நிலையத்துக்கு அருகிலேயே புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
suran
மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி), தமிழக மின்வாரியம் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான பங்கு முதலீட்டில் என்.எல்.சி. நிறுவனம் 89 சதவீதமும், தமிழ்நாடு மின்சார வாரியம் 11 சதவீதமும் அளித்துள்ளன. மின் நிலையம் அமைக்கத் தேவையான 127 ஹெக்டேர் நிலத்தை தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.
புதிய அனல் மின் நிலையத்துக்கான கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்கள் நிறுவும் பணிகளை பெல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி கையாளும் இயந்திரங்களை "எல் அண்ட் டி' நிறுவனம் அமைத்து வருகிறது.
புதிய அனல் மின் நிலையப் பணிகள் 2012ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சில மாதங்களுக்குள் மின் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், வெளிப்புற பூச்சு மட்டுமே பாக்கி உள்ளது.
இதற்கிடையே, புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, நிலக்கரிக்குப் பதிலாக டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டன. இதில், ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளதால் அனைத்து இயந்திரங்களும் முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதை பொறியாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அரசிடம் ஒப்படைக்கப்படும் .
அதன் பின்னர உற்பத்தியை துவக்க  முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
 தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கினால் 1000 மெகாவாட் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இருண்டுவரும் தமிழகம் ஒளிரும்.
இதை வைத்துதான் விரைவில் மின்தடை நீங்கும் என்று முதல்வரும்,அமைச்சர்களும் ஆருடம் கூறிவந்தனர்.

ஆனால் இது திமுக கருணாநிதி கொணர்ந்த திட்டம் என்று தாமதப்படுத்தாமல் இருக்க வேண்டும் .அதுதான் .இப்போது நமது கவலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran

suran

suran

ஞாயிறு, 25 மே, 2014

அரசு ஊழியர்களும் -அதிமுகவும்


தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார்.  

'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.  suran

சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்கு சீடராக டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். தொடர்ந்து 'கிருஷ்ணவிஜயம்', 'தேவகி' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் தோன்றியதோடு, சில பாடல்களையும் பாடினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரைப் போன்ற இனிய குரல் சவுந்தரராஜனுக்கு இருந்தது. 'உள்ளம் உருகுதய்யா, முருகா!' என்ற பாடலை டி.எம்.எஸ். இசை அமைத்துப்பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலைக் கேட்டவர்கள், அது பாகவதர் பாடல் என்றே எண்ணினார்கள்.  

ஒரு முறை பழனிக்கு பாகவதர் பாட சென்றபோது, அங்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு ஒலிபெருக்கியில் ஒலித்தது. இந்த பாடலைக் கேட்ட பாகவதர், சவுந்தரராஜனின் குரலில் மனம் மகிழ்ந்து, அவரைக் காண விரும்பினார்.  

வேறொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். அப்போது, 'உங்கள் குரல் அமிர்தமாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்தில் பெரும் புகழ் அடைவீர்கள்' என்று சவுந்தரராஜனை பாகவதர் வாழ்த்தினார்.  

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ,1954-ம் ஆண்டு 'மலைக்கள்ளன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக சவுந்தரராஜன் பாடினார்.   பானுமதியை குதிரையில் வைத்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும்போது பாடப்படும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை மிகவும் அற்புதமாக சவுந்தரராஜன் பாடினார்.  

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இதே ஆண்டில், 'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடினார். டி.எம்.எஸ். குரல், சிவாஜிகணேசனுக்கு ரொம்பவும் பொருத்தமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் `ஹிட்' ஆயின.  

1954-ம் ஆண்டு, டி.எம்.எஸ். வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகின் இரு இமயங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.எஸ். குரலே பொருத்தமானது என்று திரை உலகத்தினரும், ரசிகர்களும் ஏகமனதாக கருதினர்.  

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் அவர் தொடர்ந்து பாடினார். இதுபற்றி சவுந்தரராஜன் கூறும்போது, 'சிவாஜிக்கு பாடவேண்டும் என்றால் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது அடித்தொண்டையிலும், மூக்கிலும் சாரீரத்தை வரவழைத்து பாடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், அசோகன், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அந்தக் காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.  

குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்', 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி', 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்', 'யாருக்காக இது யாருக்காக', 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற ஏராளமான பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்களாகும்.  

1962-ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சொந்தமாகத் தயாரித்த 'பட்டினத்தார்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். இதில் எம்.ஆர்.ராதா, லீலாவதி ஆகியோர் நடித்தனர். படத்தை சோமு இயக்கினார். இசை: ஜி.ராமநாதன்.  

சவுந்தரராஜன் பட்டினத்தாராக கச்சிதமாக நடித்து இருந்தார். அதில் அவர் பாடிய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 'பட்டினத்தார்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி வாகை சூடியது.  

அதனைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். 'பட்டினத்தார்' போலவே இதுவும் வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெறும் 'முத்தைத் திருநகையத்திச் சரவண...' என்ற கடினமான பாடலை, இனிமையாகப் பாடியிருந்தார்.  

அதேபோல 'கவிராய காளமேகம்' என்ற படத்திலும், சொந்த தயாரிப்பில் 'கல்லும் கனியாகும்' படத்திலும் டி.எம்.எஸ். நடித்தார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இ ன்றைய  கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய 'ஒருதலை ராகம்' படத்தில் இவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. இதுதவிர, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும், நூற்றுக் கணக்கான மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ள டி.எம்.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைக் கசேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜனின் குரலில் பதிவான கடைசி பாடல், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது. தமிழ் திரைப்பட உலகின் தன்னிகரற்ற பின்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக 25-5-2013 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.
===========================================================================
அரசு ஊழியர்களும் -அதிமுகவும்.
-----------------------------------------------------
இந்த மக்களவை தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தது விகிதம் முன்பைவிட குறைந்துள்ளதாக தினமலர் ஆனந்தம் அடைந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த 2014 மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்களிக்க தபால் வாக்குகளே வழங்கப்படவில்லை என்பதும் அதை கேட்டு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ஊடகமான தினமலருக்கு மறந்து விட்டது மட்டும் தெரிகிறது.
தமீழக அரசு ஊழியர்களை வாக்களிக்க விடாமல் செய்வது 2011 தேர்தல்களுக்கு பின்னர தேர்தல் ஆணையமே நடமுறை படுத்தி வரும் செயல்.
suran
தமிழக அரசு ஊழியர்களுக்கு இரவு பகலாக காத்துக்கிடந்து செய்யும் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் வழங்கப்படும்.ஆனால் வாக்குப்பதிவு இடங்களில் பணிகள் மத்திய அரசுப்பணியாளர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள இடங்கள் மட்டுமே வழங்கப்படும்.இது அதிமுக மக்களவைத்தேர்தலில் 0 வாங்கியது முதல் தேர்தல் ஆணையம் ஜெயலலிதா அறிவுரைப்படி நடத்தி  வரும் நடைமுறை.
2014 தேர்தலிலும் மே 20 வரை அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை.சிலருக்கு வழங்கியதும் தவறான சீட்டுகள் என்று ஆகி விட்டது.தங்களுக்கு தபால் வாக்கு வழங்காததை கூறி தேர்தல் ஆணையர் பிரவீன்குமாருக்கு கடிதங்கள்,பேக்ஸ் கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.இதற்காக மார்க்சிஸ்ட் கட்சியும் கடிதங்களை அனுப்பியது.
திமுக தனது வேட்பாளர்கள் மூலம் வழக்குரைஞர்கள் மூலம் சட்ட அறி விப்ப்புகள்  அனுப்பிய பின்னர் வெண்டா வெறுப்புடன் தபால் வாக்குகள் அனுப்பியது.ஆனால் அ வை வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் தேர்தல் அலுவர்களுக்கு கிடைக்கும் படி அனுப்பி வைக்கப்பட்டது.இன்று கூட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அலுவலகத்தில் குவிந்துள்ள செல்லாமல் போன தபால் வாக்குகளை பார்க்கலாம்.
ஆனால் இதே போல் தேர்தல் பணிகள் வழங்கப்பட்ட காவலர்களுக்கு மட்டும் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தபால் வாக்குகளை நேரிலேயே பதிய வாய்ப்பு தரப்பட்டு வாக்குப்பதிவும் நடந்தது
suran
ஏன் அரசு ஊழியர்களுக்கும் இதே போல் வாய்ப்பு அளிக்கப்பட வில்லை?அவை அனைத்தும் திமுக சார்பு வாக்குகள் என்ற பயம்தானே?
காவல்துறை யினர் வாக்குப்பதிவும் கெலிக்கூத்தாக நடந்தது.காவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டை வழங்கிய அதிகாரியே அவர் முன்னிலையில் பிரித்து யாருக்கு டிக் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கி அதை வாங்கி பெட்டியில் போட்டார்.
அதிகாரி சொன்னதை மீறி வாக்களிக்க எந்த காவல்துறையினர் தயார்?
ஆக அரசு ஊழியர்களிடம் இந்த வாக்களிக்கும் ஆலோசனை செல்லுபடியாகாது என்பதாலேயே அவர்களுக்கு இது போல் தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆக தபால் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் என்பது இருனூறு கொடுத்து வாங்கிய வாக்குகளைப்போன்று தான்.அங்கு ரூபாய்.இங்கு அதிகாரம்.
தின மலருக்கு இந்த நடவடிக்கை தெரியாமாலா இருக்கும்.?ஆனாலும் ஊடகங்கள் தான் இந்த தேர்தலின் வாக்கு பதிவை முடிவு செய்தன.தாங்கள் வரவேண்டும். என்று நினைத்த கட்சிகளுக்கு ஆதரவாக மூளை சலவை செய்திகளை வெளியிட்டும்,கருத்துக்க[தி]ணிப்புகளை வெளியிட்டும் தங்கள் விருப்பை சாதித்துக்கொண்டன.
suran

இப்போதைய  தேர்தலில் பலம் பொருந்திய வீழ்த்த முடியா கூட்டணி அதிமுக அமைத்ததுதான்.
அவர் கூட்டணியில்  பணக்குவியல் ,துட்டுக்கு செய்தி  ஊடகங்கள்,காவல்துறை,அரசு அதிகாரிகள் இவர்களை விட வலிமையான 144 போட்ட தேர்தல் ஆணையர் பிரவின் குமார்  இருந்து சாதித்துக்காடினர்.
இந்தக்கூட்டணி  தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2016-லிலும் தொடருமேயானால் திமுக,கம்யூனிஸ்ட்  உட்பட அனைத்துக்கட்சிகளும் அம்போதான் .
வாழ்க மக்கள் தீர்ப்பு.


 இந்த தேர்தலின்  போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைக்காத, போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

2014 மக்களவைத் தேர்தலில்  அ.தி.மு.க., வெற்றி வெற்றி பெற்றுள்ளது.ஆனாலும் அமைச்சர்கள் கட்சியினர் மத்தியில் சரிவர தேர்தல் பணியாற்றாதவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நடவடிக்கை இப்போது , சரியாக பணி செய்யாத அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா ., பதவி நீக்கம் செய்து வருகிறார்.இப்போது இந்த நடவடிக்கை அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் மீதும் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது.
suran
தேர்தலின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில காவல் துறையினர் , ஆளும் கட்சிக் கு ஆதரவாக நடந்து கொள்ளாமல் நடுநிலையுடன் நடந்து கொண்டதாக ஆளுங்கட்சியினர் ஜெயலலிதாவுக்கு  புகார் அனுப்பி உள்ளனர். இவர்கள் பற்றிய பட்டியலையும், தேர்தலில், ஆளும்கட்சிக்கு ஒத்துழைத்த போலீஸ் அதிகாரிகளின் பட்டியலையும், முதல்வரிடம், கட்சியினர் சமர்பித்து உள்ளதாக, கூறப்படுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில், எஸ்.பி., முதல், பல போலீசார், இடமாற்றம் செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு போது பணம் கொடுக்கவும் கள்ள வாக்குகளை பதியவும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு, சலுகைகள் வழங்கும் திட்டமும் உள்ளதாக, அதிகாரிகள் மட்டத்தில்  பேசப்படுகிறது.

தலைமைச்செயலக அதிகாரி ஒருவர்
" தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர்கள், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். இவர்களை, மீண்டும், அதே இடத்திற்கு, மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்காத போலீஸ் அதிகாரிகளை, இடம் மாற்றுவது என, அரசு திட்டமிட்டு, அதற்கான பட்டியல் தயாரிக்கிறது. ஓரிரு நாளில், இடமாற்றம் அறிவிப்பு வெளியாகலாம். இத்திட்டம், அதிகாரிகளின் மத்தியில், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்று  கூறியுள்ளா ர்.

கொஞ்சம் போல் இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்ததால்தான் எதிர் கட்சிகள் பல இடங்களில் காப்புத்தொகையை பெற முடிந்தது போல் தெரிகிறது.
கோவை,குமரி,தருமபுரி பகுதிகளில் நிச்சயம் இம்மாறுதலை எதிர்பார்க்கலாம்.
========================================================================
 

சனி, 24 மே, 2014

ஐ ம்பது ஆண்டு அடிப்படை மொழி?


 கணினி  பயன்படுத்த வேண்டும் என்றால், ஓரளவிற்கு, சிறிய அளவிலாவது அதன் அடிப்படை இயக்கமான புரோகிராமிங் மொழி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்.
கணினி அறிமுகமாகி பரவலாக பயன்படுத்த துங்கினபோது  அனைவரும் அறிந்து பயன்படுத்தக் கூடிய புரோகிராமிங் மொழியாக "பேசிக்' பழக்கத்தில் இருந்தது.
மே 1 அன்று இம்மொழி பயன்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
suran
.
பேசிக் மொழியை உருவாக்கியவர்கள் John G. Kemeny மற்றும் Thomas E. Kurtz ஆகிய இரு பேராசிரியர்கள்.
. 1964 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் நாள், இதனை இயக்கிக் காட்டினார்கள். கணிதவியல் ஆசிரியர்களான இந்த இருவரும், புரோகிராமிங் கற்றுக் கொள்வது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அடிப்படையானது என உறுதியாக எடுத்துரைத்து, அதற்கென குறியீடுகளை எளிய முறையில் அமைக்க இதனை உருவாக்கினர். இதன் முழு பெயர் "Beginner's AllPurpose Symbolic Instruction Code”.
பேசிக் மொழி வரும் முன், குறியீடுகளை, அட்டைகளில் துளையிடுவதன் மூலம் அமைத்து, அவற்றை கம்ப்யூட்டரில் செலுத்தி இயக்கினர். பேசிக் மொழி வந்த பின்னரே, நாம் ஒன்றை கம்ப்யூட்டரில் டைப் செய்து இயக்க, நமக்குத் தேவையான செயல்பாடு கிடைத்தது.
 இப்போது கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், போன்கள் ஆகிய சாதனங்கள் அனைத்தும் நாம் தரும் கட்டளைகளை ஏற்று, நமக்குத் தேவையானதை, இலக்கு வைப்பதைத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனை முதன் முதலில் சாத்தியமாக்கியது பேசிக் மொழிதான்.
1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை, ஹோம் கம்ப்யூட்டர்கள் பரவலாகப் பயன்படுத்த வெளியான போது, இந்த மொழி மிகவும் உதவியது. அப்போதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் பல வகைகளை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்களால், பேசிக் அனைத்து மக்களையும் சென்றடைந்தது.
வெளியான அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பதியப்பட்டு தரப்பட்டது. இதன் எளிமையைக் கண்ட மக்கள் அனைவரும் "ஆஹா! நாமும் புரோகிராமர்களாகலாம்' என்று மகிழ்ச்சியும் பெருமையும் நடந்தனர். அப்போது இணையம் என்பது இல்லை. கூகுள், பேஸ்புக், தேடல்கள் என்பதெல்லாம் கண்டறியப்படவில்லை.
suran

 வண்ண மானிட்டர்கள் எதுவும் இல்லாமல், பச்சை வண்ணத்தில் அல்லது கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களை அமைத்து கம்ப்யூட்டரை இயக்கி வந்தோம். புள்ளிக்கும் கமாவிற்கும் வேறுபாட்டினை திரையிலும், டாட் மேட்ரிக்ஸ் அச்சிலும் காண்பது சிரமமான ஒன்றாக இருந்து வந்த நேரம் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்திய அனைவரும், பேசிக் மொழியைச் சிறிதளவாவது பயன்படுத்தித் தமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொண்டனர். கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக பேசிக் மொழி கோடிக்கணக்கான மக்களுக்குத் தந்தது. ஒரு பாடத் திட்டமாக இல்லாமல், யாவரும் கற்றுக் கொள்ளும் எளிய வழிமுறைகளைக் கொண்டிருந்தது.
ஒன்றைப் புதிதாய்க் கற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் பேசிக் மொழியை மக்கள் கற்றுக் கொண்டனர்.
பேசிக் மொழி மைக்ரோசாப்ட் ஒரு சிறந்த நிறுவனமாக உருவாக உதவியது. Bill Gates and Paul Allen ஆகிய இருவரும் முதலில் Altair BASIC என்ற ஒரு வகை பேசிக் மொழியை உருவாக்கித் தந்தனர். அனைவரும் விரும்பும் வகையில் பின்னர் இதில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி வழங்கினர். பேசிக் மொழி அனைவராலும் பயன்படுத்தப்பட்ட காலம் என்றால் 1975 முதல் 1990 வரை எனலாம்.
suran
காலப் போக்கில் பேசிக் மொழியில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து வேகமாகவும் எளிதாகவும் அமைக்கக் கூடிய குறியீடுகளைக் கொண்ட மொழிகள் வந்ததனால், முதலில் வந்த பேசிக் மொழி வடிவம் பயன்பாட்டிலிருந்து மறைந்தது.
சிக்கலான வேலைகளுக்கு பேசிக் மொழி ஈடு கொடுக்காததால், புரோகிராம் உருவாக்கிய வல்லுநர்கள் வேறு மொழிகளை நாடினார்கள். பாஸ்கல், சி போன்ற மொழிகள் அவர்களின் தேவைகளுக்கு ஈடு கொடுத்தன.
மைக்ரோசாப்ட் நிறுவனம், புரோகிராமர்களுக்கு உதவ QuickBasic மற்றும் Turbo Basic என இரண்டு வகைகளைத் தந்தது.
இதனை கண்ட, பேசிக் மொழியை முதலில் வடிவமைத்தவர்கள் (Kemeny and Kurtz), மைக்ரோசாப்ட் பேசிக் மொழியைக் கெடுத்துவிட்டது என்று கூறி True BASIC என ஒரு வகையைத் தந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் மக்களின் தேவைகள் அதிகரித்ததனால், எது உண்மையான பேசிக், எது இல்லை என ஆய்வு செய்திடாமல், வேறு புரோகிராமிங் மொழிகளைப் பயன்படுத்தச் சென்றனர்.suran
  மைக்ரோசாப்ட் தந்த பேசிக் மொழியின் இன்றைய வடிவம் தான் விசுவல் பேசிக் (Microsoft Visual Basic) என்ற பெயரில் உள்ளது. இருப்பினும் VB.NET என்பது பழைய பேசிக் மொழியின் சரியான விரிவாக்கம் என்று கூற முடியாது.
1970ல் இருந்த பேசிக் மொழி பயன்பாட்டினை இன்றைய விசுவல் பேசிக் அமைப்பில் இயக்க முடியாது.
 இன்றைய விசுவல் பேசிக், பல புதிய குறியீட்டு அடிப்படையைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஆனால், மற்ற மொழிகள் அப்படி இல்லை. தொடக்கத்தினை இன்னும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கோபால் (COBOL) மொழியின் தொடக்க புரோகிராமினை, இன்றைய கோபால் மொழியின் வகையிலும் இயக்கலாம்.
இன்றைக்கு பேசப்படுகிற அளவிற்கு, புகழப்படுகிற அளவிற்கு சி ஷார்ப், சி ப்ளஸ் ப்ளஸ், ஜாவா ஸ்கிரிப்ட் போல, பேசிக் அல்லது விசுவல் பேசிக் இடம் பெறவில்லை.
இருப்பினும் அவ்வப்போது புரோகிராமர்களிடையே விசுவல் பேசிக் டாட் நெட் இடம் பெறுவதைக் காணலாம்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வேறு சாதனங்கள் தந்து வரும் நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் நிலையே உறுதியற்றதாக இருக்கும் நிலையில், பேசிக் மொழியும் ஒருநாள் நினைவில் இருந்தே காணாமல் போக வாய்ப்புண்டு.
My JC Film Gallery is open to the public in Shanghai.Check it out here for more information: http://bit.ly/1kLHd2J
==========================================================================
முதுமை என்பது யாதெனில்?
======================

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எண்பது வயதைத் தாண்டும் வரைதங்களை முதிய வர்கள் என்று கருதுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்று டெய்லி எக்ஸ்பிரஸ் இதழ் கூறுகிறது.
ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் வயதில்மூத்தவர்கள் என்று கருதத் தொடங்கினர் என்றும் அது கூறுகிறது.
 suran
ஆரோக்கியமான, கூடுதலான செயல்பாடு மிகுந்தவாழ்க்கைமுறை, கூடுதலாக வேலையில் இருப்பது, வாழ்க்கையில் பிரகாசிக்கும் வயதானவர்களை காண்பதுடன் அவர்களுடன் பழகுவது ஆகியவை இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. பேயிங் டூ மச் . காம்என்ற இணையதளம் இந்த ஆய்வைநடத்தியது.
கடந்த சில ஆண்டுகளில் வயதானவர்கள் என்ற பொருளின் அர்த்தம் வெகுவாக மாறி விட்டது என்றும் அது கூறுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வயதானவர், மூத்தவர் என்று ஒருகாலத்தில் கருதப்பட்டது. ஆனால் இப்போது 70வயதைத் தாண்டிய பின்னும் நம்மில் ஏராளமானோர் ஆரோக்கியமாகவும் செயல்பாட்டுடனும் இருக்கின்றனர்.

7000 பிரிட்டிஷாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 17 விழுக்காட்டினர் 70 வயதுக்கு கீழாக இருப்பவர்களையும் வயதானவர்கள் என்றுகூறுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இருபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 90ஐ எட்டினாலும் இளமையுடன் இருக்கலாம் என்று கூறினர். வேறு சிலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 63 வயதைத் தாண்டியவர்களைக்கூட வயதானவர்கள் என்று கருதியதாகக் கூறினர். "ஒருவர் ஓய்வூதியம் பெறத் தொடங்கியவுடன் முதுமை தொடங்கி விட்டதாகக் கருதக்கூடாது என்றும், உங்களுடைய புதிய வாழ்க்கை அப்போதுதான் தொடங்குகிறது" என்று 92 விழுக்காட்டினர் கூறினர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------

suran

"மோடி பிரதமராவதற்காக உலக தேநீர்க் கடைக்காரர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்."
suran