தூக்கம் வரவில்லையா?

முக்கிய தினங்கள்

1 மே தினம். உலகத் தொழிலாளர்கள் தினம்suran.
3 பத்திரிகை சுதந்திர தினம்
5 தமிழக வணிகர் தினம்
7 உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்
8 உலக செஞ்சிலுவை சங்க தினம்
11 தேசிய தொழில்நுட்ப தினம்
12 உலக தாதியர் தினம்
15 குடும்ப நாள்
16 தடகள தினம்
17 உலகத் தொலைத் தொடர்பு தினம்
21 பயங்கரவாத எதிர்ப்பு நாள்
29 ஐ.நா. சபையின் அமைதிப் படை தினம்
31 புகையிலை எதிர்ப்பு தினம்.

முக்கிய நிகழ்வுகள்

1, 1890 அமெரிக்காவில் சிகாகோ நகரில் உழைப்பாளர் பேரணியில் "மே தினம்' உருவானது.
1, 1912 டில்லி தலைநகராக உருவம் பெற்றது. அதற்கு முன்பு கல்கத்தா இந்தியாவின் இருந்தது.
3, 1936 இந்தியாவில் முதன்முதலாக வானொலி
நிலையம் துவங்கியது.
3, 2013 சென்னையில் தபால்தலையில்
வாடிக்கையாளரின் புகைப்படத்தை அச்சடித்துத் தரும் "அஞ்சல் தலை திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டது.
4, 1994 ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்ரோஸ் - இ2 செயற்கைக்கோள் 113 கிலோ எடையில் விண்ணில் வெற்றிகரமாக
ஏவப்பட்டது.
7, 1895 சென்னையில் (மதராஸ்) முதன்முதலாக "டிராம்' இயக்கப்பட்டது.
9, 1857 இந்தியாவில் முதல் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது.
9, 1994 தென் ஆப்பிரிக்காவின் முதல் குடியரசுத்
தலைவராக "நெல்சன் மண்டேலா' தேர்வு
செய்யப்பட்டார்.
10, 1901 இந்திய விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ்,
லண்டன் ராயல் சொசைட்டியில் பல
விஞ்ஞானிகள் முன்னிலையில், "க்ராஸ் கோக் ராப்' என்னும் கருவியைச் சோதனைசெய்து காட்டி,
அங்கீகாரம் பெற்றார்.
11, 1998 பொக்கரானில் அணுகுண்டு சோதனை வெற்றி.
11, 2000 இந்திய மக்கள்தொகை 100 கோடியைத்
தாண்டியது.
suran
12, 1973 தமிழகத்தில் பாரதி வாழ்ந்த எட்டையபுரம் வீடு, "வரலாற்றுச் சின்னம்' என அறிவிக்கப்பட்டது.
12, 1987 இந்தியாவில் மிகப்பெரிய விமானம் தாங்கிக்
கப்பல் "ஐசந விராட்' இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
12, 2005 தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றம்.
14, 2002 விண்ணில் அதிசயமாய் 7 கிரகங்கள் ஒரே
நேர்கோட்டில் அணி வகுத்து நின்றன.

21, 1989 அக்னி ஏவுகணை விண்ணில் சோதனைக்கு விடப்பட்டது.
21, 1991 தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் - இந்த நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப்
பிடிக்கப்படுகிறது.
23, 1984 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
படைத்தார் இந்தியப் பெண் பச்சேந்திரிபால்.
24, 1844 சாமுவேல் மார்ஸ் முதன்முதலாக "தந்தி'
அனுப்பினார்.

29, 1953 எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக
எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் ஏறி
சாதனை படைத்தனர்.

பிரபல பிறந்த தினங்கள்

2, 1921 சத்யஜித் ரே - மேற்கு வங்க திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர்.

.
5, 1818 கார்ல் மார்க்ஸ்
- கம்யூனிச கொள்கையை
உருவாக்கியவர்.
5, 1916 ஜெயில்சிங் - முன்னாள் குடியரசுத் தலைவர்.
7, 1861 ரவீந்திரநாத் தாகூர் -

8, 1828 ஹென்றி டுனான்ட் - செஞ்சிலுவைச் சங்க
நிறுவனர்.
.
12, 1820 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - மருத்துவதாதிகள் அமையக் காரணமான பெண்மணி - விளக்கேந்திய சீமாட்டி என்று போற்றப்பட்டவர்.
.
17, 1749 எட்வர்டு ஜென்னர். பெரியம்மைக்கு மருந்து கண்ட விஞ்ஞானி.

22, 1867 சங்கரதாஸ் சுவாமிகள் - தமிழ் நாடக உலகின் தந்தை.


நினைவு தினங்கள்

3, 1898 ராஜம் அய்யர் - இரண்டாவது தமிழ் நாவலான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய எழுத்தாளர்.
3, 1969 ஜாஹீர் உசைன் - முன்னாள் குடியரசுத்
தலைவர்.

4, 1799 திப்பு சுல்தான் - ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மைசூர் அரசர்.
5, 1821 நெப்போலியன் - பிரெஞ்சு அரசர்.
13, 2001 ஆர்.கே.நாராயண் - எழுத்தாளர்.

20, 2010 - ஷெப்பேர்ட் பேரன் - தானியங்கி பணம்
வழங்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்.)
கண்டுபிடித்தவர்.
20, 1506 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் -
அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்.
21, 1991 - ராஜீவ் காந்தி - இந்தியாவின்
முன்னாள் பிரதமர்.
24, 1543 - நிக்கோலாஸ் கோபர்னிகஸ் - போலந்து
நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி.
24, 1981 - சி.பா. ஆதித்தனார் - தினத்தந்தி  நிறுவனர்.
25, 2013 - டி.எம். சௌந்தரராஜன் - பின்னணிப்
பாடகர்.
27, 1964 - ஜவாஹர்லால் நேரு - இந்தியாவின்
முதல் பிரதமர்.
30, 1912 - வில்பர் ரைட் - ஆகாய விமானத்தை
உருவாக்கிய ரைட் சகோதரர்களில் ஒருவர்.

மே மாதம்.
 ரோமானிய கடவுளான "மேயா' பெயரிலிருந்து மே மாதம் பெயர் வைக்கப்பட்டது.. இந்தப் பெயரை ரோமப் பேரரசர் "ரோமுலஸ்' சூட்டினார். ரோமானியர்கள் மே முதல் நாளை "காலண்டே மேயே' எனக் கொண்டாடுகிறார்கள்

மே மாதம் விடுதலையை  கொண்டாடும் நாடுகள்
 17 நார்வே,
20 கிழக்கு தைமூர்,
 24 ஈக்வடார்,
25 ஜோர்டான்,
26 கயானா
-------------------------------------------------------------------------------------------------------------------------

மிழகத்தில் தான் போட்டியிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரசு படுதோல்வியடைந்தது தெரியும் .
suran
ஆனால் இந்த 39 வேட்பாளர்களிலும் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமார் தவிர மற்ற 38 பேர்களும் தேர்தல் காப்புத்தொகையை [ டெபாசிட்] இழந்து
சாதனை படை த்து ள்ளனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
தூக்கம் வரவில்லையா?

நீங்கள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பவர்களா?தூக்கமின்மை பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடலாம்.எப்பாடு பட்டாவது தூங்க்கி முழிக்கப் பாருங்கள்.
தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள்  எச்சரித்திருக்கிறார்கள்.
suran

ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

 
மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டுகளாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல.
அது இன்றைய மனித உடல் உருவாக காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்கு பழகிய ஒன்று என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.
இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகார செயற்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார் அவர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குவதாக கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.
suran

தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரத்யேக பிரச்சனை மட்டுமல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.


குறிப்பாக குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின் நீலநிறம் அதிகமாக இருக்கும் வெளிச்சமும், டேப்ளட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சம் மனிதக்கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது அதனால் கண்களின் தூக்கம் மிகப்பெரிய அளவில் இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

அதன் விளைவாக மேற்குலக நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் பதின்ம வயது மாணவர்கள் கூட தங்களின் தாத்தா பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் சம்பவங்களெல்லாம் நடப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள்.

தூக்கத்தை கெடுப்பதில் தொழில்நுட்ப பங்கும் முக்கியம்
தூக்கத்தை கெடுப்பதில் செல்பேசி தொழில்நுட்ப பங்கும் முக்கியம்



இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல புற்றுநோய்கூட ஏற்படலாம் என்றும் இந்த விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

எனவே மாலை நேரத்தில் தொடுதிரை கணினி அல்லது தொடுதிரை செல்லிடபேசித்திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்குவெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும்படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமற்ற உணவைப்போலவே தூக்கமின்மையும் நோயை தோற்றுவிக்கும்


அதிகப்படியான சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் காரணமாக மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ அதே அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மை என்பது போதுமான தூக்கமின்மையால் உங்களின் உடலின் ஆரோக்கியம் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.
suran

தூக்கமின்மையின் மோசமான பாதிப்புக்கள் உடனடியாக உடலுக்கும் உங்களுக்கும் உறைக்காது என்பதால், தற்காலத்தில் மனிதர்கள் தூக்கமின்மை என்கிற பிரச்சனையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் இந்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தூக்கமின்மை தொடர்பான மனிதர்களின் இந்த ஆணவமிக்க அலட்சியப்போக்கு மாறவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும் . சென்னையில் மட்டும் சுமார் 30 சதவீதமான இளம் தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் .

==================================================================

ஏன் தூக்கம் வருகிறது?

இரவானதும் இயல்பாகவே தூக்கம் நம்மைத் தழுவிக் கொள்கிறது.கடுமையான உழைப்பு, பின் உணவுக்குப் பிறகும் தூக்கம் வருகிறது.உறக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.suranநமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.இன்னும் சில விஞ்ஞானிகள்,நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம் தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம் களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
==================================================================



 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?