அலை அல்ல " வலை."

“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள்.
 இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம்.
தீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது மாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7)
suran
ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லஅந்த ஆறு வீரர்களும் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள்என்றும் சரடு விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றின் செய்தியென அந்தப்பத்திரிகை கூறுகிறது.ஹிராத் நகரில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இந்திய ராணுவவீரர்கள் தில்லி வந்து விருந்தில் கலந்து கொண்டிருந்தால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தில்லிவந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணத்தில் இது எவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும். இது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மாலைமலர் ஏடு இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தியா? அல்லது விளம்பரமா? என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் நரேந்திர மோடியை சூப்பர் மேனாகப் காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின்போது அவர் ஹெலிகாப்டரில் துணிச்சலுடன் போய் 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டார் என்று புருடாவிடப்பட்டது. நாடே அல்ல உலகமே இந்தப் புனைச்சுருட்டு செய்தியை வியப்புடன் பார்த்தது. பலமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் தீவு தீவாகப் பரிதவித்து நின்றனர். இவர்களில் குஜராத்தியர்களை மட்டும் கண்கொத்தி பாம்புபோல் நரேந்திர மோடி எப்படி பொறுக்கி எடுத்து மீட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பிறகு தான் கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரம் வெளிச்சத்துக்குவந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர்ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டுத்திரும்பினார் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதேபோன்ற பொய் மூட்டையைத் தான் இன்றும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
suran
உருளுகின்ற பொய்களை நம்பிக்கால்வைத்து தங்கள் வலையில் விழுகின்ற வரைலாபம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.உண்மையில் நடந்ததாக வெளியான செய்திகளைப் பார்ப்போம்.ஹிராத் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த நான்கு தீவிரவாதிகள் முயற்சி செய்தனர்.
இவர்களில் ஒரு தீவிரவாதி இந்திய தூதரகத்தின் சுவர் மீது ஏறினான். அந்தச்சுவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் அவனது பை சிக்கிக் கொண்டது. அந்தத் தீவிரவாதியை கவனித்த - தூதரகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவனைச் சுட்டு வீழ்த்தினர். அவன் ஒரு சில அடிகள் ஓடி தப்பிக்க முயன்றும் முடியாமல் சுருண்டுவீழ்ந்து செத்தான். மற்ற மூன்று தீவிரவாதிகள் பக்கத்துக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
இதனை கவனித்த ஆப்கன் பாதுகாப்புப்படையினர் அவர்கள் மூவரையும் சுட்டுவீழ்த்தினர். இதனை இந்திய - திபெத் எல்லைப்பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் சுபாஷ் கோஸ்வாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் (டைம்ஸ்ஆப் இந்தியா- 24/5/ ;பக். 12)இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியைக் கேள்விப்பட்டவுடன் ஹிராத் நகரில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் நரேந்திரமோடி தொடர்புகொண்டார்.
ஹமீத் கர்சாயுடனும் பேசினார். தூதரகத்தைத் தாக்க முயன்ற 3 தீவிரவாதிகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார். இதற்கும் மேலாக இந்திய வீரர்களிடம் மோடியே பேசினார் - அதுவும் யாருடைய உத்தரவுக் காகவும் காத்திருக்க வேண்டாம் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று ரிமொட் கண்ட்ரோல் உத்தரவு போட்டார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்திய ராணுவ வீரர்களால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அதீக கற்பனைதான் உத்தரகாண்ட் மோசடி செய்தியை நினைவுபடுத்துகிறது.
இந்திய ராணுவவீரர்கள் எந்த நிலைமையையும் தீரத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தான். அதற்காக மோடி தான் அவர்களின் மூளை சக்தி என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. நரேந்திரமோடியை மாவீரனாகக் காட்டும் முயற்சியை ஊடகங்கள் தொடர்கின்றன என்பதன் வெளிப்பாடு தான் இந்தச் செய்தி. செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இப்படிப்பட்ட சாகச செய்திகள் உலவ விடப்படுகின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் திரிக்கப்படுமோ இது போன்ற மோ(ச)டிக் கயிறு.
suran
மோடி தரும் பணத்துக்காக தேவையே இல்லாமல் மோடி பற்றி கோயபல்ஸ் செய்திகள்,விளம்பரங்கள் ஊடகங்களில் பரவி இந்த தேர்தலை ஒரு வழ செய்து விட்டது.
வீசியது மோடி அலை அல்ல.மோடி பெயரால் காகித,மின்னணு ஊடகங்கள் விரி த்த வலை.
அதில் சிக்கி உண்மையிலேயே மக்களுக்கு உழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் ஓரங்க்கட்டப்பட்டு விட்டனர்.
மோடி இமாசல சுனாமி என்ற கேதார்நாத் நிலச்சரிவில் குஜராத்திகளை ஒருமணி நேரத்தில் சூப்பர் மேனாக செயல்பட்டு காப்பாற்றினார் என்று ஊடகங்கள் செய்தியை திட்டமிட்டு பரப்பின.அதை  சற்று நேரங்கழித்து உமிய அல்ல என்றும் தெரிந்தாலும் அந்த பொய் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதற்கு மறுப்போ,மன்னிப்போ கேட்கவில்லை.

பணத்துக்காக செய்திகளை வெளியிடும் கார்பரேட் ஊடகங்கள் போன்ற இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே “தீரவிசாரிப்பதே மெய்” என்று சொல்லியிருக்கிறார்கள். .

                                                                                                                           - மயிலைபாலு
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மஞ்சள் மகிமை...1




நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. அதனால்தான் மஞ்சள் இல்லாத தென்னிந்திய சமையலே இருப்பதில்லை. மற்ற பகுதிகளோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் புற்றுநோய் பாதிப்பின் அளவும் குறைவு. காரணம், நமது சமையலில் பிரதானமாக இடம்பெறுகிற மஞ்சள். மஞ்சளுக்கு புற்றுநோயை விரட்டும் சக்தி உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  மஞ்சளில் சிஹிஸிசிஹிவிமிழி என்கிற நொதி இருப்பதே அதன் அத்தனை நல்ல குணங்களுக்கும் காரணம். என்ன இருக்கிறது?   100 கிராமில்...
ஆற்றல்    349 கிலோ கலோரிகள்
புரதம்     6.3 கிராம்
கொழுப்பு    5.1 கிராம்
நார்ச்சத்து    30.3 கிராம்
இரும்பு    67.8 கிராம்

மஞ்சளால் வேறென்னவெல்லாம் பலன்?


எங்கே புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து அதை ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்.  நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகளுக்கு அந்த இடத்தின் மேல் மஞ்சள் தடவுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைக்க உதவுகிறது.  நீரிழிவால் பாதிக்கப்பட்டோர், காலையில் வெறும் வயிற்றில் 1 கரண்டி தயிரில், சிட்டிகை மஞ்சள்தூளையும், கால் டீஸ்பூன் வெந்தயத் தூளையும் கலந்து குடித்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.  இதை எடுத்துக் கொண்ட அரை மணி நேரத்துக்குப் பிறகே காபியோ, டீயோ குடிக்க வேண்டும்.

suran

முதியவர்களை பாதிக்கிற முக்கியமான பிரச்னைகளில் ஒன்று அல்சீமர் நோய். நம்மூர் முதியவர்களுக்கு அந்தப் பாதிப்பும் குறைவாகக் காணப்பட காரணம் மஞ்சளே. சமையலில் மஞ்சளைத் தவிர்க்காததால்தான், நம்மூர் முதியவர்களில் பலரும் 95, 100 வயது வரைகூட நல்ல நினைவாற்றலுடன் நடமாடுகிறார்கள். மஞ்சளானது அல்சீமர் நோயைத் தவிர்க்கும் அல்லது தள்ளிப்போடும்.

வயிற்றுப் புண்களை ஆற்றுவதிலும் மஞ்சளுக்கு இணையே இல்லை. அதனால்தான் அம்மை நோய் வந்தவர்களுக்கு மஞ்சள் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுடன், வெளிப்பூச்சுக்கும் மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துப் பூசச் சொல்கிறார்கள். சமையலுக்கு விரளி
மஞ்சளையும் வெளிப்பூச்சுக்கு கஸ்தூரி மஞ்சளையும் உபயோகிப்பதே சரியானது. மஞ்சள் காமாலையால் பாதிக் கப்பட்டோருக்கும், கல்லீரலை சுத்தப்படுத்த மஞ்சள் பரிந்துரைக் கப்படுகிறது.

ரத்தத்தில் அரிப்பு, நச்சுக் கலப்பு என எந்தப் பிரச்னை இருந்தாலும்,  பாலில் மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் குணம் தெரியும். தொண்டைக் கரகரப்புக்கும் இதே சிகிச்சைதான்.  ரத்தக் கொழுப்பை குறைப்பதில்கூட மஞ்சள் பெரிய பங்கு வகிப்பதால், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமுள்ளோர், மஞ்சளை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  கணையத்தில் பிரச்னை உள்ளவர்கள், அதாவது, கல்லோ, வீக்கமோ இருப்பவர்கள் மட்டும் மஞ்சள் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்ற எல்லோருக்கும் மஞ்சள் மகத்தானது.


suran

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?