இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய வா(வியா)தி

படம்
  ஸ்டாலின் கதை. ஒ ரு தடவை ஸ்டாலின் ஒரு கோழியின் இறகுகளை பிடுங்கி அரசியல் கற்பித்ததாக மேற்கத்திய முதலாளியவாதிகளும், அவர்களது அடிவருடிகளான போலித் தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு நகைப்புக்கிடமான, பொய்யான புனைகதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். இது விஷமிகளால் பரப்பப்படும் கட்டுக்கதை: //ஒரு முறை ரஷ்ய அதிபர் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து , அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது, முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் . பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார்.  அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது … மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி … அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது . அப்போது ரஷ்ய அதிபர் கூறினார் . ” இதுதான் அரசியல் , மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு , கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் ” என்ற