எளிமையான,நேர்மையான பயங்கவாதி !
இந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு ! "மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது?" - லண்டன் அறிஞரின் ஆய்வு 2014 நாடாளுமன்ற வெற்றியின்போது “வளர்ச்சி” (விகாஸ்) எனும் பெயரில் மோடி அலை வீசியது என அவ்வெற்றிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் (2019) மோடி தனது ஐந்தாண்டுகளுக்கு முந்திய ‘விகாஸ்’ எனும் முழக்கத்தை எல்லாம் தன் பிரச்சாரக் கூட்டங்களில் முன்வைக்கவில்லை. ஏனெனில் தனது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேலை வாய்ப்புகள், விவசாயக் கடன்கள் என எல்லா அம்சங்களிலும் அவரது ஆட்சியின் தோல்வியை எழுதாதவர்களும் பேசாதவர்களும் இல்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது? இந்து தேசியவாதத்திற்கான ஏற்பு வளர்ந்துகொண்டே போவதையும் பாரம்பரியமாக...