கேள்வியும் நானே..! பதிலும் நானே.!!
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் பாஜக அரசு.
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு மோடி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் அக்டோபர் 2018-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதனடிப்படையில் வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்த தமிழக விவசாயிகள் அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர்.
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் மரக்காணத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால், மாவட்ட பகுதிகளிலும் ஒதுக்கப்பட்டு, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பூமிக்கடியில் கடல் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உப்பு நிலங்களாக மாறிவிடும்.
கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே தண்ணீர் உப்பாக மாறிவரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் மேலும் விவசாய நிலங்கள் நிச்சயம் பாழ்பட்டு போகும் என்பது உறுதி.
விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இக்கொடிய திட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மோடி அரசை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து போராடினர்.
ஆனால், இந்த அழிவுத் திட்டங்களின் கூட்டுக் களவானியாக விளங்கும், அடிமை அதிமுக எடுபிடி அரசு, தொடர்ந்து தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்தும், போராடுபவர்களை போலிசை ஏவி கைது செய்து ஒடுக்கி இந்த அழிவுத் திட்டங்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் முப்போகம் விளைந்த பூமியெங்கும் வறட்சியாகிவிட்டது.
குடிநீர்ப் பஞ்சத்தால் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதி மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இப்படியொரு அபத்தமான, ஆபத்தான திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது மோடி அரசு.
தமிழகத்தைப் பொறுத்தவரை நிலவளம் மற்றும் நீர்வளம் பாதிக்கும் மரபு சாரா திட்டங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நிரந்தர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழக்கம்போல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு மவுனம் சாதித்து வருகின்றனர்.
நாட்டையே பல கூறுகளாக, சிதைத்து பன்னாட்டு நிறுவங்களின் வேட்டைக்காடாக மாற்றத் துடித்து வருகிறார் மோடி.
இந்த அரசு தனக்கென்று வரையறுத்துக் கொண்ட கொள்கைகள் எதையும் கடைபிடிக்க முடியாமல் தோற்றுப்போய் விட்டது.
பன்னாட்டு நிறுவனங்களின் அடியாளாக இன்றைய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மூலிகைக் குடிநீர்.

இந்த சுட்டெரிக்கும் வெயிலுக்கு நாம் கோலா,பெப்சி,ஸ்ப்ரைட் ,லிம்கா என செயற்கை மென்பானங்கள் அருந்துவது மேலும் உடல் நிலையை பாதிக்கும்.
வெறும் குடிநீரே இந்த வெயில் இருந்து நம்மைக்காப்பாற்றிவிடும்.
இருப்பினும் வெறும் குடிநீரை அருந்துவதை விட நம் முன்னோர்கள் அனுபவத்தால் கண்டறிந்து கூறியுள்ள மூலிகை வகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.
இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும்.
துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.
இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்
ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி” என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம்.
அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.
அஜீரணக் கோளாறை நீக்கும்.
நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும்.
குடல்புண்களை ஆற்றும்.
மூலநோய்க்காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.
இந்த மூலிகை குடிநீரை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உடலில் பிரச்னை இருப்பவர்களுக்கும் இது அருமருந்து. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் தேன் கலந்து கொடுப்பது நல்லது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற சனிக்கிழமையன்று பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக
பேட்டி ஏற்கனவே பல சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், கழுகு பார்வை கொண்ட
ட்விட்டர் பயணாளிகள் அதில் மேலும் புதிய சர்ச்சையை கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே, பாகிஸ்தானின் பால்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ராடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என பிரதமர் மோடி அந்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.
மேலும் அதற்கான யோசனையையும் தான் அளித்ததாக கூறினார்.
இதேபோல், 1980ல் தான் டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் ஆகியவற்றை பயன்படுத்தியதாக கூறினார்.
இதனையடுத்து ரேடார் அடிப்படையை தத்துவம் கூட தெரியாதவராக நமது பிரதமர் இருக்கிறார்.
ஒரு நாட்டின் பிரதமருக்கு இது கூட தெரியவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என ஒரு சிலர் சீரியஸாகவும், அவரின் இந்த கருத்தை கலாய்த்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல், மோடியின் இ-மெயில், டிஜிட்டல் கேமிரா பேச்சையும் நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து
பத்திரிகையாளர் பிரதிக் சின்ஹா, என்பவர் தனது ட்விட்டர் பதிவில்
கூறியதாவது, மோடியின் தொலைக்காட்சி நேர்காணலில், தேர்தல் பணிகளுக்கு
மத்தியிலும் தான் கவிதை எழுதியதாக கூறுகிறார் அது தொடர்பாக தான் எழுதி
வைத்த தாள்களை அவர் தேடுகிறார்.
அப்போது, கேமிரா அவரது கைகளை நோக்கி குலோஸ் அப் செல்கிறது.
அப்போது, அவரது கையில் நடந்த நேர்காணலுக்கான கேள்விகளுடன் பதில்களும் அடங்கிய ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பது காமிராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அவர் தேடிக்கட்டுவது கவிதையல்ல.அந்த நேர்காணலுக்கான கேள்வி -பதில்.கவைத்தஓய்ய் எழுதியதாகக் கூறுவதும் பொய்தனா?மோடிக்கு வாஜ்பாய் போன்ற பிம்பம் உருவாக்க ஆசை.
ஒவ்வொரு கேள்விக்கும் அதன் எதிரிலே உரிய பதில் உள்ளது தெரிய வந்தது.
மோடி கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
மேலும், அவர் இதுபோன்ற ஸ்கிரிப்டட் நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட இயக்குனர், மிருணாள் சென், பிறந்த தினம் இன்று!
வங்காள தேசத்தில் உள்ள, பரீத்பூரில், 1923, மே, 14ல் பிறந்தார். கோல்கட்டாவில், இயற்பியலில் முதுகலை பயின்று, பட்டம் பெற்றார்.
கோல்கட்டா திரைப்பட ஸ்டூடியோவில், ஒலி தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். கடந்த, 1955ல், ராத் போர் என்ற படத்தை இயக்கினார்.
ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் உள்ளிட்ட நான்கு மொழிகளில், 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் நான்கு ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.
இந்திய படங்களை, உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குனர்களில், இவரும் ஒருவர்.
இவரின் திரைப்படங்கள் அனைத்தும், நடுத்தர மக்களின் குடும்பப் பிரச்னையை மையப்படுத்தி, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.
'கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ' உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும், இவரது படங்கள், விருதுகளை வென்றுள்ளன.
'தாதா சாகேப் பால்கே, பத்மபூஷண்' உள்ளிட்ட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 2018 டிச-., 30ல் காலமானார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"80களில் இ-மெயில் வசதியே வந்திருக்கவில்லை.
இந்தியாவில் இணைய வசதியும் இல்லை.
மேலும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்ததாக கூறும் மோடி அப்போதே டிஜிட்டல் கேமரா வைத்திருந்தாரா?"
பிபிசி கிண்டல்.
----------------------------------------------------------------------------------------------