அதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.

மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளின் பின்னணியில் இவற்றுடன் இணைக்கப்பட்ட விவிபேட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளை எப்படி எண்ண வேண்டும் என்பது குறித்து 22 எதிர்க் கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மனு அளித்துள்ளன.

அந்த மனுவின் சாராம்சம் வருமாறு:

நாட்டில் 70 சதவீத வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 அரசியல் கட்சிகள் இணைந்து 2019 ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையரை அணுகி, மின்னணு வாக்கு எந்திரங்களுடன் இணைக்கப்படும் விவிபேட் எந்திரங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தன.

பின்னர், 2019 ஏப்ரல் 8 அன்று உச்சநீதிமன்றம் விவிபேட் எந்திரங்களுடன் உள்ள துண்டுச்சீட்டுகளை தோராயமானமுறையில் (random) எடுத்து சரிபார்த்திட வேண்டும் என்று கட்டளை

பிறப்பித்திருந்தது.எனினும் பின்னர் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த வழிகாட்டும் நெறிமுறைகள், உச்சநீதிமன்றத்தின் கட்டளையில் கூறப்பட்டிருந்த நடைமுறைக்கு மாறாக, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்டது.


வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் தொடர்பாக மின்னணு வாக்கு எந்திரங்களில் காணப்படும் எண்ணுக்கும், விவிபேட் துண்டுச்சீட்டுகளில் காணப்படும் எண்ணுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டால், துண்டுச்சீட்டில் காணப்பட்ட எண்ணிக்கையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றுதேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஆனால் இவ்வாறு வேறுபாடு ஏற்படுமாயின் அது எப்படி நேர்ந்தது என்பது குறித்துப் புலனாய்வு செய்திட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இவ்வாறு விவிபேட் எந்திரங்கள் மூலம்துண்டுச்சீட்டுகள் அளிக்கும்பணி மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில் 2 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது.

மீதம் உள்ள 98 சதவீத வாக்குச்சாவடிகளின் கதியைப் பொறுத்தவரை அவை மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள கணக்கீட்டை மட்டுமே நம்பியாக வேண்டும்.

மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் ஏற்படுத்த முடியும் என்பதைத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது. 

எனினும் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படிஎன்பது குறித்து ஒரு விவாதத்தைநடத்திட தேர்தல் ஆணையம் மிகவும் வசதியாக தவிர்த்துவிட்டது. விவாதமே நடத்த தேர்தல் ஆணையம் முன்வராத நிலையில் இப்பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காண முடியும்? 
மேலும் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டில் காணப்படும் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்படுமானால், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரும், தேர்தல் பார்வையாளரும் மாநிலத் தேர்தல் அலுவலருக்கு இதுகுறித்து தெரிவித்திட வேண்டும் என்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையரால் கூறப்பட்டிருக்கிறது.

 ஆனால் அதனை வைத்துக்கொண்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் என்ன செய்வார் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகள் மற்றும்மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையைத் தெளிவாகத் தெரிவித்திட வேண்டும்.

22 கட்சிகளின் சார்பில் நாங்கள்தலைமைத் தேர்தல் ஆணையரைக்கேட்டுக்கொள்
வது என்னவெனில்,விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட வேண்டும் என்பதாகும். விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளுக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களுக்கும் இடையே எண்ணிக்கைதொடர்பாக வித்தியாசம் காணப்படுமானால் அத்தொகுதியில் உள்ள விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளை 100 சதவீதமும் எண்ணிவிட வேண்டும்.
இவ்வாறு 22 கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனுச் செய்துள்ளனர்.

ஆனால்  பாரதீய தலைமைத்தேர்தல் ஆணையர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

பல வாக்குப்பதிவு எந்திரங்கள் வடமாநிலங்களில் தனியார்)பாஜக) கிடங்குகளில் ,கடைகளில்,வீடுகளில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் ஆளும் கட்சியினரால் காரைக்கால்,லாரிகள்,ஆட்டோக்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை மய்யத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதை பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு ,காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றசாட்டு எதிர்க்கட்சிகள் புகைப்பட,காணொலி ஆதாரத்துடன் கூறினாலும் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.மேலும் காவல் பாதுகாப்புதான் தரப்பட்டுள்ளது.
பாரதிய தேர்தல் ஆணையம் சஞ்சய் அரோரா தலைமையில் நடத்திய தேர்தலின் லட்சணம் இதுதான்.
இப்படி நடத்திய தேர்தல் ,  ஒப்புகை சீட்டையும்  ஒப்பிட  மறுப்பதால் என்ன மாதிரியான முடிவுகளைத்தரும் என்பது பாமர வாக்காளரும் அறியக்கூடியதுதானே.

இதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பை வாக்குப்பதிவு நடக்கும் நாளில் 3 மணிக்கே நடுநிலை நக்கி ஊடங்கள் மூலம் பாரதீய தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது.
இல்லையெனில் அப்படி கணிப்பு வெளியிடக்கூடாதென தான் பிறப்பித்த ஆணையை அனைத்து ஊடகங்களும் மீறியுள்ளதை கண்டுகொள்ளாமல் இருக்குமா?
உறுதி செய்யப்பட்ட முடிவுகளால்தான் இந்த தேர்தலை பாரதிய தேர்தல் ஆணையம் நடத்திக்காட்டி உள்ளது.
 தென் மாநிலங்களைத்தவிர்த்து வட மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் அனைத்துமே வாக்குப்பத்திவ் எந்திரங்களில் ஏற்கனவே எழுதப் பட்டவைதான்.
அதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.வேறு வழியே இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஆட்சி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்திலும் 

இந்தியாவின் முதல் 10 கார்ப்பரேட் நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்றாகும்.1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதானி குழுமம், 1994-ஆம் ஆண்டுதான், பங்குச்சந்தையில் பங்கு வெளியீடு செய்தது.

எனினும் 2002-ஆம் ஆண்டு மோடியின் பார்வைபட்ட பிறகே, அதானி குழுமம் வெளியுலகுக்கு தெரிந்தது.

2002-இல் 765 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானி நிறுவனத்தின் மதிப்பு, தற்போது 8.8 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.2002-ஆம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக, பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது.

இந்த வன் முறையை மோடி அரசு தடுக்கவில்லை என்பதோடு அல்லாமல், இந்துத்துவ சக்திகளுக்கு அப்பட்டமாக துணையும் நின்றது.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. ஒரு மாநில முதல்வரை, எதிர்க் கட்சிகள் கண்டிப்பது வழக்கமானதுதான்.
ஆனால், மோடி சார்ந்த பாஜக-வின் அன்றைய மாபெரும் தலைவரும் - பிரதமருமான வாஜ்பாயே, மோடி ராஜதர்மத்தைமீறி விட்டார் என்று குற்றம் சாட்டினார்.இவ்வாறு கண்டனம் தெரிவித்தவர்களில், இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பும் (Confederation of Indian Industry - CII) ஒன்று.

அப்போது, அந்த கூட்டப்புக்குள் ஒற்றைக்குரலாக மோடிக்கு ஆதரவாக ஒலித்து வெளியே வந்தவர்தான் அதானி. அதுமட்டுமல்ல, மோடியை கண்டித்தார்கள் என்பதற்காக, சிஐஐ கூட்டமைப்புக்கு போட்டியாக, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களைச் சேர்த்துக் கொண்டு ‘குஜராத் மறுமலர்ச்சி குழுமம்’ என்ற புதிய வர்த்தகக் கூட்டமைப்பையே துவக்கி, அதானி, மோடியின் கவனத்தை ஈர்த்தார்.

அதுதான் இன்று, இந்தியாவின் முதல்பத்து பணக்காரர்களில் ஒருவராக அதானியை நிறுத்தியுள்ளது.2005-ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச்வளைகுடாவையொட்டிய முந்த்ரா பகுதியில், அதானி துறைமுகம் கட்டுவதற்காக, சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மோடி தூக்கிக் கொடுத்தார்.

 ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு வெறும் 1 ரூபாய் முதல் 32 ரூபாய் என்றமிகமிக மலிவான குத்தகை தொகைக்கு 14 ஆயிரம் ஏக்கரும் வாரிக் கொடுக்கப்பட்டது.இவ்வாறு மலிவாக பெற்ற நிலத்தை, அப்படியே அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 671 ரூபாய் கட்டணத்திற்குஅதானி வாடகைக்கு விட்டார்.
 இதன்மூலமாக மட்டும் அலுங்காமல் குலுங்காமல் பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி சம்பாதித்தார்.

முந்த்ரா பகுதி நிலங்கள் பெரும்பாலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாகும்.
 இந்த மேய்சசல் நிலங்களில்தான் 4620 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகத்தையும் அதானி அமைத்துள்ளார்.


2014-ஆம் ஆண்டு, மோடி பிரதமரான பின்னர், ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து மோடிவெளிநாடுகள் செல்லும்போது அதானியும் அவருடன் சென்றார்.

அப்போது, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தத்தை அதானிக்கு மோடி பெற்றுத்தந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதானி நிலக்கரி சுரங்கம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார்.
அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு, பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’விடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடனும் பெற்றுத் தந்தார்.

துறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள்,மின்சார உற்பத்தி எனப் பெருகிய லாபத்தில்,அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. இங்கும் அவருக்குக் கைகொடுத்தது அவரது நண்பர் மோடிதான்.

 அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டன.ஐந்தாண்டு ஆட்சி முடியும் நேரத்தில்,ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் நிலத்தை அதானிக்கு அளித்தது மோடி அரசு.

 இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் கூட இந்தியாவுக்கு கிடைக்கப் போவது இல்லை என்பதும், அவ்வளவும் வங்காளதேசத்திற்கு விற்கப்பட உள்ளது என்பதும் முக்கியமானது.

தற்போது ஐந்தாண்டு மோடி ஆட்சி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்திலும் தனது நண்பர் அதானிக்கு பலஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.

மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற ஒரு கருத்துத் திணிப்பை, அண்மையில் ஊடகங்கள் வெளியிட்டன அல்லவா, அதன் மூலம் மட்டும், அதானி நிறுவனப் பங்கு மதிப்பை17 சதவிகிதம் வரை உயர்த்தி விட்டு, பெரும்லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?