செவ்வாய், 31 மார்ச், 2015

நேர்மையின் விலை


 சிறுமையாதல்?
 ======================================================

இந்தியாவில் மட்டும்தான் நேர்மையாக செயல் பட்டால் அந்த அதிகாரியை தூக்கிப் பந்தாடல்,அப்படியும் அடங்காவிட்டால் ஒரு காசு பெறாத மேசையடி வேலை கொடுத்தல் அப்படியும் அடாங்கா விட்டால் அவரைப்பற்றி அவதூறு பரப்பல்,முடிவில் அவரின் உயிரைப்பறித்தல் என்று ஆட்சியாளர்கள் பரிசுகளை அள்ளித்தருகிறார்கள்.
இதற்கு சில நாக்குத்தள்ளிய அவதார அதிகாரிகளும் வாலை  ஆட்டிக்கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதோ நேர்மையாகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி யின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது.
 எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை.
ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது.
டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான்.
ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ.
 காரணம், அவரது நேர்மை.
தமிழ் நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் மாவட்ட கலெக்டரின் பெயர் தெரியாது.
 தமிழ்நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்தெரியாது.
ஆனால் சகாயத்தை எல்லோருக்கும் தெரியும்.

காரணம், அவரது நேர்மை.
முத்துக்குமாரசாமி என்ற வேளாண்மைத் துறை அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது. அவரது முகம் தெரியாத பலரும்கூட அவருக்காகப் போராடினார்கள்.
 காரணம், அதிகார நெருக்கடிகளுக்குப் பணிந்துகொடுக்காத அவரது நேர்மை.

பீகாரில் தங்க நாற்கர சாலை அமைப்பதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்த முயன்ற சத்யேந்திர துபே என்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டபோது இப்படித்தான் போராட்டம் வெடித்தது.
அதன்பின் உத்தரப் பிரதேசத்தில் கலப்பட எண்ணெய் விற்கும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுத்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மஞ்சுநாத்துக்கும் இப்படித்தான் மரணம் நேர்ந்தது. அவரைக் கொன்றவர்களுக்கு கடந்த வாரம்தான் ஆயுள் தண்டனை வழங்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் சுரங்கக் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் 3 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார்.

டி.கே.ரவி இறந்த இதே கர்நாடகாவில் கூட்டுறவு சங்க நில ஒதுக்கீடு முறைகேட்டை அம்பலப்படுத்திய மகந்தேஷ் என்ற அதிகாரியை இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக சாகடித்தார்கள்.
 இன்னும் பலர் டிரான்ஸ்பர் என்ற அஸ்திரத்தால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்.
அசோக் கெம்கா, சஞ்சீவ் சதுர்வேதி, துர்கா சக்தி நாக்பால் என பலர் இந்தப் பட்டியலில் உண்டு.

சகாயமும் இப்படி பலமுறை பந்தாடப்பட்டிருக்கிறார். 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 டிரான்ஸ்பர்கள். என்ன ஒரு நாடோடி வாழ்க்கை! ஒரு பதவி யில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருப்பதற்கு எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் நியாயமான உரிமை உண்டு.
 ஆனால் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்துக்காக எப்போதும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருப்பது எவ்வளவு நிம்மதியற்ற குடும்பச் சூழலை ஒருவருக்குக் கொடுக்கும்! 

பொது வாழ்வில் நேர்மை என்ற குணம் அரிதாகிவிட்ட காலத்தில், நேர்மையாக இருப்பது என்பது அபாயகரமான விஷயமாக ஆகிவிட்டது. எப்போது என்ன வலை விரித்து நம்மை சிக்க வைப்பார்களோ என 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டும். முதுகின் பின்னால் குத்த சக ஊழியர்களே க்யூவில் நிற்பார்கள்.
 எல்லாம் சாக்கடையாகிப் போன ஒரு சிஸ்டத்தில் ஒரே ஒரு நேர்மையான அதிகாரி வந்து நின்றால், ‘சம்பாதிக்க’ நினைக்கும் அத்தனை பேருக்கும் அவர்தானே முதல் எதிரி!

நேர்மையாகப் பணியாற்றியதற்காக ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டும் என்றால், அவரைக் காப்பாற்றத் தவறியதற்கு இந்த தேசம் வெட்கப்பட வேண்டும். தன் பணியை நேர்மையாகச் செய்வது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கும் ஒரு அதிகாரியை மக்கள்தான் கொண்டாட வேண்டும்
; பாதுகாக்க வேண்டும்.
 ‘இவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் மக்கள் பொங்கி எழுவார்கள்’ என்ற பயம்தான் அவருக்கான பாதுகாப்புக் கவசம்.
இப்போது கர்நாடக மக்களின் போராட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்க ரவி மீது காதல் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது.
அவர் கடைசியாகப்பேசியதில் உள்ள ஒரு பெண் அதிகாரியிடம் ரவி தன்னை ஒருதலையாகக் காதலித்ததாக வாக்கு மூலம் வாங்கி அதனால்தான் ரவி தற்கொலை செய்து கொண்டார் என்ற திரைக்கதையை அரசு உருவாக்கி வருகிறது.
ஆனால் ரவி தந்தை கடைசியாக பேசிய அலை பேசி பேச்சுக் களில் பல காவல்துறையால அழிக்கப்பட்டிருக்கிறது.அந்த பெண்  அதிகாரிதான் பேசியுள்ளார்.அதுவும் ரவி இறந்த பின்தான் அவர் அலைபேசியில் பேசி யுள்ளதாக தெரிவிக்கிறார்.எது உண்மை.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ஒரு அதிமுக கட்சிக்காரரிடம் பேசி கோபத்தில் தனது வண்டியை அங்கேயே விட்டு விட்டு அலைபேசியில் வெறு யாரிடமோ பே சியபடி சென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை வீட்டுக்கடன் விடயமாக வருமானவரி விசாரணைக்குப்பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று நம் சிபிசிஐடி கிளப்பி விட்டது போல் ரவியின் கதையில் நடக்கிறது.மாநிலங்கள் மாறினாலும் மணல் கொள்ளையர்களும்,அரசியல் கொள்ளையர்களும் அவர்கள் கூட்டனியும்,புத்தியும் மாறுவதில்லை என்பதைத்தான் இரு சம்பவங்களும் காட்டுகின்றன.
இன்று இந்த கொள்ளையர்களிடம் இலக்காக இருப்பது நமது சகாயம்.
அவருக்கு வரும் மிரட்டல்களுக்கு வேறு ஒருவராக இருந்தால் வேலையை விட்டு விவசாயம் பார்க்க போயிருப்பார்.தமிழ் நாடு ஆட்சியாளர்கள் அதிகாரி சகாயத்துக்கு தரும் பாதுகாப்பை விட இடைஞ்சல்கள் தான் அதிகம்.அலுவலகத்துக்கு கூட இடம் தரவில்லை.இருக்கும் மாநகராட்சி கடை யை கூட காலி செய்யக் கூறி நோட்டீசை கதவில் ஒட்டி அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு கூட சரிவர வழ ங்கப்பட வில்லை.
அவரைப்போன்றவர்களுக்கு மக்கள்தான் பாது காப்பை வழ ங்க வேண்டும் .நேர்மையானவர்களே இல்லை என்று புலம்பும் மக்கள்தான் அரிதாக இருக்கும் சகாயம் போன்ற நேர்மையாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்க
வேண்டும்.பாதுகாக்க வேண்டும் .

முன்பெல்லாம் நேர்மையாக ஒரு அதிகாரி இருந்தால், தப்பு செய்யும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவரிடம் பயந்து ஒதுங்குவார்கள். ஆனால் இப்போது நேர்மை மனிதர்கள்தான் தப்பான ஆசாமிகளிடமிருந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது.காரணம் மக்கள் தங்களுக்கு மீண்டும் வாக்களிப்பதை பற்றிய பயம் தான்.ஆனாலின்று 500 ரூபாய்க்கு வாக்குகளை மக்கள் விற்று விடுவதுதான்.அதை வாங்க பணம் தேவையே.அதற்கு எந்தவகைகளில் எல்லாம் பணம் கிடைக்கும் என்று பதவி மூலம் சம்பாதிக்கும் நிலைக்கு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் வந்து விட்டனர்.மக்கள் மன நிலை மாறும் வரை சகாயம்,முத்துக் குமாரசாமி,
 ரவி போன்ற அதிகாரிகளுக்கு ஆபத்துதான் அவர்கள் மீது  மேலும்  அவதூறு சேறுகள் அள்ளி வீசப்படலாம்.
நேர்மையாளர்களை பாதுகாக்க வேண்டியது ஆட்சியாளர்களை கடமையல்ல.அவர்களைப் பாதுகாக்க மக்கள்தான் போராட வேண் டும் .
==========================================================================

திங்கள், 30 மார்ச், 2015

எது பொய், பிரதமர் "கோயபல்ஸ் மோடி"...?

நாஜி கொள்கைப் பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் பாசிஸ்ட் பாணி பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்து விட்ட அமைச்சராவார்.
 “நீங்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கள், அது உண்மையாகிவிடும்,’’ என்பதே அவரது பாணி.
இத்தகைய கோயபல்ஸ் பிரச்சார உத்தியைத்தான் இப்போது மீண்டும் பிரதமர் மோடி, கோயபல்சையே விஞ்சக் கூடிய அளவிற்குத் தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஜோசப் கோயபல்ஸ்
மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியின் அனைத்து நிலையங்களாலும், மார்ச் 22 அன்று ஒலிபரப்பப்பட்ட, “மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிலம் கையகப்படுத்தல் மசோதா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, எழுப்பிய ஆட்சேபணைகள் அனைத்தும் “பொய்களின்’’ மூட்டை என்றும்,
 விவசாயிகளின் நலன்களை வேரறுப்பதற்கான “சதி’’யின் ஒரு பகுதி என்றும் அளந்துவிட்டுள்ளார். “அரசாங் கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவிற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத உரை’’ பிரதமரின் வானொலி உரை என்று, தேசிய நாளேடுகள் பலவும் தலையங்கங்கள் தீட்டியிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை, ஐமுகூ அரசின் சட்டமுன்வடிவில் அளிக்கப்பட் டிருந்த குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் உத்தரவாதங்கள்கூட இவர்கள் கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவில் இல்லை என்று குறிப்பிட்டிருந் தோம்.
 இவை அன்றைய காங்கிரஸ் தலை மையிலான ஐமுகூ அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டபோது நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக வும் சேர்ந்துகொண்டு நிறைவேற்றின.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத் தங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே மிகவும் தெளிவான முறையிலேயே கூட்டணி (மேட்ச் பிக்சிங்) உண்டு என்று நாம் குற்றம்சாட்டி வந்திருக்கிறோம். நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்தும் சமயத்தில் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலத்தின் மதிப்பு உயரும்போதெல்லாம் தொடர்ந்து பயன்பெறக்கூடிய அளவிற்கு ஷரத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பரிந்துரைத்திருந்தோம்.
இத்தகைய முன்மொழிவுகளை காங்கிரசும் பாஜகவும் இணைந்துநின்றே எதிர்த்தன.
நரேந்திர மோடி

எது பொய் மூட்டை?

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை கள் “பொய்கள்’’ அடங்கிய மூட்டை என்றுபிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து தற்போது ஆராய்வோம். 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை பாஜக முழுமை யாக ஆதரித்தது என்று கூறுவது பொய்யா?
இல்லை எனில், பின் ஏன் இப்போது மாற்றங்கள் செய்யப்பட்டிருக் கின்றன? ஏற்கனவே கடும் நெருக்க டிக்குள்ளாகி இருக்கின்ற இந்திய விவசாயிகளின் கொஞ்சநஞ்ச நலன்களையும் காவு கொடுத்து அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதாயத் திற்காக இத்தகைய திருத் தங்கள் மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்படவில்லை என்று கூற முடியுமா?

இத்தகைய திருத்தங்கள், பிரதமர் மோடி யின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தாராளமாக நிதி உதவி செய்தவர்கள் பயன டையக்கூடிய விதத்தில், அவர்களுக்கு `திருப்பிச் செலுத்தும்’ விதத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி இல்லையா? முன்பு காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை முழு மையாக ஆதரித்த பாஜகஇப்போது மேலும் பல்வேறு மாற்றங் களை அவசரம் அவசரமாகக்கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கங்கள் குறித்து எண்ணற்ற கேள்விகள் இதுபோல் தோன்றிக் கொண்டே இருக் கின்றன.

10ஏ பிரிவின் பொருள் என்ன?


முன்பிருந்த சட்டத்தில், நிலம் கையகப்படுத்தப்படும் சமயத்தில், நிலத்திற்குச் சொந்தமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது.
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள அவசரச்சட்டத்தில் 10-ஏ என்று புதிதாக ஒரு பிரிவை உருவாக்கி,
தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார்-ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் உட்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு அவ்வாறு சம் மதம் பெறவேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது.
மோடிஅரசாங்கம் இதன்கீழ் தனியார் பள்ளி கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றையும் சேர்த்திருந்தது.
மக்களவை யில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மாநிலங்களவையில் தற்போது நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவில் இவை நீக்கப்பட்டிருக்கின்றன.
 இது பொய்யா, பிரதமர் மோடி அவர்களே?

6 வகையான நிலங்கள்

முந்தைய சட்டத்தில், சமூகத்திற்கு மிகவும் தேவையான நிலங்கள் எவைஎவை என்று வல்லுநர் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு ஆறு வகையிலான நிலங்களுக்கு, நிலம் கையகப்படுத்தல் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந் தன.
ஆண்டுதோறும் பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு இதனால் முந்தைய சட் டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவில் மேற்படி ஆறுவகையிலான இனங்களில் ஐந்து இனங் கள் நீக்கப்பட்டுவிட்டன.
இது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?

24(2)வது பிரிவை திருத்தியது ஏன்?

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் 24(2)ஆவது பிரிவு திருத்தப்பட்டிருக் கிறது என்பது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இந்தச் சட்டப்பிரி வானது விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலம் என்ன காரணத் திற்காக, கையகப்படுத்தப்படுகிறதோ அந்தக் காரணத்திற்காக ஐந்தாண்டு களுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், மீண்டும் அந்த நிலங்கள் விவசாயி களுக்கே சொந்தம் என்கிற முறையில் அந்தப் பிரிவு முன்பு அமைந்திருந்தது.
மேலும் முந்தைய சட்டத்தில் விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை என்றாலோ அல்லது உண்மையிலேயே அந்த நிலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலோ மீண்டும் அந்த நிலம் விவசாயிக்கே சொந்தம்என்றிருந்தது.
இப்போது இத்திருத்தத் தின் மூலம் விவசாயியின் அந்த உரிமை நீக்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயியின் நலன்களுக்கு எதிராக, இந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை என்றா கூறுகிறீர்கள், திருவாளர் பிரதமர் அவர்களே?

101வது பிரிவு என்னவாயிற்று?

2013ஆம் ஆண்டு சட்டத்தின் 101 ஆவது பிரிவில், கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாவிட்டால் (அதனைக் கையகப்படுத்தியவரிடமே அல்லது மாநில நில வங்கியிடமே) ஐந்து ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைத்து விட வேண்டும் என்று மிகவும் தெளி வாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது அது திருத்தப்பட வில்லை என்று கூறுகிறீர்களா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இத்திருத்தம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகப் போகாது என்கிறீர் களா?
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சென்றவாரம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில், சிறப்புப் பொருளாதார மண் டலங்களுக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு நிலம் ஐந்தாண்டுகள் கடந்த பின்னரும் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன என்று கூறியிருந்தார்.
 தொழில்மையங்கள் அமைப்பதற்காக அமைக்கப்படும் -
சாலை போக்குவரத்து அல்லது ரயில் போக்குவரத்திற் காக அமைக்கப்படும் - பாதையில் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டர்தூரத்திற்கு நிலங்களைக் கையகப்படுத் தக்கூடிய விதத்தில் முன்பிருந்த வரையறை விரிவாக்கப்பட்டு திருத்தப்படவில் லையா?
முந்தைய சட்டத்தில் எந்த அளவிற்குக் குறைவாக நிலம் தேவைப் படுமோ அந்த அளவிற்குக் கையகப்படுத் தினால் போதும் என்றிருந்த நிபந்தனை இதன்மூலம் மீறப்பட வில்லையா?

ரியல் எஸ்டேட் முதலைகளிடம் போனதா?இல்லையா?

யமுனா எக்ஸ்பிரஸ்வே அமைக் கப்படுவதற்காக அதன் இருமருங்கிலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பின்னர் உத்தரப்பிரதேசத்தில் ஜேப்பிகுரூப் போன்ற ரியல் எஸ்டேட்ஜாம்பவான்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது .என்கிற உண்மையை ஒப்பிட்டுப்பார்த்தோமானால் இவ் வாறு திருத்தப்பட்டதற்கான முக்கியத் துவத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
விவசாயிகள் பயன் அடைவதற்காகத்தான் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டிருக்கிறதா, திரு வாளர் பிரதமர் அவர்களே?

150கி.மீ. நிலம் பறிக்கப்பட்டதா?இல்லையா?

ஜப்பான் அரசாங்கத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள தில்லி-மும்பை இடையேயான தொழிற் சாலை மையத்திற்காக “வளர்ச்சித் தேவை களுக்கு’’ என்று இரு மருங்கிலும் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை இல்லையா, திருவாளர் பிரதமர் அவர்களே?
தேசிய நெடுஞ்சாலையிலோ, மாநில அரசின் கீழான நெடுஞ்சாலையிலோ அல்லது ரயில்வே பாதையின் இரு மருங்கிலுமோ ஒரு கிலோ மீட்டர் கையகப் படுத்தப்பட்டால்கூட, “வளர்ச்சித் தேவை’’ என்பதன் கீழ் அளிக்கப்படும் இழப்பீட்டுத்தொகை மொத்த பயிர்ப் பாசன நிலத்தின் மதிப்பில் 31.9 சதவீத அளவிற்குத்தான் என்பதுதான் உண்மை, இல்லையா?
இதைப் பொய் என்கிறீர்களா, திருவாளர் பிரதமர் அவர்களே?
2013ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றும் விவசாய நிலத்தைச் சார்ந்திருந்த இதர பிரிவினருக்கும் அவர்களு டைய வாழ்வாதாரங்களுக்காக அளிக்கப்பட்டிருந்த பல்வேறு பாது காப்பு அம்சங்கள், தற்போது தாங்கள் கொண்டுவந்திருக்கிற சட்ட முன்வடிவில் நீர்த்துப் போகச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது உண்மை இல்லையா?
அதற்குப் பதிலாக, விவ சாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புக்காக சில ஷரத்துக்கள் மட்டும் அளிக்கப்பட்டு, நிலமற்ற இதர பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய விதத்தில் இல்லையா?
இவை அனைத்தும் பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இதே தொனியில் நாம் தொடர முடியும்.
ஆயினும், பிரதமரால் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தப்பட்டுள்ள “பொய்கள்’’ மூட்டை குறித்து அளித்துள்ள விவரங்கள் எந்த அளவிற்குப் பொய் என்பதை அம்பலப்படுத்த இவை போதுமானவைகளாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தாராளமாகத் தனக்கு உதவிய கார்ப்பரேட்டு களுக்கு “திருப்பி அளிக்கும் காலத் தில்’’ போதுமான அளவிற்கு உதவி செய்ய முடியவில்லையே என்கிற மோடி அரசாங் கத்தின் விரக்திதான், எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட “பொய்கள்’’க்கு எதிராக, உண்மையல்லாதவற்றைக் கூறு வதற்கு பிரதமரை இட்டுச்சென்றுள்ளது என்றே தோன்றுகிறது.நம்முடைய பொருளாதாரத்தை `சலுகை சார் முதலாளித்துவத்திற்கு’ முற்றிலுமாக உட்படுத்த முயலும்முயற்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காக வும், உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவினை அளித்து அச்சாணிபோன்று விளங்கும் நம் உழவர்களைப் பாதுகாப் பதற்காகவும், அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகவும்தான் இச்சட்ட முன்வடிவை நாம் எதிர்க்கிறோம். மாபெரும் மக்கள்போராட்டங்கள் மூலமாக, நம் விவசாயிகள் வாழ்வையும், அதன்மூலம் இந்திய விவசாயத்தை யும், சூறையாடக் கூடிய மிகவும் பிற் போக்குத்தனமான இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமல் தடுத்திட
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம்..
கடைசியாக பிரதமர் மோடிக்கு ஒரு பாமரக் கேள்வி "இருக்கும் விவசாய நிலங்களை எல்லாம் தொழிற்சாலைகள் ,ரியல் எஸ்டேட் காரர்களிடம் தாரை வார்த்து விட்டு அரிசி,கோதுமை,காய்கறிகளை உங்கள் 'இந்தியாவில் தயாரிப்பு"கொள்கை மூலமாக கோகோ கோலா இந்திய தொழிற்சாலையில் தயாரித்து மக்களுக்கு தருவீர்களா? அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வீர்களா?

 "பீப்புள் டெமாக்ரசி" 
-மார்ச் 25, 2015
தமிழில்: ச.வீரமணி
==========================================================================
இன்று,
மார்ச்-30.
1954 - மார்ச் 30
 தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் அடங்கியஅன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, கிராமப்புற பள்ளிகள் சிலவற்றில், அரை நாள் படிப்பும், மீதி அரை நாள், தந்தையின் தொழிலை மாணவன் கற்றுக் கொள்வது என்ற புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.
 'இதனால் குயவன் மகன் குயவனாகவும், முடி திருத்துபவன் மகன் முடி திருத்துபவனுமாகவே ஆக்கும்.அவர்களை முன்னேற விடாமல் ஹடுக்கும் இந்த சட்டம்.' என்று கூறி எதிர்த்தனர்  திராவிட இயக்கக் கட்சியினர். இந்த 'குலக்கல்வி' திட்டத்தை எதிர்த்து, திராவிட கட்சிகள் ஊர்வலம் நடத்தின. அதில், காமராஜரின் ஆதரவாளர்கள் ,காங்கிரசாரும் திரளாக பங்கேற்றனர் .இச்சட்டத்தை எதிர்த்தனர்.அது காந்தி,ராஜாஜி போன்ற பலருக்குஅதிர்ச்சி தந்தது .
ராஜாஜி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரகாங்கிரசார்  முனைந்தனர்.
எதிர்ப்பு வலுவாக இருந்ததால் வேறு வழியின்றி ராஜாஜியே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, காமராஜர், சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதினம்.
 • தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)
 • அமெரிக்க தேசிய மருத்துவர்கள் தினம்
 • அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)
 • ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது(1858)
 =========================================================================ஞாயிறு, 29 மார்ச், 2015

வெயில் காலம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது.
அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்,  அரிப்பு, வியர்வை, சோர்வு, என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும்.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?
 மனித உடலின்  இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலை  குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது.
உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும்.
இதனால் வியர்க்குரு வரும்.
இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது.
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை  சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும்.

உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
 குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய  படை, தேமல் தோன்றும். படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும். கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும்.
அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம்.
 உட்கொள்ளும் தண்ணீர் அளவு  குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களள்  படிந்துவிடும்.
 இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்னை வராது.

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள்  அதிகமாக பெருகும்.
 இந்த உணவுகளை சாப்பிட்டால்  பலருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.
 இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை  உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆற  வைத்து குடிக்கவேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும்.
அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு  உண்டாகும். தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும். இதில் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய  வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம்.
காரணம்?
குளிர்பானங் களை வரம்பின்றி  குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. இதற்கு பதிலாக இளநீர்,  மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின்  வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன. இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள்  உடனடியாக குறைகின்றன.
எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.

உணவு வகைகள்: இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கூழ், அகத்திகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய்,  வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், வாழைத் தண்டு, வெங்காயபச்சடி, தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு  வகைகள்.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம்  வியர்வையுடன் வெளியேறிவிடும்.

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு  பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது  நல்லது. அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து  வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
 பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல  வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

குழந்தைகள், முதியோர்கள் உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால்  கண்களுக்கு குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளலாம். உடைகளை பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே, அவற்றில் கூட இறுக்கமான ஆடைகளை  தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும்.
ஆகவே இத்தன்மையுள்ள ஆடை களை தவிர்ப்பது நல்லது.
அதுபோல் செயற்கை இழை களால் ஆன  ஆடை களையும் தவிர்க்க வேண்டும். வெண்மை நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை.
==========================================================================
முதுகுவலி?

* முதுகுவலி ஏற்பட்டால் விளக்கெண்ணையை சூடுபடுத்தி கால் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

* பூண்டு 5 பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, நன்கு காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், வலியுள்ள இடங்களில் தடவலாம்.

* புளி சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

* சூடான நல்லெண்ணெய்யுடன் உப்பு கலந்து மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்ய வேண்டும்.

* ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

* ஆல மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

* உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

* முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும்.

=========================================================================

 நீங்கள் அலோபதி மாத்திரை எடுக்கும் போது 
அறிந்து கொள்ள வேண்டியவைகள்.!

உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது.
ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும்.
 இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி.
 ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்து விடுகின்றது.
 மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும்.
ஆகவே விரைவில் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள்.
ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன.
 மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும்.
எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்து விடுகின்றன.
மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்து விடுகின்றன.
ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும்.
 சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது.
 ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் நிலை விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும்.
ஆகவே விரைவில் செரிமானமாகும்  உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

==========================================================================

கார்ப்பரேட் ஏழைகளும் + 0,00,00,00,00,000!

[பன்னிரண்டு பூஜ்யங்களும்]

தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் (இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன?) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்க வரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார்.
ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் மீதான சுங்க வரிச் சலுகை என்பது கடந்த 12 மாதங்களில் இருந்த அளவை விட ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
42 டிரில்லியன் ரூபாய்.
இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்பது 42 டிரில்லியன் ரூபாய் (ஒரு டிரில்லியன் என்பது நூறாயிரம் கோடி) என்ற அளவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது.
 வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவோம் என நரேந்திர மோடி அரசு சூளுரைத்ததே, அந்த கருப்புப் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு புரிந்திடும்படி சொல்ல வேண்டும் எனில், இதனை 678 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட வேண்டும்.
42 என்கிற எண்ணுக்குப் பிறகு வருகின்ற பன்னிரண்டு பூஜ்யங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் ஏழைகளுக்கு(?!) நிவாரணமாக 5,89,285.2 கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே, தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள லேசான சலுகையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில், கார்ப்பரேட்களுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் (சுமாராக 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகள் இவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளன.
 இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள 5.49 லட்சம் கோடி ரூபாய்களோடு சேர்த்து கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்பது 42.08 டிரில்லியன் ரூபாய்களாகும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் விருந்தாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள்.
140 சதவீதம் அதிகம்
2005-06ம் ஆண்டிலிருந்துதான் தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் பட்டியலை அரசு வெளியிடத் துவங்கியது. எனவேதான் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட தொகை என சொல்கிறோம்.
 உண்மையில் சொல்லப் போனால், இன்னும் கூடுதலான காலத்திற்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அப்படியானால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கூட்டினால் மொத்தத் தொகை எவ்வளவாக இருக்கும்?
 நிச்சயம் அது ஒரு மிகப் பெரியதொரு தொகையாக இருந்திடும்.
கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட ஆரம்பித்த பின்னர் உள்ள தொகைகளை கூட்டினால் அது 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இந்த அளவிற்கு இதற்கு முன்எப்போதும் அளிக்கப்பட்டதில்லை.
இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகை என்பது, இத்தகைய புள்ளிவிவரம் நமக்கு கிடைக்கத் துவங்கிய ஆண்டான 2005-06ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சலுகையின் அளவை விட கிட்டத்தட்ட 140 சதவீதம் அதிகம் ஆகும்.
மோடியின் புதிய பாணி
இந்த ஆண்டு சலுகைகள் என்பது புதிய பாணியில் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
 2013-14ம் நிதியாண்டு வரை இது கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் மிக முக்கியமானதொரு செலவினமாக சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் `ஊக்கத்தொகை’ என இதற்கு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
ஆம்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையே ஆகும். அரசிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட ஒன்றல்ல. பாஜக அரசின் கீழ், `வீண் செலவாகிய’ மானியங்கள் அளிப்பது என்ற பழைய நடைமுறை மீண்டும் இடம் பெறாது என “நம்புவதாக” சென்ற ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.
மேலும், நிலவுகின்ற காலச்சூழலைப் பொறுத்து அது அமைந்திடும் என்றும் குறிப்பிட்டார். எனவே, தற்போது அத்தகையதொரு காலச்சூழல் அவரைப் பொறுத்தவரை கனிந்துவிட்டது.
முந்தைய ஐமுகூ அரசின் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீதான வரி என்பது 57,793 கோடி ரூபாய்களாகும். மோடி அரசின் முதலாவது ஆண்டில், அது 62,399 கோடி ரூபாய்களாக ஆனது.
அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு இத்தொகையின் அளவு இன்னமும் கூடுதலான ஒன்றாகவே இருந்திடும்.
ஏனெனில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது இடைக்கால தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும்171 கோடி ரூபாய் சலுகை
மதிப்பீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகையை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-15 நிதியாண்டின் ஒவ்வொரு நாளிலும் 171 கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 கோடிக்கும் கூடுதலான ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையோடு, தள்ளுபடி செய்யப்பட்ட கலால் வரித் தொகையான 1.84 லட்சம் கோடி ரூபாய்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரியான 3.01 லட்சம் கோடி ரூபாய்களையும் சேர்த்து கணக்குப் போட்டால், மொத்தமாக இவர்களுக்கு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்திட இயலும்.
 அது மட்டும்  ரகசியம்.
இந்திய நாட்டு வங்கிகளின் வாராக் கடனாக உள்ள பல லட்சம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய சலுகைகளை அனு பவித்தவர்களிடமிருந்து வரவேண்டிய ஒன்றாகும்.
ஆனால், ரகசியக் காப்பு சட்டத்தின்படி இவர்களது பெயர்களை வெளியிட இயலாது.இதற்கு முன்எப்போதும் இருந்திராத அளவு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதலானதொரு தொகையை அருண் ஜெட்லி ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
உண்மையில், வரிகள் வாயிலாக அரசிற்கு கிடைத்திடும் வருமானம் என்பது உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்தால்... இன்னமும் கூடுதலாக 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்றே ஜெட்லி குறிப்பிட்டார். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அதனையடுத்து மற்றொன்று நிகழும் என்று சொல்லும்போது அது அவ்வாறு நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34,699 கோடி ரூபாய்கள் என்பது உண்மையில் குறைவான தொகையே அன்றி கூடுதலான தொகையல்ல.
 ஏற்கனவே, மத்திய அரசு இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய்களை மாநில அரசுகளுக்கு அளித்திடாமல் பாக்கி வைத்துள்ளது.
எனவே, பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு ஒதுக்கப்படுகிற புதிய தொகை என்பது 30,000 கோடி ரூபாய்களை விட குறைவான ஒன்றாகவே இருந்திடும்.
 எது எவ்வாறு இருந்தாலும் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படுகிற தொகை பணவீக்கம் மிக அதிகமாக இருந்த மூன்றாண்டுகளில் இருந்த அளவே இருந்திடும். அதாவது சுமார் 33000 கோடி ரூபாய்களாகவே இருந்திடும். ஆனால், இது குறித்து ஜெட்லி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது.
இதற்கான துவக்கப்புள்ளி ப.சிதம்பரம் காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது.
121 ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம்!
கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு தற்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவின்படி பார்த்தால், முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கப்படுகிற 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வருகின்ற 121 ஆண்டுகளுக்கு அதனை செயல்படுத்திடலாம்.
ஆனால், நாடாளுமன்றத்தின் அவையிலே இத்திட்டத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும் வரை, இதனை நாம் செய்திட மாட்டோம்.
34 ஆண்டுகளுக்குமானியம் தரலாம்!
தற்போது உணவு மானியத்திற்கு அளிக்கப்படும் தொகையின் அளவீட்டின்படி, இந்த 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வரும் 34 ஆண்டுகளுக்கு இந்த மானியத்தை மக்களுக்கு தொடர்ந்து அளித்திடலாம். “குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதியில் 22 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”,
 “குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”
என குழந்தைகளின் உரிமைகளுக்கான மையம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதிகள் வெட்டிச் சுருக்கப்பட்டதை மாற்றியமைத்திடலாம்.
குழந்தையா? தங்கமா?
ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வருமானம் குறித்த பட்டியலைப் பார்த்தால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
 இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரித் தொகை என்பது 2014-15ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 10 சதவீதமாகும். 2005-06 முதலான பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி என்பது 4.3 டிரில்லியன் ரூபாய்களாகும்.
குழந்தைகளின் மேம்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்கத்தை அதிகரித்திடும் நடவடிக்கையே இது.
சலுகையாக அளிக்கப்படுகிற இந்த 42 டிரில்லியன் ரூபாய்கள் எல்லோருக்குமானது. இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்கிறது என இத்தகைய “ஊக்கத் தொகைக்கு” வக்காலத்து வாங்குகிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய சலுகையின் பெரும்பகுதி செல்வச் சீமான்களையே சென்றடைகிறது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஏழையின் வரிப்  பணம்
இவ்வாறாக செல்வந்தர்களுக்கு வாரி இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திடவில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனாக நிலுவையில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய செல்வந்தர்களால் திருப்பிச் செலுத்தப்படாதவை ஆகும்.
ஆனால், ரகசியக் காப்பு என்ற பெயரில் இவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. கார்ப்பரேட் ஊடகமும் இவர்களது பெயரை வெளியிடாமல் இருப்பதில் ஆனந்தம் அடைகிறது.
தங்களிடம் உள்ள சிறு சிறு தங்க நகைகளை அடமானம் வைத்து அதனை திருப்ப முடியாமல் போகிற சாதாரண மக்களின் நகைகள் ஏலம் விடப்படுவது குறித்த விளம்பரங்களையும், சிறு தொகையை பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த விளம்பரங்களையும் ஊடகத்தில் நாம் பார்க்கிறோம்.
 இதுதான் இவர்களது நியாயமும் தர்மமும் ஆகும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நூற்றுக் கணக்கான செல்வந்தர்களின் பட்டியலை கடந்த ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டபோது கார்ப்பரேட் ஊடகம் கனத்த மௌனத்தையே சாதித்தது.
இதற்கு மேலும் இதனை மூடி மறைத்திட முடியாது என்ற நிலை தோன்றுகின்ற வரை இந்த மௌனம் நீடிப்பதனை பார்க்க முடிகிறது.இதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, மிக மலிவானதொரு விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றப்பட்டுள்ளன.
ஏழை மக்கள் தரும் வரிப்பணத்தில் வரி 
ஏ ய்ப்பையே தொழிலாகக் கொண்டுள்ள கார்ப்ரெட்கள்,பெரும் செல்வந்தர்களுக்கு இவற்றையெல்லாம் வாரி இறைக்கிறவர்கள்தான் ஏழை மக்களுக்கு  மானியம் வழங்க்கள் என்பது சாத்தியமல்ல என சொல்கிறார்கள். ..                                                                                                                                             -பி.சாய்நாத்                                                                                        
 மூத்த பத்திரிகையாளர்
                                                                                                                                       தமிழில் : எம்.கிரிஜா
=============================================================================================================
இன்றைய முகனூல் வாரல் .
 
============================================================================================================= 
இன்று.
மார்ச்-29,
 • தாய்வான் இளைஞர் தினம்
 • அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது(2004)
 • பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
 • யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
==========================================================================
சனி, 28 மார்ச், 2015

ஆகா ,,,,, வந்திருச்சு....,,,,!இப்போதெல்லாம் கோடைக்காலம் என்றால் தமிழ் நாட்டு மக்கள் பயப்படுவதெல்லாம் கோடை வெப்பத்  தாக்குதலை / கடுமையாகத்தாக்கும் மின்தடையை எதிர்பார்த்துதான்.
கோடை வெப்பத்தை ஒரளவுக்கு தாங்க  தரும்,மின்விசிறி,ஏ.சி, குளிர்சாதன பெட்டிகளை இயக்க மின்சாரம் இல்லாமல் கோடையை மேலும் தாங்கக் முடியாததாக்கி விடும் என்ற பயம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகள் வரை வந்துள்ளது.
வழக்கமாக கோடைக்காலம் வந்து விட்டாலே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தலைதூக்கும்.
மின்வாரியத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் கடந்த 2008ம் ஆண்டு முதல் மின்தடை அமல்படுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு சுழற்சி முறையில் மின்விநியோகம் செய்யப்பட்டது. அதாவது சென்னையில் இரண்டு மணி நேரமும் இதர மாவட்டங்களில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மின் வெட்டை தவிர்க்க பல மின் திட்டங்களும் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2011 ல் மூன்று மாதங்களில் மின் வெட்டை காணாமல் போக்குவதாக கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
தொழிற்சாலைகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 90 சதவிகிதமும், மற்ற நேரங்களில் 40 சதவிகிதமும் மின்தடை செய்யப்பட்டது. இதன்காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புழுக்கத்தில் மக்கள் அல்லல்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாகியும் இன்னமும் ஜெயலலிதா கூறிய அந்த மூன்று மாதங்கள் போகவில்லை.
ஏற்கனவே கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப் பட்ட மின் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்குப் பதில் கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் என்ற காழ்ப் புணர்ச்சியில் அனைத்து திட்டங்களும் ஓரங்கட்டப் பட் டன.

மின் தட்டுப்பாடு அதிகரிக்கப் பட்டது.தொழிற்சாலைகள் மடங்கின.பலர் வேலை இழந்தனர்.மின்சாரமும் இல்லாமல்,வேலையும் இல்லாமல் தமிழ் நாடே இருளில் மூழ்கியது.இதை சமாளிக்க பல மடங்கு அதிகமாக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
இதோ மீண்டும் வெயிற்காலம் .

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்று உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 12,170 மெகா வாட். மின் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது கிடைத்து வரும் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்து, பாய்லர் டியூப் பஞ்சர் உள்ளிட்ட காரணங்களால் 2 ஆயிரம் மெகாவாட் வரை குறைவது வழக்கமாக இருக்கிறது.
ஒப்பந்தப்புள்ளி வரை சென்ற உடன் குடி திட்டம் மறை முகமான காரணங்களால் ஊத்தி மூடப்பட்டது.
அதற்கு வெளியெ மின்சாரம் வாங்குவதினால் ஏற்படும் பயன் [?] கிடைக்காது என்பது தான் உண்மையான காரணம் என கூறப்படுகிற து.
மின் பற்றாக்குறையால் இந்த ஆண்டும் கோடைக்காலத்தில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், ஆட்சியாளர்களும், மின்வாரிய அதிகாரிகளும் மின் தேவையை சமாளிக்க பல் வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களிலிருந்து தனியார் மூலம் 3,330 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதனால் த்மிழ் நாட்டுக்கு மட்டுமின்றி ஆள்வோருக்கும் நல்ல வெளிச்சம் கிடைக்குமாம்.
தற்போது 780 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின் தடை அவ்வளவாக ஏற்படாது என்றுமின்வாரிய வட்டாரங்கள் நம்புகின்றன.

இதற்கிடையில் தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்த விவாதத்துக்கு முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசும்போது, '2011-ம் ஆண்டு அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். இதன்காரணமாக மின்பற்றாக்குறை குறைக்கப்பட்டு மின்தேவை முழுவதையும் பூர்த்தி செய்யும் நிலையை எட்டிக் கொண்டு இருக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்.

இதைத்தானே ஜெயலலிதாவும் ,நத்தம் விசுவநாதனும் ஆட்சியில் அமர்ந்தது முதல் பல வார்த்தைகளில் சொல்லி வந்துள்ளார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்றப்பகுதிகளில் அறிவிக்கப்படாமல் 2 மணி நேரம் மின்தடை செய்ய தொடங்கிவிட்டது மின்வாரியம்.
இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் மழுப்பலான பதில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின் தடை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்ப வேறு வழியின்றி மக்க ளும் வாழப் பழகிக் கொண்டார்கள்.

கடந்த ஒருவாரம் காலமாகஅடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளரிடம் கேட்டால், மின்தடைக்கு பதில் சொல்லாமல் மீன் விலை ஏறி  விட்டதாக கேட்டது போல்   வேறு ஏதோ தகவலை சொல்லி வருகிறார்கள்..

மின்கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மின் உற்பத்தியையும் அதிகரிப்பதும் தங்கள் வேலைதான் என்பதை மின்வாரியம் உணருமா?அதற்கு மின் உற்பத்தி நிலையங்களைத் துவக்காமல் துவக்கப்பட்ட திட்டங்களையும் மூடி வரும் இவர்கள் ஆட்சி முறை சரிவருமா?இன்னமும் மிச்ச காலத்தையும் வெளியெ மின்சாரம் வாங்கியே சமாளித்து விடலாம்.அதன் பின் வரும் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் .என்ற அளவுக்கு அதிக நம்பிக்கைதான் இவர்களுக்கு.
வெளியெ மின் சாரத்தை  அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் பணத்தில் கிடைக்கும் "பலனை" வைத்து வாக்குக்கு 1000 கொடுத்தால் வாயை மூடி வாக்களிக்கும் தமிழக கைப்புள்ள மக்களைப் பற்றியும் இவர்களுக்கு அளவுக்கு அதிக நம்பிக்கைதான் .
இந்த அளவு நம்பிக்கையில் பாதியாவது " இந்த கோடையும் கடந்து போகும்" என்று நம க்கு  இருக்க வேண்டும்.
"வேறு வழி?"

==========================================================================

                                                                                                                                  

===============================================================================================

ஆண்டராய்ட் அலை பேசி. அனுபவியுங்கள்.!.நீங்கள் இப்போது வாங்கிப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் வசதியுள்ள ஸ்மார்ட் போனை எப்படி பயன்  வேண்டும் என்ற அடிப்படை தகவல்களை நாம் பார்க்கலாம்.
உங்கள் அலை பேசியை தயாரித்துள்ள நிறுவனங்கள்  அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம்.
இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும்.
எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்பட்த் தேவை இல்லை.

 உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம்.
 இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது.
 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர்
. நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன.
 உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா?
அதனைத் தொடுங்கள்.
உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம்.
முகவரிகள் பட்டியல் கிடைக்கும்.
உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம்.
 பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.
குறுஞ்செய்திகள் :
உங்கள் போனைப் பொறுத்து இது Messages அல்லது Messaging என அழைக்கப்படும்.
 நவீன போன்களில், Hangouts அப்ளிகேஷனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் கையாளலாம்.
 மெசேஜிங் ஐகான அழுத்திக் கிடைக்கும் திரையில், ஒரு + ஐகான் கிடைக்கும். இதனை அழுத்தினால், புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ் ஒன்றை அனுப்ப அதனைப் பெறுபவர் (recipient) குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.

தொடர்புகள்  (contacts):
நம் டெக்ஸ்ட் மெசேஜைப் பெறுபவர் எண் நம் முகவரிப் பட்டியலில் இருக்கும். இவற்றிலிருந்து டெக்ஸ்ட் பெறுபவரின் எண்ணைத் தேர்ந்தெடுத்தால், அது தானாக அமைக்கப்படும். அல்லது புதிய எண்ணையும் டைப் செய்து அமைக்கலாம்.
ஏற்கனவே உள்ளவருக்கு அனுப்ப வேண்டும் எனில், முகவரிகள் பக்கத்தில் கிடைக்கும் தேடல் கட்டத்தில், விரலை அழுத்த, கர்சர் ஒன்றும், கீழாக டைப் செய்திட, ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் ஒன்றும் கிடைக்கும்.
இந்த கீ போர்டில் எழுத்துக்களை ஒவ்வொன்றாக அமைக்கும் போதே, அந்த எழுத்துக்குரியவர்களின் பெயர்ப் பட்டியல் காட்டப்படும். முழுமையாக அமைக்கும் முன்னரே, முகவரி பட்டியலில் உள்ள, டெக்ஸ்ட் பெறுபவரின் பெயர் காட்டப்படும்.
அதனை ஏற்கும் வகையில், கீ போர்டில் எண்டர் அழுத்தினால், அவருக்கான எண் இடம் பெறும். ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்பவும் இதில் வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஹோம் ஸ்கிரீன்:
 போன் இயக்கத்திற்கு வரும்போது நமக்குக் கிடைக்கும் ஸ்கிரீன் இது. இதனை நாம் செட் அப் செய்திட வேண்டும். நமக்கு அப்ளிகேஷன்கள் (apps) தான் முக்கியம் என்பதால், நம் போனில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 இதற்கு “all apps” என்ற ஐகானை அழுத்தலாம். அழுத்தியவுடன் கிடைக்கும் திரையை ஹோம் ஸ்கிரீன் ஆக வைத்துக் கொள்ளலாம். இதனை app drawer எனவும் அழைக்கின்றனர்.
 அப்ளிகேஷன் ஒன்றை இந்தத் திரையில் அமைத்திட வேண்டும் என்றால், அதன் ஐகானில் விரல் வைத்து, அழுத்தியவாறே இழுத்துத் திரையில் விட்டுவிடலாம்.
 இப்படியே எத்தனை ஹோம் ஸ்கிரீன்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஹோம் ஸ்கிரீனில் உள்ள அப்ளிகேஷன் ஐகான், அந்த அப்ளிகேஷனுக்கான ஷார்ட் கட் தான். ஏதேனும் ஒரு ஹோம் ஸ்கிரீனை நீக்க வேண்டும் எனில், அதில் உள்ள ஐகான்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அந்த ஸ்கிரீனும் மறைந்துவிடும்.
அப்ளிகேஷன்கள் ஐகான்களை நீக்க, அவற்றின் மீது விரலை வைத்து X என்னும் அடையாளம் கொண்ட இடத்தை நோக்கி இழுத்துவிட வேண்டும்.
இதனால், அப்ளிகேஷன் உங்கள் போனில் இருந்து நீக்கப்படாது. ஷார்ட் கட் மட்டுமே மறையும்.
விட்ஜெட்ஸ் (Widgets): 
அப்ளிகேஷன்களுக்கான ஷார்ட்கட் ஐகான்கள் மட்டுமின்றி, விட்ஜெட்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
 இதனை interactive tool என்றும் கூறலாம். ஒரு விட்ஜெட், அப்ளிகேஷன் அல்லது சேவை ஒன்றின் குறிப்பிட்ட அளவினைப் பெற்றுப் பயன்படுத்த உதவுகிறது.
 நாம் ஹோம் ஸ்கிரீனை விட்டு விலகாமலேயே சேவையைப் பெறலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இவை நமக்கு நம் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. எடுத்துக் காட்டாக, சீதோஷ்ண நிலையைக் காட்டும் அப்ளிகேஷன் ஒன்றில், அதனை அறிய முழுமையாக அதனை இயக்காமல், குறிப்பிட்ட முக்கிய இடத்தின் சீதோஷ்ண நிலையை மட்டும் அறியலாம்.
 பங்கு விலை தகவல், காலண்டரில் குறித்து வைத்திருக்கும் வர இருக்கும் நிகழ்வுகள், அண்மையில் வந்த மின் அஞ்சல்கள் போன்றவை விட்ஜெட்களுக்கான எடுத்துக் காட்டுகள். அப்ளிகேஷன் ஷார்ட்கட்களை இணைப்பது போல, விட்ஜெட்டுகளையும் தேர்ந்தெடுத்து, இழுத்து, திரையில் நாம் விரும்பும் இடத்தில் அமைக்கலாம்.

வை பி, மொபைல் டேடா மற்றும் பிற (Wi-Fi, Mobile Data, And More):
 பழைய மொபைல் போன்களில், நமக்கு அளிக்கப்படும் தொடர்பு குறித்து நாம் எதுவும் செய்திட முடியாது.
நமக்கு சிக்னல் கிடைக்காத போது, நாம் உள்ள இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று முயற்சிக்கலாம்.
ஆனால், அதுவும் உறுதியாக சிக்னலைத் தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போது பழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை, அதனை இணைக்கும் தொழில் நுட்பம் குறித்து பல சொல்லாடல்களைச் சந்திக்கிறோம்.
 வை பி, 3ஜி, புளுடூத் மற்றும் எல்.டி.டி. (Wi-Fi, 3G, Bluetooth, and LTE) எனப் பல சொற்கள் நமக்குப் பழக்கமாகின்றன. இவை என்ன?
இவை என்ன மாதிரியான இணைப்பினை நமக்குத் தருகின்றன?
வை பி:
இது வயர் எதுவுமின்றி நமக்கு, நாம் இருக்கும் இடத்திற்குள்ளாகவே (local area connection) கிடைக்கும் இணைப்பு. எந்த வயர் இணைப்பும் இன்றி, இணையத் தொடர்பினை இது நமக்குத் தரக்கூடியது. பொதுமக்கள் கூடும் இடங்களான விடுதிகள், வணிக வளாகங்கள், விமான, ரயில் நிலையங்களில், “இங்கு வை பி இணைப்பு இலவசமாய்க் கிடைக்கும்” என்றோ, “இந்த வளாகம் வை பி இணைப்பில் உள்ளது” என்றோ அறிவிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வீட்டிலும் சரி, பொதுவான பெரிய இடங்களிலும் சரி, இந்த இணைப்பினைத் தர, இணைய இணைப்பும் அதன் சிக்னல்களை பரப்பிட, வயர்லெஸ் ரெளட்டரும் இருந்தால் போதும். நம் ஸ்மார்ட் போனை, வீட்டில் உள்ள வை பி இணைப்பில் எந்தவித பயமும் இன்றிப் பயன்படுத்தலாம். ஆனால், பொது இடங்களில், சற்று கவனத்துடனேதான் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், உங்கள் பயன்பாட்டினை, அதே இணைப்பினைப் பயன்படுத்தும் மற்றவர்களும் தெரிந்து கொள்ள முடியும். எனவே, வங்கிக் கணக்கு போன்ற உங்கள் தனி நபர் தகவல்களை அத்தகைய இணைப்புகளில் பயன்படுத்தவே கூடாது.
பொதுவாக, இத்தகைய வை பி இணைப்புகளில் கிடைக்கும் சிக்னல்கள், ரெளட்டர் அருகே மிகவும் சிறப்பாகவும், அதைவிட்டு விலகும் தூரங்களில் சற்று குறைவான திறனுடனும் கிடைக்கும்.
மொபைல் டேடா அல்லது டேடா (Mobile Data or Data)
 நம் ஸ்மார்ட் போனிற்கு சேவை செய்திடும் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்பினை இது குறிக்கிறது. அந்நிறுவனம் தரும் இணைய இணைப்பிற்கான சிக்னல், சிறப்பாகக் கிடைக்கும் இடங்களில் இதனை நன்கு பயன்படுத்தலாம். இந்த நெட்வொர்க் இணைப்பு 3ஜி, 4ஜி அல்லது எல்.டி.இ. ஆக இருக்கலாம். 3ஜி, 4ஜி நமக்கு தெரிந்தவை தான். எல்.டி.இ. (Long Term Evolution) என்பது இப்போது வந்திருக்கும் அதிவேக நெட்வொர்க் இணைப்பாகும். குறிப்பாக போன் போன்ற மொபைல் சாதனங்களுக்கான தொழில் நுட்பமாகும்.

ஜி.பி.எஸ்.:
 இந்தவசதி,உங்கள் மொபைல் போனை, இவ்வுலகில் அதன் இடத்தினைத் துல்லியமாகக் காட்டும்.இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. வை பி அல்லது மொபைல் டேட்டாவும் தேவை இல்லை. எனவே, எந்த இடத்திலும் இதனைப் பயன்படுத்தலாம்.
புளு டூத் 
 குறுகிய தூரத்தில் சாதனங்களுக்கிடையே, வயர்கள் இல்லாமல் இணைப்பினை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடியது. இதன் மூலம் ஆடியோ சிக்னல்களை, வீடியோ மற்றும் பிற பைல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதற்கு இணைய இணைப்போ, மொபைல் டேட்டாவோ தேவை இல்லை. இப்போது கார்களில் அமைக்கப்பட்டுள்ள ஆடியோ சாதனங்களுடன், புளுடூத் மூலம் நம் மொபைல் போன்களை இணைத்து போன் இல்லாமல் பேசலாம்.
எர்பிளென் மோட் 
 இந்த நிலைக்கு போனைக் கொண்டு சென்றால், நமக்கு அழைப்புகள் வசதி துண்டிக்கப்படும். இணைய இணைப்பு கிடைக்காது. ஆனால், போனில் விளையாட்டுக்களை விளையாடலாம். இசையைக் கேட்கலாம். விமானப் பயணத்தின் போது கூட இதனைப் பயன்படுத்தலாம்.
இனி ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன நெட்வொர்க் வசதிகளைப் பயன்படுத்தாத போது, அவற்றை பயன்படுத்தா நிலையில் (off) வைத்திட வேண்டும். ஏனென்றால், அவை இயக்கத்தில் இருக்கும்போது, பேட்டரியின் சக்தியை எடுத்துக் கொண்டே இருக்கும். புளுடூத் கூட, பயன்படுத்தாத போது, அணைக்கப்பட வேண்டும். இது மிக எளிது. அந்த ஐகானை ஒருமுறை தொட்டால் இயங்கும்; இன்னொரு முறை தொட்டால் இயக்கம் முடக்கப்படும். இது வை பி இணைப்பிற்கும் பொருந்தும்.
மற்ற வசதிகள் நீங்கள் ஏற்கனவே சாதாரண மொபைல் போனில் பயன்படுத்தியவை தான். மேலே தரப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் புரியவில்லை என்றால், இணையத்தை நாடவும். நிறைய குறிப்புகள் கிடைக்கும்.
                                                                                                                               -நன்றி:தினமலர்.
 


                                                                                                                        r.p.கார்த்திக் G+ல்.

==========================================================================
================================================

இன்று,
மார்ச்-28.
 • சிலோவேக்கியா, செக் குடியரசு ஆசிரியர் தினம்
 • வேதாத்திரி மகரிஷி இறந்த தினம் (2006)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்யமூர்த்தி இறந்த தினம்(1943)
 • கான்ஸ்டன்னீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன(1930)


வெள்ளி, 27 மார்ச், 2015

பழமா?-சாறா? எது நல்லது ?பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது.
இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது.
இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள். பழச்சாற்றில் அதிக சத்துக்கள் உள்ளதில் எள்ளளவும் ஐயமில்லை தான். ஆனால், பழமாக உண்பது  ?
 பழச்சாறாக உண்பது?
 எது அதிக பலன் தரும்?என்பதில் தான் குழப்பமே.
இதில் எது சிறந்தது என்று பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மோசமானதாக அமையும் என்று பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 பழச்சாற்றில் அதிக சர்க்கரை இருப்பதால், மேசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கிளாஸ்கொவ் பல்கலைக்கழக இரத்த குழாய் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசியரியர் நவீத் சாத்தார், மருத்துவர் ஜாசன் கில் ஆகியோர் லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் இதழில் இந்த புதிய ஆய்வுப் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளனர்.
 பழச்சாறுகளிலுள்ள ஊட்டசத்து்ககளை தெளிவாக அச்சிட்டு புட்டிகளின் மேல் ஒட்டுவதோடு, ஒரு நாளைக்கு 150 மில்லிக்கு அதிகமாக பழச்சாறு குடிப்பதை தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பழச்சாறு உடலுககு மிகவும் நல்லது என்று எண்ணி பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது மிக மேசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பழச்சாறு அதிக செறிவுடைய ஆற்றலையும், சர்க்கரையையும் உள்ளடக்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக கூறினால், 250 மில்லி ஆப்பிள் பழச்சாற்றில் நூற்றி பத்து கிலோ கலோரிகளும், 26 கிராம் சர்க்கரையையும் உள்ளன.
 எனவே, அதிக சர்க்கரை அளவு நீரிழிவுக்கு வழிகோலும்.

பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது. இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது.
 இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள்.
ஒரு குவளை பழச்சாறு, ஒரு பழத்துண்டைவிட அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. பழத்தை நேரிடையாக உண்டும்போது கிடைக்கக்கூடிய நார்சத்து அதனை பழச்சாறாக குடிக்கும்போது கிடைப்பதில்லை. பழச்சாறுகளில் விட்மின்களும், தாதுப் பொருட்களும் உள்ளன.
 ஆனால், பிற இனிப்பான சாறுகளில் சர்க்கரையை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.
இதனை உறுதிச் செய்ய புதிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பொருட்கள் அதிகமாக இருந்த பிறகும், அரை லிட்டர் திராட்சை பழச்சாறை மூன்று மாதங்கள் நாள்தோறும் அருந்தி வந்தவர்களிடம் இன்சுலின் தடுப்பு மற்றும் இடை தசை அதிகரிப்பு காணப்பட்டதை புதிதாக நடத்திய ஆய்வில் அறியவந்துள்ளனர்.
பழச்சாறு போடும்போது பழத்திலுள்ள சர்க்கரையை தவிர, சுவையாக இருக்க நாம் சேர்க்கின்ற சர்க்கரையும் சேர்ந்து மிகவும் அதிகமாகி விடுகிறது.
அதிக சர்க்கரை அளவு உடல்நலத்தில் சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
சிறிய குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்க பழகிவிட்டால், பிறகு பழங்களை கடித்து சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை.
 எனவே, பல் முளைத்தவுடன், குழந்தைகளுக்கு பழங்களை சிறிதாக அரிந்து கடித்து உண்ண வைப்பதே மிகவும் நல்லது.

==========================================================================
தண்ணீர் குடிப்பது எப்படி?
ஒரு மனிதனின் உடல் எடையில், 3 இல் இரண்டு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கிறது.
 கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும், ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும்.
ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது.
 அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது.
இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும், ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம். எனவே, தேவையான அளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில், தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு, உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறு நீரகங்களில் கற்கள் உருவாவதற்கும், உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
 அதிக அளவில் அருந்துவதால், எந்த பிரச்சினையும் இல்லை.
சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும்.
எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
தண்ணீர்
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது, உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய் வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.
தண்ணீரைத் தலை அண்ணாந்துச் சாப்பிடுவது, காது நோய்களுக்கு வழி வகுக்கும். நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.எனவே நாம் தண்ணீர் அண்ணாந்து குடிக்கையில் உடன் செல்லும் காற்று காது ,மூக்கு,வழியே வெளியேற முயற்சிக்கையில் காத்து வலி,மூக்கடைப்பு போன்ற கோளாறுகள் உர்ண்டாக வாய்ப்புள்ளது.
எனவே, ஒருபோதும் தண்ணீரை அண்ணாந்துக் குடிக்க வேண்டாம்.
==========================================================================
இன்று.
மார்ச்-27.
 • சர்வதேசநாடகத்  தினம்
 • மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
 • ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
 • டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது(1794)
==========================================================================
கறி மசாலா வாழைப் பழச் சிற்றுண்டி
பெரிய வாழைப் பழங்கள் மூன்று எடுங்கள்.
மஞ்சள், கறி மசாலா தலா  ஒரு கரண்டி.
 கறுப்பு மிளகு சிறியளவு,
 தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி ஆகியவை தேவை .
.
.வாழைப் பழத்தின் தோலை உரித்து இரண்டு சென்டி  மீட்டர் அளவு  துண்டுதுண்டாக வெட்டுங்கள்.
.தொடர்ந்து, 3 துண்டுகளை குச்சியால் இணையுங்கள்.
அந்த குச்சியால் இணைக்கப்பட்ட வாழைப் பழத் துண்டுகளை தனித்தனியாக தட்டில் வையுங்கள்.

அப்புறம், மஞ்சள், கறி மசாலா மற்றும் தேங்காய் எண்ணெய்யை சாறாக கலந்து வாழைப் பழத் துண்டுகளின் மேல்இரண்டு பக்கங்களிலும் மெதுவாக பூசுங்கள்.

 அடிப்பகுதி சற்று அகலமாக இருக்கும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.
தேங்காய் எண்ணெய் வாணலியில் ஊற்றி காய்ந்ததும்   வாழைப் பழத் துண்டு  சொருகிய குச்சிகளை வையுங்கள்..
.இரண்டு பக்கங்களையும்  தனித்தனியாக 3 நிமிடம் பொறிக்க வேண்டும்.
வாழைப் பழத் துண்டுகள் பொன் நிறமாக பொறிக்கப்பட்ட பின் வெளியே எடுத்து தட்டில் வைத்து ,வாழைப்பழத் துண்டுகளில் தூளாக்கிய கறுப்பு மிளகை  தூவுங்கள்.
இப்போது இனிப்பு மணம் வீசுகின்ற வாழைப் பழத் துண்டு சிற்றுண்டி தயார்.
சாப்பிடுவதற்கு இனிப்பு மற்றும் கொஞ்சம் காரமான சுவையாக இருக்கும் .
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.எளிதாக செரிமானமாகும் சத்து மிக்க சிற்றுண்டி .
                                                                                                  நன்றி; -சீன உணவரங்கம்

=========================================================================
ராட்சத விண்கல்.
சுமார் ஆயிரம் மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை [28-03-2015]பூமிக்கு மிக அருகாக  கடக்க உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த விண்கல் மணிக்கு 23,000 கிமீ வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 இந்தக் கல் பூமியின் 28 லட்சம் மைல்களைக் கடந்து பயணிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிறியதும் பெரியதுமான விண் கற்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வாடிக்கையாக நிகழ்வதுதான் என்றாலும், இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு.
 23,000கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் இந்தியா அளவுக்குள்ள நாட்டையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு அதன்  மோதல்  இருக்கும். 
இந்த மோதலினால் நாடு அழிவதுடன் உலகில் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
அப்படி ஒன்றும் நேராமல் அந்த விண்கல் தனது பாதையில் போகட்டும்.
==========================================================================
=