ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

காவல்துறை -மின் துறை மின்சாரம் இல்லாதது மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது .வடிவேலு கிணறு காணவில்லை கதையாகிவிட்டது.
மிசாரம் அதிக உற்பத்திக்கு வழி இருந்தும் அது கருணாநிதி போட்ட திட்டங்கள் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் ,அதிக விலைக்கு மின்சாரத்தை வெளியில் இருந்தும் வாங்காமல் ,மத்திய அரசிடம் அதிகம் மின்சாரம் கேட்டு வாங்காமல்  இருக்க பிடிவாத குணம் படைத்த ஜெயலலிதா வாழ் மட்டுமே இருக்க முடியும்.

மக்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை.அவர்களுக்கு மறதி அதிகம்.அது போக இரட்டை இலை ,எம்ஜிஆர் இருந்தால் போதும் என்றும் எண்ணுகிறார்.
இதே மக்கள்தான் முன்பு 40க்கு 0 வை முன்பு தந்தார்கள் என்பதை மறந்து விட்டார்.
அப்போது இரட்டை இலையும்,எம்ஜிஆரு ம் கைகொடுக்கவில்லை என்பதை ஜெ நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்குள் பிரதமர் கனவில் மிதப்பது தவறு.
உண்டான முதல்வரை தக்கவைக்கப் பாருங்கள் .
இனி இன்றைய கதைக்கு வருவோம் :
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், கஞ்சித்தொட்டி திறப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. 
  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் , நம்பியூர் மக்கள் ஒருபடி மேலே போய்  காணாமல் போன மின்சாரத்தை கண்டுபிடித்து தருமாறு, கோபி டி.எஸ்.பி.,யிடம், மனு அளித்துள்ளனர்.


மனுவில் நம்பியூர் மக்கள் கூறிஇருப்பதாவது: 
"நம்பியூர், அம்பேத்கர் நகர், வெள்ளாளபாளையம், ரங்கம்பாளையம், சூரியபாளையம், குப்பிபாளையம், கெடாரை உள்பட, 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சில வாரங்களாக, 14 மணி நேரம் மின்சாரத்தை காணவில்லை. இரவு நேரத்திலும் மின்சாரம் அடிக்கடி காணாமல் போவதால், எங்களை கொசுக்கள் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மின்சாரத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
நீங்களும் உங்கள் பகுதி காவல்துறையினரிடம் மனு கொடுத்து பாருங்களேன் .
இனி காவல்துறை -மின் துறையினர் பாடு என்று போயிடலாம்.
ஆனால் இன்னமும் நேரு தம்பி ராமஜெயம் கொலையில் ஒன்றையும் கண்டுபிடிக்காத காவல்துறையினர் மின்சாரத்தை மட்டும் கண்டு பிடித்துவிடுவார்களாக்கும் ?
_______________________________________________________________________________________________
சனி, 29 செப்டம்பர், 2012

விலகினாரா? விலக்கி வைக்கப்பட்டாரா?


  2011ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அக்டோபர் மாதம்  தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது.

 இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். 
இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியலில்  ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா‌வி‌ன் ந‌ம்‌பி‌க்கை‌க்கு பா‌த்‌திரமாக ‌விள‌ங்‌கி வ‌ந்தவ‌ர் ஜெய‌க்குமா‌ர். செ‌ன்னை ராயபுர‌ம் தொகு‌தி‌யி‌ல் இரு‌ந்து ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஜெய‌க்குமா‌ர்.
 அவராக சபாநாயகர் பதவியை விட்டு விலகினாரா?அல்லது விலக்கி வைக்கப்பட்டுள்ளாரா?என்பதும்  இப்போது தெரியவில்லை.
 கட‌ந்த 1991 முத‌ல் 1995 வரை அமை‌ச்சராக இரு‌ந்த ஜெய‌‌க்குமா‌ர், ‌மீ‌ன், பா‌ல்வள‌ம் ம‌ற்று‌ம் வன‌த்துறை அமை‌ச்சராக பத‌வி வ‌கி‌த்தா‌ர்.
பி‌ன்ன‌ர் 2001 முத‌ல் 2005 வரை‌யிலான அ.‌‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌‌யி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், ச‌ட்ட‌ம், ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்சராக இரு‌ந்தவ‌ர் ஜெய‌க்குமா‌ர். ‌பி‌ன்ன‌ர் 2011ஆ‌ம் ஆ‌ண்டு ‌மீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சியை ‌‌பிடித்தது அ‌.‌தி.மு.க.

‌‌
மீ‌ண்டு‌ம் அமை‌ச்சராவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ஜெய‌க்குமாரை சபாநாயகரா‌‌க்‌‌கினா‌ர் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா. இதனா‌ல் அவரது ஆதரவாள‌ர்க‌ள் ‌விர‌க்‌தி அடை‌ந்தன‌ர்.
 ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த கட‌ந்த ஜனவ‌ரி மாத‌த்துட‌ன் 6வது முறையாக அமை‌ச்சரவை ஜெயல‌லிதா மா‌ற்‌றினா‌ர்.
அ‌ப்போது, சபாநாயகராக இரு‌க்கு‌ம் ஜெய‌க்குமா‌ரு‌க்கு அமை‌ச்ச‌ர் பத‌வி வழ‌ங்க‌ப்படலா‌ம் எ‌ன்று அவரது ஆதரவாள‌ர்க‌ள் பல‌த்த எ‌தி‌ர்பா‌ர்‌ப்புட‌ன் இரு‌ந்தன‌ர். 
ஆனா‌ல், அ‌ப்போது‌ம் ஜெய‌க்குமாரு‌க்கு அமை‌ச்ச‌ர் பத‌வி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை. இது ஜெய‌க்குமாரு‌க்கு ம‌ட்டு‌மி‌ன்‌றி அவரது ஆதவாள‌ர்களு‌க்கு‌ம் அ‌‌தி‌ரு‌ப்‌‌தியை ஏ‌ற்படு‌த்‌தியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு செ‌ன்னை மாநகரா‌ட்‌சி கூ‌ட்ட‌ம் மேய‌ர் சைதை துரைசா‌மி தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்றது. 
அ‌ப்போது, சபாநாயக‌ர் ஜெய‌க்குமா‌ரி‌ன் ஆதரவாள‌ரான ச‌ந்தான‌ம், அ‌ண்ணா வளைவு தொட‌ர்பாக ‌பிர‌ச்சனை ஏ‌ற்படு‌த்‌தினா‌ர். இதனா‌ல் மேயரு‌க்கு‌ம், ஜெய‌க்குமா‌ரி‌ன் ஆதரவாள‌ர்களு‌க்கு‌ம் இடையே கரு‌த்து மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. 
இ‌ந்த மோதலு‌க்கு சபாநாயக‌ர் ஜெய‌க்குமா‌‌ர்தா‌ன் காரண‌ம் எ‌ன்று கூ‌றி மே‌லிட‌த்து‌க்கு புகா‌ர்க‌ள் செ‌ன்றது.
மேலு‌ம், வடசெ‌ன்னை‌யி‌ல் க‌ட்‌சி‌யி‌ன் ‌விழா எதுவாக இரு‌‌ந்தாலு‌ம் மேய‌ர் சைதை துரைசா‌மியை ஜெய‌க்குமா‌ர் ஆதரவாள‌ர்க‌ள் அழை‌ப்ப‌தி‌ல்லையாகு‌ம். இதுவு‌ம் மே‌லிட‌த்து‌க்கு புகாராக செ‌ன்று‌‌ள்ளது.
இது ஒரு புற‌ம் இரு‌க்க, ம‌‌ற்றொரு காரணமு‌ம் கூற‌ப்படு‌கிறது. க‌ட்‌சி ‌விழாவோ, ‌ம‌ற்ற ‌‌விழாவோ க‌ட்‌சி‌யின‌ர் ‌விம‌‌‌‌ர்‌சையாக கொ‌ண்டாட‌‌க் கூடாது எ‌ன்று‌ம் ‌‌தி.மு.க.‌வின‌ர் கட‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் ஆர‌ம்பரமாக ‌விழாவை கொ‌ண்டாடியதாலேயே ஆ‌ட்‌‌சியை இழ‌ந்தன‌ர் எ‌ன்று கூ‌றி தடபுட‌ல் ‌விழாவு‌க்கு ஜெயல‌லிதா தடை ‌வி‌தி‌த்தா‌ர்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கட‌ந்த 18ஆ‌ம் தே‌தி சபாநாயக‌ர் ஜெய‌க்குமா‌‌ரி‌ன் 58வது ‌பிற‌ந்தநா‌ளை அவரது தொகு‌தியான ராயபுர‌த்‌தி‌ல் ஆதரளாவள‌ர்க‌‌ள் தடபுடலாக கொ‌ண்டாடின‌ர். இது ஜெயல‌லிதாவு‌க்கு புகாராக செ‌ன்றது. 
இதையடு‌த்து வடசெ‌ன்னை மாவ‌ட்ட செயலாள‌ரை ஜெயல‌லிதா க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கினா‌ர். இவ‌ர் ஜெய‌க்குமா‌ரி‌ன் ‌தீ‌விர ஆதரவாள‌ர். மேலு‌ம் அவரது ஆதரவாள‌ர்க‌ள் 12 பேரை க‌ட்‌சி‌யி‌ன் அடி‌ப்படை உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து‌ம் ஜெய‌‌ல‌லிதா ‌நீ‌க்‌கினா‌ர். இவ‌ர்க‌ள் வடசெ‌ன்னை, ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ‌நி‌ர்வா‌கிக‌ள் ஆவ‌ர்.
ஜெயல‌லிதா தனது ‌விசுவாச‌த்தை ச‌ந்தேக‌ப்ப‌ட்டதா‌ல் ‌வி‌ர‌‌க்‌தியு‌ம், ஆ‌த்‌திரமு‌ம் அடை‌ந்த சபாநாயக‌ர் ஜெய‌க்குமா‌ர் தனது பத‌வியை இ‌ன்று ரா‌ஜினாமா செ‌ய்து‌ள்ளா‌ர். 
இது தொட‌ர்பான கடித‌த்தை ச‌ட்ட‌ப்பேரவை செயலாள‌ர் ஜமாலு‌தீனு‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து, சபாநாயக‌ர் ப‌ணிகளை துணை சபாநாயக‌ர் ப.தனபா‌ல் கவ‌னி‌ப்பா‌ர் ஜமாலு‌தீ‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை வரலா‌ற்‌றி‌ல் சபாநாயக‌ர் ஒருவ‌ர் த‌ன் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்வது பு‌திதாக இ‌ல்லையெ‌ன்றாலு‌ம், ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த ஒ‌ன்றரை ஆ‌‌ண்டி‌ல் சபாநாயக‌ர் ஒருவ‌ர் ரா‌ஜினாமா செ‌ய்வது இதுவே முத‌ன் முறையாகு‌ம். அதுவு‌ம் 1977 ‌ஆ‌‌ம் ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு இடை‌‌ப்ப‌ட்ட கால‌த்‌தி‌ல் சபாநாயக‌ர் ஒருவ‌ர் பத‌வி ‌விலகுவது இதுவே முத‌ன் முறையாகு‌ம்.

1967
ஆ‌ம் ஆ‌ண்டு அ‌ண்ணா முத‌ல்வராக இரு‌ந்தபோது சபாநாயகராக இரு‌ந்தவ‌ர் ‌சி.பா.ஆ‌தி‌த்தனா‌ர். ‌அ‌ண்ணா மறைவு‌க்கு பின்  கருணா‌நி‌தி மு‌த‌ல்வரானா‌ர். அ‌ப்போது, அமை‌ச்ச‌‌ர் பத‌வி‌க்காக ‌சி.பா.ஆ‌தி‌த்தனா‌ர் சபாநாயக‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தா‌ர்.
பி‌ன்‌ன‌ர், கருணா‌நிதி-எ‌ம்.‌ஜி.ஆரு‌க்கு‌ ஏ‌ற்ப‌ட்ட மோத‌ல் தொட‌ர்பாக ‌தி.மு.க.‌வி‌ல் இரு‌ந்து எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌பி‌ரி‌ந்து செ‌ன்று அ.‌தி.மு.க.வை ஆர‌ம்‌பி‌த்தா‌ர். அ‌ப்போது சபாநாயகராக இரு‌ந்த ம‌தியழகன்  தனது பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தா‌ர். இதுதா‌ன் அரசியல் காரணமாக சபாநாயக‌ர் ஒருவ‌ர் ‌விலகுவத‌ற்கான காரண‌மாக இரு‌ந்தது.
‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌யி‌ல் சபாநாயகராக இரு‌ந்த ‌பி.டி.ஆ‌ர்.பழ‌னிவே‌ல்ராஜ‌ன், ஆவுடைய‌ப்ப‌ன் அ.‌தி.மு.க. வில்  சேட‌ப்ப‌ட்டி மு‌த்தையா, கா‌ளிமு‌த்து, ‌‌பி.எ‌ச்.பா‌ண்டிய‌ன்
உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பத‌வியை 5 ஆ‌ண்டுக‌ள் முழுமையாக க‌ழி‌த்தவ‌ர்க‌ள் ஆவ‌ர்.
த‌‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌‌‌யி‌ன் வைர ‌விழா வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. ‌இத‌ற்காக  ‌சிற‌ப்பு கூ‌ட்ட‌ம் வரும் 30ஆ‌ம் தே‌தி தொடங்குகிறது .இந்நேரம் சபாநாயகர் தனது பதவியை விட்டு சென்றிருப்பது பல சந்தேகங்களை மக்களிடம் எழுப்பியுள்ளது.


------------------------------------------------------------------------------------------------------------------------------------ 


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பகத் சிங்

பகத்சிங் பிறந்த நாள் ஆன செப்டம்பர் 28யை விட, அவரது வீரமரண நினைவு நாளான மார்ச் 23க்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1870 செப்டம்பர் 28ல் பகத்சிங் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
லாகூரில் நடந்த ஊர்வலத்தின் போது லாலாலஜபதிராய் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 
அக்காலத்தில் மத்திய சட்டசபை என அழைக்கப் பட்ட இன்றைய பார்லிமென்ட் கட்டடத்தின் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் என இரு சம்பவங் களுக்காக ஆங்கிலேய அரசு பகத்சிங்கை முதல் குற்றவாளி என அறிவித்து 1931ல் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. 

பகத் சிங் தன்னை தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டிக்கொண்டார்.காரணம் தூக்கில் போட்டால் தான் சாகும் போது தனது கால்கள் இந்திய மண்ணை விட்டு பிரிந்திருக்கும் என்று கூறினார்.
ஆனால் ஆங்கிலேய அரசு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றவில்லை.
பகத்சிங்கிற்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக ஆங்கிலேய அரசு  காந்தியிடம் ஆங்கில அரசு கருத்து கேட்டது.

தாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்று மட்டும் கூறி பகத் சிங்கிற்கு தூக்குத்தண்டனை கொடுக்க தனது ஆதரவை தந்தார்.அவருக்கு தனது தலைமையின் கீழ் இந்தியா விடுதலை பெறுவது மட்டுமே பிடித்திருந்தது,அதற்காக தனனையே தலவராக முன்னிறுத்த ஆங்கிலேய அரசிடம் மறைமுக ஆதரவை கூட பெற்றிருந்தார்.
இவரின் வழ,வழ அரசியல் பிடிக்காத திலகர்,சுபாஷ் சந்திரபோசு போன்றோர்களை காங்கிரசை விட்டு தாமாகவே ஒதுங்க வைத்தார்.

இருமுறை காங்கிரசு தலைவாரக வாய்ப்பிருந்தும் சுபாஷ் சந்திர போசு காந்தியின் எதிர்ப்பால்தான் காங்கிரசினை விட்டு ஒதுங்கி தனையே இந்திய படை அமைத்தார்,
இதனால் பகவத் சிங் தூக்கை தடுத்து நிறுத்தவில்லை என காரணம் கூறி, 1931ல் கராச்சி காங்கிரசுக்கு வந்த காந்திக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது.அவரை கண்டித்து குரல்கள் ஆவேசமாக எழுப்பப்பட்டது.

கராச்சி அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் காந்திக்கும்,ஆங்கில அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன.

இவை காங்கிரசு வரலாற்றில்.ஏன் இந்திய வரலாற்றில் இருந்தும் கவனமாக நீக்கப்பட்டு விட்டன.
ஏதோ காந்தி ராட்டையில் நூல் நூற்றும்-உண்ணாநிலை இருந்ததும் தாளாமல்தான் ஆங்கிலேயர் விடுதலையை கொடுத்து விட்டு ஒடியது போலவும்,உண்மையில்அவர்கள் ஓட காரணமான ஆயுதப்போராளிகள் ,தீவிரவாத கருத்துடையவர்களை பங்கை மறைக்கும் விதமாகவுமாக இந்திய விடுதலை வரலாறு அமைக்கப்பட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மீசை மீது ஆசை

அதிகம் படிச்சவங்க ,

  அதிகம் படிச்சவங்க  உள்ள நாடுகள்  விபரம்:

இது முதல் 10 நாடுகள் மட்டுமே,
 
1,கனடா 

2,இஸ்ரேல் 

3,ஜப்பான் 


4,அமெரிக்கா 

5,நியுசிலான்ட் 

6,தென் கொரியா 

7,இங்கிலாந்து 

8,பின்லாந்து 

9,ஆஸ்திரேலியா 

10, அயர்லாந்து 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்தியா பெயரைக் காணமுடியவில்லை.
______________________________________________________________________________________________
இறக்குமதி சவப்பெட்டி  
 ===================
 தாராள மயமாக்கல் மூலம் எதுவெல்லாம் இறக்குமதி செய்யலாம் என்ற வரைமுறை இல்லாமல் போய் விட்டது.
, கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.இதனால் அமெரிக்கா ஒரு பக்கம் தனது பொருட்கள்-நிறுவனங்கள் என்று தாக்க  பக்கத்து  நாடான சீனா தனது, மலிவு விலை பொருட்கள்,மூலம்  இந்தியாவை ஆக்கிரமித்து  வருகினறது .
 எதை எடுத்தாலும், சீனப் பொருள் என்று மாறி விட்ட நிலையில், சவப்பெட்டிக்கு மட்டும் என்ன விதிவிலக்கு, என்று நினைத்த கேரள வியாபாரிகள், சீனாவில் இருந்து இவற்றை வாங்கிக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். 
சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 170 சவப் பெட்டிகள், ஆலப்புழை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு, "சொர்க்க பெட்டி' என, பெயரிட்டுள்ளனர். சீனாவில் அதிகளவு வளரும், "பாலோனியா' எனப்படும் மரத்தில் இருந்து, சவப் பெட்டிகள் தயாராகின்றன. இதுகுறித்து, சவப்பெட்டிகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர் சதீஷ் தாமஸ்கூறியதில் இருந்து: 
"சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சவப்பெட்டி, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது; உறுதியானது. 
அதே நேரம இந்த மரம் , ஒரு வார காலத்தில் மண்ணில் மக்கிப் போகும் தன்மை கொண்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக, கேரளாவில்தான் சவப்பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 
இதன் விலை, 20,000 ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
[அதற்கு இந்திய சவப்பெட்டிகள் விலையே குறைவாகத்தான் உள்ளது ].

 எதிர்காலத்தில், அதிகளவில் சவப்பெட்டிகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு தேவையான மரங்கள் மற்றும் மூலப்பொருட்களை வரவழைத்து, இங்கேயே தயாரிக்கும் திட்டமும் உள்ளது. 
அதன் மூலம், சவப்பெட்டியின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கேரளாவில், சவப் பெட்டி செய்வதற்கு மரம், மற்றும் தொழிலாளர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 
சீனாவில், காட்போர்ட் சவப்பெட்டிகளும்  கிடைக்கிறது .அது மிகவும் விலை மலிவு 500 
ரூபாய்கள்  மட்டும்தான் ஆகும்., இந்திய மக்கள் விரும்புவதாக தெரியவில்லை."
என்று  அவர் கூறினார்.
சீ னா  சவப்பெட்டி நல்லா வசதியா இருக்கிறதா என்று கேட்கவா முடியும்?
-______________________________________________________________________________________________

 

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஆயுளா? ஆண்மையா?

ஏதோ அந்த காலத்து  கோபாலகிருஷ்ணன் படத்தின் பெயர் போல் இருக்கிறதா?
ஆனால் இது இப்போதைய ஒரு சின்ன ஆய்வின் முடிவினால் வந்த கேள்விக்குறி? 
ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரனமாகவும்  இருக்கக்கூடும் என்று  சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்று 
கோடிட்டு காட்டியுள்ளதாம். 
உலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம்.
 இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. 
இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட வர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன ர்.
இவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை .
ஆனாலும் இவர்கள் கூறும் சில செய்திகள் நமக்கும் அதை நம்பலாமா என்ற சந்தேகத்தை தருகிறது .
விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் கணக்கிட முடியும். 
இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை .
ஆனால் ஒரு  புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்தை நம்பச்செய்துவிடும் போல் இருக்கிறது.
கொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது திருநங்கைகள் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
அப்போது கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். 
இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின்:
 "இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார்.
 இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களை பணியில் அமர்த்திய  அரசர  இன  ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி"
 என்று அவர் அடித்து கூறுகிறார்.
"ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது" என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. 
வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்பது அவர் வாதம் .

இவர்கள் இப்படி கூ றிவிட்டாலும் " டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இருக்காது .
ஆயுளை நீடிக்க   தங்களின் ஆண்மையை பறிகொடுக்க ஆண்கள் விரும்புவார்களா?
மேலும் இது ஒரு ஆய்வாளரின் கருத்து மட்டுமே .
அறிவியல் உண்மையாக இதுவரை நிருபிக்கப் படவேயில்லை.
_______________________________________________________________________________________________

36000 டன் உணவு வீண் ?

நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் தகவல் உரிமை சட்டம் 
மூலம் வெளியாகியுள்ளது. 
இப்படி  வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.
தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர்,
 "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (FCI,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப்வீணாகப்  போயின?
 அதன் மூலம்  சராசரி மக்களின் எத்தனைப் பேரின் பசியை 
போக்கியிருக்கலாம் ?"
என்ற , விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.

அதற்கு இந்திய உணவு கழகம் கொடுத்த  பதில்:
நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின.
 இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானிய களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில் தான், 19.290 ஆயிரம் டன், உணவு தானியங்கள், அழுகி விட்டன. 
மேற்கு வங்கத்தில் உள்ள, அரசு உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில், 4,545 டன், உணவு தானியமும்,
 குஜராத்தில், 4,290 டன்னும், அழுகி விட்ட து.
வீணான இந்த, 36 ஆயிரம் டன் உணவு தானியத்தின் மூலம், ஒரு நாளைக்கு, 440 கிராம் என்ற அளவில், எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும். இவ்வாறு அந்த பதிலில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இப்படி வீணான உணவு தானியங்களை அதற்கு முன்பே ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கக் கூறியதை மத்திய அரசு மறுத்து விட்டது நினைவிருக்கலாம்.எலிகளுக்கு கொடுத்தாலும்,ஏழைகளுக்கு கொடுப்பது பாவம் அல்லவா?

 
புதன், 26 செப்டம்பர், 2012

வாடிக்கை,- போராட்டங்கள்,

வாடிக்கையாகி விட்ட போராட்டங்கள், 
-----------------------------------------------------------
இப்போது அதிகமாக  தமிழ் நாட்டில் உழைப்பவர்கள் ,அல்லது நொந்து போய் இருப்பவர்கள் மின் வெட்டால் ,தண்ணீர் இல்லாமையால் ,விவசாயம் செய்யாமல்  இருப்பவர்கள் அல்ல .
அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆங்காங்கே நடக்கும் போராட்டத்தை சமாளிக்கும் காவல்துறையினர்தாம் .
மின் வெட்டு ,குடிநீர் வழங்கப்படாததைக்கண்டித்து தங்களுடைய எதிர்ப்பைகாட்ட, சாலை மறியால்  போராட்டம் நடத்தும் மக்கள் அதிகமாகி  விட்டனர் .
மி ன் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் அதிகரித்து விட்டது.
 பகல், இரவு பாராமல், இது போன்ற போராட்டங்களை அடக்க  காவல்துறை உழைக்கிறது.
ஒரு காவல்துறை அலுவலர் கூறியதாவது :
 "சமீப காலமாக, தமிழகத்தில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 
சாதாரண பிரச்னைக்குகூ ட மக்கள், சாலையை மறித்து போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், காவல் துறையினர்  திணற வேண்டியுள்ளது.
 தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.
 முல்லைப் பெரியாறு , இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலிசெய்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, போன்றவை அதில் முக்கியம்.
சாலையில் போராட்டம் நடத்திய மக்களை கலைக்க சில இடங்களில் தடியடி நடத்தியதால் பொது மக்களுக்கும்,காவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு போன்றவற்றால்  பல காவல்துறையினர்  காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், துப்பாக்கி சூடு வரை நடத்தி  விரட்டியுள்ளனர்.

ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் கிடைக்காமல் அலைந்தும்  உணவு, குடிநீர் வழங்கிவிட்டு  அதற்கான பணத்தை, எங்கே திருப்பி வாங்கிடவும்  தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில்,அடிக்கடி  போராட்டங்கள் நடக்கின்றன. 
இவற்றைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி  வருகின்றனர்.நிம்மதியாக ஓய்வெடுத்து பல் நாட்களாகி விட்டன.அப்படியும் மக்களிடம் கெட்டப் பெயர்தான் கிடைக்கிறது.காரணம் ஆட்சியாளர்களை திருப்பதி படுத்தும் அதிகாரிகள் செயலால்தான் .

பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். 
அது உதவாத நேரத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.
அப்போது, ஆயுதப்படையில் உள்ள காவலர்கள்  அடிக்க ஆரம்பித்து  விடுகின்றனர்; இதனால்,காவலர்களும் காயமடைகின்றனர். ஆனால், அதை யாரும் கண்டு கொள்வதில்லை.காவலர்களை மட்டும் கண்டிக்கின்றனர்.ஆனால் இப்போது அடிக்கடி என் தினசரி  போராட்டம், சாலை மறியால் நடக்கிறது.
 அவர்களை அப்புறப்படுத்த  எங்கள்  உயர் அதிகாரிகலும்,அதை கண்டித்து சில கட்சியினரும் எங்களைப் பாடாய் படுத்துகின்றனர்.
இன்றைய நிலையில் தமிழ் நாடு காவல்துறையில்  துறையில் பணியாற்றுவது என்பது மிகவும்  சிரமமான பணியாக உள்ளது."
இவ்வாறு அவர் வருத்தத்துடன் கூறினார்.
அவர் சொல்லுவது போல் காவல்துறையினரின் தற்போதைய நிலை கொஞ்சம் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.
இரு பக்கமும் இடிதாங்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு.
அவர்களுக்கும்தான் மின்வெட்டு ,குடிநீர் ,விலைவாசி பிரச்னைகள் இருக்கிறது.அவர்களுக்கும் சேர்த்து போராடுவோர் ,காவல்துறையினர் ஆளுங்கட்சியின் ஏவல் காரர்கள் தான் இவர்கள் -மற்றபடி அவர்களும் மக்களில் அடக்கம்தான் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் .
______________________________________________________________________________________________

புதிய நிரோ 

ரோம் எரியும் போது நிரோ மன்னன் பிடில் வாசித்ததை படித்திருக்கிறோம் .நம் இந்தியாவில் அசாம் முதல்வர் தருண் கோகாய் அதை இப்போது உண்மையாக்கியுள்ளார்.
கடும் மழையில் தத்தளித்த அசாம் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 
15 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
 18 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர். பல  பேரை காணவில்லை.
அசாம் மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையும் இரவு பகலாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றன.
அசாம் மாநிலம் முழுக்க நீரில் மிதக்க மக்கள் மிக  மோசமான நிலையில்  இருந்து வருகிறார்கள்.ஆனால் அதன் முதல்வர் தருண் கோகாய், ஜப்பானில் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
மக்களுக்கு ஆதரவு வார்த்தைகளை கூட அவர் இன்னமும் ஜப்பானில் இருந்து வெளியிட வில்லை .வாக்களித்தவர்களுக்கு அவர் தரும் மதிப்பு  ரொம்ப நல்லாயிருக்கு.

==========================================================================
_

 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இரண்டு மணி நேரம் மின் வெட்டு

தமிழகத்தில் மின் பற்றாக்குறை வர வர  மிகவும்  மோசமடைந்து வருகிறது. 
சென்னையில் மட்டும் ஒரு  மணி நேரம் மின் வெட்டு மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு 12 மணிமுதல்  15 மணி நேரம் வரைமின் வெட்டு நடைமுறையில் உள்ளது.
இதனால்  பாதிக்கப் படுவது மக்களும்-தொழிலாளர்களும் மட்டுமல்ல மின் வாரிய ஊழியர்களும்தான்.
தற்போது  தமிழம் முழுக்க  ஆங்காங்கே மின்வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்து  மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதாக  தெரிகிறது.
. நேற்ற்றிரவு சென்னையை அடுத்த பொன்னேரியில் ஒரு ஊழியர் தாக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரலில் கூட சோ ழிங்கநல்லூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டுமென்றும், தங்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை வேண்டுமென்றும் கோருகின்றனர்.
 ஆனால் தொடரும் மின்வெட்டின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை மேலும் சிக்கலாக்க அரசு விரும்பவில்லை . நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது.
 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் கே விஜயன்"
 மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் கே விஜயன்" ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.மின்விநியோகத்தை சரியான முறையில் அரசும் மின் வாரியமும்  நிர்வகிக்கவில்லை, 
சென்னைக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு மணிநேரமே மின்வெட்டு மற்ற பகுதிகளுக்கு பத்துமணிநேரத்திற்கும் மேல் என்பது எவ்விதத்திலும் சரியல்ல. 
அரசியல் காரணங்களுக்காக இப்படிச் செய்கின்றனர்
; சென்னை மக்கள் தாங்களாகவே முன் வந்து சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். 
இதெல்லாம் நதக்கிற செயல்  இல்லை,வரும் மின்சாரத்தை  சமமாகப் பங்கிடவேன்டும் .அப்படி பங்கிட்டால் தமிழகம் முழுக்கவே மூன்று மணி நேரம் மட்டும்தான் மின் வெட்டு இருக்கும்.அதை அரசிடம்  கூறியும், அத்தகைய யோசனைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்க வி ல்லை "
' என்று தெரிவித்த்துள்ளார்.
ஏன் ?
இந்த நல்ல யோசனை அரசுக்கு பிடிக்க வில்லை? 
மக்கள் இன்னமும் நமக்கு வாக்களித்ததற்கு அழுந்த வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையா?
_______________________________________________________________________________________________

கடாபியின்"அவளோட ராவுகள்

லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கடாபி.
 இவரை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. ராணுவம் மூலம் மக்களை கொன்று குவித்தார் கடாபி. கடைசியில் அமெரிக்க ஆதரவு  படையினரால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கொடுரமாகக்  கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரான்ஸ் நிருபர் அன்னிக் கோஜீன் என்பவர், கடாபியின் கொடுமைகள் பற்றி புத்தகம் எழுதி உள்ளார்.
அதில், பள்ளி மாணவிகளை கடாபி கடத்தி, செக்ஸ் அடிமைகளாக்கி சித்ரவதை செய்தார் என்று கூறியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு சொராயா என்ற 15 வயது மாணவியை கடாபி கடத்தி சென்று எப்படி எல்லாம் செக்ஸ் சித்ரவதை செய்தார் என்பதை கோஜீன் தனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.
கடாபியின் பிடியில் சொராயா 5 ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்துள்ளார். அவரது அரண்மனையில் ஏராளமான பள்ளி மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களை தன் சொல்படி நடக்கும் வகையில் கடாபி மாற்றி இருந்தார்.
கடாபியிடம் மாணவிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களோ அதேபோல் சொராயாவையும் செயல்பட கட்டாய பயிற்சி அளித்துள்ளனர். பல்வேறு வகையில் செக்ஸ் சித்ரவதைகளை அனுபவித்த மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை குடும்பத்தினரே ஏற்க மறுத்து ஒதுக்கி உள்ளனர் என்று புத்தகத்தில் கோஜீன் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். 
சொராயாவின் பேட்டியும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கடாபியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி சொராயா பரபரப்பு  தகவல்களை கூறியுள்ளார். இதனால்  பரபரப்புடன் புத்தகம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகிலேயே மிக குள்ளமான சிறுமியாக சார்லட் கள்சைட்டை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. 
5 வயதான இவள் இங்கிலாந்தை சேர்ந்தவள். 
இவளது உயரம் 68 செ.மீட்டர். எடை 9 பவுண்டு. அதாவது 4 கிலோவுக்கும் குறைவுதான்.
 
தற்போது பள்ளியில் படித்து வருகிறாள். இவளது தந்தை ஸ்காட் கார்சைட். தாயார் பெயர் எம்மா நியூமேன். பிறக்கும்போது இவள் 25 செ.மீட்டர் உயரமே இருந்தாள். 
எடை 2 பவுண்டு அதாவது 900 கிராமே இருந்தது.
 பொம்மைக்கு அணிவிக்கும் உடைகள் போன்று மிக சிறிய உடைகள் இவளுக்கு அணிவிக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------திங்கள், 24 செப்டம்பர், 2012

நடிகர் திலகன் மறைவு ,


-----------------------------------
பிரபல மலையாள நடிகர் திலகன். 77 வயதான இவர் 300-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி திலகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டு அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தது.

மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் திலகன் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை திருச்சூர் அருகே அரசு மரியாதையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திலகன் மலையாள நடிகர்கள் சங்கத்தினருடன் மோதலில் இருந்தார். அதனால் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் பகிரங்கமாக கருத்து மோதலில் இருந்தார்.
கமல்ஹாசனுக்கு மலையாள அரசு பாராட்டு விழா நடத்திய பொது மலையாள நடிகர்கள் அதை புறக்கனித்தப்போது நடிகர்களின் போக்கை கண்டித்ததுடன் திலகன் முதல் ஆளாகக் கலந்து கொண்டு கமலைப்பாராட்டினார்.
_______________________________________________________________________________________________
 

மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் - உண்மையும்சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு  
-எம்.கண்ணன்
சில்லரை வர்த்தகம், விமானப் போக்கு வரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடுகளை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதித்து உத்தரவிட் டிருக்கிறது. இவை அவசரஅவசரமாக நடை முறைக்கு வந்துவிட்டதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்தி யாவை அடகு வைக்கும் காங்கிரஸ் தலை மையிலான கூட்டணி மத்திய அரசிற்கு பல்முனைகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் தான்தோன்றித்தன மான முடிவிற்கு எதிராக இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கடும் கண்டனங் களை தெரிவித்தும், கிளர்ச்சியில் ஈடு பட்டும் வருகின்றனர். இந்நிலையில் மத் திய அரசு இந்திய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் உண்மைக்கு மாறான விளம் பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. குறிப்பாக கோய பல்ஸ் பாணியில் ஒரே பொய்யை திரும் பத் திரும்ப கூறி மெய்யாக்க முயல்கிறது.

விவசாயிகளுக்கு நன்மையா ?

அரசின் விளம்பரத்தில், மொத்த அந் நிய முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சத விகிதம் கிராமங்களில் செலவிடப்படும்; கிராமப்புறங்களில் சிறப்பான செயல் முறை மற்றும் குளிர்வித்தல் மூலம் மேம் பாடுகள்; நிலத்திலிருந்து நேரடியாக சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லும்; விவ சாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்; ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப் புகள் உருவாக்கப்படும்; சிறு, குறு தொழில் கள் சிறப்புறும்; நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்; சீனா இதனாலேயே முன்னேறுகிறது என மத்திய அரசு கூறுகிறது.

வால்மார்ட், டெக்ஸ்கோ, கேரிபோர் போன்ற மிகப்பெரும் பகாசுர நிறுவனங்கள் வெளிநாடுகளில் விவசாய பண்ணை களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. அங்கு அதற்கேற்ற சூழல் இருக்கிறது. கார ணம், அங்கெல்லாம் ஒவ்வொரு விவ சாயியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார் கள். பிரான்ஸில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர், கனடாவில் 798 ஏக்கர், அமெ ரிக்காவில் 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியா வில் 17,975 ஏக்கர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு விவசாயியும் சராசரியாக நிலம் வைத்திருக்கின்றனர். இங்கு மொத்த கொள்முதலுக்கு சாத்தியம் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரி 5 ஏக்கருக்கும் குறைவான நிலமே இருக்கிறது. சில விவ சாயிகள் ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலம் என்ற அடிப்படையிலேயே வைத்திருக்கின் றனர். இந்தியாவின் மொத்த சாகுபடி பரப் பில் 34 சதவிகித நிலத்தில் சிறு,குறு விவ சாயிகள்தான் பயிர் செய்து வருகிறார்கள். இங்குள்ள துண்டு, துக்காணி நிலங்களில் தனித்தனியாக சென்று பெரும் பன் னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய் யாது. மாறாக முதலில் வந்ததும் துண்டு, துக்காணி நிலங்களை குத்தகைக்கு எடுத்து மொத்த நிலத்தையும் ஒன்று சேர்த்து பண்ணை முறை விவசாயத்திற்கு கொண்டு செல்லும். அப்படி செல்லும் போது பெரும் பகுதி விவசாய வேலை களில் இயந்திரங்களையே பயன்படுத் தும். இந்நிலை உருவாகும் பட்சத்தில் விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்களும் தங்களின் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதன் மூலம் அந்நிய மூலதனம் 50 சதவிகிதம் விவசாயிகளை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றவே செய்யும் என்பது தான் உண்மை.

குளிர்வித்தலை பொறுத்தவரை அதற்கு மூலதனம் மட்டுமின்றி மின்சாரமும் தேவை. தற்போதைய கணக்கீட்டின் படி இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு 10 சதவிகிதத்திற்கு மேலாக மின் பற் றாக்குறை இருக்கவே செய்யும். காரணம் தற்போதைய மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படவில்லை. மேலும் அதற்கான போதிய திட்டங்களும் தீட்டப்படவில்லை. இந்நிலையில் குளிர் பதன வசதி என்பதும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல்தான் அமையும்.

இந்தியாவை பொறுத்தவரை கிராமப் புறங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் அத்தனையும் அப்படியே சந் தைக்கு வருவதில்லை. அவற்றில் 60 சத மான பொருட்கள் பயிரிடும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தவிர உள்ளூர் மட்டத்திலேயே வினியோகிக் கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத உணவு தானியங்களில் 35 சதவிகித உணவு தானி யங்கள் தினசரிசந்தை, வாரச்சந்தை, அரு காமை கடைகளில் சில்லரை வர்த்தகத் திற்காக விற்கப்படுகின்றன. இது கிராமப் புற மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கான அரணாக இருந்து வருகிறது. மீதமுள்ள வெறும் 5 சதவிகித உணவு தானிய பொருட்கள் மட்டுமே அரசின் கண் காணிப்பின் கீழ் இருக்கும் 6 ஆயிரத்து 359 மொத்த விலை மண்டிகளுக்கு விற் பனைக்கு வருகிறது.

இதை மாற்றி நிலத்திலிருந்து நேரடி யாக சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் அருகாமையில் கிடைப்பது முதலில் தடைபடும். மேலும் நிலத்திற்கு சொந்தக்கார விவசாயி கூட அதிக விலை கொடுத்து சூப்பர் மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலையே ஏற்படும். இனி நகர்புற விலைவாசிக்கே கிராமத்து மக் களும் பொருட்களை வாங்க வேண்டும். இது உணவுப்பொருட்களின் விலை பன் மடங்கு உயரவே வழி வகுக்கும்.

ஆயிரக்கணக்கில் ஏக்கர் நிலம் வைத் திருக்கும் அமெரிக்காவில் 1950களில் சூப்பர் மார்க்கெட்டில் உணவுக்கு செல வழிக்கப்படும் ஒரு டாலரில் 40 சதவிகி தம் விவசாயிகளுக்கு கிடைத்தது. 2012 ல் இன்று வெறும் 19 சதவிகிதம்தான் கிடைக் கிறது. இந்த லட்சணத்தில் துண்டு, துக் காணி நிலம் வைத்திருக்கும் இந்திய விவ சாயிகளுக்கு என்ன விலை கிடைக்கும்? கட்டியிருக்கும் கோமணம் மிஞ்சுவதே பெரிய விஷயமாக இருக்கும் என்பதுதான் உண்மை.

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமா?

பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறு வனத்தில் ஒருவருக்கு வேலை கிடைக் கிறது என்றால் குறைந்தபட்சம் 4 பேர் ஏற்கனவே இருக்கும் வேலையை இழக்க நேரிடும் என்பதுதான் ஏற்கனவே இருக் கும் அனுபவம். உதாரணமாக, அமெரிக் காவில் 1951 ல் 15.5 கோடி மக்கள் தொகைக்கு 17 லட்சத்து 70 ஆயிரம் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இருந்தன. 2011ம் ஆண்டில் அமெ ரிக்காவின் மக்கள் தொகை 31.2 கோடி. இப்போது இருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் வெறும் 15 லட்சம் மட்டுமே. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய சில்லரை வர்த் தக நிறுவனங்கள் 50 ஆண்டுகள் பின் னோக்கிய நிலையை விட மிகமோசமாக குறைந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இந்த கதி என் றால், இந்தியாவின் நிலை என்னவாகும்?

தாய்லாந்தில் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களை சில்லரை வர்த்த கத்தில் அனுமதித்த 10 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான உள்நாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மூடப் பட்டிருக்கிறது. அதாவது 39 லட்சம் உள் நாட்டு சில்லரை நிறுவனங்கள் மூடப் பட்டிருக்கிறது. இதனால் 3 கோடியே 75 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 லட்சம் பேர் நேரடியாக வேலையை இழந்து தெருவில் நிற்கின்றனர். இதே போல் மெக்சிகோவில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் 50 சத விகித உள்ளூர் சில்லரை வர்த்தக நிறு வனங்கள் அடியோடு மூடப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களின் வரவால் புதிய வேலைவாய்ப்பு என்பது, இந்தியாவை பொறுத்தவரையில் “ மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான்” அமையும்.

சிறு,குறு தொழில்கள் சிறப்படையுமா?

அந்நிய நேரடி முதலீட்டில் 30 சத விகித பொருட்கள் இந்தியாவில் உள்ள சிறு தொழில்கள் மற்றும் சிறு உற்பத்தியா ளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப் படும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப் படியென்றால் மீதமுள்ள 70 சதவிகித பொருட்கள் மற்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப் படும். அப்போது, நம்நாட்டில் சிறு, குறு தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு தொழில் நெருக்கடிக்கு உள்ளாகும் என் பதுதானே உண்மை.

வால்மார்ட் உள்ளிட்ட பெரும் சில் லரை வர்த்தக நிறுவனங்கள் இப்போது வரை சீனாவில் இருந்து மிக குறைந்த விலைக்கு அதிக அளவிலான பொருட் களை ஏற்றுமதி செய்து தனது கடை களில் விற்பனை செய்து வருகின்றன. தற்போது இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சங்கிலித் தொடர் போன்ற கடை ஏற்பாடுகள் இருக்கிறது. இதனால் அதிக வேலைவாய்ப்பு மட்டு மின்றி, நுகர்வோரும் தேவைக்கு ஏற்ப அரு கிலேயே பொருட்களை தேர்ந்தெடுக்கும் வசதி கிடைத்து வருகிறது. இனி அந்த வாய்ப்பும் பறிக்கப்படும். ஆக, தற்போது மின்பற்றாக்குறையால் ஊசலாடிக் கொண்டிருக்கும் சிறு, குறு தொழிற் சாலைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடு விழா நடத்தப்படும் ஏற்பாடாகவே இந்த அந்நிய மூலதனம் இருக்கும்.

நுகர்வோருக்கு விலை குறையுமா?
நிலம் மற்றும் உற்பத்தி மையங்களில் இருந்து நேரடியாக பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லும். இதற்கிடை யிலான போக்குவரத்து செலவு, கடை களில் உள்ள ஏசிக்கு உரிய செலவு, கடை வாடகை, விளம்பரம், வேலையாட்கள் ஊதியம் என எல்லா செலவினங்களும் இனி விலையில் சேர்க்கப்படும். இதனால் விலை மேலும் உயருமே தவிர குறையாது. நாம் பக்கத்து கடையில் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிக விலைகொடுத் துத்தான் வாங்க வேண்டும். ஒரு வேளை உயர் வருவாய் பிரிவினருக்கு இது குறை வான விலையாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டில் பெரும்பகுதியாக இருக்கும், சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த விலை என்பது எறும்பின் மீது மூட்டையை ஏற்றிய கதையாகத்தான் அமையும்.

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பண்ணைகளில் ஒரு லிட்டர் பாலை ரூ. 77.38 பைசாவிற்கு கொள்முதல் செய் கிறது. அதனை கடைகளில் ரூ.176.12 பைசாவிற்கு விற்கிறது. அதே நேரத்தில் தற்போது தமிழகத்தில் பால் பண் ணையில் ஒரு லிட்டர் ரூ.22 கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் சில்லரை விற்பனைக்கு ரூ.32 என விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த முறை நுகர் வோருக்கு சிறந்தது? வால்மார்ட்டா? ஆவினா? பன்னாட்டு பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்களில் குறைந்த விலை என்பது “அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகத்தான் ” இருக்கும்.

சீனாவில் வால்மார்ட் உள்ளதே ?

சில்லரை வர்த்தகத்தில் சீனாவுடன், இந்தியாவை ஒப்பிடுவது மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு சமமாகும். காரணம், அமெரிக்காவுடன் மட்டும் சீனா செய்து வரும் வர்த்தகத்தில் சீனாவிற்கு ஆண் டிற்கு 26 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் லாபமாக கிடைக்கிறது. சீனா தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அமெரிக்காவிற்கு 36 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சீனா இறக்கு மதி செய்வதோ 10 ஆயிரம் கோடி அமெ ரிக்க டாலர்கள்தான். அதுமட்டுமல்ல, சீன உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு கள் அதிகம். இன்னும் குறிப்பாக சொல் லப்போனால், அதிக அளவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் பொருட்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்து தங்களது கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆகையால் வால் மார்டை சீனாவிற்குள் அனுமதிப்பது சீனா விற்கு நஷ்டமல்ல.

ஆனால் இந்தியாவின் நிலை என்ன வாக இருக்கிறது. ஏற்றுமதிக்கும், இறக்கு மதிக்கும் இடையில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இன்னும் சமநிலைக்கு வந்த பாடில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 40 கோடி மக் கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்னும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்னும் பல துறை களில் தன்னிறைவு காணப்படவில்லை. முதலில் அதனை எட்டிப்பிடிக்க வேண் டும். சீனா அந்நாட்டு மக்களின் வாழ்வா தாரத்தை அந்நிய முதலீட்டிற்கு காவு கொடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சில்லரை வர்த்தகத்தில் சீனாவுடன் இந் தியாவை ஒப்பிடுவது சில்லரைத்தன மானது. இந்திய மக்களின் நலனை பாது காக்கும் வகையில் திட்டமிடுவதே புத்தி சாலித்தனமாக இருக்கும்.

இன்று உலக அளவில் சில்லரை வர்த் தகங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் கால்பதிப்பதால் ஏற்படும் ஆபத்து களில் இருந்து மக்களை பாதுகாத்திட, ஒவ்வொரு நாடும் அதற்கேற்ற வகையில் பல்வேறு சட்டங்களை கொண்டு வந் திருக்கிறது. ஜெர்மனியில் பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளில் தொழிற்சங்க பணியாளர்களைத்தான் நியமிக்க வேண் டும். இதில் குறைந்த சம்பளத்தில் பணி யாளர்களை நியமிக்க முடியாது. இது இந்தியாவில் சாத்தியமா? ஜப்பானில் அப்பகுதியில் சில்லரை வர்த்தகம் நடத்தி வரும் சிறு நிறுவனங்களின் ஒப்புதல் இல் லாமல் எந்த ஒரு பெரிய கடையும் ஆரம் பிக்க முடியாது. இந்த சட்டம் இந்தியாவில் உள்ளதா? இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்தியாவை போன்று சொந்த நாட்டு மக்களின் நலனை காவு கொடுத்து எந்த ஒரு நாட்டிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விதிகள் உரு வாக்கப்படவில்லை.

[ஆதாரம் : யுஎஸ்டிஏ ஃபாரின் அக்ரிகல்சுரல் சர்வீஸ், ஓஎஸ்இசி பிஸினஸ் நெட்வொர்க், எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்,

ராய்ட்டர்ஸ், ப்ராசிகாடுடே]

கட்டுரை ;நன்றி ,தீக்கதிர் 
____________________________________________________________________________________________________________________________________
suran
 

உடனே தூக்கிலிடுங்கள்-1,372 கடிதங்கள்

கசாப்பை உடனே தூக்கிலிடுங்கள்' என, வலியுறுத்தி சமூக சேவகர் ஒருவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனாதிபதிக்கு ஒருநாள் விடாமல், கடிதங்கள் எழுதி வருகிறார். மும்பையில், 2008, நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து, கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய, இந்த பயங்கரவாதிகளில் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல் லப்பட்டனர். 
அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான்.மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு, அதே சிறையில், அமைக்கப்பட்ட சிறப்புக் கோர்ட், மரண தண்டனை விதித்தது. அந்த மரண தண்டனையை, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கசாப், கருணை மனு அனுப்பியுள்ளான்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தன் நெருங்கிய நண்பரை பறிகொடுத்த, சமூக சேவகர் நாராயண் பாட்டீல் என்பவர், "பயங்கரவாதி கசாப்பிற்கு உடனே தண்டனை கிடைக்கும்' என, நம்பினார். நாட்கள்தான் உருண்டோடின. ஆனாலும், எதுவும் நடக்கவில்லை.

மனம் வெறுத்துப் போன நாராயண், 2008, டிசம்பரில் இருந்து, கசாப்பை தூக்கிலிட வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மகாராஷ்டிரா மாநில முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தினமும், கடிதங்கள் எழுதி வருகிறார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, நாராயணன் கடிதம் எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் இல்லை.

மனம் நொந்த நிலையில், நாராயண் கூறியதாவது: சம்பவத்தன்று, மும்பை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், என் நண்பரை, விட்டு விட்டு, நான் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், பயங்கரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில், என் நண்பர் பலியானார். என்னைப் போலவே, பலர் தங்களின் உற்றார் உறவினரை இழந்து தவிக்கின்றனர்.கசாப்பை உடனே தூக்கிலிடக் கோரி, நான்கு ஆண்டாக, ஜனாதிபதி, பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி வருகிறேன். அந்தக் கடிதங்களில், மகாராஷ்டிராவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். இதுவரை, 1,372 கடிதங்களை எழுதி உள்ளேன். ஆனாலும், தக்க தீர்வு கிடைக்கவில்லை.


"கசாப்பை தூக்கிலிடும் வரை, எந்த பண்டிகையையும் கொண்டாடக் கூடாது' என்ற வைராக்கியத்துடன், காலம் கழித்து வருகிறேன். கசாப்பையும், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய, அப்சல் குருவையும், ஒரே மாதிரியாக நடத்துவது தவறு.கசாப் செய்தது அட்டூழியம். அவனை நாளை தூக்கிலிடலாம் என்றால், அதை, ஏன் இன்றே செய்யக் கூடாது?இவ்வாறு நாராயண் துயரத்துடன் கூறினார்.

தினமலர் செய்தி
_____________________________________________________________________________________________________________________________________

சனி, 22 செப்டம்பர், 2012

சட்டை=செய்யாததும்+கழற்றலும்,

அந்நிய சில்லரை வணிக மூதலீடு போன்றவைகளுக்கு மன்மோகன் சிங் கதவுகளை விரிய திறந்து வைத்ததனால் தன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கும் என்று தெரிந்தே அதை செய்துள்ளனர்.
அதானால் தன் ஆட்சிக்கு ஆபத்து உண்டாகலாம் என்று தெரிந்தே  அமெரிக்க கட்டளையை சிரமேற்கொண்டு சோனியா கட்சி அந்நிய வணிக அனுமதி கொடுத்திருக்கிறது என்றால் ,அதற்கு என்ன துணிச்சல் என்று வியக்க வேண்டாம்.
மம்தா முதலில் முரண்டு பிடிப்பார்,பின் பின்வாங்கி விடுவார்.அவர் அப்படி ஏதும்செய்யாவிட்டாலும் கூட முலாயம் -மாயாவதி கூட்டம் இருக்கும் தைரியம்தான்.
முலாயம் கண்டிப்பாக சிபிஐ பயத்தில் ஆதரிப்பார்.அவருக்கும் அமெரிக்காதான் ராஜகுரு.அந்த தைரியம்தான்.
திமுக கொஞ்சம் முணங்கும் பின் கூட்டணி,தர்மம் என்று சுணங்கி விடும் என்பதையும் மனமோகன் தெரிந்தே வைத்துள்ளார்.எவ்வளவு அடித்தாலும்,திமுக வில் உள்ள கருணாநிதியைத் தவிர மற்ற எவரை திகாரில் அடைத்தாலும் அது காங்கிரசுக்கு வால் பிடிப்பதை இப்போதைக்கு விடப்போவதில்லை.
முலாயம்,மாயாவதி போல் சிபிஐ வழக்குகளை மிரட்டி நீர்த்துப்போக வைக்கு வித்தை கருணாநிதிக்கு தெரியவில்லை.பயந்தே வழிக்கு வந்து விடுவார் என்பது காங்கிரசுக்கு தெரியும்.இல்லை என்றால் 63 சீட்டுகள் வாங்கி மண்ணைக் கவ்வியிருக்க முடியுமா?
இவர்களை கூட்டணியில் வைத்திருக்கும் தைரியம்தான் மன்மோகன் காங்கிரசு ஆட்சி தொடர்ந்து மக்கள் விரோத-தேச விரோத செயல்களை செய்து கொண்டு போகிறது.
டெல்லியில் ஒரு வழக்குரைஞர் சட்டையை கழட்டி "பிரதமரே திரும்பிப்போ"என்று குரல் எழுப்பினாராம்.
அமெரிக்க ஆதரவு செயல்களை செய்ய எவ்வளவு எதிர்ப்பையும் இந்த பிரதமர் எந்திரன் [அல்லது மன்மோகன் சிங்] செய்வார்.வெறும் சட்டையை கழட்டி காட்டியதற்கெல்லாமா பயப்பட்டு பின்வாங்குவார்?
மன்மோகன் சிங் என்ற பிரத எந்திர பொம்மை சோனியாவின் சாவிக்கும்,அமெரிக்காவின் தாளத்துக்கும் மட்டுமே இயங்கும்-தலையாட்டும்.
அவர் இந்திய மக்களை கண்டு கொள்ள மாட்டார்.அவருக்கு தெரிந்த இந்திய மக்கள் எல்லாம் அம்பானி.,டாடா,போன்றோர்தான்.
________________________________________________________________________________

 நிலக்கரி இழப்பு இன்னமும் அதிகமாகத்தான் இருக்கும்,

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், பார்லிமென்டில், சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியது. இதனால், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், முற்றிலும் நடக்காமல் முடங்கியது.அதே நேரத்தில், இந்த ஊழல் குறித்து பார்லிமென்டில், அறிக்கை சமர்ப்பித்த, பிரதமர் மன்மோகன்சிங், "சி.ஏ.ஜி., அறிக்கையில், கூறப்பட்டுள்ள விவரங்கள் தவறானவை. சுரங்க ஒதுக்கீடுகளால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது' என்றார். ஆனாலும், பிரதமரின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்யும் என, தெரிவிக்கப்பட்டது. 
அதன்படி, முதல் ஆய்வுக் கூட்டம், நேற்று பார்லிமென்ட் நூலக கட்டடத்தில் நடைபெற்றது.
"நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை, ஆய்வுக்கு எடுப்பதாக முடிவு செய்து விட்டேன். இதனால், வாக்குமூலம் அளிக்க வரும்படி, நான் தான், சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத்ராய்க்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு வர வழைத்துள்ளேன்; எனவே, திட்டமிட்டபடி அவர், இன்று தன் வாக்குமூலத்தை அளிப்பார். பொதுக் கணக்கு குழு இன்று, வினோத் ராயின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்"என்று ஜோஷி கூறினார்.

ஜோஷியின் பதிலுக்கு, குழுவில் இடம் பெற்றுள்ள, காங்கிரஸ் உறுப்பினர்களைத்தவிர மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே,ஆதரவு தெரிவித்தனர். 
இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களான, மணீஷ் திவாரி, சஞ்சய் நிருபம் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகியோர் கருத்துகள் அங்கு எடுபடவில்லை,
.இதையடுத்து, திட்டமிட்டபடி வினோத்ராய் அழைக்கப்பட்டார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின், அவரிடம் குறுக்குவிசாரணையும் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆரம்பம் முதலே, காங்., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக, "சி.ஏ.ஜி., அறிக்கை மீதான விசாரணையை, அவசரமாக துவங்குவது தேவையற்றது' என்று புலம்பினர்.
 சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத் ராய்க்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் நடந்தது.

சி.ஏ.ஜி., அறிக்கையால், நாட்டின் நற்பெயரே, சர்வதேச அளவில் கெட்டுப்போய்விட்டது;" பொருளாதாரத்தையும், இந்த அறிக்கை சீர்குலைத்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரே நாளில் பன்மடங்கு வீழ்ச்சியடைய, இந்த அறிக்கையே காரணம். சி.ஏ.ஜி., அறிக்கைக்குப் பின், வெளிநாட்டு தொழிலதிபர்கள், இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதனால், நாட்டிற்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டுள்ளது."
என்று காங்., உறுப்பினர்கள் புலம்பினர்.

நிலக்கரியை முறைகேடாக ஒதுக்கியதில்,2-ஜியில் முறையற்ற ஏலம் போன்றவற்றில் இந்தியாவின் மானத்தை கப்பலேற்றி விட்டு பொருளாதாரத்தையே குழியில் தள்ளிய காங்கிரசார் எப்படித்தான் வெட்கமும்-மனசாட்சியும் இல்லாமல் இப்படி நாலுபேர் மத்தியில் பேச முடிகிறதோ.அந்த அளவீற்கா வெட்கம்-மானம்-ரோஷம் இல்லாத கட்சியாகி விட்டது காங்கிரசு,காசு பார்ப்பது மட்டும்தான் அதன் முக்கிய குறிக்கோளாகி விட்டது.நல்ல விலை கிடைத்தால் இந்தியாவை விற்று விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் போல் இருக்கிறது.

 சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத்ராய் தனது கருத்துக்களை கூறியதாவது:
"சி.ஏ.ஜி., அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள இழப்பு, உண்மையில் மிகவும் குறைவுதான்.
 சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அது, இரண்டு நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கு. அந்த வழக்கில், மத்திய நிலக்கரித் துறையும், சுற்றுச் சூழல் துறையும் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
அதில், பல்வேறு தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை, மறுபடியும் கணக்கீடு செய்தால், நிச்சயம் அது, அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும். தற்போது, சுட்டிக் காட்டப்பட்டுள்ள, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்பதை விட, பன்மடங்கு அதிகமாகவே இழப்பு ஏற்படுள்ளது தெரிய வரும்"

அரசியல் சட்ட ரீதியான ஓர் அமைப்பு சி.ஏ.ஜி.,
 அதற்கு தலைமை தாங்கும் நான், என் அரசியல் சட்ட கடமையைத்தான் செய்துள்ளேன். ஊழல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடக்கூடாது. அரசின் திட்டங்கள் எல்லாம், முறையாக நடக்க வேண்டும் என்ற அக்கறை, சி.ஏ.ஜி.,க்கு உண்டு. 
இந்த அறிக்கையை, நானாகவே என் இஷ்டத்திற்கு தயாரிக்கவில்லை. அரசு அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, அறிக்கை தயாரானது. அத்தனை விவரங்களும், நிலக்கரி அமைச்சகத்தில் உள்ளன. 
சந்தேகம் கிளப்பும் யாராக இருந்தாலும், அவர்கள் நிலக்கரி அமைச்சகத்தில் இருந்து தாராளமாக விவரங்களை பெற்று தெளிவாகிக் கொள்ளலாம்.


-.இவ்வாறு வினோத் ராய் கூறியுள்ளதாக  தெரியவருகிறது.
________________________________________________________________________

அந்த கால அழகிப் போட்டி,வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சாத்தான் வேதம்

"உலகம் முழுவதும் அகிம்சை, சமாதானம், இரக்கக் குணத்தை பரப்ப வேண்டும்" என்று மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபட்சே அருள் வாக்கு அருளியுள்ளார்.
சாத்தான் வேதம் ஓதுவது என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இப்போது அர்த்தம் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறோம். 
எப்படிங்க இப்படியெல்லாம் கூச்ச மின்றி ,வெட்கமின்றி பேசுகிறாரோ .அதை விட இவரை மனசாட்சியியே இல்லாமல் கூ ப்பிட்டு விருந்து வைத்த நம் இந்திய அரசை த்தான் சொல்ல வேண்டும் .
சாத்தானை சிகப்பு கம்பளம் விரித்து கூப்பிட்ட மனிதாபிமானம் அற்ற அரக்கர்கள் அவர்கள்தானே . 
________________________________________________________________________________________________
சிரித்தார் ,வேலை இழந்தார்.
 ------------------------------------------
சீனாவில் வாகன விபத்தொன்றில் 36பேர்கள்  கொல்லப்பட்டனர் .
அந்த  வாகன விபத்தின் பொது மீட்புபணிக்காக இருந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கும் படங்கள் சீன ஊடகங்களில் வெளியானது.

 அந்த சிரிப்பு சம்பவம் சீனாவில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவின் இணையதளங்கள் எங்கும் பரவியிருந்த யாங் டகாய் என்ற அந்த அதிகாரியின் படங்கள் மக்கள் மத்தியில் ஆத்திரம் கலந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

விலையுயர்ந்த கைக்கடிகாரம், கைச்சங்கிலி, கண்ணாடி போன்றவற்றை அணிந்திருந்த அந்த அதிகாரியின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் ?என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியது.

விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்தமை மற்றும் பொது ஒழுங்கை கடுமையாக மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுத்து குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இதை பார்க்கையில் வேதனைதான் வருகிறது .
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்துகிறார்கள்.
போபாலில் மக்களை கொன்று குவித்தவனை  அரசு விமானம் மூலம் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறார்கள்.

மக்கள் உயிருக்கு என்றைக்கும் ஆபத்து என்று தெரிந்தும் கூட ங்குள த்தை  திறக்க முயற்சிக்கிறார்கள்.

நம் நாட்டை கெடுத்து விடும் என்று தெரிந்தே சில்லறை வணிகத்தில் அன்னியரை வரவைக்கிறார்கள்.

மும்பை தாக்குதலில் அநியாயமாக  அப்பாவிகளை அத்து மீறி வந்து கொன்று குவித்த கசாப்புக்கு இன்னமும் பிரியாணி வழங்கி வளர்த்து வருகிறோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------
அமைதி தேவை ,
 -------------------------

இது போன்ற செய்திகளையே படித்து கொதித்து போயிருக்கும் நமக்கு மனதை அமைதி படுத்த உதவுவது யோகா தான்.
அதை எப்படி செய்யலாம்,எப்போது செய்யலாம் என்பதை இனி பார்ப்போம் :

• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது .

• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.
• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.

• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும். 

_