கட்சி பாத்திரத்தை நிரப்பியவர்கள்
இந்தியாவில் உள்ள கட்சிகள் எப்போதும் அம்பானி போன்ற பெரிய பணக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும்,மக்களை கசக்கிப் புழிவதும் தெரிந்ததுதான்.
இந்திய கட்சிகளுக்கு அம்பானி ,டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
இதில் அம்பானிகள் -பிர்லா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.
இது குறித்து ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் திரட்டியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ள விவரம் பின்வருமாறு :
பிர்லா நிறுவனத்தின் பொதுத் தேர்தல் அறக்கட்டளை 2003-04 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 36.46 கோடியை காங்கிரஸ் கட்சிக்கும், ரூ. 26 கோடியை பாஜகவும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
அம்பானி காங்கிரசுக்கு 70 கோடிகள்,பாஜக 60 கோடிகள் .
டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால்,
எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு
மட்டுமல்லாமல் ஒடிஸ்ஸா உள்ளிட்ட கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களைச் சேர்ந்த
மாநில கட்சிகளுக்கும் ஏராளமான நன்கொடைகளைத் தந்துள்ளன.
இந்த நிறுவனங்களில்
பல நிலக்கரி சுரங்க லைசென்ஸ்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அறக்கட்டளை சார்பில் 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 11 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியையும் நன்கொடையாக தந்துள்ளது.வேதாந்தா நிறுவனத்தின் பொது மற்றும் அரசியல் விழிப்புணர்ச்சி அறக்கட்டளை சார்பில் 2003-05ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு 9.5 கோடி,காங்கிரசுக்கு 11கோடிகள் தந்துள்ளது.
டாடாவின் தேர்தல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 9.96 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6.82 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ. 30 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 1.58 கோடியையும் தந்துள்ளது.
ஹார்மொனி நிறுவனத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 2 கோடியும், பாஜகவுக்கு ரூ. 1.5 கோடியும்,
சத்யாம் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 2 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1 கோடியையும் தந்துள்ளது.
டோரண்ட் பவர் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 14.15 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 13 கோடியையும்,
ஏசியாநெட் ஹொல்டிங்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 10 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 2.5 கோடியும்,
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 6 கோடியும், அதே வேதாந்தாவின் மெட்ராஸ் அலுமினியம் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 3.5 கோடியும் தந்துள்ளது. சதர்ன் என்ஜினியரிங் வொர்க்ஸ், வீடியோகான் ஆகியவையும் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், சரத்பவாருக்கு தாராளமாக நன்கொடை தந்துள்ளன.
அதிமுகவுக்கு...
ஐடிசி நிறுவனம் சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 78 லட்சமும், அதிமுகவுக்கு ரூ.
55 லட்சமும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ. 33 லட்சமும்
தந்துள்ளது.
மொத்தத்தில் 2004-05 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மிக அதிகமான
நன்கொடை பெற்ற கட்சிகள் காங்கிரஸ் (ரூ. 2,008 கோடி), பாஜக (ரூ. 994 கோடி),
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி [ரூ. 484 கோடி],
இப்படி கார்ப்பரெட் நிறுவனங்களிடம் கட்சிக்கு நன்கொடை வாங்கிக்கொண்டு எப்படி அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் இருக்க முடியும்?
பாஜக நிலக்கரி முறைகேட்டில் மக்களவையை முடக்கி விவாதம் செய்ய விடாமல் ஆக்கியதன் உள்நோக்கபொருள் விளங்குகிறதா?
அதன் நோக்கம் பெரிய நிறுவனங்களை தப்பவைப்பதுதான் .அதே நேரம் மன்மோகனையும் இறக்க முயற்சியும் செய்கிறது. .
இதில் கார்பரேட் நிறுனவங்களிடம் இல்லாமல் கட்சித் தொண்டர்கள்,உண்டியல் மூலம் வருமானம் பார்த்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மட்டுமே .
____________________________________________________________________________________________
திட்டம் சில கோடி ,விளம்பரம் பல கோடி
அது சில கூடிகளுக்குள் அடங்கி விடும் .ஆனால் அதை அவர் துவக்கி வைக்க பல கோடிகள் அரசுக்கு செலவாகியுள்ளது. அவர் செல்ல தனி விமானம் அது இறங்க தனி பாதை.அவர் ஓய்வெடுக்க [5நிமிடம்]குளிர் அறை புதிதாக.
இவை எல்லாவற்றையும் விட இன்றைய தினசரிகள் அனைத்திலும் கடைசி ஒரு பக்க வண்ண விளம்பரம் சில கோடி .
இவ்வளவும் அவர் வந்து செல்லும் ஒரு மணி நேரத்துக்குத்தான்.
இதை தவிர கட்சியினர் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க பிரியாணி,குவார்ட்டர் வாகன -கைக்கூலி வேறு .
இதற்கு வர சென்னையில் தனது தோட்டத்தில் இருந்தே காணொளி முலம் திறக்கலாம்.மக்கள் வரிப்பணத்தில் வெட்டி செலவாவது மிஞ்சும்.
_____________________________________________________________________________________________
ஆண்டுக்கு 2200 கோடி வருமானம்,
*******************************
பல்வேறு நாடுகளில் இருந்து வழங்கப்படும் நன்கொடை, ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படும் ஒபியம் போதைப் பொருள், பொதுச் சொத்துகளை கொள்ளையடித்தல் உள்ளிட்டவை மூலம் இந்த தொகையை தலிபான்கள் சம்பாதித்துள்ளனர்.
ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் தலிபான்கள் ரூ.2,200 கோடிக்கு மேல் பணம் திரட்டியுள்ளனர். இத்தொகையில் ரூ.1,500 கோடி மேல்மட்டத் தலைவர்களிடம் சென்றுள்ளது.
மீதமுள்ள 700 கோடி களத்தில் செயல்படும் பயங்கரவாதிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயிரிடுபவர்கள், கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களிடம் இருந்தே அதிக அளவு பணம் கிடைக்கிறது.
மேலும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதி மக்களிடம் இருந்தும் தலிபான்கள் பணம் வசூலிக்கின்றனர்.
இவை தவிர ஆப்கானிஸ்தானில் செயல்படும் கட்டுமான நிறுவனங்கள், செல்போன் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், பெரும் தொழில்களை நடத்துபவர்களை மிரட்டியும் தலிபான்கள் பணம் பறிக்கின்றனர்.
இவை தவிர பல்வேறு நாடுகளில் இருந்து தலிபான்களுக்கு நன்கொடையாகவும் பணம் வருகிறது. இத்தொகையைக் கொண்டே வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் பயங்கரவாதிகளால் வாங்க முடிகிறது.
ஆப்கானிஸ்தானில் பெரிய அளிவில் பொருளாதாரச் சிக்கல் உள்ளபோதிலும் பயங்கரவாதிகளின் கைகளில் தாராளமாக பணம் புழங்கி வருகிறது.
______________________________________________________________________________________________