இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நின்றாவரி! படுத்தா வரி!!

படம்
  சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாகவும்,அதிபர் தப்பி ஓடியதாகவும்.தகவல். தேசிய பேரிடர் நிதியிலேயே ரூ.1,173 கோடி பாக்கி புயல் நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு. 4 வழிச்சாலை பணிகளே முடியாத நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு. நின்றாவரி! படுத்தா வரி!! ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டமிட்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: - மோடி தலைமையிலான அரசு மேலும் ஒரு ஜிஎஸ்டி வரிவிகிதத்தை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.  இந்த அநீதியைகாங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். ஜி.எஸ்.டி.யில் இருந்து வசூல் அதிகரித்து வரும் நிலையில், அரசு புதிய வரி விகிதத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. அன்றாட தேவைக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்தும் திட்டம் உள்ளது. சற்று யோசித்துப் பாருங்கள், தற்போது திருமண சீசன் நடந்து கொண்டிருக்கிறது....

யாருக்காக?,இது யாருக்காக??

படம்
  இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவு. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி. அசாம் மாநிலம் அடுத்து ஒடிசா மாநிலத்திலும் பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை. வதித்தது. தமிழகத்தில் மழை தொடரும்.இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது . டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பலர் படுகாயம்; போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் -  யாருக்காக?,இது யாருக்காக?? பிரச்சினைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம் கூடுகிறது. பிரச்சினைகளை விவாதிக்க மறுக்கும் இடமாக நாடாளுமன்றம் இருக்குமானால் நாடாளுமன்றம் எதற்கு? கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் கலவரம் ஆகியவற்றை விவாதிக்க முதல் நாளில் இருந்து கோரிக்கை வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள். அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் மு...

லக்கி பாஸ்கர் ஹர்சத் மேத்தா!

படம்
  சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட லக்கி பாஸ்கர் கதாநாயகன்  உண்மையிலேயே 1992 களில்  பங்குச் சந்தையில் 4000 கோடிகள் ஊழல் செய்த ஹர்சத் மேதா பற்றி   இந்தியாவில் 1992 நடந்த பங்குச் சந்தை மோசடிக்கு பின்புதான் இந்திய அரசாங்கல், செபி, இந்திய ரிசர்வ் வங்கிகள் டிமேட் கணக்கை உருவாக்கினார்கள். அதற்கு முழு முதற் காரணம் ஹர்ஷத் மேதா செய்த பெரிய பங்குச் சந்தை ஊழல்தான். நீங்கள் பங்குச் சந்தை டெக்னிக்ஸை தெரிந்துகொண்டால், லாப நஷ்டங்களை ஈசியாக யூகிக்க முடியும்! சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் நடந்த மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழலைப் பற்றியும் அதன் முக்கிய கதாபாத்திரமாக பேசப்பட்ட நபர்தான் ஹர்ஷத் மேத்தா. 1980-90களில் ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் மேதாவியாகக் கருதப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஹர்ஷத் மேத்தா ஒரே இரவில் பங்குச் சந்தையில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஹர்ஷத் மேத்தா தன்னிடம் உள்ள பணத்தை வைத்து, தனக்கு தேவையான நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அப்பங்குகளின் சந்தை விலையை 40 முதல் 50 சதவீதம் போல் உயந்தது போல் காட்டி, அதன்பின் அதனை நம்பி பல முதலீட்டாளர்கள் அ...

ஏன் செலவிடனும்

படம்
 ' ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் 1670ம் ஆண்டு முதல் இதுவரை 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பு' அமைச்சர்கோவி.செழியன்பெருமிதம். ஆனால் ஆவணங்களைத் மாற்றுவதில்  முதன்மை பாஜக,தானே? எந்த சட்டத்தின் மூலமாகவும் இந்தி, சமஸ்கிருதத்தை ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்க கூடாது. சொந்த விமானமே இல்லாத ஒன்றிய அரசுக்கு எதற்கு விமானதுத்துறை.- மாநிலங்களவையில் திமுக எம்.பி டாக்டர் @கனிமொழி சோமு . துறையூர் அடுத்த புளியஞ்சோலை கிராமத்தில் ,நிலத்திற்கு மேல் காய்த்து தொங்கும் வேர்கடலை. பெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகை. எதற்கு இவர்கள் பார்த்து?நிச்சயமாக மோடி ஒரு பைசா கூட தரப்போவதில்லை.இந்த கிழக்கு உணவு,வாகன வசதி,தங்க வசதின்னு வேண்டிய தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிடனும்? ச சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வின் ஆர்.எம்.பாபுமுருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில்  "ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது என்பது இயல்பு...

இதெல்லாம்

படம்
  அரசியலில சாதாரணம்ப்பா! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வின் ஆர்.எம்.பாபுமுருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில்  "ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது என்பது இயல்பு. அப்படி இருக்கையில் இதில் என்ன அவதூறு உள்ளது. நமது ஜனநாயம், சட்டம் ஒரு உறுப்பினர் மற்றொரு கட்சிக்கு செல்வதை அனுமதிக்கிறது. இதில் அவதூறு ஒன்றும் இல்லை." என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கைத் தள்ளுபடி செய்யப்...