ஊர்திகள்.
மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி நுழைவுத்தேர்வில் பணம் பெற்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? புகாரை தொடர்ந்து விசாரிக்க ஐவர் குழு நியமனம்.
திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.
இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நிறுவினார். இச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால், தமிழக அரசு வெள்ளிவிழா கொண்டாடவுள்ளது.
வரும் 30 முதல் ஜனவரி ஒன்னு வரை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. ரூ.37 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் திறந்துவைக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 நாட்கள் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
2022 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்தி வடிவமைப்பில், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளை குறிப்பாக, வ.உ.சிதம்பரனார் அவர்களை முன்னிலைப்படுத்திய அலங்கார ஊர்தியின் வடிவமைப்பினை ஒன்றிய அரசால் திட்டமிட்டு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஒன்றிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்திகளை சென்னையிலே கொடியசைத்து தொடங்கி வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அலங்கார ஊர்திகள் சென்று இலட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துப் பாராட்டியது வரலாறு.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெறுகின்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு: ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வருகின்ற மூன்றாம் ஆண்டு வாய்ப்பு வழங்கிட இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க ஆண்ட 10ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏதோ தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தமிழ்நாட்டின் சார்பிலே அலங்கார ஊர்திகள் பங்கேற்றுச் சிறப்பித்தது போன்ற ஒரு மாயையை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார்.
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகால ஆட்சியில் கடந்த 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்கின்ற விவரமே அவருக்கு தெரியவில்லை.
2014, 2016, 2017. 2019, 2020, 2021.ஆகிய 6 ஆண்டுகள் மட்டுமே அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. மேலும், அன்றைய கால கட்டங்களில் ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை ஒன்றிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினர் பலமுறை பார்த்து வியந்து பாராட்டியுள்ளதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதை அவர் உணரவேண்டும். அரசுக்கு ஆக்கபூர்வமான நல்ல யோசனைகளை கருத்துகளைக் கூறி அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இதே நேரத்தில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரபிரதேசம். குஜராத், ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற; பாரபட்சமான செயல் என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி. உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது... பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் வன்முறை சம்பவங்கள் பல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் அரங்கேறியுள்ளன.
காஷ்மீர் சிறுமி ஆசிஃபாவை வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளி களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களே பேரணி நடத்தி உலக அரங்கில் இந்தியாவிற்கு அவமரியாதை ஏற்படுத்தினர்..
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உன்னாவ் முதல் பண்டா வழக்கு எனப் பல பாலியல் கொடுமைகளை பா.ஜ.க-வினர் அரசியல் பலத்தை கொண்டு நீதிக்குப் புறம்பாக அரங்கேற்றினார்கள். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார். அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதும் பாஜக ஆட்சியில்தான். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச்சென்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பானை 2 ஆண்டுகள் சிறையில் வைத்தது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு..
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவை சேர்ந்த ராம்துலார் கோந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த அவருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுத்து எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தது பாஜக .. நீண்ட இழுபறிக்குப்பிறகு இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்த் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதனால் அவர் எம்எல்ஏ பதவியையும் இழந்தார்....
உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசியில் கடந்த 2023 நவம்பர் மாதம் ஐஐடி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்..
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவ வீரர்களை தாக்கி, அவர்களின் பெண் தோழி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது, தேசத்தையே இழிவுக்குள்ளாக்கியது.அதே மத்தியப்பிரதேச மாநிலத்தின் புனித நகரான உஜ்ஜையினியில் கடந்த செப்டம்பர் மாதம் நடு ரோட்டில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
இதேபோல், மத்தியப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார்..
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில், குக்கி பழங்குடியி னத்தைச் சேர்ந்த 2 இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குஜராத்தில் பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அவருடைய 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தது அம்மாநில பா.ஜ.க அரசு... விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதும் பாஜகவினர்தான்....
குஜராத்தில், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக க்கூறி 60-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகார்ல பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்..
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் அதிகமுள்ள கட்சி பாஜக என்பதையும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனும் ஆய்வு அமைப்பு அம்பலப்படுத்தியது.
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை செய்த தை வீடியோ எடுத்துவைத்து மிரட்டியதாக பாஜக எம்எல்ஏ முனிரத்னா கைது செய்யப்பட்டார்..முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது மலையளவு பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்தன.. நாடே அதிர்ச்சிக்குள்ளான இந்த சம்பவத்திற்குப் பிறகும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக கூட்டணி... ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தனர் பாஜக தலைவர்கள்...
பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்பாக பாஜக நிர்வாகி தேவராஜ கவுடாவும் பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைது செய்யப்பட்டார்..
நிர்வாகிகளைத் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் மீதும் பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்பட்ட வரலாறும் பாஜகவையே சேரும்..
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான எடியூரப்பா, தன்னிடம் உதவி கேட்டு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிஐடி விசாணை நடைபெற்று வருகிறது....
பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் தேசிய தலைவர் அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த் சாந்தனு என்ற பெண் குற்ற ஞ்சாட்டினார்..
மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டது.
போராடிய மல்யுத்த வீராங்கனைகளை அடித்து துன்புறுத்தி ஒடுக்கிய அவலத்தை உலகமே பார்த்தது மோடி ஆட்சியில்தான்..