திங்கள், 31 ஜூலை, 2017

லஞ்சம் தமிழகத்தில் மஞ்சம் !

தமிழ் நாட்டின் நிலை இப்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
எல்லாத்துறைகளிலும் முறைகேடுகள்,ஊழல் உச்சத்தில் உள்ளது.
நிர்வாகமோ முற்றிலும் முடக்கம்.அமைச்சர்களுக்கும்,முதல்வருக்கும் துண்டான  கட்சி இணைவதை விட இதுவரை தங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதிலும்,தன்மைகள் மீதான குற்றசாட்டுகளில் இருந்து தப்புவதிலும்தான் முழுக்கவனம்.
ஆட்சியாவது,மக்களாவது என்ற எண்ணம்தான்.
ஊழல் குற்றசாட்டுகளால் கோட்டையே மறைந்து விட்டது.
ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சிறை சென்று மறைந்தார்.அதற்கு பின்னால் வந்த முதல்வர்,இந்நாள் முதல்வர்,90% அமைச்சர்கள் என ஊழல் குற்றசாட்டு  இல்லாதவர்கள் இல்லா நிலை.
அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும்தான்.முன்னாள் தலைமைக் செயலாளர் அரை,கோட்டை வரை ஊழல் ஆய்வு நடந்து இடை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நாள் காவல்துறை அதிகாரி குட்கா ஊழலில்(நாட்குறிப்பில்) பெயர் பெற்றவர். 
இப்படி பட்ட மாநிலத்தில் ஊழலுக்கு ஆதாரம் கேட்கும் வேடிக்கைகளும் நடக்கிறது.
காரணம் இங்குள்ள ஊழல் ஒழிப்புத்துறையின் சிறப்பான செயல்பாடுகள்தான்.
 தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் முற்றிலும்  முடங்கி விட்டது. 
நிர்வாகக் குளறுபடி, நடைமுறைச் சிக்கல்கள், கறுப்பு ஆடுகளின் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், லஞ்சப் பேர்வழிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள், தோல்வியடைந்து  உள்ளன.

'லஞ்ச ஒழிப்புத்துறை' என அழைக்கப்படும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சமீபநாட்களாக, கடும் விமர்சனங் களுக்கு உள்ளாகியிருக்கிறது. 
அரசுத் துறை களில், நாளுக்குநாள் பெருகி வரும், ஊழல், லஞ்ச முறைகேடுகள் குறித்து, பொதுமக்கள் தரப்பில் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

'அரசுத் துறைகளில், 1,000, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் அடிமட்ட ஊழியர்களைப் பிடிக்கும் வேகத்தை, கோடிக்கணக்கில் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத்துறை அதி காரிகள் மீது காட்டுவதில்லை' என விமர்சனங்கள் எழுகின்றன.அது உண்மைதான்.

இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என, பல நுாறு பேருடன் இயங்கும் லஞ்ச ஒழிப்புத் துறையில், நான்கு சட்ட ஆலோசகர்கள், 34 துணை சட்ட ஆலோசகர்கள், தொழில்நுட்ப உதவிக்கு தனி அதிகாரிகள் என, பெரும் படை உள்ளது.


இந்த படையினரால், 2015 - 16ல், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில், 82 பேர் தான். 
இவர்களில் பெரும்பாலானோர், மின் வாரியம், வருவாய்த் துறை என, குறிப்பிட்ட சில துறை களில் பணியாற்றும் அடிமட்ட அலுவலர்கள், பணியாளர்கள். 
ஆனால், 2014 - 15ல், லஞ்ச வழக்கில், கைது செய்யப்பட்டோ ரின், எண்ணிக்கை 171. 
அடுத்த ஆண்டில், இந்த கைது, பாதியாக குறைந்துள்ள காரணம் தமிழகத்தில் ஊழல் நோய் ஒழிக்கப்பட்டு விட்டதுதானா?
இல்லை. இந்த துறையே அந்த நோயால் முடங்கி விட்டதுதான்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி களை நியமிக்கும் முன், அவர்களது ஒழுக்கப் பின்னணி கூர்மையாக ஆராயப்படும். 'கை சுத்தமான'வர்கள் மட்டுமே, இத்துறையில் நியமிக்கப்பட்டனர். 
தற்போது, அரசியல், அதிகாரிக ளின் செல்வாக்குடன், சிபாரிசு பெற்ற, முறைகேடு பேர் வழிகள், பலரும் ஊடுருவி விட்டனர். இவர்கள், 'கை நிறைய வருமானம்' பார்த் தவர்கள். 
நேர்மை யற்ற இவர்கள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கைது நடவடிக்கை எடுப்பனரா, என்பது தான், பலரும் எழுப்பும் கேள்வி.

இந்த கறைபடிந்த அதிகாரிகளில் சிலர், லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்க வருவோரின் விபரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவித்து  குற்றம் சாட்டுபவரையே லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்து 'கூலி' பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன.
 இது போன்ற முறைகேடுகளால்,  குற்றசாட்டு கொடுக்க பயந்து ஒதுங்கிக்கொள்பவர்கள் அதிகரித்து,கைது எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், நடைமுறைச் சிக்கல் களும் அதிகரித்து விட்டன.அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், லஞ்சம் கேட்பதாக, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விட முடியாது.
அவர், தனக்கு மேல் உள்ள, டி.எஸ்.பி., வழியாக, கண்காணிப்பாளருக்கு, எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். அவர், சில கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புவார். 
அதற்கு, இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்து, தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகே, அனுமதி கிடைக்கும்.

இந்த நடைமுறைக்கே, சில நாட்கள் ஓடிவிடும்; அதற்குள், புகார்தாரர் வெறுத்துப் போய்விடுவார் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கே தம்மை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என, பயந்து ஓடிவிடுவார். அதிகாரிகளின் இழுத்தடிப்பால், இதுபோன்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 'அரசுத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கிறார்' என, ஒருவர் புகார் அளிக்க வந்தால், அவரிடம், 'வாய்ஸ் ரெக்கார்டிங்' செய்து வருமாறு, சமீபகாலமாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வற்புறுத்துகின்றனர். 
அதாவது, புகார்தாரர், தன் மொபைல் போன் அல்லது பிரத்யேகமான, 'வாய்ஸ் ரெக்கார்டர்' சாதனத்தை, தன்னுடன் எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட லஞ்சம் கேட்கும் அதிகாரியை சந்தித்து உரையாட வேண்டும். 
அவர், 'எனக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் தா' என, கேட்கும் உரையாடலை, அவருக்கு தெரியாமல், பதிவு செய்து, அதை, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.


அந்த ஆடியோவை, உயர் அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே,இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்வார்.இங்கு தான் சிக்கலே எழுகிறது. முதல் முறை லஞ்சம் கேட்டதால் தான், பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்க வந்தார். அதே நபர், லஞ்சம் கேட்ட அதிகாரியை மறுபடியும் சந்தித்து, 'சார் உங்களுக்கு லஞ்சம் எவ்வளவு வேண்டும்' எனக் கேட்டால், அவர் உஷாராகிவிடமாட்டாரா. இந்த நடைமுறையும், லஞ்சப் பேர்வழிகளின் கைது எண்ணிக்கை வீழ்ச்சி யடைய முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

காணொளியை கொடுத்தாலே அதில் வருவது நான்தான் குரல் டப்மாஷ் என்று சொல்லுபவர்கள் அதிகமாகி விட்டனர்.

இதுகுறித்து, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:லஞ்ச ஒழிப்புத்துறை மீதான நம்பிக்கை, மக்களிடம் குறைந்து விட்டதா கவே தெரிகிறது.புகார்தாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நடைமுறைச் சிக்கல்க ளால், கைது நடவடிக்கையை, உடனே மேற் கொள்ள முடிவதில்லை. இத்துறையில் பணியாற்றும் சில கறுப்பு ஆடுகள், ரகசியத் தகவல்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விற்று விடுகின்றனர்.


ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத் திலும், எங்களின் கைது நடவடிக்கைக்கு உதவ, மாவட்ட ஆய்வு அலுவலர் ஒருவர் இருப்பார். அதுபோன்ற பொறுப்பில் இருக்கும் அதிகாரி களும், எங்களுக்கு ரகசிய தகவல்களை அளிக்கலாம்; கைது நடவடிக்கைக்கு உதவ லாம். ஆனால், அவர்களின் உதவியும் வெகுவாக குறைந்து விட்டது.

புகார் அளிக்க வரும் நபர், சம்பந்தப்பட்ட லஞ்ச அதிகாரியை அல்லது ஊழியரை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார். எங்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல் களால், இழுத்தடிக்கப்படும்போது, அவர் நம்பிக்கையை இழந்துவிடுவார்.

கறுப்பு ஆடுகளை களையெடுத்து, நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும். நேர்மை
யான அதிகாரிகளை இத்துறைக்கு நியமிக்க வேண்டும். அப்போதுதான், லஞ்சப் பேர்வழி களுக்கு சிம்ம சொப்பனமாக இத்துறை மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசுத் துறை அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி, முறைகேடாக பணம் பெற்றிருக்கிறார் என, தெரிய வந்தால், உடனே, லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கு சென்று சோதனை செய்வர். பணத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது.

ஆனால், இதுபோன்ற திடீர் சோதனைகளை நடத்தக்கூடாது என, லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு, மேலிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 இதுவும் 'நோட்டு எண்ணும்' அதிகாரிகளுக்கு, மிகவும் வசதியாக போய்விட்டது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
இதற்கு காரணம் எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி ஊழல் முறைகேடு நோய் பரவி தமிழ் நாட்டையே அரித்து விட்டதுதான் இந்த வாய் மொழி ஆணைக்கு காரணம்.
=====================================================================================
ன்று,
ஜூலை-31.

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)
  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)

=====================================================================================

ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஒற்றை தலைவலிஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது.
இதன் முக்கியமான அறிகுறிகள்: ஒருபக்க தலைவலியுடன் வாந்தி குமட்டல் ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல்.
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.
பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது “Z” வடிவங்கள் கண் முன் தோன்றலாம்.
கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம். நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம்.
உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும்.
1.மரபார்ந்த ஒற்றை தலை வலி
2.பொதுவான ஒற்றை தலை வலி
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தலைவலி மரபார்ந்த ஒற்றைத்தலைவலி எனவும். அப்படியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வருவது பொதுவான ஒற்றை தலைவலி எனவும் கூறப்படுகிறது.
பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒளி மற்றும் ஒலி உணர்வது பிடிப்பதில்லை ஆகையால் அமைதியான இருளான இடத்தில் இருப்பதையே விரும்புவர்.
ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது.
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் அல்லது 5 ஐடிராக்சி டிரிப்டமைன் எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.
காரணங்கள் :
இந்நோய் உருவாக பின்வரும் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்:
மன அழுத்தம், அயர்ச்சி,நீண்ட பயணம், அழுவதற்கு பின்,பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்கு மத்தியில் இருக்கும்போது, வானிலை மாற்றம் ஏற்படும்போது தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது, உணவு நேரத்தை புறக்கணிக்கும்போது, அதிகமான சத்தம் மற்றும் வெளிச்சம்,பெட்ரோல் அல்லது வாசனை பொருட்கள் நுகர்தல், தலை சாயம்வ,போர்வையை முழுவதுபோர்த்திக்கொண்டு உறங்கும்போது,
தலையணையில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கும்போது, இறுக்கமான உடை அணியும்போது, கழுத்தில் இறுக்கமான ஆபரணம் அணியும்போது, பருவ மாற்றத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையும்போது, அதிக வெயிலில் நடக்கும்போது, தலை குளித்த பிறகு கூந்தலை சரியாக காய வைக்காமல் இருக்கும்போது,முடியை இறுக்கமாக பின்னும்போது, கண்களுக்கு லென்ஸ் அணியும்போது,பெண்களுக்கு மாத விலக்கின்போது, குளிக்கும்போது முகத்தில் தண்ணீர் வேகமாக என காரணங்கள் பல உள்ளன.
தூண்டும் காரணிகள் :
ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். மாதவிலக்கின் போது மன அழுத்தம், வெப்பம்,புகை, சிகரெட், உயர்வான இடத்தின் அழுத்தம், அது மட்டுமின்றி கொட்டாவி விடுதல், எடை எடை தூக்குதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம்.
50 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு ஒற்றை தலை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பெண்களுக்கு மெனோபாஸ் ஆனவுடன் ஒற்றை தலை வலி குறைய வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கான ஒற்றை தலை வலி பெரும்பாலும் 2 மணி நேரத்திற்கு நீடிக்கின்றது.
ஒற்றை தலைவலி இருக்கும் குடும்பத்தில் அவர்கள் வாரிசுகளுக்கும் அது தொடர வாய்ப்பிருக்கிறது.
நீடிக்கும் காலம்:
பெரும்பாலும் 60% ஒற்றை தலைவலி தலை ஒரு பக்கம் மட்டுமே வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி இருக்கும்.
72 மணி நேரம் நீடிக்கும். வலி இருக்கும் பக்கம் பார்வை தற்காலிகமாக தடைபடும்.ஒரு பகுதி மரத்து போகலாம்.
தலைக்குள் வெளிச்சம் பாய்வதைப்போல் உணர்வார்கள். கை, கால், நாக்கு, உதடு ஆகியவை பலமிழக்கும்.
காய்ச்சல், நாளுக்கு நாள் அதிகமாகும் தலை வலி, தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வலி, வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.
சிகிச்சை:
ஒற்றை தலை வலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொண்டால் வலியை கட்டு படுத்தலாம்.
ஒற்றை தலைவலியை உண்டாக்கும் மேற்கூறிய காரணிகளையும் சூழ்நிலைகளையும் இனம் கண்டு அவற்றை தவிர்ப்பதால் இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
பாட்டி வைத்தியம்:
எந்தவொரு நோய்க்கும் நமது முன்னோர்கள் சில இயற்கை மருந்துகளை சொல்லி இருக்கின்றனர். அதை போலவே இந்த ஒற்றை தலை வலிக்கும் சில குறிப்புகள் உண்டு. அவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
1. ஆரஞ்சு பழ தோலை எடுத்து சாறு பிழிந்து தலை வலி இருக்கும் பக்கத்தின் எதிர் காதில் சிறிதளவு ஊற்ற வேண்டும். இது தற்காலிக சிகிச்சை தான்.
2. ஒரு டம்பளர் காரட் சாறுடன் 1/4 டம்பளர் பசலை கீரை சாறு மற்றும் 1/4 டம்பளர் பீட் ரூட் சாறு சேர்த்து குடித்தால் தலை வலி குறையும். இத தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

=====================================================================================
ன்று,
ஜூலை-30.
பாக்தாத்


  • பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  • பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  • முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
  • ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

அரசு ஊழியர் இயக்க முன்னோடி 

தோழர் ஆர்.முத்துசுந்தரம் 

காலமானார்

தமிழக அரசு ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார். அவருக்கு வயது 66.
சமீப மாதங்களாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஈரோடுமாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். 
 சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (29.7.2017) மாலை 6 மணி அளவில் மருத்துவ மனையிலேயே மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களும் , இடதுசாரி இயக்கங்களின் தோழர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த தோழர் ஆர்.முத்துசுந்தரம், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கல்வித்துறையில் அமைச்சுப் பணி ஊழியராக தனது அரசுப்பணி வாழ்க்கையை துவக்கினார். 
கல்வித் துறை ஆணையரின் தனிச்செயலாளர் பதவிவரை அரசுப் பணியில் உயர்ந்தார். 
1978-80 காலக்கட்டத்தில் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதற் காக பணியாற்றிய முன்னோடித் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர் தோழர்முத்துசுந்தரம். 
சங்கத்தை கட்டி அமைப்ப தற்காக மாநிலம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ஊழியர்களை அணி திரட்டியவர்.
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தமிழக அரசு ஊழியர்களின் போரா ட்ட குணமிக்க தோழராக - அவர்களது அன்புக்குரிய தலைவராக உயர்ந்தவர். பின்னாட்களில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக, அகில இந்திய தலைவராக, அகில இந்திய கவுரவத் தலைவராக பொறுப்பு வகித்து, நாடு முழுவதும் அரசுஊழியர்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் முத்துசுந்தரம்.அகில உலக தொழிற்சங்க சம்மேள னத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பரிணமித்தவர் அவர்.
 பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க சம்மேளன மாநாடுகளில் பங்கேற்றவர்.
ஆர்.எம்.எஸ் என்று அன்புடன் அரசு ஊழியர்களால் அழைக்கப்படும் முத்து சுந்தரம் இழப்பு ஊழியர்களுக்கு பேரிழப்பு.
======================================================================================

நாள் தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலம் தேறும்.
வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு.
 அனைத்து வகை வாழைப்பழங்களிலும் விதவிதமான சத்துக்கள் இருக்கின்றன. 
5cf48bcc8b2cbb126da4226631cee84d
இதில் ஹீமோ குளோபின் அதிகமாக இருக்கிறது. தினமும் நேந்திரம் பழமும், பாலும் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். 
மஞ்சள் வாழைப்பழம், செவ்வாழைப் பழம் குடல் புண்ணை ஆற்றும். 
மலை வாழைப்பழம், மலச்சிக்கலை போக்கும். பேயன் பழம் குடல் நச்சுகளை அழிக்கும்.
=======================================================================================
திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.
* திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.
* குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

* 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.
* அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.
* தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.
* காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.
* மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.
* குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்.
=====================================================================================

சனி, 29 ஜூலை, 2017

நாங்களும் கூட இலுமினாட்டி?

சமூக வலைத்தளங்களில் மேயும் போது அடிக்கடி இலுமினாட்டிகள் என்ற வார்த்தையாடலை சந்தித்துள்ளேன்.உங்களில் பலரும் என்னைப்போல் இதை கடந்து சென்றிருக்கலாம்.
கமல்ஹாசன் ஒரு இலுமினாட்டி  என்று ஒரு கட்டுரையும்,காணொலியையும் கண்ட பொது ஆர்வத்துடன் படித்தேன் .
அதில் இலுமினாட்டிகள் 18 பேர்கள்தான் இந்த உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரையும் கொடுத்திருந்தார்கள்.
அவ்வளவும் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள்,சாதனையாளர்கள் பெயர்கள்.
இதை சொல்ல இலுமினாட்டி என்ற பிரயோகம் எதற்கு.உண்மைதானே.அவர்கள் சாதனையாளர்களாக இருப்பதினால்தானே உலகில் முக்கிய இடங்களை பெறறார்கள்.இதில் இலுமினாட்டி எதற்கு?
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களால் இந்த இலுமினாட்டி இன்றைய மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதில் சைமனின் நாம் தமிழர் கட்சியினர்  மிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.இந்த இலுமினாட்டி பட்டியலில் வருபவர்கள் 90% யூதர்கள் ,இடது சாரிகள்,பகுத்தறிவாளர்கள் இறை மறுப்பாளர்களாக  இருப்பதுதான் இலுமினாட்டி பற்றிய சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது.
இந்த இலுமினாட்டியே வலது சாரிகள் தங்கள் எதிரிகளை களையெடுக்க அல்லது அவர்கள் மீது அவதூறை மக்கள் மத்தியில் பரப்பி அழிக்க உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புதான்  என்ற உண்மையை புரிய முடிந்தது.

இதில் வேடிக்கை இலுமினாட்டிகள் சின்னம் ஒற்றைக்கண் முக்கோணத்தில் இருப்பதால்.
 கமல்ஹாசன் "பிக் பாஸ் "சின்னம் அந்த கண் . அவர் இலுமினாட்டி ரகசிய அமைப்பில் உள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரமாம்.
அது தொடர்பான மாற்று தளத்தில் வெளியான கலை மார்க்ஸ் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ளது.

யார் இந்த இலுமினாட்டிகள்? 
அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.
அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.
18-ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.
மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.
ஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.
மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.
இலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். 
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது. 
தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.
இந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது.
முதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி. பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது. 
இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, “பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக” திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல்.
இலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.
யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை” (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 
தமிழில் அதற்கு “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்று தலைப்பிட்டுள்ளனர். 
மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
சுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர். 
அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது.
ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். 
அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை.
அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை”. இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார்.
 முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.
1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது. 
நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.
அந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். 
உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. 
ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.
இலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல.
கலை மார்க்ஸ்
நன்றி;மாற்று.

இதை வெளியிட்டதால் நாங்களும் கூட இப்போது இலுமினாட்டி கும்பலில் பெயர் சேர்க்கப்படலாம் .
=========================================================================================

ன்று,
ஜூலை-29.

  • உலக புலிகள் தினம்
  • தாய்லாந்து, தாய்மொழி தினம்
  • ருமேனியா தேசிய கீத தினம்
  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம்  ஆரம்பிக்கப்பட்டது(1957)
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)
==========================================================================================


வெள்ளி, 28 ஜூலை, 2017

மோடியின் "புதிய இந்தியா" பா.ஜ.க சாதனை மலர்

.. பிஜேபி & மோடி செய்தசாதனைகள்!

தமிழக அளவில் செய்த சாதனைகள்:-

1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது!

2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!

3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!

4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!

5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!

6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!

7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!

8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!

9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!

10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!

11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!

12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!

13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!

14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!

15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!

16. நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி தமிழக மணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண் அள்ளி போட்டது.

17. OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது!

18. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது!
 மோடியின் புதிய இந்தியாவில் பழைய குடிமகன்  நிலை 


அகில இந்திய அளவில் செய்த சாதனைகள்:-

1. உலக மகா  வியாபம் ஊழல் அது சம்பத்தப்பட்ட சாவுகள் (கொலைகள்)!இன்றுவரை  சாவுகள் தொடர்கின்றன.

2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது!

3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது!

4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை அம்பானி ஜியோ மூலம் கசியவிட்டது!

5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு(சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது!

6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 100 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது!

7. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது!
8. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி!

9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது!

10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது!

11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது!

12. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாகா செய்தது!

13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது!

14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது!

15. ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கி, பண முடைப்பை உருவாக்கி தொழில்களை நாசமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது.

16. GST என்ற பெயரில் உலகிலேயே அதிகபட்ச வரிகளை விதித்து மக்களை கசக்கி பிழிவது.

17. உலகமெல்லாம் சுற்றியும் இந்தியாவின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கியது.

18. முன்னெப்போதும் இல்லாதவாறு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு.

19. பலகீனமாக பிரதமரால் சீனாவின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது.

20. அதானி & அம்பானி கார்பரேட் கும்பலின் அரசாக செயல்படுவது.

21.அருணாசல பிரதேசம்,கோவா மணிப்பூர் ,புதுசேரி,தமிழ் நாடு,பீகாரில் பாஜக ஆட்சியை கொண்டுவர அனைத்து அரசுஆயுதங்களையும் பயன்படுத்தி  முறைகேடுகளை செய்து வருவது.
ஜனநாயகம் ,மதநல்லிணக்கம்,மனிதாபிமானத்தை சின்னாபின்னம் செய்துவருவது.

==============================================================================================

ன்று,
ஜூலை-28.

  • உலக கல்லீரல் நோய் தினம்
  • முதல் முறையாக பிரிட்டனில் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது(1586)
  • பெரு விடுதலை தினம்(1821)
  • முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)
  • வெனிசுலா முன்னாள் அதிபர்  ஹியூகோ சாவேஸ் பிறந்த நாள் (1954)
  • =========================================================================================
                                                      இது புதிய தமிழ் நாட்டின் நிலை.

Subramanian SwamyVerified account @Swamy39  4 hours ago
Nitish Gymnastics

வியாழன், 27 ஜூலை, 2017

ஆட்சியை கைப்பற்றும் ரகசியம்.

பலர் நிதிஷ் குமாரை அரசியலில் நாணயமானவர் என்றே இதுவரை நினைத்து வந்திருக்கலாம் .
ஆனால் தானும் இந்த சாக்கடையில் ஊறிய அரசியல் மட்டைதான் என்று காட்டி விட்டார்.
   
"ஊழல் செய்தவர்களுடன் இணைந்து ஆட்சி செய்ய என்னால் முடியாது "என்று நிதிஷ் கூறுவது சசிகலா கட்சிக்காக தியாகங்கள் செய்தவர் என்ற நகைச்சுவை துணுக்கை விட நகைச்சுவை மிக்கது.

லாலு மீது சிபிஐ வழக்கு போட்டது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு முன்பே ,அதன் பின் லாலு மத்திய ரெயில்வே அமைச்சராக எல்லாம் இருந்திருந்திருக்கிறார். 


அதெல்லாம் போகட்டும்.இப்போது லாலு,காங்கிரசுடன் கூட்டணி வைத்து பாஜக கூட்டணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது இதெல்லாம் நிதிஷுக்கு தெரியாதா?அல்லது திடீர் மறதி வியாதியால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாரா?

திடீர் ஊழல் எதிர்ப்பு மாவீரன் ஒப்பனை நிதிஷ் குமாருக்கு பொருந்தவில்லை.
அவர் மீதான நம்பிக்கையை மக்கள் மனதில் சிதைத்துத்தான் விட்டது.

 பாஜக என்ன ஊழலுக்கு எதிரான கண்ணகி பரம்பரையா? பங்காரு லட்சுமணன் காலத்தில் இருந்தே பாஜக மீது ஊழல் கறை உள்ளது.

இன்று அகில இந்திய அளவில் ஊழல்வாதிகள் கலங்கரை விளக்கமே பாஜகதான்.
அது கார்பரேட்களாக இருந்தாலும் சரி.அரசியல்வியாதிகளாக இருந்தாலும் சரி.

இன்றைய ஊழலின் உச்ச நட்சத்திரம் அதிமுக அமைச்சர்களோ,சசிகலா,தினகரன் ஆகியோரை பாதுகாத்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தனது காரியத்தை சாதித்து வரும் கட்சி பாஜகதான்.
இது தமிழக பாமரன் கூட அறிந்த உண்மை.

அதிமுகவின் ஊழலை கமல்ஹாசன் பேசினால் அதிமுகவினரை விட  அதிகம் பொங்குவது பாஜக எச்ச.ராசா,தமிழிசைதான்.

பாஜக வுடன் நிதிஷுக்கு ஏற்பட்ட கள்ள உறவே "லாலு ஊழல் நினைவுக்கு வரக் காரணம்.

காங்கிரஸ் ,லாலு கட்சியை கழட்டி விட்டு விட்டு பாஜக வுடன் ஆட்சி அமைத்து பல பலன்களை அனுபவிக்க எண்ணியவர்தான் நிதிஷ்.

அதற்காக கூட்டணியில் பிளவை உண்டாக்க என்னவெல்லலாமோ செய்து பார்த்தார்.கூட்டணி பிளவதாக தெரியவில்லை.
குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க ஆதரவு தெரிவித்தார்.
பின் பாஜக ஆதரவு என்று கரணம் அடித்தார்.

அதிலும் பிளவு நடக்க வில்லை.

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி ஊழல் செய்ததாக பாஜக கட்சியின் சிபிஐ வழக்கு தொடுத்தது அதை வைத்து பல முயற்சிகள் செய்தும் தேஜஸ்வி பதவி விலக்காததால் கெடு கொடுத்து பின் தானே விலகி ,அதன் பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.

எவ்வளவு அசிங்கங்கள் இதில்.
பாஜகவை எதிர்த்துதான் காங்கிரஸ்,லாலு கட்சி கூட்டணி வைத்து மக்களிடம் வாக்குகள் வாங்கி முதல்வரானார்.

ஆனால் இன்று பாஜகவின் ஆசை வார்த்தை எதற்கோ மயங்கி அந்த எதிரியுடன் சேர்ந்து ஆட்சி.
இந்திய அரசியல் எவ்வளவு துரோகங்களை வாக்களிக்கும் எந்திரமாக மாறிய மக்களுக்கு செய்கிறது என்பதற்கு இன்று தமிழக அதிமுகவும்,நிதிஷ் குமாரும்தான் அசிங்கமான உதாரணங்கள்.
தேஜஸ்வி ஊழல் செய்த ஆண்டு என சிபிஐ குறிப்பிட்டுள்ள ஆண்டினை கணக்கிட்டால் அப்போது தேஜஸ்வி வயது 8தானாம்.

"அப்போது தான் 3ம் வகுப்பு பிடித்ததாகவும்,அப்போது தான் எப்படி அரசியலில் நுழைந்து ஊழல் செய்திருப்பேன்,அதற்கான நடைமுறை அறிவு எப்படி அக்காலக்கட்டத்தில் இருக்கும்.
அந்த ஊழல் உண்மையிலேயே நடந்ததாக இருந்தால் ஆழமாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் என்னை குற்றம்சாட்டுவது தவறு" என்றும் அவர் விளக்கம் கொடுத்து "துணை முதல்வர் பதவியை விட்டு விலகமாட்டேன் " என்றும் சொல்லி விட்டார்.

நிதிஷ் உண்மையானவராக இருந்தால் தேஜஸ்வி கூறுவதை கணக்கில் கொண்டு சிபிஐ விசாரணை நடக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் நிதிஷ் எண்ணம் அதுவா இல்லையே.பாஜக கூட்டணி அரசுதானே குறி.
பதவி விலகல் நாடகம்.பின் பாஜக கூட்டணி ஆட்சி பட்டியல் அன்றே ஆளுநரிடம்.பீகார் பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி உடனே  ஆளுநர்  கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். 

இதில் இருந்தே எல்லாம் முன்பே கணக்கிடப்பட்ட வை என்பதை பகிரங்கப்படுத்தி விட்டது.

பதவி விலகியவர் அதன் பலாபலனை பார்த்து அல்லவா அடுத்த நடவடிக்கை தற்போதைய கூட்டணி காங்கிரசுடன் இணைந்து எடுத்திருக்க வேண்டும்.

காங்கிரசு ஒத்து வரா நிலையில் அவர் பாஜகவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
ஆகவே அவர் குறிக்கோள் ஊழலோ,தேஜஸ்வியோ ,அல்ல பாஜக கூட்டணி ஆட்சி மட்டும்தான் .
அதற்காக அவருக்கு என்ன வாக்குறுதிகளை பாஜக தந்துள்ளது என்பது இனி மெல்ல வெளியாகும்.
கடைசியாக ஒரு வேண்டுகோள்.

தமிழ் நாட்டில் அதிமுகவினரின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனது பினாமி அரசாக பாஜக மாற்றியுள்ளது.

அதே பாஜக ஊழலை எதிர்ப்பதாக நாடகமாடி பீகாரில் ஆட்சியமைக்கிறது.
ஆக தான் ஆட்சியமைக்க மாடு,மதம்,ஊழல் என மாநிலத்திற்கேற்ப ஆயுதங்களை பாஜக கையாள்கிறது.

 அந்தவகையில்தான்  இப்போதுக்கு நினைவில் வரும் பாடல்
"அடங்காத காலை ஒன்று அடிமாடாய் போனதடி "தான்.

ஆட்சி அமைக்க அதனிடம் சிபிஐ,தேர்தலானையம் ,வருமானவரித்துறை,அமுலாக்கப்பிரிவு என பல கருவிகள் கைவசம் உள்ளது.


அதனிடம் இல்லாதவைகள்   மனசாட்சி,மனிதாபிமானம் மட்டுமே .உத்தரப் பிரதேச மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  450 மத கலவரங்கள் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ , கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 450 மத கலவரங்கள் நடந்துள்ளது. 
இதில் 162 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 155 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 133 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 270 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 68 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 105 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 94 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 205 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 57 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 92 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும்,56 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் 200 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 63 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 65 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 72 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது என கூறினார்.
இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள்.
 மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு மக்களை மதவெறி உணர்ச்சி நிலையிலேயே வைத்திருந்து பாஜக எப்படி ஆட்சியை பிடிக்கிறது என்பதற்கு இதுவே மத்திய அர சின் ஒப்புதல் வாக்குமூலம்.
கமல்ஹாசனை டுவிட்டரில் இருந்துவெளிவரச்சொல்லும் தமிழிசை தனது பாஜக தலைவாஸ் களை முதலில் டுவிட்டரில் இருந்து கரையேற்ற முயற்சிக்க கேட்டுக்கொள்கிறோம்.

மோடி,சுஷிமா,சு.சாமி ,ஜெட்லீ என ஒரு கூட்டமே டுவிட்டரில் காலம்  கடத்துகிறது.

பீகார்  ச.ம.உறுப்பினர் பலம்.

(லாலு) ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு        80 

(நிதிஷ்குமார் ) ஐக்கிய ஜனதாதளத்திற்கு  71 

 பாஜக  கூட்டணி                                          58 

காங்கிரஸ்                                                    27. 

ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை.

"ஆளுநர் நிதிஷ்குமார் -பாஜக ஆட்சி அமைக்க கூப்பிடும் முன்னர் அதிக உறுப்பினர்கள் கொண்ட பெரிய கட்சியான  தங்களை ஆட்சி அமைக்க கூப்பிட வேண்டும்.நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.ஐக்கிய ஜனதா தளம்  உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு ஆதரவு தருவதாகவும்"  துணை முதல்வர் தேஜஸ்வி ஆளுநரிடம் நேரில் தெரிவித்துள்ளார்.

=====================================================================================

ன்று,
ஜூலை-27.
  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)

  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • முன்னாள் குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
======================================================================================