நாங்களும் கூட இலுமினாட்டி?
சமூக வலைத்தளங்களில் மேயும் போது அடிக்கடி இலுமினாட்டிகள் என்ற வார்த்தையாடலை சந்தித்துள்ளேன்.உங்களில் பலரும் என்னைப்போல் இதை கடந்து சென்றிருக்கலாம்.
கமல்ஹாசன் ஒரு இலுமினாட்டி என்று ஒரு கட்டுரையும்,காணொலியையும் கண்ட பொது ஆர்வத்துடன் படித்தேன் .
அதில் இலுமினாட்டிகள் 18 பேர்கள்தான் இந்த உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரையும் கொடுத்திருந்தார்கள்.
அவ்வளவும் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள்,சாதனையாளர்கள் பெயர்கள்.
இதை சொல்ல இலுமினாட்டி என்ற பிரயோகம் எதற்கு.உண்மைதானே.அவர்கள் சாதனையாளர்களாக இருப்பதினால்தானே உலகில் முக்கிய இடங்களை பெறறார்கள்.இதில் இலுமினாட்டி எதற்கு?
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களால் இந்த இலுமினாட்டி இன்றைய மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதில் சைமனின் நாம் தமிழர் கட்சியினர் மிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.இந்த இலுமினாட்டி பட்டியலில் வருபவர்கள் 90% யூதர்கள் ,இடது சாரிகள்,பகுத்தறிவாளர்கள் இறை மறுப்பாளர்களாக இருப்பதுதான் இலுமினாட்டி பற்றிய சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது.
இந்த இலுமினாட்டியே வலது சாரிகள் தங்கள் எதிரிகளை களையெடுக்க அல்லது அவர்கள் மீது அவதூறை மக்கள் மத்தியில் பரப்பி அழிக்க உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புதான் என்ற உண்மையை புரிய முடிந்தது.
இதில் வேடிக்கை இலுமினாட்டிகள் சின்னம் ஒற்றைக்கண் முக்கோணத்தில் இருப்பதால்.
கமல்ஹாசன் "பிக் பாஸ் "சின்னம் அந்த கண் . அவர் இலுமினாட்டி ரகசிய அமைப்பில் உள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரமாம்.
அது தொடர்பான மாற்று தளத்தில் வெளியான கலை மார்க்ஸ் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ளது.
யார் இந்த இலுமினாட்டிகள்?
அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.
நன்றி;மாற்று.
இதை வெளியிட்டதால் நாங்களும் கூட இப்போது இலுமினாட்டி கும்பலில் பெயர் சேர்க்கப்படலாம் .
=========================================================================================
இன்று,
ஜூலை-29.
கமல்ஹாசன் ஒரு இலுமினாட்டி என்று ஒரு கட்டுரையும்,காணொலியையும் கண்ட பொது ஆர்வத்துடன் படித்தேன் .
அதில் இலுமினாட்டிகள் 18 பேர்கள்தான் இந்த உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரையும் கொடுத்திருந்தார்கள்.
அவ்வளவும் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள்,சாதனையாளர்கள் பெயர்கள்.
இதை சொல்ல இலுமினாட்டி என்ற பிரயோகம் எதற்கு.உண்மைதானே.அவர்கள் சாதனையாளர்களாக இருப்பதினால்தானே உலகில் முக்கிய இடங்களை பெறறார்கள்.இதில் இலுமினாட்டி எதற்கு?
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களால் இந்த இலுமினாட்டி இன்றைய மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதில் சைமனின் நாம் தமிழர் கட்சியினர் மிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.இந்த இலுமினாட்டி பட்டியலில் வருபவர்கள் 90% யூதர்கள் ,இடது சாரிகள்,பகுத்தறிவாளர்கள் இறை மறுப்பாளர்களாக இருப்பதுதான் இலுமினாட்டி பற்றிய சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது.
இந்த இலுமினாட்டியே வலது சாரிகள் தங்கள் எதிரிகளை களையெடுக்க அல்லது அவர்கள் மீது அவதூறை மக்கள் மத்தியில் பரப்பி அழிக்க உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புதான் என்ற உண்மையை புரிய முடிந்தது.
இதில் வேடிக்கை இலுமினாட்டிகள் சின்னம் ஒற்றைக்கண் முக்கோணத்தில் இருப்பதால்.
கமல்ஹாசன் "பிக் பாஸ் "சின்னம் அந்த கண் . அவர் இலுமினாட்டி ரகசிய அமைப்பில் உள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரமாம்.
அது தொடர்பான மாற்று தளத்தில் வெளியான கலை மார்க்ஸ் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ளது.
யார் இந்த இலுமினாட்டிகள்?
அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.
இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.
அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.
18-ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.
மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.
ஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.
மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.
இலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர்.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது.
தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.
இந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது.
முதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி. பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது.
இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, “பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக” திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல்.
இலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.
யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை” (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
தமிழில் அதற்கு “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்று தலைப்பிட்டுள்ளனர்.
மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
சுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.
அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது.
ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும்.
அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை.
அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை”. இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார்.
முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.
1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது.
நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.
அந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர்.
உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது.
ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.
இலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல.
– கலை மார்க்ஸ்
இதை வெளியிட்டதால் நாங்களும் கூட இப்போது இலுமினாட்டி கும்பலில் பெயர் சேர்க்கப்படலாம் .
இன்று,
ஜூலை-29.
- உலக புலிகள் தினம்
- தாய்லாந்து, தாய்மொழி தினம்
- ருமேனியா தேசிய கீத தினம்
- பன்னாட்டு அணுசக்தி முகமையகம் ஆரம்பிக்கப்பட்டது(1957)
- அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)