லஞ்சம் தமிழகத்தில் மஞ்சம் !
தமிழ் நாட்டின் நிலை இப்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
எல்லாத்துறைகளிலும் முறைகேடுகள்,ஊழல் உச்சத்தில் உள்ளது.
நிர்வாகமோ முற்றிலும் முடக்கம்.அமைச்சர்களுக்கும்,முதல்வருக்கும் துண்டான கட்சி இணைவதை விட இதுவரை தங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதிலும்,தன்மைகள் மீதான குற்றசாட்டுகளில் இருந்து தப்புவதிலும்தான் முழுக்கவனம்.
ஆட்சியாவது,மக்களாவது என்ற எண்ணம்தான்.
ஊழல் குற்றசாட்டுகளால் கோட்டையே மறைந்து விட்டது.
ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சிறை சென்று மறைந்தார்.அதற்கு பின்னால் வந்த முதல்வர்,இந்நாள் முதல்வர்,90% அமைச்சர்கள் என ஊழல் குற்றசாட்டு இல்லாதவர்கள் இல்லா நிலை.
அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும்தான்.முன்னாள் தலைமைக் செயலாளர் அரை,கோட்டை வரை ஊழல் ஆய்வு நடந்து இடை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நாள் காவல்துறை அதிகாரி குட்கா ஊழலில்(நாட்குறிப்பில்) பெயர் பெற்றவர்.
இப்படி பட்ட மாநிலத்தில் ஊழலுக்கு ஆதாரம் கேட்கும் வேடிக்கைகளும் நடக்கிறது.
காரணம் இங்குள்ள ஊழல் ஒழிப்புத்துறையின் சிறப்பான செயல்பாடுகள்தான்.
தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி விட்டது.
நிர்வாகக் குளறுபடி, நடைமுறைச் சிக்கல்கள், கறுப்பு ஆடுகளின் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், லஞ்சப் பேர்வழிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள், தோல்வியடைந்து உள்ளன.
'லஞ்ச ஒழிப்புத்துறை' என அழைக்கப்படும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சமீபநாட்களாக, கடும் விமர்சனங் களுக்கு உள்ளாகியிருக்கிறது.
அரசுத் துறை களில், நாளுக்குநாள் பெருகி வரும், ஊழல், லஞ்ச முறைகேடுகள் குறித்து, பொதுமக்கள் தரப்பில் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
'அரசுத் துறைகளில், 1,000, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் அடிமட்ட ஊழியர்களைப் பிடிக்கும் வேகத்தை, கோடிக்கணக்கில் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத்துறை அதி காரிகள் மீது காட்டுவதில்லை' என விமர்சனங்கள் எழுகின்றன.அது உண்மைதான்.
இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என, பல நுாறு பேருடன் இயங்கும் லஞ்ச ஒழிப்புத் துறையில், நான்கு சட்ட ஆலோசகர்கள், 34 துணை சட்ட ஆலோசகர்கள், தொழில்நுட்ப உதவிக்கு தனி அதிகாரிகள் என, பெரும் படை உள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி களை நியமிக்கும் முன், அவர்களது ஒழுக்கப் பின்னணி கூர்மையாக ஆராயப்படும். 'கை சுத்தமான'வர்கள் மட்டுமே, இத்துறையில் நியமிக்கப்பட்டனர்.
இந்த கறைபடிந்த அதிகாரிகளில் சிலர், லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்க வருவோரின் விபரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவித்து குற்றம் சாட்டுபவரையே லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்து 'கூலி' பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன.

இந்த படையினரால், 2015 - 16ல், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில், 82 பேர் தான்.
இவர்களில் பெரும்பாலானோர், மின் வாரியம், வருவாய்த் துறை என, குறிப்பிட்ட சில துறை களில் பணியாற்றும் அடிமட்ட அலுவலர்கள், பணியாளர்கள்.
ஆனால், 2014 - 15ல், லஞ்ச வழக்கில், கைது செய்யப்பட்டோ ரின், எண்ணிக்கை 171.
அடுத்த ஆண்டில், இந்த கைது, பாதியாக குறைந்துள்ள காரணம் தமிழகத்தில் ஊழல் நோய் ஒழிக்கப்பட்டு விட்டதுதானா?
இல்லை. இந்த துறையே அந்த நோயால் முடங்கி விட்டதுதான்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி களை நியமிக்கும் முன், அவர்களது ஒழுக்கப் பின்னணி கூர்மையாக ஆராயப்படும். 'கை சுத்தமான'வர்கள் மட்டுமே, இத்துறையில் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, அரசியல், அதிகாரிக ளின் செல்வாக்குடன், சிபாரிசு பெற்ற, முறைகேடு பேர் வழிகள், பலரும் ஊடுருவி விட்டனர். இவர்கள், 'கை நிறைய வருமானம்' பார்த் தவர்கள்.
நேர்மை யற்ற இவர்கள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கைது நடவடிக்கை எடுப்பனரா, என்பது தான், பலரும் எழுப்பும் கேள்வி.
இந்த கறைபடிந்த அதிகாரிகளில் சிலர், லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்க வருவோரின் விபரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவித்து குற்றம் சாட்டுபவரையே லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்து 'கூலி' பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன.
இது போன்ற முறைகேடுகளால், குற்றசாட்டு கொடுக்க பயந்து ஒதுங்கிக்கொள்பவர்கள் அதிகரித்து,கைது எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், நடைமுறைச் சிக்கல் களும் அதிகரித்து விட்டன.அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், லஞ்சம் கேட்பதாக, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விட முடியாது.
அவர், தனக்கு மேல் உள்ள, டி.எஸ்.பி., வழியாக, கண்காணிப்பாளருக்கு, எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். அவர், சில கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புவார்.
அதற்கு, இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்து, தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகே, அனுமதி கிடைக்கும்.
இந்த நடைமுறைக்கே, சில நாட்கள் ஓடிவிடும்; அதற்குள், புகார்தாரர் வெறுத்துப் போய்விடுவார் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கே தம்மை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என, பயந்து ஓடிவிடுவார். அதிகாரிகளின் இழுத்தடிப்பால், இதுபோன்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, 'அரசுத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கிறார்' என, ஒருவர் புகார் அளிக்க வந்தால், அவரிடம், 'வாய்ஸ் ரெக்கார்டிங்' செய்து வருமாறு, சமீபகாலமாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வற்புறுத்துகின்றனர்.
அதாவது, புகார்தாரர், தன் மொபைல் போன் அல்லது பிரத்யேகமான, 'வாய்ஸ் ரெக்கார்டர்' சாதனத்தை, தன்னுடன் எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட லஞ்சம் கேட்கும் அதிகாரியை சந்தித்து உரையாட வேண்டும்.
அவர், 'எனக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் தா' என, கேட்கும் உரையாடலை, அவருக்கு தெரியாமல், பதிவு செய்து, அதை, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த ஆடியோவை, உயர் அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே,இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்வார்.இங்கு தான் சிக்கலே எழுகிறது. முதல் முறை லஞ்சம் கேட்டதால் தான், பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்க வந்தார். அதே நபர், லஞ்சம் கேட்ட அதிகாரியை மறுபடியும் சந்தித்து, 'சார் உங்களுக்கு லஞ்சம் எவ்வளவு வேண்டும்' எனக் கேட்டால், அவர் உஷாராகிவிடமாட்டாரா. இந்த நடைமுறையும், லஞ்சப் பேர்வழிகளின் கைது எண்ணிக்கை வீழ்ச்சி யடைய முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
காணொளியை கொடுத்தாலே அதில் வருவது நான்தான் குரல் டப்மாஷ் என்று சொல்லுபவர்கள் அதிகமாகி விட்டனர்.
இதுகுறித்து, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:லஞ்ச ஒழிப்புத்துறை மீதான நம்பிக்கை, மக்களிடம் குறைந்து விட்டதா கவே தெரிகிறது.புகார்தாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நடைமுறைச் சிக்கல்க ளால், கைது நடவடிக்கையை, உடனே மேற் கொள்ள முடிவதில்லை. இத்துறையில் பணியாற்றும் சில கறுப்பு ஆடுகள், ரகசியத் தகவல்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விற்று விடுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத் திலும், எங்களின் கைது நடவடிக்கைக்கு உதவ, மாவட்ட ஆய்வு அலுவலர் ஒருவர் இருப்பார். அதுபோன்ற பொறுப்பில் இருக்கும் அதிகாரி களும், எங்களுக்கு ரகசிய தகவல்களை அளிக்கலாம்; கைது நடவடிக்கைக்கு உதவ லாம். ஆனால், அவர்களின் உதவியும் வெகுவாக குறைந்து விட்டது.
புகார் அளிக்க வரும் நபர், சம்பந்தப்பட்ட லஞ்ச அதிகாரியை அல்லது ஊழியரை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார். எங்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல் களால், இழுத்தடிக்கப்படும்போது, அவர் நம்பிக்கையை இழந்துவிடுவார்.
கறுப்பு ஆடுகளை களையெடுத்து, நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும். நேர்மை
யான அதிகாரிகளை இத்துறைக்கு நியமிக்க வேண்டும். அப்போதுதான், லஞ்சப் பேர்வழி களுக்கு சிம்ம சொப்பனமாக இத்துறை மாறும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில அரசுத் துறை அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி, முறைகேடாக பணம் பெற்றிருக்கிறார் என, தெரிய வந்தால், உடனே, லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கு சென்று சோதனை செய்வர். பணத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது.
ஆனால், இதுபோன்ற திடீர் சோதனைகளை நடத்தக்கூடாது என, லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு, மேலிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுவும் 'நோட்டு எண்ணும்' அதிகாரிகளுக்கு, மிகவும் வசதியாக போய்விட்டது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
இதற்கு காரணம் எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி ஊழல் முறைகேடு நோய் பரவி தமிழ் நாட்டையே அரித்து விட்டதுதான் இந்த வாய் மொழி ஆணைக்கு காரணம்.
=====================================================================================
இன்று,
ஜூலை-31.

- இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
- உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
- சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)
- ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)