ஆட்சியை கைப்பற்றும் ரகசியம்.

பலர் நிதிஷ் குமாரை அரசியலில் நாணயமானவர் என்றே இதுவரை நினைத்து வந்திருக்கலாம் .
ஆனால் தானும் இந்த சாக்கடையில் ஊறிய அரசியல் மட்டைதான் என்று காட்டி விட்டார்.
   
"ஊழல் செய்தவர்களுடன் இணைந்து ஆட்சி செய்ய என்னால் முடியாது "என்று நிதிஷ் கூறுவது சசிகலா கட்சிக்காக தியாகங்கள் செய்தவர் என்ற நகைச்சுவை துணுக்கை விட நகைச்சுவை மிக்கது.

லாலு மீது சிபிஐ வழக்கு போட்டது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு முன்பே ,அதன் பின் லாலு மத்திய ரெயில்வே அமைச்சராக எல்லாம் இருந்திருந்திருக்கிறார். 


அதெல்லாம் போகட்டும்.இப்போது லாலு,காங்கிரசுடன் கூட்டணி வைத்து பாஜக கூட்டணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது இதெல்லாம் நிதிஷுக்கு தெரியாதா?அல்லது திடீர் மறதி வியாதியால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாரா?

திடீர் ஊழல் எதிர்ப்பு மாவீரன் ஒப்பனை நிதிஷ் குமாருக்கு பொருந்தவில்லை.
அவர் மீதான நம்பிக்கையை மக்கள் மனதில் சிதைத்துத்தான் விட்டது.

 பாஜக என்ன ஊழலுக்கு எதிரான கண்ணகி பரம்பரையா? பங்காரு லட்சுமணன் காலத்தில் இருந்தே பாஜக மீது ஊழல் கறை உள்ளது.

இன்று அகில இந்திய அளவில் ஊழல்வாதிகள் கலங்கரை விளக்கமே பாஜகதான்.
அது கார்பரேட்களாக இருந்தாலும் சரி.அரசியல்வியாதிகளாக இருந்தாலும் சரி.

இன்றைய ஊழலின் உச்ச நட்சத்திரம் அதிமுக அமைச்சர்களோ,சசிகலா,தினகரன் ஆகியோரை பாதுகாத்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தனது காரியத்தை சாதித்து வரும் கட்சி பாஜகதான்.
இது தமிழக பாமரன் கூட அறிந்த உண்மை.

அதிமுகவின் ஊழலை கமல்ஹாசன் பேசினால் அதிமுகவினரை விட  அதிகம் பொங்குவது பாஜக எச்ச.ராசா,தமிழிசைதான்.

பாஜக வுடன் நிதிஷுக்கு ஏற்பட்ட கள்ள உறவே "லாலு ஊழல் நினைவுக்கு வரக் காரணம்.

காங்கிரஸ் ,லாலு கட்சியை கழட்டி விட்டு விட்டு பாஜக வுடன் ஆட்சி அமைத்து பல பலன்களை அனுபவிக்க எண்ணியவர்தான் நிதிஷ்.

அதற்காக கூட்டணியில் பிளவை உண்டாக்க என்னவெல்லலாமோ செய்து பார்த்தார்.கூட்டணி பிளவதாக தெரியவில்லை.
குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க ஆதரவு தெரிவித்தார்.
பின் பாஜக ஆதரவு என்று கரணம் அடித்தார்.

அதிலும் பிளவு நடக்க வில்லை.

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி ஊழல் செய்ததாக பாஜக கட்சியின் சிபிஐ வழக்கு தொடுத்தது அதை வைத்து பல முயற்சிகள் செய்தும் தேஜஸ்வி பதவி விலக்காததால் கெடு கொடுத்து பின் தானே விலகி ,அதன் பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.

எவ்வளவு அசிங்கங்கள் இதில்.
பாஜகவை எதிர்த்துதான் காங்கிரஸ்,லாலு கட்சி கூட்டணி வைத்து மக்களிடம் வாக்குகள் வாங்கி முதல்வரானார்.

ஆனால் இன்று பாஜகவின் ஆசை வார்த்தை எதற்கோ மயங்கி அந்த எதிரியுடன் சேர்ந்து ஆட்சி.
இந்திய அரசியல் எவ்வளவு துரோகங்களை வாக்களிக்கும் எந்திரமாக மாறிய மக்களுக்கு செய்கிறது என்பதற்கு இன்று தமிழக அதிமுகவும்,நிதிஷ் குமாரும்தான் அசிங்கமான உதாரணங்கள்.
தேஜஸ்வி ஊழல் செய்த ஆண்டு என சிபிஐ குறிப்பிட்டுள்ள ஆண்டினை கணக்கிட்டால் அப்போது தேஜஸ்வி வயது 8தானாம்.

"அப்போது தான் 3ம் வகுப்பு பிடித்ததாகவும்,அப்போது தான் எப்படி அரசியலில் நுழைந்து ஊழல் செய்திருப்பேன்,அதற்கான நடைமுறை அறிவு எப்படி அக்காலக்கட்டத்தில் இருக்கும்.
அந்த ஊழல் உண்மையிலேயே நடந்ததாக இருந்தால் ஆழமாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் என்னை குற்றம்சாட்டுவது தவறு" என்றும் அவர் விளக்கம் கொடுத்து "துணை முதல்வர் பதவியை விட்டு விலகமாட்டேன் " என்றும் சொல்லி விட்டார்.

நிதிஷ் உண்மையானவராக இருந்தால் தேஜஸ்வி கூறுவதை கணக்கில் கொண்டு சிபிஐ விசாரணை நடக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் நிதிஷ் எண்ணம் அதுவா இல்லையே.பாஜக கூட்டணி அரசுதானே குறி.
பதவி விலகல் நாடகம்.பின் பாஜக கூட்டணி ஆட்சி பட்டியல் அன்றே ஆளுநரிடம்.பீகார் பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி உடனே  ஆளுநர்  கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். 

இதில் இருந்தே எல்லாம் முன்பே கணக்கிடப்பட்ட வை என்பதை பகிரங்கப்படுத்தி விட்டது.

பதவி விலகியவர் அதன் பலாபலனை பார்த்து அல்லவா அடுத்த நடவடிக்கை தற்போதைய கூட்டணி காங்கிரசுடன் இணைந்து எடுத்திருக்க வேண்டும்.

காங்கிரசு ஒத்து வரா நிலையில் அவர் பாஜகவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
ஆகவே அவர் குறிக்கோள் ஊழலோ,தேஜஸ்வியோ ,அல்ல பாஜக கூட்டணி ஆட்சி மட்டும்தான் .
அதற்காக அவருக்கு என்ன வாக்குறுதிகளை பாஜக தந்துள்ளது என்பது இனி மெல்ல வெளியாகும்.
கடைசியாக ஒரு வேண்டுகோள்.

தமிழ் நாட்டில் அதிமுகவினரின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனது பினாமி அரசாக பாஜக மாற்றியுள்ளது.

அதே பாஜக ஊழலை எதிர்ப்பதாக நாடகமாடி பீகாரில் ஆட்சியமைக்கிறது.
ஆக தான் ஆட்சியமைக்க மாடு,மதம்,ஊழல் என மாநிலத்திற்கேற்ப ஆயுதங்களை பாஜக கையாள்கிறது.

 அந்தவகையில்தான்  இப்போதுக்கு நினைவில் வரும் பாடல்
"அடங்காத காலை ஒன்று அடிமாடாய் போனதடி "தான்.

ஆட்சி அமைக்க அதனிடம் சிபிஐ,தேர்தலானையம் ,வருமானவரித்துறை,அமுலாக்கப்பிரிவு என பல கருவிகள் கைவசம் உள்ளது.


அதனிடம் இல்லாதவைகள்   மனசாட்சி,மனிதாபிமானம் மட்டுமே .



உத்தரப் பிரதேச மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  450 மத கலவரங்கள் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ , கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 450 மத கலவரங்கள் நடந்துள்ளது. 
இதில் 162 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 155 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 133 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 270 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 68 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 105 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 94 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 205 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 57 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 92 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும்,56 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் 200 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 63 சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டிலும் , 65 சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டிலும், 72 சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது என கூறினார்.
இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள்.
 மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு மக்களை மதவெறி உணர்ச்சி நிலையிலேயே வைத்திருந்து பாஜக எப்படி ஆட்சியை பிடிக்கிறது என்பதற்கு இதுவே மத்திய அர சின் ஒப்புதல் வாக்குமூலம்.
கமல்ஹாசனை டுவிட்டரில் இருந்துவெளிவரச்சொல்லும் தமிழிசை தனது பாஜக தலைவாஸ் களை முதலில் டுவிட்டரில் இருந்து கரையேற்ற முயற்சிக்க கேட்டுக்கொள்கிறோம்.

மோடி,சுஷிமா,சு.சாமி ,ஜெட்லீ என ஒரு கூட்டமே டுவிட்டரில் காலம்  கடத்துகிறது.

பீகார்  ச.ம.உறுப்பினர் பலம்.

(லாலு) ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு        80 

(நிதிஷ்குமார் ) ஐக்கிய ஜனதாதளத்திற்கு  71 

 பாஜக  கூட்டணி                                          58 

காங்கிரஸ்                                                    27. 

ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை.

"ஆளுநர் நிதிஷ்குமார் -பாஜக ஆட்சி அமைக்க கூப்பிடும் முன்னர் அதிக உறுப்பினர்கள் கொண்ட பெரிய கட்சியான  தங்களை ஆட்சி அமைக்க கூப்பிட வேண்டும்.நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.ஐக்கிய ஜனதா தளம்  உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு ஆதரவு தருவதாகவும்"  துணை முதல்வர் தேஜஸ்வி ஆளுநரிடம் நேரில் தெரிவித்துள்ளார்.

=====================================================================================

ன்று,
ஜூலை-27.
  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)

  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • முன்னாள் குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?