இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பத்தி செய்தியாகக் கூட

படம்
வேறு வழியே இல்லாமால் வாதாடிய அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீதி மன்றத்தில் தெரிவித்த  "ஜெயலலிதா"ஒரு ரூபாய் ஊதியத்தில் வாங்கிக் குவித்த   சொத்துப் பட்டியல் :- 1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 100 ஏக்கர், 2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா. ... 3. நீலாங்கரையில் 2 ஏக்கர். 4. கொடநாட்டில் 898 ஏக்கர் மற்றும் பங்களாக் கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது.இது ஒரு உத்தேச மதிப்புதான்.) 5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர். 6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதி யில் ஆயிரத்து 190 6. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண் டம் பகுதியில் 200 ஏக்கர். 7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் 8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள் 9. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம். நான்கு நாட்களில் அரசு வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட, சாட்சி யங்களால் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வருமாறு :- 1) வாலாஜாபாத்தில் ஜெ. தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். இங்கே ஒரு ஏக்கர் நிலம் அரசு மதிப்பு 40 லட்ச

கரைந்து விடுங்கள்.

படம்
அழகிரியை பற்றி அதிகம் சொல்லியாயிற்று.தன்னை வண்டு முருகன் அளவிற்கு உசுப்பேத்தும் சிலரை பற்றி அறியாமல் தான் உண்மையிலேயே பெருந்தலைவர்தான் என்று நம்ப ஆரம்பித்து விட்டார்.அதன் கோளாறுதான் மேலும்,மேலும் கட்சியை பற்றி கடுப்பாக பேச ஆரம்பித்தார்.எதற்கு ,ஏன் ,என்றே தெரியாமல் பலரையும் சந்தித்தார் பலருக்கும் ஆதரவை அள்ளி வீசினார்.காங்கிரசுக்கும் ஆதரவு.பாஜகவுக்கும் ஆதரவு.வைகோவுக்கும் ஆதரவு,விஜயகாந்துக்கும் ஆதரவு. அதே நேரம் தான் காப்பாற்றப் போவதாக கூறிவரும் திமுக வேட்பாளர்களை தோற்கடிக்கவும் ஆதரவு.என்ன கட்சி பாசம். தான் எதற்காக கட்சியை விட்டு விலக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்ர்வு கூட இல்லாமல்.மேலும்,மேலும் கட்சியை அசிங்கப்படுத்தும் பணியை செய்து வருகிறார்.இவரை உண்மையிலேயே திமுக கட்சிக்காரன் ஆதரிப்பானா?இவரின் வலது கரம் கோபி கூட கூடாரம் மாறி ஸ்டாலின் பக்கம் போய்விட்டார். கட்சியை விட்டு விலக்கப் பட்ட பின்னர் நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்போகிறாராம் .கருணாநிதி குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காவிட்டால் வழக்கு தொடுக்கலாம்.கட்சியை விட்டு நீக்கியதற்கு...? அவருக்கு சரியான வழியை சொல்லித்தர அருகில் யாரு

"தந்தி" யின் வியாபார புத்தி ?

படம்
"முசுலீம்கள் " வாக்கு யாருக்கு ? முசுலீம்களுக்கு நான்தான் சலுகைகள் செய்தேன் என்று ஜெ "யும் ,கருணாநிதியும் போட்டி போட்டு பரப்புரை செய்கின்றனர்.உண்மையில் யாரால் முசுலீகளுக்கு சலுகைகள் கிடைத்தது?  முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிடையாது. இஸ்லாமியர்களில் 'லெப்பை' மட்டும்தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உண்டு. அதற்காகவே இஸ்லாமியர்களில் 95%பேர் தங்களை 'லெப்பை' என்பதாக சாதிசான்றிதழ் வாங்கிவிடுவார்கள்.... (லெப்பை என்பது சாதி அல்ல. அது ஒரு தொழில். பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணிக்கு நியமிக்கப்படுபவர் லெப்பை என்றும், அவருக்கு உதவியாளர் போல் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும...் "பாங்கு" சொல்லுதல் போன்ற பணியை செய்பவர் மோதினார் என்றும் அழைக்கப்படுவார்கள். அது சாதி அல்ல. அதற்கான பயிற்சியை முடித்த யார் வேண்டுமானாலும் அந்தப் பணிக்கு செல்லலாம். அதனால் அது சாதிதானே என்று ஆரம்பித்து அதற்கு விளக்கம் சொல்லும்படி இந்த பதிவின் நோக்கத்தை திசைதிருப்பிவிடும் விதமாக தயவு செய்து யாரும் விவாதம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்) கல

"மார்ச்"- ஒரு பார்வை

படம்
 ரோமானியர்களின் பல கடவுளர்களில் ஒரு கடவுள் "மார்ஸ்' ஆவார். அவரின் பெயர் அடிப்படையில் அமைந்ததுதான் "மார்ச்'' மாதம்.   ரோமுலஸ் என்பவர். மார்ச் மாதத்தை முதல் மாதமாக வைத்தார்.  ஆனால், கிரிகோரியன் காலண்டர் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மூன்றாவது மாதமாகக் கணக்கிட்டு இம்மாதத்திற்கு 31 நாட்களாக்கினார்கள். முக்கிய தினங்கள்  3 உலகவன உயிரின நாள்.  4 தேசிய பாதுகாப்பு தினம்.  8 சர்வதேச எழுத்தறிவு தினம்.  8 உலக மகளிர் தினம்.  12 இந்திய துணை ராணுவ தினம்.   13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்.  15 உலக நுகர்வோர் தினம்.  15 உலக ஊனமுற்றோர் தினம்.  16 தடுப்பூசி தினம்.  18 இந்திய தளவாடங்கள் தினம்.  20 உலக கதை சொல்லும் நாள்.  20 உலக குருவிகள் தினம்.  21 உலக காடுகள் தினம்.  21 உலக வனவிலங்குகள் தினம்.  21 நிறவெறி ஒழிப்பு தினம்.  21 இரவும் பகலும் சரி சமமாக உள்ள நாள்.  22 உலக தண்ணீர் தினம்.  23 உலக வானிலை தினம்.  23 பகத்சிங் நினைவு தினம்.  24 உலக காசநோய் எதிர்ப்பு தினம்.   27 தேசிய திரையரங்கு தினம்.  31 ஆண்டு கணக்கு முடிக்கும் நாள். முக்கிய நிகழ்வுகள்: 1, 1917 இந்திய

சந்திக்கு வந்த உள் நோக்கம்?

படம்
தமிழக நெற்களஞ்சியம் அழியும் அபாயம்! மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக ஏற்படும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மட்டுமல்ல ஆய்வாளர்களும் கூறிவருகின்றனர். உலகின் தட்பவெப்பமாற்றமும், பூமி வெப்பமடைதலும் இயற்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகின்றன. இவை எல்லாம் இயற்கையின் தன்னியல்புச் செயல்கள் அல்ல. மாறாக மனிதன் இயற்கையை ஆள முயன்று தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளே. இதன் மற்றொரு வெளிப்பாடுதான் தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம். இது தமிழகத்தையே பாலைவனமாக்கி விடும் என்பதை மறந்து விடக்கூடாதுபாண்டிச்சேரி தொடங்கி மன்னார்குடி வரை உள்ள பகுதிகளில் லிக்னைட் நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் குவிந்து கிடக்கின்றன என்று புவியியலாளர்கள் கண்டுபிடித்து கூறிய நாள் முதல் இவற்றைக் கொண்டு எவ்வாறு பணம் பண்ணலாம் என்று காத்துக்கொண்டிருந்த இந்திய அரசு இன்று தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தையும் அதன் அருகில் உள்ள காவேரி பாயும் மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தி

எங்கே [ மன] நிம்மதி....!

படம்
அழகிரி இப்போது என்ன செய்யலாம்?என்ன செய்யலாம்?என்று தெரியாமல் அலைகிறார்.அவரிடம் இருப்பது அடியாட்கள் கூட்டம்தானே ஒழிய திமுக தொண்டர்களோ ,அரசியல்தலைகளோ இல்லை. அதனால்தான் இந்த குழப்பம். திமுகவை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டவரை மக்களவை வேட்பாளர்கள் தேர்வில் கலந்தாலோசிக்கவில்லை.அவரின் அடியாட்களுக்கு மன்னிக்கவும் ஆதரவாளர்க்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சில ஊடகங்கள் மாய்ந்து,மாய்ந்து எழுதுகின்றன.அவைகள் என்ன நோக்கத்தில் இருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கட்சி விரோதப் போக்கில் வெளியெற்றப்பட்டவருக்கு,அவரின் ஆதரவாளர்களுக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று வருந்தும் ஊடகங்கள் கருத்து ஓநாயின் அழுகைதான். அழகிரி விலகல் வைத்து கொஞ்சம் நாள் ஓட்டலாம் என்று அவர் நடந்தால் செய்தி,அவர் ஏப்பம் விட்டால் செய்தி என்று திமுகவுக்கு எதிராக அழகிரியை கொம்பு சீவி விட்டு பார்த்த ஊடகங்கள் எதிர்பார்ப்பு ஒன்றும் நடக்கவில்லை.தொண்டர்கள் அவரின் பின்னால் அணிவகுக்கவில்லை.சொல்லப் போனால் இருந்த சிலர் கூட மாறி அல்லது ஒதுங்கி விட்டனர். என்ன செய்ய ஆறுமாதத்துக் கொருமுறை அறி

கோடையை, குளிர்ச்சியாக்க..........,!

படம்
இப்போது தகவல் பரிமாறிக் கொள்வதில், அதிக எண்ணிக்கையுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, வரும் ஜூன் முதல், இணையத் தின் துணையோடு, வாய்ஸ் காலிங்   எனப்படும்,செல்பேசி இணை ப்பினைத் தரத் திட்டமிட்டுள்ளது.  இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார். முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வழங்குவதில், வாட்ஸ் அப் மற்ற செயலிகளைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. இதே சேவையை வழங்கும் தென் கொரியாவின் ககோ டாக் (KakaoTalk) மற்றும் சைப்ரஸ் நாட்டின் வைப்பர் (Viber) ஆகிய செயலிகளைக் காட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் செயலியே. மாதந்தோறும் ஏறத்தாழ 45 கோடி பேர் இதனைப்பயன்படுத்தி வருகின்றனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்படும் பட்சத்தில்