ஒரு பத்தி செய்தியாகக் கூட

வேறு வழியே இல்லாமால் வாதாடிய அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீதி மன்றத்தில் தெரிவித்த  "ஜெயலலிதா"ஒரு ரூபாய் ஊதியத்தில் வாங்கிக் குவித்த   சொத்துப் பட்டியல் :-

1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 100 ஏக்கர்,

2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா. ...

3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.

4. கொடநாட்டில் 898 ஏக்கர் மற்றும் பங்களாக் கள். ( இங்கு ஒரு ஏக்கர்

ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது.இது ஒரு

உத்தேச மதிப்புதான்.)

5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.

6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதி யில் ஆயிரத்து 190

6. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண் டம் பகுதியில் 200 ஏக்கர்.

7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்

8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்

9. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
ஊழல் ராணியின் வளர்ப்பு மகன் திருமணம்


நான்கு நாட்களில் அரசு வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட, சாட்சி யங்களால் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வருமாறு :-
1) வாலாஜாபாத்தில் ஜெ. தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். இங்கே ஒரு ஏக்கர் நிலம் அரசு மதிப்பு 40 லட்சம் ரூபாய்; சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய்.
அதன்படி 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.

2) சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இங்கே ஒரு ஏக்கர், அரசு மதிப்பு 1.7 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய். அதன்படி சிறுதாவூர் நிலத்தின் அரசு
மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.

3) நீலாங்கரையில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 35 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய். அதன்படி அங்கே இருக்கும் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி
ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.

4) காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 30 லட்சம் ரூபாய், சந்தை மதிப்பு 50 இலட்ச ரூபாய். ஜெ. தரப் பினர் வாங்கியுள்ள 200 ஏக்கர் நிலத் தின் அரசு மதிப்பு
60 கோடி ரூபாய், சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.

5) தூத்துக்குடி திருவைகுண்டம் பகுதி யில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 15 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்பு 25 இலட்சம் ரூபாய். அங்கே வாங்கி யுள்ள 1,167
ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.

6) பையனூரில் ஒரு ஏக்கர் நிலம், அரசு மதிப்பு 2 கோடி ரூபாய், சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய். அங்கே வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய்.

7) கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே
வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய்.

இந்தப் பட்டியல்படி, 1991-96ஆம் ஆண்டு களில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, இவர்கள் வாங்கிப் போட்டுள்ள சொத் துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய். சந்தை மதிப்போ 5,107 கோடி ரூபாய்.
இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்களை கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும்.
இவை எல்லாம் கைப்பற்றப் பட்டு நீதிமன்றத்தின் முன் ஆதாரத்துடன் வைக்கப்பட்ட பட்டியல் இதில் ஆயிரக்கணக்கான கைக்கடிகாரங்கள் ,தங்க நகைகள்,வைர-வைடுரிய நகைகள்,வெள்ளி சாமான்கள்,பட்டுப்புடவைகள்,காலணிகள் சேர்க்கப்படவில்லை.அவைகளையும் சேர்த்தால் 10000 கோடிகளை தாண்டிவிடும் .இதுவரை ஒரு பைசா கூட கைப்பற்றப்படாத -நிருபிக்கவே முடியாத 2ஜி ஊழலை லடசக்கணக்கான கொடிகளில் ஊழல் என்று இன்றுவரை எழுதித் தள்ளும் தமிழகப் பத்திரிகைகள் இந்த அம்மாவின் நிருபிக்கப்பட்ட ஊழல் பட்டியலை ஒரு பத்தி செய்தியாகக் கூட வெளியிடாத மர்மம் என்ன?
இப்பத்திரிக்கைகளை வாசித்து கருத்து திணிப்பில் உள்ள பாமரனுக்கு இச்செய்திகள் மட்டும் மறுக்கப்படுவதின் நோக்கம் என்ன.
அம்மா தரும் லட்சக்கணக்கான விளம்பரத் தொகை போய்விடும் என்ற பயமா?அல்லது கருணாநிதி எழுந்து விடக் கூடாது என்ற பார்ப்பன நோக்கமா?
இக் கூட்டத்தில் தினத்தந்திபோன்ற நாளிதழ்களும் ,சின்ன கழுதை செத்துப்போனாலும் மூன்று பேரைக் கூட்டி வந்து உட்கார்ந்து அலசி துவைத்து காயப்போடும் புதியதலைமுறை,பாலிமர்,தந்தி தொலைக்காட்சிகள் நிஜந்தன்கள் ,மாலன்கள் ,பாண்டேக்கள் முக்கிய இடம் வகிப்பது உண்மையிலேயே வருந்தக் கூடிய விடயம்தான்.இவர்களின் சாயம் வெளுத்து விட்டது தெரியாமல் இன்னமும் புலம்புவதுதான் பாவம்.
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?