"மார்ச்"- ஒரு பார்வை


 ரோமானியர்களின் பல கடவுளர்களில் ஒரு கடவுள் "மார்ஸ்' ஆவார்.
அவரின் பெயர் அடிப்படையில் அமைந்ததுதான் "மார்ச்'' மாதம்.
  ரோமுலஸ் என்பவர். மார்ச் மாதத்தை முதல் மாதமாக வைத்தார்.
 ஆனால், கிரிகோரியன் காலண்டர் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மூன்றாவது மாதமாகக் கணக்கிட்டு இம்மாதத்திற்கு 31 நாட்களாக்கினார்கள்.


முக்கிய தினங்கள்
 3 உலகவன உயிரின நாள்.
 4 தேசிய பாதுகாப்பு தினம்.
 8 சர்வதேச எழுத்தறிவு தினம்.
 8 உலக மகளிர் தினம்.
 12 இந்திய துணை ராணுவ தினம்.
  13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்.
 15 உலக நுகர்வோர் தினம்.
 15 உலக ஊனமுற்றோர் தினம்.
 16 தடுப்பூசி தினம்.
 18 இந்திய தளவாடங்கள் தினம்.
 20 உலக கதை சொல்லும் நாள்.
 20 உலக குருவிகள் தினம்.
 21 உலக காடுகள் தினம்.
 21 உலக வனவிலங்குகள் தினம்.
 21 நிறவெறி ஒழிப்பு தினம்.
 21 இரவும் பகலும் சரி சமமாக உள்ள நாள்.
 22 உலக தண்ணீர் தினம்.
 23 உலக வானிலை தினம்.
 23 பகத்சிங் நினைவு தினம்.
 24 உலக காசநோய் எதிர்ப்பு தினம்.
  27 தேசிய திரையரங்கு தினம்.
 31 ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்.

முக்கிய நிகழ்வுகள்:
1, 1917 இந்திய - தபால் நிலையங்களில் சேமிப்பில் பத்திரமுறை தொடங்கப்பட்டது.
 3, 1876 அமெரிக்காவில் அலெக்சாண்டர்
 கிரஹாம்பெல் - தொலைபேசிக்குக்
 காப்புரிமை பெற்றார்.
  5, 1979 வியாழனின் துணைக் கிரகமான "சுயோ'வில் எரிமலை இருப்பதை
 அமெரிக்காவின் வாயேஜர்-1
 கண்டுபிடித்தது.
 5, 2012 ரஷ்யாவில் 3-ஆவது முறையாக புதின் அதிபர் ஆனார்.
 6, 1967 அண்ணாவுடன் 9 பேர் கொண்ட மந்திரி சபை
 தமிழகத்தில் பதவி ஏற்றது.
 8, 1848 பிரான்ஸ் - புருஸ்ஸியனில்
 அரசன் லுயிஸ்பிளாங்க்.
 பெண்களுக்கு அரசவைக்
 குழுவில் இடம் அளித்தான். வாக்குரிமை அளிக்கவும்
 ஒப்புதல் கொடுத்த நாளே
 மகளிர் தினம்
 அனுசரிக்கப்படுகிறது.
 9, 1790 உலகில் முதன்முதலாக,
 பிரான்ஸில் பொது மக்களின் பார்வைக்காக பாரிஸ் நகரில் மிருகக் காட்சி சாலை திறந்து வைக்கப்பட்டது.
 11, 1889 பிரான்ஸில் பாரிஸ் ஈகிள் டவர், காஸ்டவ் ஈஃபிளில் என்பவரால் கட்டப்பட்டுத் திறந்து
 வைக்கப்பட்டது.
 12, 1918 ரஷ்யாவில் மாஸ்கோ
 தலைநகரமானது. முன்னர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
 தலைநகராயிருந்தது.
 12, 1969 இந்திரா காந்தி தலைமையில், தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை தோற்றுவிக்கப்
 பட்டது.
 13, 1781 "யுரேனஸ்' கோள் "வில்லியம் ஷர்க் செல்' என்பவரால்
 கண்டுபிடிக்கப்பட்டது.
 13, 2012 ஸ்பெயினில் கருவிலுள்ள
 குழந்தைக்கு நுரையீரல்
 ஆப்ரேசன் வெற்றிகரமாகச் செய்தார்கள்.
 15, 1986 நுகர்வோர் பாதுகாப்புச்
 சட்டம் அமலாக்கப்பட்டது.
 17, 1958 கப்பல் போக்குவரத்தை
 சீர்செய்யும் விதமாக "சர்வதேச கப்பல் கழகம்'
 ஏற்படுத்தப்பட்டது.
 17, 1988 இந்தியாவில் செயற்கைக்கோள் ஐ.த.ந. ஐஅ ஏவப்பட்டது.
 19, 1939 இந்தியாவில், சென்னை
 அயனாவரத்தில் முதன்முதலாக பால் பண்ணை
 தொடங்கப்பட்டது.
 19, 2003 அமெரிக்க  ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போர் நடத்த உத்தரவிட்டார்.
 27, 2010 ஒடிசாவில் ஒரே நாளில் பிருத்வி-2 மற்றும் தனுஷ்
 ஏவுகணைகள் சோதனை வெற்றி.
  28, 1995 தமிழகத்தைச் சார்ந்த
 அருண்பாலாஜி.
 தலைமன்னாருக்கும்
 தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள 32 கி.மீ. தூரத்தை நீந்தி சாதனை செய்தார்.
 29, 1999 உத்திரப் பிரதேசத்தில்
 நிலநடுக்கத்தில் 85 பேர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட
 மக்கள் காயமடைந்தனர்.
 சொத்துகள் சேதம்.
 30, 1870 அமெரிக்க அரசியல்
 சட்டத்தில் கறுப்பு - வெள்ளை பாகுபாடு இன்றி "குடியுரிமை' பெற்றுள்ள எல்லோருக்கும் "வாக்குரிமை' அளிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 30, 1954 தமிழக முதல்வராக
 கு . காமராஜ் பதவி ஏற்றார்.
 30, 2012 இந்தியா, பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்தது.
 31, 1889 பிரெஞ்சு - பாரிஸில் ஈபிள் டவர் கட்டி முடிக்கப் பெற்றது.
  31, 2002 தமிழ்நாட்டில் கூடங்குளத்தில்  அணுஉலை அமைக்கும் பணி ஆரம்பம்.
பிறந்த தினங்கள்
 2, 1935 குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் கலைஞர்,
 3, 1847 அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - தொலைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி.
 6, 1475 மைக்கேல் ஆஞ்சலோ - உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர்.
  7, 1919 எம்.என். நம்பியார் - தமிழ் திரைப்பட
 நடிகர்.
 9, 1454 அமெரிக்கோ வெஸ்புகி - அமெரிக்காவைக் கண்டறிந்தவர். அவர் பெயரிலேயே அது வழக்கத்தில் உள்ளது.
 9, 1934 யூரி காகரின் - ரஷ்யர் - முதன்முதலாக விண்வெளியில் பயணம் செய்தவர்.
  13, 1733 ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைக்
 கண்டறிந்த விஞ்ஞானி.
  14, 1879 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் விஞ்ஞானி.
  19, 1933 குமரி அனந்தன் - முன்னாள்
 பாராளுமன்ற உறுப்பினர்.
  நினைவு தினங்கள்
 2, 1949 கவிக்குயில் சரோஜினி நாயுடு.
 9, 1911 ஜான் பென்னிகுவிக் - முல்லைப் பெரியார் அணை கட்டிய பொறியாளர்,
 ஆங்கிலேயர்.
 9, 1994 தேவிகாராணி ரோரிச் - இந்தி திரைப்பட முதல் நடிகை.
 10, 1897 சாவித்ரிபாய் புலே. பெண் கல்வித்
 திட்டம் கொண்டு வந்த சமூக சேவகி.
 14, 1883 கார்ல் மார்க்ஸ் - கம்யூனிஸ்ட் கொள்கை உருவாக்கியவர்.
 19, 1998 . நம்பூதிரிபாட் - கேரள
 முன்னாள் முதல்வர்.

சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
  1 - போஸ்னியா
 6 - கானா
 11- லிதுவேனியா
 12 - மொரீஷியஸ்
 20 - துனிஷியா
 21 - நமீபியா
 25 - கிரீஸ்
 26 - வங்காளதேசம்


suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?