சனி, 15 மார்ச், 2014

சந்திக்கு வந்த உள் நோக்கம்?

தமிழக நெற்களஞ்சியம்
  • அழியும் அபாயம்!மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக ஏற்படும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மட்டுமல்ல ஆய்வாளர்களும் கூறிவருகின்றனர். உலகின் தட்பவெப்பமாற்றமும், பூமி வெப்பமடைதலும் இயற்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகின்றன.
இவை எல்லாம் இயற்கையின் தன்னியல்புச் செயல்கள் அல்ல. மாறாக மனிதன் இயற்கையை ஆள முயன்று தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளே.
இதன் மற்றொரு வெளிப்பாடுதான் தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்.
இது தமிழகத்தையே பாலைவனமாக்கி விடும் என்பதை மறந்து விடக்கூடாதுபாண்டிச்சேரி தொடங்கி மன்னார்குடி வரை உள்ள பகுதிகளில் லிக்னைட் நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் குவிந்து கிடக்கின்றன என்று புவியியலாளர்கள் கண்டுபிடித்து கூறிய நாள் முதல் இவற்றைக் கொண்டு எவ்வாறு பணம் பண்ணலாம் என்று காத்துக்கொண்டிருந்த இந்திய அரசு இன்று தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தையும் அதன் அருகில் உள்ள காவேரி பாயும் மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இந்த திட்டம் நிறைவேறினால். தமிழக விவசாயிகள் அனைவரும் நிலத்தை விட்டு விட்டு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு வேறு மாநிலங்களுக்கு குடி பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை.
மீத்தேன் என்பது ஹைட்ரோகார்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாயு.அதுதீப்பற்றி எரியக்கூடியது.

அதைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கிடைப்பது கடினமாகி உள்ளதால், நிலக்கரி தவிர்த்த வேறு எரிசக்தியைக் கொண்டு அனல்மின்சாரத்தை தயாரிக்க முயலும் நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மீத்தேன் உள்ளது.
இந்த மீத்தேன் நிலத்தடியில் பொதிந்து கிடக்கும் நிலக்கரிக்கு இடையிலும், அதற்கு கீழும் குவிந்து கிடக்கிறது.
ஆனால் நிலத்தட்டில் முதலில் நிலத்தடி நீரும் அதற்கடுத்து நிலக்கரியும் அதற்கடுத்து மீத்தேன் வாயுவும் இருக்கிறது.
முதல் இரண்டையும் காலி பண்ணாமல் மீத்தேன் வாயுவை நெருங்க முடியாது
நிலத்தில் கிடைக்கும் நீரைஆங்கிலத்தில் கிரவுண்ட் வாட்டர் என்றும் அண்டர்கிரவுண்ட் வாட்டர் என்றும் பிரித்துக் கூறுகிறார்கள் . கிரவுண்ட் வாட்டர் என்பது நாம் பயன்படுத்தும் நீராகும். அண்டர் கிரவுண்ட் வாட்டர் என்பது நாம் பயன்படுத்த முடியாத நீராகும். மீத்தேன் வாயுவை எடுக்க முயலும் போது இவ்விரு நீரையும் வெளியேற்றியாக வேண்டும். பின்னர் நிலக்கரியை வெளியில் எடுக்க வேண்டும்.
 அதற்குப் பின்னர் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டும். அவ்வாறு மீத்தேன் எடுக்கும் போது தமிழகத்தின் விவசாயம் அழிந்துவிடும். இந்திய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மன்மோகன் சிங் சொன்னது உண்மையாகி விடும்.
விவசாய நீர்மொத்தமாக உறிஞ்சப்படுவதால், விவசாயம் நடைபெற இப்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. மீத்தேன் எடுப்பதற்காக வெளியில் எடுக்கப்படும் அண்டர்கிரவுண்ட் வாட்டர் கடல்நீரைவிட ஐந்து மடங்கு உப்புத்தன்மையுடையது. இந்த நீர் கால்வாய்களில் ஓடுவதால் விவசாய நிலங்களில் நெல் விளையாது உப்புதான் விளையும்.
அண்டர்கிரவுண்ட் நீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப கடல்நீர் உள்ளே புகும். மீத்தேன் எடுக்கும் போது இயற்கையின் அமைப்பில் பல மாற்றங்கள் உருவாகும். மீத்தேன் நீரில் கலக்கும் அபாயம் உள்ளது. மீத்தேன் தானே தீப்பற்றக்கூடிய வாயு.

இது கலக்கும் நீரிலும் நெருப்பு பற்றக்கூடும்.மீத்தேன் கொண்டு செல்லப்படும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அங்கு தீவிபத்து ஏற்பட்டு பேரபாயம் ஏற்படும் ஆபத்து உள்ளது. நிலத்தடி கட்டமைப்பு மாறுவதால், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெய்வேலி லிக்னைட் சுரங்கத்தால் சிதம்பரம் கோவிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இது போன்ற காரணத்தால் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட சரித்திரச்சின்னங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.வேலைவாய்ப்பு உருவாகும் என்று தாஜா செய்வார்கள்.
 ஆனால் உண்மையில் எரிவாயு தொழிலில் அனுபவம் உள்ளவர்களுக்கே வேலை கிடைக்கும். விவசாயத்தை விட்டு வெளியேறும் மக்களுக்கு வேறு வேலையும் கிடைக்காது. இது போன்ற அனுபவம் பல தொழிற்சாலைகள் உருவான போது அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது நமது அனுபவம். இதனால் தமிழக மக்கள் தமிழகத்திலேயே அகதிகளாகும் நிலைமை உருவாகும்.
மீத்தேன் வாயுவைக் கொண்டு செல்ல குழாய்கள் அமைப்பது, சாலைகள் அமைப்பது போன்ற பணிகளால் விளைநிலங்கள் அழிக்கப்படும். ஆறுகள், கால்வாய்கள், ஓடைகள், ஏரிகள் போன்றவைகள் அழிக்கப்பட்டு விவசாயிகள் இல்லாத மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீர்குலையும்.
ஐம்பூதங்களில் பிரதானமான காற்று, நீர், நிலம் ஆகிய மூன்றிலும் வேதியியல் பொருட்கள் கலந்து விடும்.
இதனால் புற்றுநோய், மூளைபாதிப்பு, உட்பட பல நோய்கள் உருவாகும். மீத்தேன் கலந்த காற்றை சுவாசிப்பதால் மலட்டுத்தன்மை உருவாகும்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நாம் அரிசிக்காக பிறமாநிலங்களில் மட்டும் அல்லாது பிற நாடுகளிடமும் கையேந்த வேண்டிய அவலநிலை ஏற்படும். மனிதனின் நல்வாழ்வுக்கான வளர்ச்சி வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது.
ஆனால் மனிதனையே அழிக்கும் வளர்ச்சி நமக்கு தேவைதானா?

--------------------------------------------------------------------------------------------------------------------------
சந்திக்கு வந்த உள் நோக்கம்?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை இழுத்தடித்து வரும் அரசு வக்கீலுக்கு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் தொடர்ந்து இழுத்தடித்தால் மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்க கோரி அவர்களின் வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றார்.
suran

பின்னர், நீதிபதியிடம் அரசு வக்கீல் பவானி சிங் அளித்த மனுவில், ‘எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதுகு தண்டு வலி பிரச்னைகள் இருந்ததால் என்னால் கடந்த 2 விசாரணையின் போது ஆஜராக முடியவில்லை. இந்த நோய் பிரச்னைகள் தொடர்வதால் என்னை மேலும் 10 நாட்கள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.
 அதற்கான மருத்துவ சான்றிதழை இத்துடன் இணைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிக்கும், பவானி சிங்குக்கும் நடத்த வாதத்தின் விவரம் வருமாறு:

நீதிபதி : விசாரணையை தாமதம் செய்யவே இது போன்று நடந்து கொள்கிறீர்கள். உங்கள் காரணத்தை ஏற்க முடியாது. எனவே, இன்றே உங்கள் தரப்பு வாதத்தை தொடங்கலாம்.

பவானி சிங் : நான் வாதத்துக்கு தயாராக வரவில்லை.

நீதிபதி : உங்கள் உதவியாளர்கள் வாதம் செய்யட்டும்.

பவானி சிங் : இது முக்கியமான வாதம், எனவே நான்தான் வாதாட வேண்டும். அவர்களுக்கு தெரியாது.

நீதிபதி: உச்ச நீதிமன்றம் என்ன காரணத்துக்காக இந்த தனி நீதிமன்றத்தை அமைத்ததோ, அதன் நோக்கம் நிறைவேற வேண்டும். தினமும் வாதத்தை நடத்தி வழக்கை விரைந்து முடிக்க அரசு வக்கீல் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், தேவையற்ற காரணங்களை கூறி வழக்கை இழுத்தடிப்பதால் அரசு வக்கீலுக்கு ஸி65 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். இன்று அரசு தரப்பு வாதத்தை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் 65 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.

இவ்வாறு நீதிபதி, அரசு வக்கீல் இடையே வாதம் நடந்தது.

இதை தொடர்ந்து, ‘‘குற்றவாளிகள் தரப்பு தங்கள் வாதத்தை தொடங்கலாம்‘‘ என்று நீதிபதி கூறினார். ஆனால், ‘அரசு தரப்பு வாதம் முடிந்தால் தான் எங்கள் வாதத்தை துவக்குவோம்‘ என்று அவர்கள் மறுத்து விட்டனர்.

suran

நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான சுதாகரனின் வக்கீல் மூர்த்தி ராவ்,
 ‘‘அரசு தரப்பு வக்கீல் மீதும் குற்றவாளிகள் தரப்பு மீதும் நீதிபதி கடுமையாக நடந்து கொள்வதற்கு உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். நான் 50 ஆண்டுகளாக வக்கீல் தொழிலில் உள்ளேன். இது போன்று எந்த நீதிபதியும் கடுமையாக நடந்து கொண்டதில்லை‘‘ என்றார்.
 இதை கேட்ட நீதிபதி, ‘‘இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் சட்டத்துக்கு உட்பட்டு தான் நடந்து கொள்கிறேன்‘‘ என்று கோபத்துடன் கூறினார். இதையடுத்து, மூர்த்தி ராவை ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவிலேயே தங்களுக்கு இந்த அரசு வழக்குரை ஞர்தான்  வேண்டும்,இந்த நீதிபதிதான் வேண்டும்  என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றதும்.அதற்கு அந்நீதிமன்றம் அனுமதித்ததும் .முதல் முறை.அதுவே ஆயிரம் சந்தேகங்களை மக்களிடம் உருவாக்கி விட்டது.அச்சந்தேகங்களை உறுதி செய்யும் நிலையில் பவானிசிங் நடந்து கொள்வதும் உள்ளது.65000 ஒருநாள் சம்பளமாக மக்கள் வரிப்பணத்தில் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வது என்பது கடைந்தெடுத்த துரோகம்.இந்த 65000 அபராதத்திற்கு பலமடங்கு அதிகமாக அவருக்கு சரி செய்யப்படும் என்ற சந்தேகம் உள்ளது.அதனால் எத்தனை நாள் வேண்டுமானாலும் அவர் வாதாடாமல் இருக்கலாம்.இப்போ என்ன செய்வீங்க.
நீதிபதியையே குற்ற வாளியின் வழக்குரைஞர் மிரட்டுகிறார் என்றால் அவர்களின் சக்தி அவ்வளவு இருக்கிறது.உச்ச நீதிமன்றத்திலேயே அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம்தான்.
நீதிபதி உள்நோக்குடன் நடந்து கொள்வதாக சந்தேகிக்கும் முன் பவாணி சிங்
உள்நோக்கம் சந்தி சிரிப்பதை இவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
சோ ற்றில் அதிக உப்பிட்டவரை ?

நாம் நாள் தோறும் உட்கொள்ளும் உப்பில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்தால், நமது மருத்துவ பட்ஜெட்டில் நாற்பது விழுக்காடு குறைந்து விடும் என்று கூறுகிறார்கள்.
பொதுவாக இந்தியர்கள் நாளொன்றுக்கு பத்து முதல் 15 மில்லி கிராம் உப்பைதங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தியாவின் பாரம்பரிய உணவு முறைகளில் கூட இந்த அளவு குறிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால் அதுவெல்லாம் அந்த கால வாழ்நிலைக்கொப்ப அளிக்கப்பட்ட செய்முறைகளாகும்.
Congratulations, it's a girl!

http://dailym.ai/1gqv5Wq
அன்று கடின உழைப்பு வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. அன்று உழைப்பவர்களின் வியர்வையில் அதிக உப்பு வெளியேறிவிடும். இன்றுகடின உழைப்பு என்பது இல்லை என்பது ஒரு புறம். ஆலை, அலுவலகங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்டு விட்டதால் வியர்வை சிந்தும் மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. எனவே இன்று உப்பு அதிகமாக எடுத்துக்கொள்வதால் நாம் அபாயத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு ஐந்து மில்லி கிராம் உப்பு போதுமானது என்று பரிந்துரை செய்துள்ளது.

 அப்படியென்றால் நாம் உட்கொள்ளும் உப்பை கடுமையாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் . நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. உலகில் ரத்த அழுத்தம் பொதுவான கொல்லும் வியாதியாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வும் உண்டு.
உங்களுடைய் உப்பு பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள், சிறுநீரக நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள் . ஆண்டு தோறும் மார்ச் 13 உலக சிறுநீரக தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்வாண்டில் இத்தினத்தின் லட்சியமாக “ சிறுநீரகங்களும், வயதாகுதலும்” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
 வயதாக வயதாக ஒருவரின் ரத்தச்சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. அவருடைய ரத்த அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுநீரகத்தின் மீது அழுத்தம் ஏறுகிறது. அதற்கும் வயசாகி விட்டதல்லவா? எனவே அதுவும் தனது இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் சில குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பத்துசதவிகிதம் பேர்களுக்கு  சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களிடம் இப்பிரச்சனை தீவிரமாக உள்ளது.
suran
இந்தியாவில் சிறுநீரக நோய்களால்அவதிப்படுவோரில் 60 விழுக்காட்டினர் இவ்விரு நோய்களாலும் சிரமப்படுகிறவர்களே என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வயதானவர்கள் மத்தியில் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதற்கு உடல் நீர்வற்றல், அதிகமான வலிநிவாரண பயன்பாடு, சிறுநீரகப்பாதையில் அடைப்பு, புரோஸ்டேட் வீக்கம்( ஆடவர்), கர்ப்பப்பை வாய் புற்றுநோய்,கருப்பை தாங்கும் சதைகள் தொய்தல் ஆகியவை பொதுவாக சிறுநீரகக் கோளாறுகள் தோன்றுவதற்கு காரணிகளாகும்.
 சில புற்று நோய்களும் இதற்கு காரணங்களாகும். ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம், ரத்தச்சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பசுமையான இலைகள் கொண்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செயலாக்க மிக்க வாழ்நிலையை மேற்கொள்ளுவதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

உப்பை வேதியலில் சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சோடியம் இயற்கையாகவே கிடைக்கிறது. அதுவே நமது உடம்புக்கு போதுமானது.
நாம் உப்பு மூலம் எடுத்துக்கொள்ளும் சோடியம் உடலுக்கு நன்மை செய்வதை விட கெடுதலே செய்கிறது. எனவேதான் உலக சுகாதார அமைப்பு ஐந்து மில்லி கிராம் உப்பு போதுமானது என்றுஅறிவுரை கூறுகிறது.
 சோடியம் அதிகமாக உடலில் சேர்வதால், ரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, சிறுநீரில் புரதச்சத்து . இருதயநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

சோடியம் :குறைக்க பத்து  வழிகள்

1. உப்பு கூடுதலாக சேர்க்கப்பட்ட தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். லேபிளில் குறிப்பிட்டுள்ள இடுபொருட்களில் சோடியம் கலந்த பொருட்கள் இருந்தால் அதைத் தவிர்த்து விடவும்.
2. பிஸ்ஸா, பேஸ்டா, நூடில்ஸ் போன்ற உணவுவகைகளை கைவிடவும்.
3. சலாட்கள், ஏராளமான மசாலா நிறைந்ததுரித உணவுகளை நீக்கவும்
4. ஏராளமான ரொட்டி, சிப்ஸ், துரித உணவுகள், உப்பு போட்ட கடலைகள், சூப்புகள்,கெட்சப், சாஸ், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ண வேண்டாம்
5. பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்
6. பாரம்பரிய இந்திய உணவுகளான ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை எப்போதாவதுஉண்ணலாம்.
தினந்தோறும் உண்ணக்கூடாது.
 7. சப்பாத்தி,நான், ரொட்டி தயாரிக்க குறைந்த அளவு உப்பை பயன்படுத்தவும்
.8. இந்திய உணவுகளில் உப்பு கணிசமாக சேர்க்கப்படுகிறது. உப்புக்கு பதிலாகபுதிய எலுமிச்சைப் பழச்சாறைப் பயன்படுத்தவும்.
9. கடலைகள், விதைகள், வெண்ணெய் போன்றவற்றை சேர்க்கும் போது உப்பு கலக்காதவற்றைக் கேட்டு வாங்கவும்
10. சிப்ஸ், வறுவல்கள் போன்றவற்றை விட்டு விலகி நிற்கவும்ஆண்டு தோறும் சிறுநீரக செயல்பாடு சோதனைக்கு நம்மை உட்படுத்திக் கொள்வது சிறந்தது.

, இரவு 1 மணியளவில்  கொஞ்சம் ஓய்வுக்காக காரை நிறுத்தச் சொன்னார்களாம். அம்மா இறங்கும்போது கார் கதவை திறந்து வைத்து விட்டு இறங்கிவிட்டார்களாம். காற்றில் அந்த கதவு சாற்றிக் கொள்ள , ஓட்டுனர் " தினகர் ராஜ் " அவர்கள் இருவரும் ஏறிவிட்டார்கள் என்று எண்ணி காரை ஓட்டிச் சென்றுவிட்டாராம் . இருவரும் வந்து பார்த்தபோது கார் இல்லாததைக் கண்டு அம்மா பயப்பட ,, அப்பா " பயப்படாதே 1/2 மணியில் ராஜு வந்து விடுவார் என்று ஆறுதல் சொன்னாராம். சிறிது நேரத்தில்  கார்வந்ததும் ஓட்டுனர் தன் தவறை கூறி வருந்தினாராம் ....ஆனால் கலைவாணர் அவரை கண்டிக்காமல் பாராட்டினாராம் ....NSK சொன்ன காரணம்  " பின்னால் கணவன் , மனைவி இருக்கிறார்கள் , அவர்கள் இருப்பதையோ, அவர்கள் பேசும் குடும்ப விசயங்களை கேட்காமல் ,"கடமை உணர்வோடும் , பண்பாடோடும் " நடந்துக்கொள்ளும் உன்னைத்தான் நான் பாராட்டவேண்டு  என்று சொன்னாராம் ........( தகவல் :- NSK அவர்களின் ஓட்டுனர் " தினகர் ராஜ் " அவர்களின் மகன் முருகன் அண்ணன் சொன்னது )....@[100000880085147:2048:Kovai Bala S] @[100003664503676:2048:Ramachandran Kishenraj]