கரைந்து விடுங்கள்.

அழகிரியை பற்றி அதிகம் சொல்லியாயிற்று.தன்னை வண்டு முருகன் அளவிற்கு உசுப்பேத்தும் சிலரை பற்றி அறியாமல் தான் உண்மையிலேயே பெருந்தலைவர்தான் என்று நம்ப ஆரம்பித்து விட்டார்.அதன் கோளாறுதான் மேலும்,மேலும் கட்சியை பற்றி கடுப்பாக பேச ஆரம்பித்தார்.எதற்கு ,ஏன் ,என்றே தெரியாமல் பலரையும் சந்தித்தார் பலருக்கும் ஆதரவை அள்ளி வீசினார்.காங்கிரசுக்கும் ஆதரவு.பாஜகவுக்கும் ஆதரவு.வைகோவுக்கும் ஆதரவு,விஜயகாந்துக்கும் ஆதரவு.
அதே நேரம் தான் காப்பாற்றப் போவதாக கூறிவரும் திமுக வேட்பாளர்களை தோற்கடிக்கவும் ஆதரவு.என்ன கட்சி பாசம்.
தான் எதற்காக கட்சியை விட்டு விலக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்ர்வு கூட இல்லாமல்.மேலும்,மேலும் கட்சியை அசிங்கப்படுத்தும் பணியை செய்து வருகிறார்.இவரை உண்மையிலேயே திமுக கட்சிக்காரன் ஆதரிப்பானா?இவரின் வலது கரம் கோபி கூட கூடாரம் மாறி ஸ்டாலின் பக்கம் போய்விட்டார்.

கட்சியை விட்டு விலக்கப் பட்ட பின்னர் நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்போகிறாராம் .கருணாநிதி குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காவிட்டால் வழக்கு தொடுக்கலாம்.கட்சியை விட்டு நீக்கியதற்கு...?
அவருக்கு சரியான வழியை சொல்லித்தர அருகில் யாரும் இல்லை என்பது தான் தெரிகிறது.எதிர் கட்சி என்று இல்லாமால் கருணாநிதி குடும்பத்தின் மீது கடுப்பில் இருக்கும் வைகோ வை நம்பினால் அழகிரி அரசியல் அனாதை தான்.நல்ல பொறுப்பு -கட்சியினரின் மரியாதை எல்லாவற்றையும் அழகிரி கெடுத்து விட்டார்.
காலம் போனபின் மீண்டும் திமுகவில் வெறு வழியின்றி நுழைந்தால் மரியாதை கிடைக்குமா? அழகிரி இன்னொரு மு.க.முத்து ஆகத் தான் இருக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும்.
அழகிரி கொஞ்சம் தனியே உட்கார்ந்து தான் செய்தது,செய்ய வேண்டியதை சிந்தித்து பார்த்தால் நல்லது.
அருகில் இருக்கும் உசுப்பேத்தும் கூட்டத்தை சற்று தள்ளி வைத்து யோசிக்கட்டும்.அதுதான் நல்லது.
அவர் திமுகவுக்கு செய்தது என்ன?
ஸ்டாலினைப் போல் மிசாவில் அடிபட்டாரா?இளைஞர் அணி என்று அலைந்துதிரிந்து கட்சி யைவளர்த்தாரா? தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து கலைத்துப்போனாரா?
எதுவுமே செய்யாமல் திடீர் தலைவ்ரானதால்தான் அவருக்கு தனது நிலை தெரிய வில்லை.ஸ்டாலின் பக்கம் இருப்பது கட்சி தொண்டர்கள் ஆனால் உங்கள் பக்கம் இருப்பது உங்களைப் போன்ற அதிரடி மன்னர்கள்தான்.
இப்போது கூட 2011ல் அதிமுக ஆட்சி வந்ததும் 10 மாதங்களுக்கு மேல் வாயைத்திறக்காமல் அமேரிக்கா ,சிங்கப்பூர் என்று தலை மறைவாக அலைந்தீர்களே.ஸ்டாலின் போல் சட்டமன்றத்தில் தைரியமாக கேள்வி கேட்க வேண்டாம் .மதுரையிலேயே திமுக கட்சி வளர்ப்பதில் ஈடு பட்டிருக்கலாமே .ஏன் வாயையே திறக்காமல் இருந்தீர்கள்.அதுதான் அஞ்சா நெஞ்சன் பட்டத்திற்கு அர்த்தமா?
கட்சியில் ஸ்டாலி னிடமும் ,வீரமநியிடமும் காட்டும் வீரத்தை ஜெயலலிதாவை எதிர்த்து செய்ய முடியாமால் போனதுக்கு காரணாம் ஏன்ன?
கடைசியாக அழகிரி அண்ணாச்சிக்கு நீங்கள் கொஞ்ச காலம் வாயை திறக்காமல் தேர்தல் முடியும் வரை அமெரிக்காவில் மகள் வீட்டில் ஓய் வெ டுப்பதுதான் உங்கள் வருங்கால அரசியலுக்கு நல்லது.அல்லது பேசாமல் அம்மா காலில் விழுந்து அதிமுகவில் கரைந்து விடுங்கள் .
                       .
------------------------------------------------------------------------------------------------------------

நடு நிலையாக்கம்.

தமிழக ஊடகங்கள் செயல்பாடு என்ன வகையிலான நடுநிலையில் இருக்கிறது என்பதை பார்க்கும் பொது புல்லரிக்கிறது.
2ஜி பற்றி ,அதில் திமுக கையை நனைத்துள்ளது பற்றி பக்கம் ,பக்கமா இன்று வரை எழுதும் நாளிதழ்களும் ,ஆட்களை உட்காரவைத்து விவாதித்து அலசி காயப்போடும் புதிய த லைமுறை,தந்தி,லோட்டஸ்,பாலிமர்,ராஜ்,சத்தியம்,ntdv,தொலைக்காட்சிகளும் அம்மையார் சொத்துக் குவிப்பை பற்றி பெங்களூரில் அரசு வழகுரை ஞர்  கூறிய பட்டியலை மறந்தும் கூட காலமானார் செய்தி  அளவில் கூட வெளியிட வில்லை.
திமுகவின் கட்சிப் பத்திரிக்கை முரசொலியும் ,தினகரனும் மட்டுமே செய்தியை வெளியிட்டுள்ளன.
2ஜி ராசா வீட்டில் ,நண்பர்கள்,உறவினர்கள் வீட்டில் சோதனையில் ஒரு பைசாகூட மாட்டவில்லை.ராசா சிறையில் இருந்தும் வந்து விட்டாரா.அவர் மீதான குற்றம் நிருபனமாகவில்லை.அதை செய்தவர்கள் பெரிய இடத்துக்காரர்கள்.அவர்கள் பக்கம் மறந்தும் கூட சிபிஐ செல்லவில்லை.விசாரிக்கவில்லை.
அவ்வளவு ஏன் வழக்கிற்கு லூப்பிடும் போதெல்லாம் ராசா செல்கிறார்.அதுவும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் என்னை விசாரியுங்கள் என்று சொல்லியும் கூப்பிட்டு விசாரிக்க மறுத்து விட்டு இவர் மீது குற்றம் சுமத்துகிறது.
ஆனால் பெங்களூர் வழக்கில் ஜெயா இதுவரை வாங்கிய பிணை எத்தனை வாய்தா ராணி என்றெ கின்னசில் பட்டம் வாங்கி விட்டார்.அந்த வழக்கு தொடர்பான செய்தியை கிட்டத்தட்ட 15000 கோ டிகளை தொடும் குவிப்பு பட்டியலை கண்டு கொள்ளாமல் நமது தினத்தந்தி,தினமலர்,தினமணி,தி இந்து ,பொன்ற நாளிதழ்கள் இருப்பதை பார்க்கும் போது இப்பத்திரிகை செய்திகள் என்ன ஆக்கத்தில் வெளியாகிவருகின்றது என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது.
இவர்களுக்கு திமுக மீது உள்ள் கடுப்புதான் 2ஜி செய்திக்கு தரப்படும் முக்கியத்துவம்.

லட்சக்கணக்கில் வீளம்பரம்தரும் ஜெயா வை விமர்சித்தால் கொட்டும் காசு நின்று விடும்,என்ற எண்ணமும் ஜெயாவை எதிர்த்து செய்தி வெளியிட்டால் கிடைக்கும் மரியாதை பற்றிய பயமும்தான் சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தரப்படும் பாராமுகம்.
பிறகு என்ன விளக்கெண்ணை நிமிர்ந்த நடை என்று பாரதியின் பாடலை தலைப்பில் தருகிறீர்கள்.அது கூடபாரதி நம்ம ஆளு என்ற  உங்கள் பார்ப்பண பாசத்தின் வெளிப்பாடுதானா?
உங்களுக்கெல்லாம் நடுநிலை என்று சொல்லிக்கொள்வதில் கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
தி இந்து தமிழ் நாளிதழ் பல செய்திகளை தந்து மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் அதுவும் இந்த செய்தியை வெளியிட வில்லை.ஆனால் சின்ன செய்தியாக 2ஜி யில் ஒருவர்  வாய்தா கேட்டார் என்று போட்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் பேசுவது சலிப்பைத்தருகிறது.அவர் மத்திய ஆட்சியில் தாங்கள் செய்தவற்றை பட்டியலிட்டு திரும்பத்திரும்ப கூட்டங்க்களில் செல்லும் இடங்களில் சொல்லுகிறார்.என்று ஒரு செய்தி.அப்படியானால் ஜெயா எழுதிவைத்து கிளிப்பிள்ளை போல படிப்பது இந்து காரன்காதில் தேனாறு போல் பாய்கிறதா?
எல்லாம் அவ்வப்போது அம்மா கொடுக்கிற லட்சக்கணக்கான விளம்பரங்கள் படுத்தும் பாடு.ஆனால் அவ்வளவும் மக்கள் வரிப்பணம்.அதையும் நினைவில் கொள்ளுங்கள்.




































































































வர்தான் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?