கோடையை, குளிர்ச்சியாக்க..........,!




இப்போது தகவல் பரிமாறிக் கொள்வதில், அதிக எண்ணிக்கையுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, வரும் ஜூன் முதல், இணையத் தின் துணையோடு, வாய்ஸ் காலிங்  எனப்படும்,செல்பேசி இணை ப்பினைத் தரத் திட்டமிட்டுள்ளது.
 இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.
முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
suran
இன்ஸ்டண்ட் மெசேஜ் வழங்குவதில், வாட்ஸ் அப் மற்ற செயலிகளைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது.
இதே சேவையை வழங்கும் தென் கொரியாவின் ககோ டாக் (KakaoTalk) மற்றும் சைப்ரஸ் நாட்டின் வைப்பர் (Viber) ஆகிய செயலிகளைக் காட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் செயலியே. மாதந்தோறும் ஏறத்தாழ 45 கோடி பேர் இதனைப்பயன்படுத்தி வருகின்றனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்படும் பட்சத்தில், பலர் வழக்கமான போன் சேவை நிறுவனங்களை ஒதுக்கித் தள்ள தொடங்கிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அனைவருமே இணைய இணைப்பு கொண்டுள்ளனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்பட்டால், அனைவரும் இதன் வழியே பேசிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.
இதற்கு பொருத்துதல்  கட்டணம் மற்றும் அழைப்புக் கட்டணம் எதுவும் இருக்காது. இணைய இணைப்பிற்கான கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியதிருக்கும்.
அதுவும் ஏற்கனவே அனைவரிடமும் இருப்பதால், எந்த செலவும் இன்றி, உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் , செல்பேசியில்  பேச முடியும்.

------------------------------------------------------------------------------------------------
அவுட்டர் நெட்?

இன்டர்நெட்  இருப்பது போல அவுட்டர்நெட் என்று ஒன்று உண்டா?
 . வேடிக்கைக்குக் கூட இது போல யோசித்ததில்லை இதுவரை.
. ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் "ஊடக வளர்ச்சி முதலீட்டு நிதி " Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
 இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும்.
எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
Photo: love made with food

by: hong yi

http://onebigphoto.com/love-made-food/
அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும்.
இன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. எனவே, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தக் கூடாது, சிலவகை இணைப்பினைத் தடை செய்திட வேண்டும் என முயற்சிக்கும் அரசுகளுக்கு இந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அடிப்படை மனித உரிமை இது போன்ற அரசு அமைப்புகளால் மீறப்படுகின்றன என்று கருதுகின்றனர்.
எனவே, இந்த குழுவினர், பல நூற்றுக் கணக்கான அளவில் சிறிய சாட்டலைட்களை உலகெங்கும் பறக்கவிட இருக்கின்றனர். இவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும்.
 இவற்றை ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, எவரும் இணைப்பு பெற்று, இணையத் தகவல்களைப் பெறலாம். இந்த சாட்டலைட்களுக்குத் தகவல்களை அனுப்ப தரையில் இயங்கும் நூற்றுக் கணக்கான மையங்கள் அமைக்கப்படும்.

MDIF அமைப்பைப் பொறுத்தவரை, இந்த உலகில் இன்னும் 40 சதவீதம் பேர், இணைய இணைப்பினைப் பெற முடியாமலே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் வட கொரியா போல தடை போடும் அரசுகள் மட்டும் அல்ல; உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குவதில் ஏற்படும் பெருத்த செலவும் ஒரு காரணமாகும்.
அவுட்டர் நெட் (Outernet) மூலம் சைபீரியா அல்லது மேற்கு அமெரிக்காவில் உள்ள தொலை தூர தீவுகளில், கிராமங்களில் வாழும் மக்கள், நியூயார்க், டில்லி, டோக்கியோவில் வாழும் மக்களைப் போலவே, இணைய இணைப்பினைப் பெற்று, தகவல்களை அடைய முடியும்.
அனைவருக்கும் இந்த உரிமை சமமாய் கிடைக்கும்.
கீழே தரையில் இயங்கும் நிலையங்களில் இருந்து தகவல்கள் சிறிய சாட்டலைட்களுக்கு அனுப்பப்படும். இந்த சாட்டலைட்கள், பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பினையும், அதன் வழி தகவல்களையும் தரும்.
இந்த கட்டமைப்பினை அமைக்க 3 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
MDIF அமைப்பு இதற்கான நிதியைத் திரட்டி வருகிறது.
போதுமான அளவு நிதி சேர்ந்தவுடன், இந்த அவுட்டர்நெட் திட்டம் உருவாகிவிடும் .


---------------------------------------------------------------------------------------------------------------------------
யார் தான் பிரதமர்?

 3வது அணி ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதா பிரதமர் என்பதை, பல தலைவர்களும் கூறி வந்தனர். அதேபோல தமிழகத்திலும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால், ஜெயலலிதாதான் பிரதமர் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு, பின் அனைத்து 2ம் கட்ட தலைவர்களும் ஒவ்வொரு மேடையிலும் பேசி வந்தனர்.
மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக நடந்த ஆய்வு கூட்டத்திலும் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தியே பேசப்பட்டது. அதனால்தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஜெயலலிதா கூட்டணியில் வைத்திருந்தார்.ஆனால், திடீரென்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்த ஜெயலலிதா, கம்யூனிஸ்ட்கள் கேட்கும் தொகுதிகளிலும் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார்.
மேலும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து, ஒரு தொகுதிக்கு மேல் தர முடியாது. வேண்டுமானால் நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் மனமுடைந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், கூட்டணியில் இருந்து வெளியேறினர்.
suran

இந்நிலையில், தேசிய கட்சிகளான இடதுசாரிகள் கூட்டணியில் இருந்தபோது, பிரதமர் வேட்பாளர் என்ற கோஷம் அனைத்து தரப்பிலும் எழுந்தது.
அதிமுக தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 இதனால், தேசிய கட்சிகள் அனைத்தும் வெளியேறிய பிறகு, அந்த கோஷத்தின் ‘ஒலி’ குறைந்துள்ளது.இந்நிலையில், அதிமுக தலைவர்களால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் யார்  பிரதமர் என்று சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில் கட்சி நிர்வாகிகள் தவிக்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா கூட, தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று பேசி வருகிறார்.
அப்போதுகூட தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவிலை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறி பிறகு முதல்வர் ஜெயலலிதா இதுவரை எந்த பிரசாரக் கூட்டத்திலும் பேசவில்லை.
இதனால் மத்தியில் அமையும் ஆட்சி குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார்?
அவரது பிரசாரம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துத்தான் தாங்களும் பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனாலும் தனித்துப் போட்டியிட்டு, மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று கூறுவதை மக்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பது கேள்விக் குறிதான் என்று அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

யானை தன் தலையில்
தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கோடையை, குளிர்ச்சியாக்க .......

கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது.அறிகுறியாக ஆங்காங்கே குடிநீர்த் தட்டுப்பாடு குரல்கள் வர ஆரம்பித்து விட்டது.சில ஆண்டுகளாக 
கோடை காலம் வர.வர தற்பொது வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கோடை வெப்பத்தை இயற்கையிடமிருந்து நம்மால் குறைக்கவோ,தவிர்க்கவோ இயலாது.ஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க சில தற்காப்புகளை நாம் செய்து கொள்ளலாம்.கீழ்க்கண்டவற்றை நாம் செய்தாலும் தமிழக சாபக்கேடான மின் வெட்டு நம்மை வருத்தெடுக்கத்தான் போகிறது.
அதில் சில:

* கோடைக் காலத்தில் அதிகாலை, 5:00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. பெண்கள், வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடலாம்.
* உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிவதுடன், அந்த ஆடைகளில், வெண்மை நிறம் கலந்திருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் "பளிச்' வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* வெயிலின் தாக்கத்தால், உடலில்இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலின் நீர்ச் சத்து குறைந்துவிடும். அதனால், அதிக நீர் அருந்துவதுடன், இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. இது, நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாவதை தடுக்கும்.
* வெயிலில் அலைந்து வந்தவுடன், நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்தே, நீர் அருந்த வேண்டும். அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக்கூடாது. ஏனெனில், இந்த நீர் ஜலதோஷம், தலைவலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ போதுமானது.
* அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

* இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
* ஆரஞ்சு, சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை பழச்சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி சாப்பிடலாம்.
* குடிநீரை கொதிக்க வைக்கும்போது, அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின் அருந்தலாம். தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான், உடல் சூடு குறைந்து, சமநிலைப்படும்.
* மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
* கோடைக் காலத்தில், காலை உணவாக, தோசை, பூரி, பரோட்டாவை தவிர்த்து, இட்லி அல்லது கேழ்வரகு, கம்பு கஞ்சி செய்து சாப்பிடலாம்.
* மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த, பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* தினமும் இரு முறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.
* வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி அணிந்து கொள்ளலாம்.
* வாரம் இரு முறை, எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

* கோடை வெப்பத்தின் போது, அதிக நேரம், குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து, வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். கை கால்களுக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை காற்றோட்டமானதாக இருக்கட்டும். பருத்தியினால் தயாரிக்கப் பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?