எங்கே [ மன] நிம்மதி....!
அழகிரி இப்போது என்ன செய்யலாம்?என்ன செய்யலாம்?என்று தெரியாமல் அலைகிறார்.அவரிடம் இருப்பது அடியாட்கள் கூட்டம்தானே ஒழிய திமுக தொண்டர்களோ ,அரசியல்தலைகளோ இல்லை.
அதனால்தான் இந்த குழப்பம்.
திமுகவை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டவரை மக்களவை வேட்பாளர்கள் தேர்வில் கலந்தாலோசிக்கவில்லை.அவரின் அடியாட்களுக்கு மன்னிக்கவும் ஆதரவாளர்க்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சில ஊடகங்கள் மாய்ந்து,மாய்ந்து எழுதுகின்றன.அவைகள் என்ன நோக்கத்தில் இருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
கட்சி விரோதப் போக்கில் வெளியெற்றப்பட்டவருக்கு,அவரின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று வருந்தும் ஊடகங்கள் கருத்து ஓநாயின் அழுகைதான்.
அழகிரி விலகல் வைத்து கொஞ்சம் நாள் ஓட்டலாம் என்று அவர் நடந்தால் செய்தி,அவர் ஏப்பம் விட்டால் செய்தி என்று திமுகவுக்கு எதிராக அழகிரியை கொம்பு சீவி விட்டு பார்த்த ஊடகங்கள் எதிர்பார்ப்பு ஒன்றும் நடக்கவில்லை.தொண்டர்கள் அவரின் பின்னால் அணிவகுக்கவில்லை.சொல்லப் போனால் இருந்த சிலர் கூட மாறி அல்லது ஒதுங்கி விட்டனர்.
என்ன செய்ய ஆறுமாதத்துக் கொருமுறை அறிக்கை விட்டு,விட்டு பின்னர் காணாமல் போய்விடும் விக்ரமா தித்திய அரசியல் செய்துவரும் அழகிரி பின்னால் நம்பி செல்ல உண்மையான தொண்டன் யோசிக்கத்தானே செய்வான்?
இப்போது திமுக மக்களவை வேட்பாளர்கள் தேர்வும் வெளியாகி விட்டது.
கட்சி இப்போது கலைஞர் கையை விட்டு தளபதி கட்டுப்பாட்டில் வந்து விட்டது அனைவருக்கும் வெளிச்சமாகி விட்டது.
திமுகவில் உள்ள தலைவர்களும்,தொண்டர்களும் ஸ்டாலினை தலைவராக எற்றுக் கொண்டது திருச்சி மாநாட்டிலும்,இப்போதைய வேட்பாளர் பட்டியலிலும் தெளிவாகி விட்டது.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று உட்கார முடியவில்லை.
தம்பியை தனியாக எதிர் கொள்ளவில்லை.
ஒரே குழப்பம் .
அதற்காக சும்மா வீட்டில் இருந்தால் ஊடகங்கள் மறந்து விடுமே தன்னை.
ஆனால் அதற்கு என்ன செய்யலாம்?
ஸ்டாலினை தாக்கியும்,திமுகவை விமர்சித்தும் அறிக்கைகள் விட்டால் பிரதிபலிப்பே இல்லை.
இதோ மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்.மீனவர் பிரச்னை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்.குறைந்த பட்சம் காங்கிரசுடன் தமிழகத்தில் யாரும் கூட்டனி வைக்க வர மறுப்பதற்கு வருத்தம் தான் தெரிவித்திருப்பார்.
அத்துடன் விட்டாரா ?
அடுத்து பாஜக தலைவரை சந்தித்துள்ளார்.
\
மன்மோகன் சிங் கூட பேசுவதென்றால் இவர் மட்டும்தான் இடையாள் வைத்து பேசியிருப்பார்.அவர் பதில் குழப்பத்தை மேலும் அழகிரிக்கு அதிகப்படுத்தித்தான் இருக்கும்.
அந்த குழப்பத்தை அதிகரிக்க இங்கு வந்த பின்னர் நடிகர் ரஜினியை சந்தித்திருக்கிறார்.
அவர் கோச்சடையானை வெளிவரும் நாளைப் பற்றியே பேசி மேலும் குழப்பியிருப்பார்.மன நிம்மதிக்காக ரஜினியை சந்தித்ததாக வெளியெ வந்து சொல்லி இருக்கிறார்.
ரஜினி என்ன மனநல மருத்துவரா?அல்லது மன நிம்மதி ஸ்டாக்கிஸ்டா?
எப்படியோ அழகிரி தனது குழப்பத்தை தீர்க்க சந்தித்த ஆட்கள் அனைவருமே அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பார்கள் .என்பதுதான் உண்மை.
தனிக்கட்சி ஆசை இருந்தால் அதை உடனே அழித்து விட வேண்டும்.
அல்லது சில நாட்களுக்கு முன்னர் கக்கன் காங்கிரசு என்று ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டதே அதன் ஆரம்ப விழா போல் ஆகி விடலாம் .அல்லது சரத் குமார் கட்சி போல் ஏதாவது கட்சியின் ஒட்டுண்ணி கட்சியாக தொங்கு விரலாக மட்டுமே அரசியல் நடத்த இயலும்.
ஸ்டாலின் அரசியல் வரலாறு தமிழகம் முழுக்க தெரிந்த வரலாறு.அவர் வாரிசு உரிமையில் வந்தவரல்ல.மிசாவில் தனது உடல் நலத்தையே பறி கொடுத்தவர்.[அதை வைத்துதானே நீங்கள் இரண்டு மாதம் தவணையே கொடுத்தீர்கள்?]
இளையோர் கூட்டத்தை கட்சிக்கு வர வைத்த உழைப்பாளி.
ஆனால் நீங்கள் விருந்தாளி அரசியல்வாதி.திடீரென ஒரு பேட்டி .அதன்பின் வனவாசம்.உங்கள அரசியலால் திமுகவிற்கு சோதனைகள்தான்.தா.கி கொலை வழக்கு.மதுரை முழுக்க உங்கள் தொண்டர்களின் அடாவடி என்று.
இப்போது கிடைத்துள்ள ஓய்வில் வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்காமல் கொஞ்சம் யோசியுங்கள்.ஸ்டாலின் மீது நீங்கள் காட்டும் வெறுப்பு மட்டுமே இன்றைய உங்கள் அரசியல் .அதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?மக்களுக்கு உங்கள் அரசியல் வரவு புதிய உற்சாகத்தை ,நம்பிக்கையை ஸ்டாலின் தலைமை வரவு போல் கொனருமா ?இல்லை என்பது.உங்களுக்கே புரியும்.உங்கள் வரவால் நன்மையையும்,மகிழ்வும் மன்னன்,ரித்தீஷ் போன்ற அடாவடி அரசியல்வாதிகளுக்கு மட்டுமே .
உங்கள் மன நிம்மதி உங்கள் வசமே உள்ளது.அதற்கு நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் அவ்ளோதான்.
முகனூலில் சந்திப்பு:
"பிரதமர் மன்மோகன் சிங்கை மு.க.அழகிரி சந்தித்தார் - செய்தி மன்மோகன் ஜீ: கியாவோ அஷகிரி ஜீ, டமில்நாட்ல எப்டி இருக்குஜி எலக்ஷன் ?? அழகிரி ஜீ: மேரா டமில்நாட்டை விட்டு ஜி தப்பிச்சு வந்திருக்கேன் ஜீ ... மன்மோகன் ஜீ : கியா போலோ ?? அழகிரி ஜீ : ஆங்..... சொரக்காவுல உப்பில்லியாம் ....கடுப்பக் கிளப்புறானுங்க" |
-Surya Born To Win |
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கிறார்களோ -மக்களுக்கு பயன் உண்டாக்குகிறார்களொ இல்லையோ அவர்களுக்கு பின் வரும் பலன்கள் மட்டும் நிச்சயம்.
மக்களவை உறுப்பினர்களுக்கு மாத சம்பளம், 16 ஆயிரம் ரூபாய்; தினப்படி, 1,000 ரூபாய்; ஒய்வூதியம் ரூ , 8,000/- தொகுதி நிதி, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
இது போக, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இலவசமாக, 'ஏசி' முதல் வகுப்பு ரயில் பயணம். குடும்பத்தினருக்கும், இலவச விமான பயணம், மருத்துவ செலவு, வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை, டில்லியில் சொகுசு பங்களா, ஆண்டுக்கு, ஒன்றரை லட்சம் இலவச போன் அழைப்புகள், 25 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இதர வசதிகள் அவர்களுக்கு கிடைக்கிறது. பார்லிமென்ட் நடக்கும் போது, எம்.பி.,க்கு, தினப்படியாக, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பார்லிமென்ட் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குள் மீண்டும் கூடினால், சபை நடக்காத, இடைப்பட்ட, மூன்று நாட்களுக்கும், அவர்களுக்கு ப டி உண்டு .
லோக்சபா, எம்.பி., அலுவலகம் வைத்துக் கொள்ள, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதில், 4,000 ரூபாயை அலுவலகப் பொருட்கள் வாங்கவும், கடிதப்போக்குவரத்துக்கு, 2,000 ரூபாயும், உதவியாளர் நியமனத்திற்கு, 14 ஆயிரம் ரூபாயும் செலவழிக்கலாம்.
பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், குழு கூட்டங்களில் பங்கேற்கவும் பயணப்படி வழங்கப்படுகிறது. உறுப்பினர் வழக்கமாக வசிக்கும் இடத்திலிருந்து, பார்லிமென்ட் அல்லது சபைக்குழு கூட்டம் நடைபெறும் இடம் வரை சென்று திரும்ப, இந்த பயணப்படி வழங்கப்படும். ரயில் பயணம் என்றால், ஒரு முதல் வகுப்பிற்கான கட்டணமும், ஒரு இரண்டாம் வகுப்பிற்கான கட்டணமும் வழங்கப்படும். விமானம் மூலமும் பயணம் செய்யலாம். சாலை வழியாக பயணம் செய்தால், கி.மீ.,க்கு, 13 ரூபாய் வழங்கப்படும். உறுப்பினர் வசிக்கும் இடத்திற்கும், பார்லிமென்ட் அல்லது குழுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, நேரடியாக செல்ல, விமான சேவை கிடைக்காத பட்சத்தில், ஒரே நாளில், தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் வகையில், எந்த வகை பயணத்தையும் உறுப்பினர் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் மனைவி அல்லது கணவர், பார்லிமென்ட் சாதாரண கூட்டத்தொடர் நடைபெறும்போது, ஒரு முறையும், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது, இரு முறையும், ஆண்டுக்கு, எட்டு தடவைக்கு மிகாமல், உறுப்பினர் வசிக்கும் இடத்திலிருந்து டில்லிக்கு விமானம் அல்லது ரயில் அல்லது சாலை வழியாக வந்து திரும்பலாம்.
ஒவ்வொரு உறுப்பினரும், அவரோ அவருடைய கணவர் அல்லது மனைவியோ, இந்தியாவின் எந்த பகுதிக்கும் முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் பயணிக்கவும் அவருடைய உதவியாளர், 'ஏசி' இரட்டை படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கவும் வசதியாக, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு, எம்.பி.,யும், அவரின் கணவர் அல்லது மனைவியுடனும் அல்லது உதவியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆண்டுக்கு, 34 முறை இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் விமான பயணம் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் கணவர் அல்லது மனைவி அல்லது உதவியாளர், உறுப்பினரைப் பார்ப்பதற்கென, எட்டு முறை விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.
நாற்பதும் நமதே இந்த நாடும் நமதே |
டில்லியில் உள்ள, மத்திய சிவில் சர்வீசை சேர்ந்த முதல் பிரிவு அதிகாரிக்கு கிடைக்கக்கூடிய மருத்துவச் செலவுக்கு, இணையான தொகை, உறுப்பினருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது; வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவதற்கும், உரிய பரிசீலனைக்குப் பிறகு அனுமதி தரப்படும். பாரிலிமென்டில் அமைக்கப் பட்டுள்ள, மருத்துவ மையத்தில் உறுப்பினர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்கப்படும்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருக்கு, உரிய இருப்பிடம் ஒதுக்கப்படும் வரை, தற்காலிகமாக, டில்லியில் உள்ள, மாநில விருந்தினர் மாளிகை அல்லது ஜன்பத் ஓட்டலில் தங்கலாம். எம்.பி.,க்களுக்கு, அவரவர் வகித்த பதவிக்கு ஏற்ப, உரிய சொகுசு பங்களாக்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு, எம்.பி.,யும், மூன்று தொலைபேசி இணைப்புகளை வைத்துக் கொள்ளலாம்; இதில், ஒன்று, இன்டர்நெட் இணைப்புடன் கூடியதாக இருக்கும். இரண்டு மொபைல் போன்களும் வைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு இந்த இணைப்புகள் மூலம், 1.5 லட்சம் அழைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பொருட்கள் வாங்க, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகைப்படாமல், முன்பணம் வழங்கப்படும்; இதை உறுப்பினர், 60 மாதத் தவணையாக திருப்பிச் செலுத்தினால் போதும்.
மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு, கணினி வாங்க, 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
முன்னாள் உறுப்பினர்கள், எவ்வளவு காலம் உறுப்பினராக இருந்தாலும், குறைந்த பட்சம், மாதம், 8,000 ரூபாய், ஓய்வூதியமாக பெற தகுதி பெறுகின்றனர்.
மேலும், ஐந்து ஆண்டுக்கு மேல் உறுப்பினராக இருந்திருந்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் கூடுதலாக, 800 ரூபாய் வழங்கப்படும். 9 மாதத்திற்கு மேல் கூடுதலாக இருந்தால், அது ஓராண்டு என கணக்கிடப்பட்டு, மேலும், 800 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.
எம்.பி.,யாக இருந்தவர் இறந்து விட்டால், அவருக்கு கிடைக்கக் கூடிய ஓய்வூதியத்தில், 50 சதவீத் தொகை, அவர் மனைவி அல்லது கணவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த "சைக்கிள் சின்ன"க் காரன் மட்டும் கையில் கிடைச்சான்........?
-------------------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 14; சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தின சிறப்பு பகிர்வு
|
மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் இன்று .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை . போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .
ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;
மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .
தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார்
;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .
கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;
அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின
.எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .
பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;
இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .
ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .
எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் .
இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;
ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்
அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;
இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .
ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் .
காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று
.சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .
- பூ.கொ.சரவணன்
|
-------------------------------------------------------------------------------------------------------------------------