இதய நோயிலிருந்து
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இன்றைய சூழலில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இதயநோய் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர். இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்தில்இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்களுக்கு ...