பச்சையா வெங்காயம் சாப்பிடுங்கள்...
பி. யு. சின்னப்பா
-------------------------------
1916-ம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் [05-05-1916 அன்று மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் சின்னசாமி.
புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார்.
சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக்கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.
இக்கம்பெனியில் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் பிரதான வேடங்களில் நடித்து வந்தனர். பின்னர் அவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் குற்ப்பிடத்தக்கவர்கள் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. ஆர், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார்.
தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார்.
அத்துடன் புதுக்கோட்டையில் ராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன.
எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் சினிமாவில் பிரவேசித்தார் சின்னப்பா. அதனைத் தொடர்ந்து 1938-ம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப்பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து சுமார் 25 படங்களில் அவர் நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தாபனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார்.
1944-ம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற ஒரு மகனும் உண்டு.
ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார்.
1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது. சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும், சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்தது. அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல் இடத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் ஆக்டர் ஆக திகழ்ந்தார்.
அதன் பின்னர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம் பாராட்டுதல் பெற்றார்.
இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.
சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார். பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக ஆக்கியது.
கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மஹா மாயா ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது. ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில் படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.
சின்னப்பாவின் பாட்டுகள் இசைத்தட்டுகளில் வெளிவந்த நல்ல விற்பனையாகியது. ரேடியோவில் ஒரே ஒரு தடவை ( 1938ம் வருடம்) பாடியிருக்கிறார். ஆனால், அவர்கள் அப்போது அளித்த சன்மானம், சின்னப்பாவுக்கு இதற்காக ஏற்பட்ட செலவை விடக் குறைவாயிருந்ததால் ரேடியோ விஷயத்தில் அவர் அக்கறையே கொள்ளாமல் விட்டு விட்டாடர்.
சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி முதலியவையாகும். கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.
மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.
கிருஷ்ணபக்தி படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக்கேட்கப்படுகிறது.
1951-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் தமது 35-வது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார்.
இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி.
கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
----------------------------------------------------------------------
வெங்காயம்
வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர்.
பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம்.
முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் அழகு ஏற்படுகிறது.
உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.
உஷ்ணக் கடுப்பு அகல
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது.
உஷ்ணக் கடுப்பு அகல
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது.
நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலி
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடி
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருக
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.

ஆகவே தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும்.
அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.