இடைத்தேர்தல் தரும் பாடங்கள்
க டந்த மாதத்திலும், இந்த மாதத்திலும் சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பெருத்த தோல்வியினைச் சந்தித்திருக்கிறது. கையிலிருந்த இடங்களையும் கூட இழந்திருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் அமைந்தஆட்சி குறித்தும், மோடியின் நூறு நாள் சாதனை குறித்தும் ஊடகங்கள் சிலாகித்து பெரிதாகப் பேசிவந்திருக்கும் பின்னணியில், வெளி வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் இவை தேர்தல் முடிவுகளாக மட்டு மல்லாது, அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் பி.சாய்நாத் தனது வலைத்தளத்தில் (18.09.2014) வெளியிட்டிருக்கும் கட்டுரையின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.ஊழல், நிர்வாகக் குளறுபடிகள் போன்றவற்றின் காரணமாக, இரண்டாவது ஐ.மு.கூஅரசு மக்களிடமிருந்து தனிமைப்பட்டது.
இவ் வாறு தனிமைப்பட அதற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன.
ஆனால் ஒவ்வொருவரையும் சீண்டிஅவர்களைப் பகைத்துக் கொள்வதற்கு, பாஜக விற்கு ஐந்து மாதங்கள் கூட தேவைப் படவில்லை. பாஜகவின் 100 நாள் ஆட்சி குறித்த ஊடகக் கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியாத நிலையில், இந்த இடைத் தேர் தல் தோல்வியில் வந்திருக்கிறது.
இடைத் தேர்தல்கள் நடைபெற்ற 32 இடங்களில் 24இடங்கள் பாஜகவின் கைகளில் இருந்த வை. அதில் பாதி இடங்களை அது இன்றுஇழந்திருக்கிறது.
இடைத் தேர்தல்கள் நடைபெற்ற 32 இடங்களில் 24இடங்கள் பாஜகவின் கைகளில் இருந்த வை. அதில் பாதி இடங்களை அது இன்றுஇழந்திருக்கிறது.
இதனை தேர்தல் முடிவு களாக மட்டுமே பார்க்காமல், சற்று அரசியலாக பார்க்க வேண்டும். மகாராஷ்டிராவில் நாளை காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோற்று, பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிபெறக் கூடும். அதற்காக இந்த இடைத் தேர்தல்களில் பாடம் எதுவும் இல்லை என்று ஆகி விடாது.
பாடங்கள் பல. அதில் இதோ ஒரு சில:
பாடங்கள் பல. அதில் இதோ ஒரு சில:
பாடம் ஒன்று
மிகக் குறுகிய கால அளவிலேயே நாடுமுழுவதும் உள்ள சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில் சிறுபான் மையினரின் வாக்குகள் மிக மோசமாகச் சிதறுண்டு போயிருந்தன. ஆனால், இடைத் தேர்தல்களில் பாஜகவிற்கு எதிராக எந்தக் கட்சி மிக வலுவாக இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கின்றனர். அஸ்ஸாம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என அனைத்திலும் இதுவே நடந்திருக்கிறது. மக்களவைத் தேர்தல்களில், வளர்ச்சி நாயகனாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட மோடி, மதவாத உணர்வுகளைக் கிளறி விடும் வேலைகளை அமித் ஷா, கிரிராஜ் சிங், பாபா ராம்தேவ் போன்றவர்களிடம் ஒப்படைத்திருந்தார். இந்த மத வாதக் கோழிகள் அப்போது இட்ட முட்டைகளெல்லாம் இன்று குஞ்சு பொரித்து, பாஜகவிற்கு பாதகமாக மாறி நிற் கின்றன. பசிரத் தக்ஷின் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மேற்குவங்க சட்டமன்றத்தில் கால்பதித்துவிட்டோம் என்று பாஜக கொண் டாடுகிறது. பங்களாதேஷ் எல்லையில் இருக்கும் இந்தச் சட்ட மன்றத் தொகுதியில், மக்களவைத் தேர்தலின் போது பெருமளவில் மதவாதத் திரட்டல் செய்யப்பட்டிருந்தது. அதன் பயனாக, அன்று திரிணாமுல் காங்கிரசை விட பாஜக 30,000 வாக்குகள் அதிகம் பெற முடிந்தது. ஆனால், அந்த வாக்கு இடைவெளி இன்று 1,700 என மிக மோசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது.
பாடம் இரண்டு
திக்கித் திணறும் காங்கிரசை விட, ஆக்ரோஷமும் வெற்றி மமதைக்கும் எளிதில் ஆட்படும் பாஜக, மிக வேகமாக மக்களை பகைத்துக் கொள்ளும் குணம் கொண்டது. இது அதனுடைய மரபணுவில் ஆழமாகப் பதிந்துள்ள அம்சம். மக்களவைத் தேர்தலில் சக்கைப்போடு போட்ட பா.ஜ.க, அந்தத் தேர்தல் முடிந்த கையோடு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் மூன்று இடங்களையுமே மொத்தமாக இழந்து விட்டது. அதே போன்று, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சில முக்கியமான தொகுதிகளை இழந்துவிட்டது. பா.ஜ.க இழந்திருக்கும் பல தொகுதிகள், அவற்றில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்கள் என்பதனை இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டும். பா.ஜ.கவின் பலம் மிக்க ராஜஸ்தான், குஜராத், உ.பி ஆகிய மாநிலங்களில் அக்கட்சிக்கு ஏற்பட்ட கதி இது. உ.பி மாநிலத்தில், தனது கோட்டை என்று பா.ஜ.க பெருமையடிக்கும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை அது இழந்திருக்கிறது. நான்கே மாதங்களில் பெருமளவு வாக்கு களை இழந்து இந்தச் சரிவினை அது சந்தித்திருக்கிறது.
குப்பைத் தொட்டியில் தள்ளப்பட்ட காங்கிரஸ் ராஜஸ்தானில் நான்கு இடங்களில் மூன்றினையும், குஜராத்தில் ஒன்பது இடங்களில் மூன்றி னையும் வென்றிருக்கிறது.
இவைஅனைத்திலும் இழப்பு பாஜக விற்குத் தான்.
பாடம் மூன்று
டில்லி மாநிலத் தேர்தல் களைச் சந்திப்பதற்கு பாஜக பெருமளவிற்கு அஞ்சுகிறது. ஆனால், தேர்தல்களைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஒருவரை விலைக்கு வாங்க பாஜக தலை வர் ஒருவர் முயன்றது சிலஊடகங்களின் உதவியுடன் ஓரளவு மறைக்கப்படடுவிட்டது. எனினும், ஊடகங்களின் கவனம் அந்தத் திசையில் சற்று அதிகமாக திருப்பப்பட்டு விடும் என்பதால், அரசியல் குதிரை வியாபாரம் இனி அவ்வளவு எளிதல்ல.
பாடம் நான்கு
எதற்கும் ஒரு கணக்கு உண்டு. எனவே, தேர்தலுக்கும் ஒரு கணக்கு உண்டு. மக்க ளவைத் தேர்தல்களில் ‘பேரலை’ என்பது காங்கிரஸ் எதிர்ப்பு, ஐ.மு.கூ எதிர்ப்பு அலை தான் என்று நான் வாதிட்டிருந்தேன்.
மாநிலங் களில் எந்தக் கட்சிகள் காங்கிரசுக்கு எதிரான பலம் பொருந்திய சக்தியாகக் கருதப் பட்டவையோ அக்கட்சிகளுக்கு மக்களவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தச் சாதகமான நிலை பா.ஜ.கவிற்கு இருந்தது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கும் அந்தச் சாதகம் கிடைத்தது.
பாடம் ஐந்து
ஒரு தொகுதியில் பெறும் வாக்குகளில் முதலிடம் வகிப்பவருக்கே வெற்றி என்ற இன்றைய நடைமுறையிலுள்ள இந்தியத் தேர்தல் முறை கடந்த மக்களவைத் தேர்தல்களில் தாறுமாறாகச் செயல்பட்டுவிட்டது எனவும் நான் வாதிட்டிருந்தேன்.
மும் முனைத் தேர்தல்களில் அது பெரும் சேதத் தினை ஏற்படுத்தி விடுகிறது. நான்குமுனை, ஐந்து முனைப் போட்டிகளில் அது மிகவும் மோசமான சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் நாட்டில் ஐந்து அணிகள் போட்டியிட்டன. அதனால் தான் தமிழ்நாட்டில் 44 சதவீத வாக்குகளைப் பெற்ற அஇஅதிமுகவிற்கு 95 சதவீத இடங்கள் கிடைத்தன.
தேசிய அளவில் 31 சதவீத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க விற்கு 282 இடங்கள் கிடைத்தன, ஆனால், 19.3 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரசுக்கு 44 இடங்களே கிடைத்தன.
2009 மக்களவைத் தேர்தல்களில், ஏறக்குறைய இதே சதவீத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க விற்கு 116 இடங்கள் கிடைத்தன. இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி உ.பி இடைத் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. இது இயல்பாக சமாஜ்வாதி கட்சிக்கு பெருமளவு உதவுவதாகவே இருக்கும். ஆம், அது அவ்வாறு உதவியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. ஒரு மாதத்திற்கு முன்பாக பீகாரில் நடந்த இடைத் தேர்தல்களில் ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும்கை கோர்த்ததன் விளைவாக, பாஜகவிற்கு ஆறுக்கு நான்கு என்ற அளவில் தோல்வி யினைத் தர முடிந்தது.
அதற்கும் முன்பாக உத்தரகாண்ட் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பாஜகவைத் தோற்கடித்தது.
பாடம் ஆறு
சாதி. இது தேர்தல்களில் ஒரு முக்கியஇடத்தினை வகிக்கிறது. சாதி அடிப்படை யிலான வாக்களிப்பு செத்துப் போய் விட்டதாக ஊடகங்கள் பல கூறி வருகின்றன. ஆனால், அதே ஊடகங்கள் தான் சாதியினை தொடர்ந்து தூக்கிப் பிடித்தும் வருகின்றன.
சாதி செத்து விட்டது என்று சொன்னால் நாம் சாதியை எதிர்த்துப் போராட வேண்டாம் அல்லவா?
அதற்காகத் தான் அவை அப்படி கூறி வருகின்றன.
இந்த வலைத் தளத்தில் நான் எழுதுவதை தொடர்ந்து படித்தால், இது குறித்துத் மேலும் தெரிந்து கொள்வதற்கு அது உதவும்.
பாடம் ஏழு
இப்படி நடக்கும் என்று ஊடகங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், மோடியின் ஆற்றல் குறித்து அவர்கள் எவ்வளவு நம்பிக் கை வைத்திருந்தார்களோ, அவ்வளவு நம்பிக்கையினை அமித் ஷா குறித்தும் வைத்திருந் தார்கள்.
பிரச்சாரத்தின் மூலம் அவர் ஏதோஅற்புதங்களைச் செய்யப் போகிறார் என் றெல்லாம் நம்பினார்கள். அமித் ஷா அதை ஓரளவு செய்தார் எனினும், அவர்கள் எதிர் பார்த்த அளவில் அது இல்லை.
மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கவிற்கு சற்று ஆறுதல் கிடைக் கக் கூடும். ஆனால், இந்த இடைத் தேர்தல் கள் தந்திருக்கும் சில அழுத்தமான வெளிப் பாடுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு பாஜகவிற்கு சில பாடங்கள் இருக்கின்றன.
ஏனெனில், இந்தப் பாடங்கள் தேர்தல் பாடங் கள் என்பதைவிட, அரசியல் பாடங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தொகுப்பு : ஜெ.விஜயா, மதுரை