ஒதுக்கீடுகள் பற்றி...
ஆண் ,பெண் இட ஒதுக்கீடு .பொது,தனி இட ஒதுக்கீடு இரண்டையும் தேர்தல் ஆணையம் கடை பிடிப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளையும் அதிகரிக்கும்.நிர்வாகத்திறமையின்றி லஞ்சம்,ஊழல் அதிகார வகுக்கும். சாதியாலும்,மதத்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் ஒரு நாட்டில் எதற்காக சாதிவாரி ஒதுக்கீடு? எல்லா இனத்தவரும் பரவலாக ஒற்றுமையாக இருக்கும் தொகுதிகளில் தனி,பொது என்று இனவேறுபாடு மேலும் பிளவைதான் உண்டாக்குகிறது. இதை தனது மக்களுக்கு ஒரு அரசே செய்வது வெட்கக்கேடானது.அரசியல்வாதிகளின் குறுகிய வாக்கு சேர்க்கும் குள்ளநரித்தனத்துக்கு அரசும்,தேர்தல் ஆணையமும் துணை போவது மிக தூரம். ஓட்டப்பிடாரம் காலம்,காலமாய் தனித்தொகுதி. ஓட்டப்பிடாரம் வட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம்தான்.அதை தனித்தொகுதியாக அறிவித்தில் பிரசினை இல்லை.அப்படி அறிவிக்கப்படா விட்டாலும் நாம கடசிகள் அங்கு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தும்.காரணம் அவர்களின் வாக்குகள் எண்ணிக்கை. ஆனால் தொகுதி சீர் திருத்தம்...