ஒதுக்கீடுகள் பற்றி...
ஆண் ,பெண் இட ஒதுக்கீடு .பொது,தனி இட ஒதுக்கீடு இரண்டையும் தேர்தல் ஆணையம் கடை பிடிப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும்.

அதுமட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளையும் அதிகரிக்கும்.நிர்வாகத்திறமையின்றி லஞ்சம்,ஊழல் அதிகார  வகுக்கும்.
சாதியாலும்,மதத்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் ஒரு நாட்டில் எதற்காக சாதிவாரி ஒதுக்கீடு?
எல்லா இனத்தவரும் பரவலாக ஒற்றுமையாக இருக்கும் தொகுதிகளில் தனி,பொது என்று இனவேறுபாடு மேலும் பிளவைதான் உண்டாக்குகிறது.
இதை தனது மக்களுக்கு ஒரு அரசே செய்வது வெட்கக்கேடானது.அரசியல்வாதிகளின் குறுகிய வாக்கு சேர்க்கும் குள்ளநரித்தனத்துக்கு அரசும்,தேர்தல் ஆணையமும் துணை போவது மிக தூரம்.
 ஓட்டப்பிடாரம் காலம்,காலமாய் தனித்தொகுதி.

ஓட்டப்பிடாரம் வட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம்தான்.அதை தனித்தொகுதியாக அறிவித்தில் பிரசினை இல்லை.அப்படி அறிவிக்கப்படா விட்டாலும் நாம கடசிகள் அங்கு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தும்.காரணம் அவர்களின் வாக்குகள் எண்ணிக்கை.

ஆனால் தொகுதி சீர் திருத்தம் செய்கிறேன் என்று அருகில் உள்ள தூத்துக்குடி,திருவைகுண்டம் தொகுதி பகுதிகளையும் தேர்தல் ஆணைய நிபுணர்கள் குழப்பியதில் சம்பந்தமே இல்லாத தூத்துக்குடி  மாநகராட்சி பகுதிகள்  திருவை ,தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஊடே ஓட்டப்பிடாரம் தொகுதி ஊடுருவி வாக்காளர்களுக்கு குழப்பம்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தை தேடி இல்லாததால் இரட்டை இலைக்கு மாமூலாக வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அங்கு டி.வி.சின்னத்தில் திமுக கூட்டணி கிருஷ்ணசாமி நின்றார்.
ஆனால் வாக்களித்தவர்களுக்கு தங்கள் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்பது கூட தெரியவில்லை.
அதுமட்டுமல்ல முன்பு தாழ்த்தப்பட்ட இன  மக்கள்பெரும்பான்மையாக  இருந்த ஒட்டப்பிடாரத்தில் இன்று
மற்ற இனத்தவர்கள் வாக்குகள் அதிகம்.

இனி சாதி அரசியல்  செய்யும் கிருஷ்ணசாமி,ஜான்பாண்டியன் போன்றவர்களை மற்ற இனத்தவர்கள் ஒருங்கிணைந்து தோற்கடித்து விடுவார்கள்.கட்சி சார்பில் உள்ளவர்கள்தான் வெற்றி பெற முடியும்.

இது ஒருஉதாரணம் தான்.மற்றோன்று பெண்கள் ஓதுக்கீடு .

இதனால் கடசியில் இருக்கும் ஆண் தனது தொகுதி பெண் என்பதால் விட்டு விடுவானா தனது மனைவி அல்லது தங்கையை பினாமியாக நிறுத்தி வெற்றி பெற வைத்து அங்கு மக்கள் பிரதிநிதியாக அவனே செயல் படுகிறான்.அவனது வழி காட்டலிலேயே அவன் மனைவி செயல்படுகிறார்.ஆக அத்தொகுதிக்கு இரட்டை பிரதிநிதி.

வீட்டை கவனிக்கும் பொறுப்பில் உள்ள குடும்பப் பெண்களை அரசியல் சாக்கடையில் இணைத்து அசிங்கப்படுத்துகிறது.

அப்படி அதிமுக இரு எம்.பி.கள் அரசியலில் கிளப்பிய அசிங்கத்தை நாம் கண் கூடாக பார்த்துள்ளோம்.தனது மனைவியிடமிருந்து பாதுகாப்பு கேட்கும் நிலை கணவருக்கு.

அரசியலில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து 50 சதம் வாய்ப்புகள் வழங்கலாமே?

சத்தியவாணி  முத்து,சற்குணபாண்டியன்,அனந்த நாயகி,பொன்னம்மாள், நவ்ரோஜி,முதல் இன்று சுப்புலட்சுமி ஜெகதீசன்,சக்தி கோதண்டம் ,பி.தி.சரஸ்வதி,கனிமொழி,வளர்மதி,கோகுல இந்திரா என்று அரசியல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு என்ன குறைவு.


ஏன் முன்னாள் பிரதம இந்திரா காந்தியும்.இன்றைய நம்  முதல்வர் ஜெயலலிதாவும் பெண்கள் ஒதுக்கீட்டிலா ஆட்சியை பிடித்தார்கள்.

ஆர்வம் உள்ள பெண்களுக்கு கடசியில் இருந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
30% அல்லது 70%வரை பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அக்கடசி விருப்பம்.
ஆனால் அரசியல் சாக்கடை என்று முன்பிருந்தே சொல்லுவார்கள் .அதன் நிலை அதை விட  இன்றுமிக  மோசம். விரும்பத்தகா நெடி அந்த சாக்கடையில் இருந்து வீசுகிறது.அரசியலில் ஒரு பெண்மணி சமீபத்தில் எதிர்க்கடசி தலைவரை முன்னாள் முதல்வரைப்பார்த்து"அவர் தைரியமாக வரலாம்.அவர் வேட்டியை நாங்கள் உருவ மாட்டோம் "என்று தான் ஒரு பெண் என்ற வெட்க உணர்வே இல்லாமல் ஆண்களை விட கீழிறங்கி பேசியதை பார்த்தோம்.

அந்த சாக்கடையில் உங்கள் குடும்ப பெண்களை இறக்கி விடுவது அவர்களை சாக்கடையில் தள்ளி நாமே அசிங்கப்படுத்துவதற்கு சமம்.அதன் பின் விளைவாக இன்றைய அரசியலை பார்த்தால் நாமும் கேவலப்படுவதுதான் நடக்கும்.

 அதுபோல தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் வாக்கு அதிகம்,மதத்தினர்  வாக்குகள் அதிகம் என்று கணக்கிட்டுதான் அதற்கேற்றார்ப்போல் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.
தென்பகுதிகளில்,நாடார் ,தேவர்,வட பகுதிகளில் வன்னிய ர்களுக்கு முக்கியத்துவம்.சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்டவர்,வாணியம்பாடி,கீழக்கரை ,மயிலாடுதுறையில் பகுதியில்  முஸ்லீம் என்று சில வரைமுறைகளை அனைத்துக்கடசிகளும் வைத்திருக்கிறார்கள்.

அந்த வரை முறையே போதும்.
எதற்கு தேவையில்லாமல் தனித்தொகுதிகள்.

அப்படி ஒதுக்கியதன் மூலம் அத்தொகுதி விரைந்து முன்னேறும் என்றால் அப்படி முன்னேறிய ஒரு தொகுதியை தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்ட முடியுமா?

சபாநாயகர் தனபால் தனித்தொகுதியாளர்தான் .அவர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதை தவிர தன்  தொகுதிக்கு செய்த ஒரு நல்ல காரியத்தை இந்த இரண்டு முறை ஆட்சிக்காலத்தில் காட்ட முடியுமா?

ஆக தனித்தொகுதியாலும்,பொதுத்தொகுதியாலும் ,பெண்கள் தொகுதியாலும் ஒன்றும் மாற்றம்  நடக்க போவதில்லை.
குழப்பங்களும்,மறைமுக மோதலும்தான் நடக்கும்.

 தாழ்த்தப்பட்டவர்களை விட அதிக பிறர் வாழும் தூத்துக்குடி மாநகராட்சியை  இப்போது தனித்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.அதற்கு அடிப்படை காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அப்படி அறிவித்தவர்களின் முட்டாள்தனமும் ,தான்தோன்றித்தனமும்தான் காரணம் .இப்போதே பிற இனத்தவர்கள் கோபத்தில் கட் சி வேறுபட்டின்றி  ஒன்றாகி அரசியல் செய்ய இணைந்து விட்டார்கள்.

60 வட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வட்டம் 7 தான் .இதில் மேயரும் அடங்கி விடுவார்.
இவர்களை வைத்து அவர் தனித்தொகுதிக்கு என்ன செய்ய முடியும்.பிற இனத்தவரின் 53 உறுப்பினரை மீறி மேயர் என்ன செய்ய இயலும்?இதில் கட்சி கட்டுப்பாடு வேறு இணைந்து விடும்.

பின் இது தனித்தொகுதியானதால் என்ன பயன் ?

எதற்கு தனித் தொகுதியாக்க வேண்டும்.ஒரு நன்மையையும் இல்லை.மாறுதலும் இல்லை.
எதற்கு தனித்தொகுதி என்ற பிரிவு வேண்டும்.?

இப்படி செய்வதன் மூலம் அரசே திட்டமிட்டு சாதி வேறுபாடுகளை தூண்டி விடுகிறது.
எல்லோரும் இந்தியர்,தமிழர் என்ற அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல் கடசிகளே தொகுதியை அலசி ஆராய்நது வேட்பாளர்களை மதம்,இனம் பார்த்து நிறுத்த்தும் கட்டாயத்தில் இருக்கையில் தனித்தொகுதி என்று அறிவிப்பது  வீண் .

காரணம் இன்றைய தனித்தொகுதி ஒட்டப்பிடாரத்தில் தாழ்த்தப்பட்டவர் இல்லாமல் ஒருவரை நிறுத்தினால் அவர் சுயேட்சை என்றால் கூட வென்று விடுவார்.

காரணம் பிறர் வாக்குகள் இப்போது அங்கு அதிகம்.அவர்கள் அனைவரும் தங்கள் கோபத்தை காட்ட இதை வடிகாலாக எடுத்து கொள்வார்கள் .கட்சிகளை மீறி இதுதான் உண்மை.

(ஆணென்ன? ,பெண்ணென்ன?மறு பதிவு....)
====================================================================================
ன்று,
செப்டம்பர்-30.

 • உலக  மொழிபெயர்ப்பு தினம்
 • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
 • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)
 • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
 • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
 •  எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா 2003 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப் பட்டது.
  தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. 
  மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.
  செப்டம்பர் 2016 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது
 • பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.
 • ============================================================================இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு