பூச்சி கடி... ஒவ்வாமை

எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம்  கடிபட்டவர்களுக்கு ஒவ்வாமை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளன.

,ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். 
மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவும்போது தோல் சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும். காய்ச்சல் வரும். 

இரண்டாம் நிலையில் அரிப்பும் வீக்கமும் இருக்கும். 
கடிபட்ட இடம் மட்டுமல்லாமல் கண் இமைகள், காது மடல்கள், உதடு போன்ற இடங்களில் நீர் கோர்த்து வீக்கங்கள் ஏற்படும்.

பொதுவாக இது போன்ற விஷ கொடுக்குள்ள பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவாமல் தடுப்பதற்காக உடலிலுள்ள ரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன. 


இதனால் இதயம், மற்றும் மூளை போன்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. 
இதனால் சிலருக்கு மயக்கம் வரலாம் .

கடுமையான தலைவலி, வாந்தி, தொண்டை வறண்டு அடைக்கும், பூச்சியின் விஷத்தன்மை கடுமையாக இருந்தால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். 

மயக்கம் ஏற்படும். 
இந்நிலையில் சிலரின்  உயிருக்கே ஆபத்து நேரிடலாம். 

இது போன்ற பாதிப்பு தெரிய ஆரம்பித்த ஆரம்ப நிலையில் நீங்கள் உடனே மாற்று முதலுதவி  செய்ய வேண்டும்.


ஒரு 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு கலந்து குடிக்க கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில், 'ஆன்டி செப்டிக்' களிம்பு தடவலாம். 


காய்ச்சல், உடல் வலி இருந்தால், 'பாராசிட்டமால்' மாத்திரை சாப்பிடலாம். 

அலர்ஜிக்காக, 'அவில்' மாத்திரை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு மேற்கொண்டும் பாதிப்பு தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பூச்சிக் கடிக்கான எதிர்ப்பு மருந்து, 'ஆன்டி சீரம்' கிடைக்கிறது. 
இது சென்னையிலுள்ள, 'கிங் இன்ஸ்டிடியூட்' மற்றும் ஊட்டியிலுள்ள, 'பாஷியர் இன்ஸ்டிடியூட்டி'லும் தயாரிக்கப்படுகிறது. 

முன்பு இருந்த ஓட்டு வீடுகளில் குளவி, தேனீ, விஷத்தேள், பூரான் போன்றவை இருக்கும். ஓலை வீடுகளில் பூரான் கரப்பான் இருக்கும். தோட்டம் தோப்புகளில் குளவி, தேனீ, வண்டுகள் இருக்க வாய்ப்புண்டு.ஆனால் இன்றைய நகரமயமாக்களில் கிராமங்களில் கூட ஒட்டு வீடுகள் ,கட்டை குத்திய மச்சு வீடுகள் இல்லை.அதனால் இது போன்ற பூச்சுக்கடிகள் வாய்ப்புகளும் குறைவு.
ஆனால் தேனீ, பட்டுப்பூச்சி வளர்ப்போர், தோட்ட வேலை செய்பவர்கள், காட்டில் மரம் வெட்டுவோர், வன அதிகாரிகள், மலைவாழ் மக்கள், சுற்றுலா செல்வோர் போன்றோர்தான் பூச்சிக்கடியால்   பாதிக்க வாய்ப்புகள்  அதிகம் .

பூச்சிகள் அதிகம் வாழும் இடங்களுக்கு செல்லும்போது, பாதுகாப்பான உடை, காலணிகள் அணியலாம். தோட்ட வேலைகளில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் மற்றும் பாரபின் எண்ணெய் இரண்டையும் கலந்து, கை, கால், முகங்களில் தடவிக் கொண்டு சென்றால் பூச்சிகள் கடிக்காது.
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-29.
  • உலக இதய தினம்
  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பு  தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)

========================================================================================

இன்றைய நகைச்சுவை படம் (கார்டூன் )
போட்டோ எடுத்தாட்சு .எந்திரிங்க வேட்பு மனுதாக்கல் செய்ய  போவோம் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?