மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் - உண்மையும்



சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு  
-எம்.கண்ணன்
சில்லரை வர்த்தகம், விமானப் போக்கு வரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடுகளை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதித்து உத்தரவிட் டிருக்கிறது. இவை அவசரஅவசரமாக நடை முறைக்கு வந்துவிட்டதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்தி யாவை அடகு வைக்கும் காங்கிரஸ் தலை மையிலான கூட்டணி மத்திய அரசிற்கு பல்முனைகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் தான்தோன்றித்தன மான முடிவிற்கு எதிராக இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கடும் கண்டனங் களை தெரிவித்தும், கிளர்ச்சியில் ஈடு பட்டும் வருகின்றனர். இந்நிலையில் மத் திய அரசு இந்திய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் உண்மைக்கு மாறான விளம் பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. குறிப்பாக கோய பல்ஸ் பாணியில் ஒரே பொய்யை திரும் பத் திரும்ப கூறி மெய்யாக்க முயல்கிறது.

விவசாயிகளுக்கு நன்மையா ?

அரசின் விளம்பரத்தில், மொத்த அந் நிய முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சத விகிதம் கிராமங்களில் செலவிடப்படும்; கிராமப்புறங்களில் சிறப்பான செயல் முறை மற்றும் குளிர்வித்தல் மூலம் மேம் பாடுகள்; நிலத்திலிருந்து நேரடியாக சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லும்; விவ சாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்; ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப் புகள் உருவாக்கப்படும்; சிறு, குறு தொழில் கள் சிறப்புறும்; நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்; சீனா இதனாலேயே முன்னேறுகிறது என மத்திய அரசு கூறுகிறது.

வால்மார்ட், டெக்ஸ்கோ, கேரிபோர் போன்ற மிகப்பெரும் பகாசுர நிறுவனங்கள் வெளிநாடுகளில் விவசாய பண்ணை களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. அங்கு அதற்கேற்ற சூழல் இருக்கிறது. கார ணம், அங்கெல்லாம் ஒவ்வொரு விவ சாயியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார் கள். பிரான்ஸில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர், கனடாவில் 798 ஏக்கர், அமெ ரிக்காவில் 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியா வில் 17,975 ஏக்கர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு விவசாயியும் சராசரியாக நிலம் வைத்திருக்கின்றனர். இங்கு மொத்த கொள்முதலுக்கு சாத்தியம் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரி 5 ஏக்கருக்கும் குறைவான நிலமே இருக்கிறது. சில விவ சாயிகள் ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலம் என்ற அடிப்படையிலேயே வைத்திருக்கின் றனர். இந்தியாவின் மொத்த சாகுபடி பரப் பில் 34 சதவிகித நிலத்தில் சிறு,குறு விவ சாயிகள்தான் பயிர் செய்து வருகிறார்கள். இங்குள்ள துண்டு, துக்காணி நிலங்களில் தனித்தனியாக சென்று பெரும் பன் னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய் யாது. மாறாக முதலில் வந்ததும் துண்டு, துக்காணி நிலங்களை குத்தகைக்கு எடுத்து மொத்த நிலத்தையும் ஒன்று சேர்த்து பண்ணை முறை விவசாயத்திற்கு கொண்டு செல்லும். அப்படி செல்லும் போது பெரும் பகுதி விவசாய வேலை களில் இயந்திரங்களையே பயன்படுத் தும். இந்நிலை உருவாகும் பட்சத்தில் விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்களும் தங்களின் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதன் மூலம் அந்நிய மூலதனம் 50 சதவிகிதம் விவசாயிகளை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றவே செய்யும் என்பது தான் உண்மை.

குளிர்வித்தலை பொறுத்தவரை அதற்கு மூலதனம் மட்டுமின்றி மின்சாரமும் தேவை. தற்போதைய கணக்கீட்டின் படி இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு 10 சதவிகிதத்திற்கு மேலாக மின் பற் றாக்குறை இருக்கவே செய்யும். காரணம் தற்போதைய மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படவில்லை. மேலும் அதற்கான போதிய திட்டங்களும் தீட்டப்படவில்லை. இந்நிலையில் குளிர் பதன வசதி என்பதும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல்தான் அமையும்.

இந்தியாவை பொறுத்தவரை கிராமப் புறங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் அத்தனையும் அப்படியே சந் தைக்கு வருவதில்லை. அவற்றில் 60 சத மான பொருட்கள் பயிரிடும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தவிர உள்ளூர் மட்டத்திலேயே வினியோகிக் கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத உணவு தானியங்களில் 35 சதவிகித உணவு தானி யங்கள் தினசரிசந்தை, வாரச்சந்தை, அரு காமை கடைகளில் சில்லரை வர்த்தகத் திற்காக விற்கப்படுகின்றன. இது கிராமப் புற மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கான அரணாக இருந்து வருகிறது. மீதமுள்ள வெறும் 5 சதவிகித உணவு தானிய பொருட்கள் மட்டுமே அரசின் கண் காணிப்பின் கீழ் இருக்கும் 6 ஆயிரத்து 359 மொத்த விலை மண்டிகளுக்கு விற் பனைக்கு வருகிறது.

இதை மாற்றி நிலத்திலிருந்து நேரடி யாக சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் அருகாமையில் கிடைப்பது முதலில் தடைபடும். மேலும் நிலத்திற்கு சொந்தக்கார விவசாயி கூட அதிக விலை கொடுத்து சூப்பர் மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலையே ஏற்படும். இனி நகர்புற விலைவாசிக்கே கிராமத்து மக் களும் பொருட்களை வாங்க வேண்டும். இது உணவுப்பொருட்களின் விலை பன் மடங்கு உயரவே வழி வகுக்கும்.

ஆயிரக்கணக்கில் ஏக்கர் நிலம் வைத் திருக்கும் அமெரிக்காவில் 1950களில் சூப்பர் மார்க்கெட்டில் உணவுக்கு செல வழிக்கப்படும் ஒரு டாலரில் 40 சதவிகி தம் விவசாயிகளுக்கு கிடைத்தது. 2012 ல் இன்று வெறும் 19 சதவிகிதம்தான் கிடைக் கிறது. இந்த லட்சணத்தில் துண்டு, துக் காணி நிலம் வைத்திருக்கும் இந்திய விவ சாயிகளுக்கு என்ன விலை கிடைக்கும்? கட்டியிருக்கும் கோமணம் மிஞ்சுவதே பெரிய விஷயமாக இருக்கும் என்பதுதான் உண்மை.

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமா?

பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறு வனத்தில் ஒருவருக்கு வேலை கிடைக் கிறது என்றால் குறைந்தபட்சம் 4 பேர் ஏற்கனவே இருக்கும் வேலையை இழக்க நேரிடும் என்பதுதான் ஏற்கனவே இருக் கும் அனுபவம். உதாரணமாக, அமெரிக் காவில் 1951 ல் 15.5 கோடி மக்கள் தொகைக்கு 17 லட்சத்து 70 ஆயிரம் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இருந்தன. 2011ம் ஆண்டில் அமெ ரிக்காவின் மக்கள் தொகை 31.2 கோடி. இப்போது இருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் வெறும் 15 லட்சம் மட்டுமே. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய சில்லரை வர்த் தக நிறுவனங்கள் 50 ஆண்டுகள் பின் னோக்கிய நிலையை விட மிகமோசமாக குறைந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இந்த கதி என் றால், இந்தியாவின் நிலை என்னவாகும்?

தாய்லாந்தில் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களை சில்லரை வர்த்த கத்தில் அனுமதித்த 10 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான உள்நாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மூடப் பட்டிருக்கிறது. அதாவது 39 லட்சம் உள் நாட்டு சில்லரை நிறுவனங்கள் மூடப் பட்டிருக்கிறது. இதனால் 3 கோடியே 75 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 லட்சம் பேர் நேரடியாக வேலையை இழந்து தெருவில் நிற்கின்றனர். இதே போல் மெக்சிகோவில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் 50 சத விகித உள்ளூர் சில்லரை வர்த்தக நிறு வனங்கள் அடியோடு மூடப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களின் வரவால் புதிய வேலைவாய்ப்பு என்பது, இந்தியாவை பொறுத்தவரையில் “ மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான்” அமையும்.

சிறு,குறு தொழில்கள் சிறப்படையுமா?

அந்நிய நேரடி முதலீட்டில் 30 சத விகித பொருட்கள் இந்தியாவில் உள்ள சிறு தொழில்கள் மற்றும் சிறு உற்பத்தியா ளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப் படும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப் படியென்றால் மீதமுள்ள 70 சதவிகித பொருட்கள் மற்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப் படும். அப்போது, நம்நாட்டில் சிறு, குறு தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு தொழில் நெருக்கடிக்கு உள்ளாகும் என் பதுதானே உண்மை.

வால்மார்ட் உள்ளிட்ட பெரும் சில் லரை வர்த்தக நிறுவனங்கள் இப்போது வரை சீனாவில் இருந்து மிக குறைந்த விலைக்கு அதிக அளவிலான பொருட் களை ஏற்றுமதி செய்து தனது கடை களில் விற்பனை செய்து வருகின்றன. தற்போது இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சங்கிலித் தொடர் போன்ற கடை ஏற்பாடுகள் இருக்கிறது. இதனால் அதிக வேலைவாய்ப்பு மட்டு மின்றி, நுகர்வோரும் தேவைக்கு ஏற்ப அரு கிலேயே பொருட்களை தேர்ந்தெடுக்கும் வசதி கிடைத்து வருகிறது. இனி அந்த வாய்ப்பும் பறிக்கப்படும். ஆக, தற்போது மின்பற்றாக்குறையால் ஊசலாடிக் கொண்டிருக்கும் சிறு, குறு தொழிற் சாலைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடு விழா நடத்தப்படும் ஏற்பாடாகவே இந்த அந்நிய மூலதனம் இருக்கும்.

நுகர்வோருக்கு விலை குறையுமா?
நிலம் மற்றும் உற்பத்தி மையங்களில் இருந்து நேரடியாக பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லும். இதற்கிடை யிலான போக்குவரத்து செலவு, கடை களில் உள்ள ஏசிக்கு உரிய செலவு, கடை வாடகை, விளம்பரம், வேலையாட்கள் ஊதியம் என எல்லா செலவினங்களும் இனி விலையில் சேர்க்கப்படும். இதனால் விலை மேலும் உயருமே தவிர குறையாது. நாம் பக்கத்து கடையில் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிக விலைகொடுத் துத்தான் வாங்க வேண்டும். ஒரு வேளை உயர் வருவாய் பிரிவினருக்கு இது குறை வான விலையாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டில் பெரும்பகுதியாக இருக்கும், சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த விலை என்பது எறும்பின் மீது மூட்டையை ஏற்றிய கதையாகத்தான் அமையும்.

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பண்ணைகளில் ஒரு லிட்டர் பாலை ரூ. 77.38 பைசாவிற்கு கொள்முதல் செய் கிறது. அதனை கடைகளில் ரூ.176.12 பைசாவிற்கு விற்கிறது. அதே நேரத்தில் தற்போது தமிழகத்தில் பால் பண் ணையில் ஒரு லிட்டர் ரூ.22 கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் சில்லரை விற்பனைக்கு ரூ.32 என விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த முறை நுகர் வோருக்கு சிறந்தது? வால்மார்ட்டா? ஆவினா? பன்னாட்டு பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்களில் குறைந்த விலை என்பது “அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகத்தான் ” இருக்கும்.

சீனாவில் வால்மார்ட் உள்ளதே ?

சில்லரை வர்த்தகத்தில் சீனாவுடன், இந்தியாவை ஒப்பிடுவது மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு சமமாகும். காரணம், அமெரிக்காவுடன் மட்டும் சீனா செய்து வரும் வர்த்தகத்தில் சீனாவிற்கு ஆண் டிற்கு 26 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் லாபமாக கிடைக்கிறது. சீனா தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அமெரிக்காவிற்கு 36 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சீனா இறக்கு மதி செய்வதோ 10 ஆயிரம் கோடி அமெ ரிக்க டாலர்கள்தான். அதுமட்டுமல்ல, சீன உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு கள் அதிகம். இன்னும் குறிப்பாக சொல் லப்போனால், அதிக அளவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் பொருட்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்து தங்களது கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆகையால் வால் மார்டை சீனாவிற்குள் அனுமதிப்பது சீனா விற்கு நஷ்டமல்ல.

ஆனால் இந்தியாவின் நிலை என்ன வாக இருக்கிறது. ஏற்றுமதிக்கும், இறக்கு மதிக்கும் இடையில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இன்னும் சமநிலைக்கு வந்த பாடில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 40 கோடி மக் கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்னும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்னும் பல துறை களில் தன்னிறைவு காணப்படவில்லை. முதலில் அதனை எட்டிப்பிடிக்க வேண் டும். சீனா அந்நாட்டு மக்களின் வாழ்வா தாரத்தை அந்நிய முதலீட்டிற்கு காவு கொடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சில்லரை வர்த்தகத்தில் சீனாவுடன் இந் தியாவை ஒப்பிடுவது சில்லரைத்தன மானது. இந்திய மக்களின் நலனை பாது காக்கும் வகையில் திட்டமிடுவதே புத்தி சாலித்தனமாக இருக்கும்.

இன்று உலக அளவில் சில்லரை வர்த் தகங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் கால்பதிப்பதால் ஏற்படும் ஆபத்து களில் இருந்து மக்களை பாதுகாத்திட, ஒவ்வொரு நாடும் அதற்கேற்ற வகையில் பல்வேறு சட்டங்களை கொண்டு வந் திருக்கிறது. ஜெர்மனியில் பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளில் தொழிற்சங்க பணியாளர்களைத்தான் நியமிக்க வேண் டும். இதில் குறைந்த சம்பளத்தில் பணி யாளர்களை நியமிக்க முடியாது. இது இந்தியாவில் சாத்தியமா? ஜப்பானில் அப்பகுதியில் சில்லரை வர்த்தகம் நடத்தி வரும் சிறு நிறுவனங்களின் ஒப்புதல் இல் லாமல் எந்த ஒரு பெரிய கடையும் ஆரம் பிக்க முடியாது. இந்த சட்டம் இந்தியாவில் உள்ளதா? இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்தியாவை போன்று சொந்த நாட்டு மக்களின் நலனை காவு கொடுத்து எந்த ஒரு நாட்டிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விதிகள் உரு வாக்கப்படவில்லை.

[ஆதாரம் : யுஎஸ்டிஏ ஃபாரின் அக்ரிகல்சுரல் சர்வீஸ், ஓஎஸ்இசி பிஸினஸ் நெட்வொர்க், எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்,

ராய்ட்டர்ஸ், ப்ராசிகாடுடே]

கட்டுரை ;நன்றி ,தீக்கதிர் 
____________________________________________________________________________________________________________________________________
suran
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?