சனி, 31 டிசம்பர், 2016

பதில் சொல்லுங்கள் மோடி500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திரமோடி வெள்ளியன்று நாட்டு மக்கள் முன்பு நாடகமாடினார். 
ஆனால்  இந்த பண மதிப்பிழப்பினால் மக்கள் அடைந்த துன்பங்கள்,இறப்புகளுக்கு ,குளறுபடிகளை பதில் கேட்டு எழுப்பப்பட்ட  எந்தவொரு கேள்விக்கும் - சந்தேகத்திற்கும் பதிலளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் மனக்குமுறலுக்கும் அவர் விடை சொல்லவில்லை.
மக்களின் துயரம் குறித்து 16 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் சொல்ல தயாரா என பிரதமர் நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்விக்கணைகள் தொடுத்திருந்தது.
அந்த கேள்விகளுக்கு பிரதமர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாகமார்க்சிஸ்ட், கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கை வருமாறு:பணம் மதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்சனையில் டிசம்பர் 30க்குப் பிறகு புதிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப் போவதாக பிரதமர் அறிவித்திருந்தார். 

ஆனால் வெளியே,பாஜக கட்சி கூட்டங்களில் வாய் கிழிய பேசும் மோடி பிரதமர் என்ற முறையில் மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒளிந்து கொண்டார்.அவரால் இந்த கூட்டத்தொடர் முழுக்க வீணானது.வெளியே வீரம் காட்டும் மோடி மக்கள் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு முன்னாள் கோழையாகி மன்மோகன் சிங்கை விட மவுனியானார் என்பதுதான் வரலாற்று உண்மை.
1.டிசம்பர் 30 என்ற இறுதிநாளுக்குப் பிறகு, வங்கிகளில் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை எடுத்து கொள்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுமா என அறிய விரும்புகிறோம்.பண மதிப்பு நீக்கம் என்பது இந்தியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையான துயரத்தின் பிடியில் தள்ளியிருக்கிறது; அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வு துயரமானதாக மாறியிருக்கிறது. 
இதன்விளைவாக பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் துவங்கியுள்ளன. அதை தடுத்து நிறுத்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்:

2.வழக்கமான விவசாயப் பணிகள் எதுவும் இந்தக் காலத்தில் மேற்கொள்ளப்படாமல் சீர்குலைந்திருக்கிறது; இதனால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகளின் கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

3.பதிவு செய்த அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஒதுக்கீட்டை உடனடியாக இரண்டு மடங்காக்க வேண்டும்.

4.பிரதானமாக ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகவே தங்களது அன்றாட தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன. 
அவற்றை மீட்கும்விதமாக வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும்.

5.கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யவும், டெபாசிட் செய்த பணத்தை எடுக்கவும் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க வேண்டும். 
எந்தவொரு கூட்டுறவு வங்கி மீதும் முறைகேடு தொடர்பாக குறிப்பிட்ட புகார்கள் இருக்குமானால், அவற்றுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஆனால் கிராமப்புற இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் கூட்டுறவு வங்கி கட்டமைப்பை எந்தவிதத்திலும் சீர்குலைக்கக் கூடாது.
பண மதிப்பு நீக்க அறிவிப்பு, பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கடுமையான பிரச்சனையாகும். 
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள:

6.மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மத்திய அரசு கட்டாயம் ஈடுசெய்ய வேண்டும்.

7.எப்ஆர்பிஎம் சட்டத்தின்படி மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.பிரதமர் தொடர்ச்சியாக பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி செல்ல போவதாகவும், அதன் தேவை குறித்தும் பேசி வருகிறார். அப்படியானால் அதன்மூலம் மக்களுக்கு கூடுதல் செலவு என்ற சுமைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு:

8.டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான செலவினங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

9.ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொருள் விநியோகம் கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று ஆக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ரேசனில் பொருள் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பண மதிப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் வங்கிகளுக்கு எவ்வளவு வந்து சேர்ந்துள்ளது என்பதை பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
 இரண்டு வாரங்களுக்கு முன்பு 82 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

10.தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட அனைத்து பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டதா?அப்படி வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று சொன்னால், அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளையாக மாற்றப்பட்டு விட்டது என்று பொருளாகும். 
இன்னும் நிறைய பணம் வந்து சேர வேண்டியுள்ளது என்று சொன்னால் கள்ள நோட்டுகள் அனைத்தும் செல்லும் நோட்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன என்று பொருளாகும்.

11.இதுவரை அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு எவ்வளவு?

12.செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தின் மதிப்பிற்கு இணையான புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது முழுமையாக புழக்கத்திற்கு விடபப்டும்?ஊழலை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக பிரதமர் பேசிக் கொண்டே இருக்கிறார்.

13.அப்படியானால் வியாபம் ஊழல், சகாரா - பிர்லா நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன்?

14.பணமதிப்பு நீக்கப்பட்ட பிரச்சனையால், தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகள் முன்பு மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து மயங்கி விழுந்து உயிர் பறிபோன நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

15.இந்த நடவடிக்கையால் தேசத்திற்கு ஒட்டுமொத்த ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு என்பதை அரசாங்கம் என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்?

16.2016 நவம்பர் 8ம்தேதி பிரதமர் வெளியிட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து எத்தனை மக்கள் வேலைகளையும், வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்?
நாட்டின் மிக பெருவாரியான மக்கள் அடைந்துள்ள துயரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு சிறிய நிவாரணமாவது கிடைக்கும் விதத்தில், இந்த கேள்விகளுக்கு எல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
என்று மார்க்சிஸ்ட் கட்சி  மோடிக்கு சவால் விடுத்துள்ளது.
ஆனால் மோடி வழமை போல் இதற்கு பதில் சொல்லப்போவதில்லை.மீண்டும் வீரம் கொப்பளிக்க தன்னைப்புகழ்ந்து தானே பேசிக்கொண்டு அலைவார்.
வெளிநாடுகளிலும் ,பொதுவான நிகழ்வுகளிலும் மட்டுமே தனது பெருமையை சொல்வதிலும்,எதிர்க்கட்சிகளை திட்டவும் மட்டுமே தனது நேரத்தை மோடி செலவு செய்கிறார்.

======================================================================================
ன்று,
டிசம்பர்-31.
 • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)
 • விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
 • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
 • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
 • =======================================================================

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு.
வெள்ளி, 30 டிசம்பர், 2016

மோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். இதோ, 50 நாட்கள் கடந்துவிட்டது. வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை; முக்கால்வாசி ATM-கள் மூடிக் கிடக்கின்றன; செலவுக்குக் காசில்லாமல் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளுடன் சில்லறைக்கு அலைகிறார்கள்; பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும், எடுக்க முடியவில்லை; போதிய பணம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது, ஆனால் வங்கிகளுக்குப் போதிய அளவு விநியோகிக்கப்படவில்லை; புழக்கத்திற்குப் பணம் இல்லாமல் மக்கள் வங்கி, வங்கியாக அலையும்போது, கோடி, கோடியாக கருப்புப் பணம் அதுவும் புதிய 2000 நோட்டில் பிடிபடுகிறது. “நிலைமை சீராக குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்தது கண்முன்னே எல்லோருக்கும் தெரிகிறது.
சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மோடிக்கு பெட்ரோல் அனுப்பத் தயார் என்று பதிவுகள் வெளியாகின்றன. அவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.
'கொடுத்த வாக்கைக் காப்பத்த முடியலைன்னா, நாக்கைப் புடுங்கிட்டு சாவேன்' என்றுதான் மானமுள்ள பொதுமக்கள் கூறுவார்கள். ஆனால், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அதிலும் உஷார்.
"என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்"                                                                                                           - பாமக நிறுவனர் இராமதாஸ்
"நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்
                                                                                                                      - மோடி
இவர்களாகவே செய்து கொள்ளமாட்டார்களாம்! 
நாம் தான் செய்ய வேண்டுமாம்..! 
இவர்களைச் சுற்றி நிற்கும் கருப்புப் பூனைப் படையினரையும், 
கட்சி விசுவாசிகளையும் தாண்டி நாம் எங்கே போய் தண்டிப்பது?
"சவுக்கு இங்கே? இராமதாஸின் முதுகு எங்கே?" என்று முன்பு கேட்டுத் திரிந்ததுபோல், இப்போது பெட்ரோலை வாங்கி வைத்துக் கொண்டு நாம் அலைய வேண்டியதுதான்...
ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததால் உண்டான பாதகங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய விளைவுகள், இப்படி அறிவித்ததன் நோக்கம் குறித்து ஏராளமான கட்டுரைகளும், புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. இப்பிரச்சினையில் மோடியை எவ்வாறு தோற்கடிப்பது என்பது குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம்.
சில்லறை வணிகத்தைக் காப்பாற்றுவது குறித்து:
மோடியின் முதன்மையான நோக்கமாக எல்லோரும் கூறுவது - சில்லறை வணிகர்களை அடியோடு ஒழித்து, சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், பிக் பஜார் போன்ற நிறுவனங்களை வளர்த்து விட மோடி முயற்சிக்கிறார் என்பது. அது உண்மைதான் என்பது போல், தற்போதைய  நிலைமை இருக்கிறது.
பொதுமக்கள் எல்லோரிடமும் ரூ.2000 நோட்டு மட்டுமே இருக்கிறது. யாரிடமும் சில்லறை இல்லை. எங்கேயும் பொருட்கள் வாங்க முடியவில்லை. வணிகர்களும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். Swiping Machine இருக்கும் ரிலையன்ஸ், பிக் பஜார் கடைகளில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. சில்லறை வணிகத்தில் விற்பனை பாதியாகக் குறைந்து விட்டது.
இதை எப்படி தீர்ப்பது?
NHAI couponசில்லறை இல்லை என்பதற்காக பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் போய், Debit card / Credit card தேய்ப்பதை முதலில் நிறுத்துவோம். நாம் எப்போதும் பொருட்கள் வாங்கும், நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளையே அணுகுவோம். மாதக் கணக்கு சீட்டு (monthly account card) போடச் சொல்லி, நமக்கான பொருட்களை வாங்குவோம். 2000 அல்லது 4000 ரூபாய் அளவுக்குப் பொருட்கள் வாங்கிய பின்பு, அதற்கான பணத்தைக் கொடுத்து, கணக்கை முடிப்போம்.
சில்லறை வணிகர்களும் தாங்கள் பொருட்கள் வாங்கும் மொத்த வணிகர்களிடம் இந்த முறையையே பின்பற்ற வேண்டும். பெரும்பாலான கிராமங்களிலும், சில நகர்ப்புறங்களி்லும் ஏற்கனவே இந்த நடைமுறை உண்டு. இதை எல்லா இடங்களிலும் விரிவுபடுத்துவோம். இதனால், சில்லறை வணிகர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் தொடரும்.
ஆண்டுக்கணக்கில் பரிச்சயமான நபர்களுக்கு மாதக் கணக்கு வைக்கலாம். புதிய நபர்களை நம்பி எப்படி கடன் கொடுப்பது?
அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அதே நேரத்தில் சில்லறை இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை சூப்பர் மார்க்கெட்டுகள் பக்கம் தள்ள வேண்டாம். சுங்கச் சாவடிகளில் கொடுப்பது போன்ற கூப்பன் சிஸ்டத்தை வணிகர் சங்கங்கள் கொண்டு வர வேண்டும். ஒரு கடையில் சில்லறைக்காக கொடுக்கப்பட்ட கூப்பனை, இன்னொரு கடையில் பயன்படுத்த முடிய வேண்டும்.
வணிகர் சங்கங்களும், நாமும் இணைந்தால் இது சாத்தியமே.
Online transaction & Cashless Economy
நம் பணம், நாம் உழைத்துச் சம்பாதித்தது. அதை எங்கே சேமிக்க வேண்டும், எந்த முறையில் (online transaction or cash) செலவழிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்; மாட்டு மோத்திரம் குடிப்பவர்கள் அல்ல...
நம்மைச் சுரண்டி, இலட்சம் கோடிகளில் சொத்து சேர்த்துள்ள எந்தவொரு மயிராண்டிக்கும் நமது பணம் கடனாகப் போகவும், அதே கடன் பின்பு வாராக்கடன் ஆகவும் நாம் அனுமதிக்கக் கூடாது.
அதேபோல், மோடி சொல்லும் online transaction அல்லது paytm, airtel money போன்ற E-wallet சேவைகளையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
ரூ.500, 1000 மதிப்பு இழப்பு ஆன பின்பு, வங்கிகளில் நாம் செலுத்திய பணத்தை மீண்டும் திரும்பப் பெறுவோம். நாம் செலுத்தியது கோடிகளில் அல்ல. ஒரு சில இலட்சங்களில்தான். வாரம் ரூ.24,000 என்ற வரம்பை உயர்த்தச் சொல்லி, வங்கிகளில் குரல் கொடுப்போம். இரண்டு மாதங்களில் நம் பணம், நம் கையில் இருக்க வேண்டும். செலவுகள் அனைத்தையும் ரொக்கப் பணத்திலேயே செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகளின் மவுனத்தைக் கலைப்போம்!
மோடியின் ரூ.500, 1000 ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பேஸ்புக்கில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் (பாஜக நீங்கலாக) எழுதுவதைப் பார்க்க முடிகிறது. கட்சியிலோ, அமைப்பிலோ இல்லாத நம்மைப் போன்ற உதிரிகள் தங்களது ஆத்திரத்தை இணையத்தில் கொட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் கட்சித் தொண்டர்களும் இதையே செய்தால் எப்படி? இதைத் தாண்டி செய்ய வேண்டியது இல்லையா?
நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சிப் பொறுப்பில் (ஒன்றியம், வட்டம், மாவட்டம், தலைமைக் குழு) இருப்பவர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள்தானே! நாட்டையே சீர்குலைத்து இருக்கும் பிரச்சினையில் உங்களது கட்சி இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள்! ஒருநாள் அடையாளப் போராட்டத்தையும், அவ்வப்போது அறிக்கைகள் விடுவதையும் தாண்டி, இப்பிரச்சினையில் உங்கள் கட்சி உருப்படியாக எதையும் செய்ய முடியாமல் போனதேன் என்று கேளுங்கள்! தேர்தலுக்கு முன்பு ஊர் ஊராகச் சுற்றி மக்களைச் சந்தித்த உங்களது தலைவர்கள், இன்று வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதேன் என்று கேளுங்கள்!
நாள்தோறும் வங்கி வாசல்களில் நிற்கும் பொதுமக்களை அணி திரட்ட, கட்சிப் பொறுப்பாளர்களை ஏன் அனுப்பவில்லை என்று கேளுங்கள்! தேர்தல் காலத்தில் யார் காலிலும் விழுந்து, கூட்டணி வைக்கத் தயாராகும் உங்கள் தலைவர்கள், மோடிக்கு எதிராக ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்று கேளுங்கள்! ‘தமிழகம் கொந்தளிக்கும்’ என்று மேடைக்கு மேடை முழக்கமிடுகிற தலைவர்கள், அப்படி ஒரு கொந்தளிப்பை உருவாக்க என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்! மோடிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் இருப்பது, ஏறக்குறைய மோடியை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை உரக்கச் சொல்லுங்கள்!
இவை எவற்றையும் நீங்கள் கட்சியில் பேச முடியவில்லை, செயல்படுத்த முடியவில்லை; பேஸ்புக்கில் மட்டும்தான் பொங்க முடிகிறது என்றால், அப்படி ஒரு கட்சியில் இருப்பது என்ன டேஷூக்கு என்பதையாவது நீங்கள் யோசியுங்கள்!
பாஜகவினர், வைகோ-வை முற்றுகை இடுவோம்!
“ரூ.500, 1000 ஒழிப்பில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தேசநலனுக்காக சிறு சிறு அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்கிறார்கள்” என்று ஊடகங்களில் தொடர்ந்து பேசும் தைரியத்தை பாஜகவினருக்கும், வைகோ போன்றவர்களுக்கும் யார் கொடுத்தது? மக்களுக்கு எதிரான அரசியலைச் செய்பவர்கள் பொதுவெளியில் எந்தவொரு அச்சமுமின்றி நடமாட முடியும் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அனுமதிக்கப் போகிறோம்?
முதல்நாள் அவ்வாறு பேசியபோதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், மறுநாளும் அதேபோல் பேசியிருப்பார்களா? எங்கே போனாலும், கருப்புக் கொடி காட்டுகிறார்கள்; ‘மோடியால் என் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது; பதில் சொல்லுங்கள்’ என எதிர்க்குரல் எழுப்புகிறார்கள் என்ற நிலை இருந்தால், ஊடகங்களில் இப்பிரச்சினைக்கு ஆதரவாகப் பேச அச்சப்பட்டிருப்பார்கள் இல்லையா?
தேர்தல் கட்சிகள் இதைச் செய்தால், அரசியல் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்ற ரெடிமேட் பதில் வரும். தேர்தல் அரசியலில் இல்லாத மக்கள் இயக்கங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாஜகவினர், வைகோ எங்கு சென்றாலும் அவர்களது வாகனங்களை முற்றுகையிட்டு, முழக்கங்களையும், எதிர்க்கேள்விகளையும் எழுப்ப வேண்டும். மக்கள் நலனுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்கள்வெளியில் புழங்குவதற்குக் கூசும் நிலை வர வேண்டும்.
bank of india bank queue
மோடியைத் தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது 10 அடிகள் தான்...
நாள்தோறும் வங்கி வாசல் முன்பு வரிசையில் நிற்க யாருக்கும் ஆசையில்லை. தனது நிலத்தில் விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுக்க, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயி, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கால் கடுக்க வரிசையில் நின்றால், அவருக்கு ரூ.4000 தரப்படுகிறது. அதுவும் இரண்டு 2000 நோட்டுகள். அவரது விவசாய நிலத்தில் 10 பேர் களை எடுக்கிறார்கள். பத்து பேருக்கும் இப்பணத்தை எப்படி பகிர்ந்து கொடுப்பார்?
பொதுத்துறை வங்கிகளுக்குக் குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. கிடைத்த பணத்தை காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, ரூ.4000 என வங்கி ஊழியர்கள் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளும் அந்த விவசாயி, கூலி கொடுத்தாக வேண்டுமே! அவர் அடுத்த நாளும் கிராமத்திலிருந்து கிளம்பி, வங்கி வாசல் முன்பு காத்திருக்கிறார். இப்படித்தான் சிறுதொழில் செய்பவர்களும், வணிகர்களும் வங்கி வாசலில் நிற்கிறார்கள். அவர்கள் கோபம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக 'தேசபக்தி' என்ற இனிப்பைத் தடவி, மோடி விஷத்தைக் கொடுத்திருக்கிறார். அவர்களும் ஆரம்பத்தில் இரண்டு நாட்களில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ‘தேசத்திற்காக’ வரிசையில் நின்றார்கள்.
50 நாட்கள் கடந்து விட்டன; பிரச்சினை தீரவில்லை. மக்களின் மனதில் இப்போது தேசபக்தி முன்னுக்கு இல்லை. தங்கள் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற வெறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் பொறுமையுடன் வரிசையில் நிற்கிறார்கள். யார் முதல் கல்லை எறிவது என்பதுதான் அவர்களிடம் இருக்கும் பிரச்சினை.
இவ்விவகாரத்தில் மோடியைத் தோற்கடிக்க, நாம் செல்ல வேண்டியது அதிக தூரமில்லை; பத்தே பத்து அடிகள்தான். ஆம். வங்கி வாசலில் இருந்து, அந்த மக்கள் சாலைக்கு வர பத்து அடிகள்தான். அந்த 10 அடி தூரத்தைக் கடக்க, மக்களைத் தயார்படுத்தப் போவது யார்? அந்த முதல் கல்லை எறியப் போவது யார்?
                                                                                                                                          கீற்று நந்தன்

நன்றி:கீற்று தளம்.
======================================================================================
ன்று,
டிசம்பர்-30.


 • சோவியத் சோசலிச குடியரசு  ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)

 • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)

 • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
 • ======================================================================================


வியாழன், 29 டிசம்பர், 2016

இது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.

ஆனாலும், எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னை. சமீபகாலமாக பல திரைப்படங்களில் ‘வாயு விடுவதை’ காமெடி காட்சியாக்கி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் ‘வாயு பிரிதல்’ என்பது சிரிக்கக் கூடிய பிரச்னையா? 
இல்லை, சிலருக்கு இது சீரியஸான பிரச்னை!சென்ற தலைமுறை வரை டாக்டரிடம் வந்து மருந்து கேட்காத அளவுக்கு சாதாரணமாக  இருந்த ‘வாயு’ பிரச்னை,
 ‘நாகரிக உணவுப் பழக்கம்’ என்ற பெயரில் துரித உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் சாப்பிட ஆரம்பித்ததால், பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்னையாக வளர்ந்துவிட்டது.
உலகில் ‘வாயு’ விடாத மனிதர் இல்லை. நம்மை அறியாமல் கண்ணை இமைப்பது போல், இந்த  ‘வாயு விடுதலும்’ இயல்பாக நிகழ்கிற உடலியல் விஷயமே! 
சுருக்கமாகச் சொன்னால், குடலில் உணவு செரிமானம் ஆகிறபோது விளையும் ஒரு கழிவுப் பொருள்தான் ‘வாயு’. சின்ன வித்தியாசம்... மற்ற கழிவுகளை அடக்கிக் கொள்ளலாம். இதை அடக்க முடியாது.‘வாயு’ பற்றி நமக்கு இருக்கும் புரிதல் ரொம்பவும் குறைச்சல். 
தவறான நம்பிக்கைகள்தான் அதிகம். 
அதனால்தான் முதுகுவலி, முழங்கால் வலி, இடுப்புவலி எனப் பல்வேறு வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு கட்டுகிறோம். என்னிடம் சிகிச்சை பெற கிராமத்து மூதாட்டி ஒருவர் வந்தார். ‘‘உடம்பெல்லாம் வாயு சுத்துது, டாக்டர். வலி தாங்க முடியலே!” என்றார். “அப்படியெல்லாம் வாயு சுத்த வாய்ப்பு இல்லையே!” என்றேன். 
“நீங்க ‘டிகிரி’ (ஸ்டெதாஸ்கோப்) வைச்சுப் பாருங்க. அப்போதான் தெரியும்!” என்று சவால் விட்டார்.

நான் ஸ்டெதாஸ்கோப்பை அவர் நெஞ்சில் வைத்தேன். உடனே  ‘ஆவ்வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டார். வயிற்றில் வைத்தேன். அப்போதும் ஏப்பம் விட்டார். முதுகைப் பரிசோதித்தேன். 

மீண்டும் ஒரு ஏப்பம்! 
அடுத்து அவரது கால்களைப் பரிசோதித்தேன். 
இப்போதும் ஏப்பம் வந்தது.
“பார்த்தீங்களா டாக்டர்? நீங்க தொடுற இடமெல்லாம் வாயுதான். அதனாலதான் இப்படி ஏப்பம் ஏப்பமா வெளியேறுது!” என்றார் அவர். 
“ஏப்பம் விட்டால் வாயு வெளியேறும். வாயு வெளியேறி விட்டால் வலி குறையும்” என்று அவர் நம்புவதால், மனரீதியாக அவராகவே ஏப்பத்தை வரவழைத்துக்கொள்கிறாரே ஒழிய, உண்மையில் அவருக்கு ஏப்பம் ஏற்படுவதில்லை. 
அதிலும் முதுகிலிருந்தும் முழங்காலில் இருந்தும் வாயு வெளியேறுவதில்லை!

நமது உடல் அமைப்பின்படி, மூச்சுப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். மூதாட்டி போல் பலரும் நம்புகிற மாதிரி முடி முதல் அடி வரை வாயு சுற்றுவதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து!

 எப்படி என்பதைச் சொல்கிறேன்...மூச்சுப் பாதை மற்றும் உணவுப் பாதையைத் தாண்டி வாயு கசிந்தால், உடலை விட்டு வெளியில் போக அதற்கு வழி கிடையாது. அப்போது அருகில் உள்ள உறுப்புகளைத்தான் அது அழுத்தும். அப்படி இதயத்தையோ, நுரையீரலையோ அழுத்துகிறது என்றால், அது மரணத்தில்தான் முடியும்! நெஞ்சில்/வயிற்றில் குண்டு துளைத்தவர்கள் இறப்பதற்கு இது ஒரு காரணம்.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப் பாதைப் பிரச்னையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். 

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறோம். 
இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறுகிறது. மீதி சிறுகுடல், பெருங்குடலைத் தாண்டிச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்து, இரைப்பைக்கு வரும் உணவை அமிலம் சிதைக்கும்போதும், குடலில் உணவு செரிக்கப்படும்போதும் அங்கு சாதாரணமாகவே குடியிருக்கின்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றன. 

அப்போது ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. உதாரணமாக, உணவில் உள்ள மாவுச்சத்தும், புரதச்சத்தும் நொதிவடையும்போது ஹைட்ரஜன் உருவாகிறது.
 இரைப்பையில் அமிலம் சமநிலைப்படும்போது கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியாகிறது.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இப்படித் தினமும் சுமார் 2 லிட்டர் வாயு நம் உடலில் உற்பத்தியாகிறது. இது வயிற்றில் தங்கினால் வயிறு உப்பிவிடும். அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். இதைத் தவிர்க்க உடல் செய்துகொண்ட ஏற்பாடுதான்  ‘வாயு பிரிதல்’! 

குடலில் உருவாகும் வாயுவில் அதிகபட்ச அளவு ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. 
மீதிதான் ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது.
சாதாரணமாக நமது குடலில் சுமார் 200 மி.லி. வாயுதான் இருக்க முடியும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம். எப்படி? 
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாக செரிக்கப்படுவதில்லை. 
அப்போது அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் என புதிய வாயுக்கள் உருவாகும்.

இவைதான் கெட்ட வாடைக்குக் காரணகர்த்தாக்கள். இவர்கள் வெளியேறும்போதுதான் அக்கம்பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலைமை உருவாகிறது. 

பலருக்கு சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது; சிலருக்கு சத்தம் வருகிறது. என்ன காரணம்? 
பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் குறைந்த அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம்’ மாதிரி சத்தம் கேட்கும். இந்தக் கலவையின் அளவு  அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடி’யைப் போன்ற சத்தமும் கேட்கலாம்.

இது எல்லோரும் எதிர்பார்க்கிற கேள்வி. நாளொன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்படத் தேவையில்லை. 

இந்த அளவு அதிகரித்தால் அல்லது வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டால் என்ன காரணம் என்று அறிய வேண்டும்.

புரதம் மிகுந்த பயறுகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவது முதல் காரணம். அஜீரணம் அடுத்த காரணம். குடல் நோய்கள் மூன்றாவது காரணம். பொதுவாக, உணவுமுறையை சரி செய்தாலே பலருக்கும் இது சரியாகிவிடும். 

உணவுச் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்கள் குறைந்து, அஜீரணம் ஆகி, வாயுத் தொல்லை கொடுத்தால் என்சைம் கலந்த டானிக்குகள் உதவும். 
சில பேர் டாக்டரிடம் வரும்போது, “பால் குடிச்சாலே வயித்துக்கு ஆகலே டாக்டர். வயிறு ‘கடாபுடா’ன்னு இரையுது. அடிக்கடி வாயு பிரியுது” என்று கவலைப்படுவார்கள்.

இதற்குக் காரணம், இவர்களுக்கு ‘லேக்டேஸ்’ எனும் என்சைம் குறைவாகச் சுரக்கும். பாலில் உள்ள ‘லேக்டோஸ்’ எனும் சர்க்கரை செரிக்காமலேயே பெருங்குடலுக்குச் சென்றுவிடும். இதனால் வாயு நிறைய உற்பத்தியாகும். இவர்கள் சோயா பாலைக் குடித்து வாயுவை அரெஸ்ட் செய்யலாம். வாயுவை அதிகப்படுத்தும் நோய்கள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. 

அதில் மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome), கணைய நோய், கல்லீரல் நோய், பித்தப்பை நோய் ஆகியவை வி.ஐ.பி.க்கள். 
சிலருக்கு ஆன்டிபயாடிக்குகள், பேதி மாத்திரைகள் போன்றவற்றாலும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

தொப்பை இருப்பவர்களுக்கு, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கு,  டென்ஷன் பேர்வழிகளுக்கு மற்றவர்களைவிட வாயு உற்பத்தி அதிகமாகவே இருக்கும். 

வயதானவர்களுக்கு உடற்பயிற்சி இல்லை, உடலியக்கம் குறைவு, போதுமான தண்ணீர் குடிக்கவில்லை போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ரொம்பவே படுத்தி எடுக்கிறது.

வாயுவுக்குக் காரணம் உணவா, நோயா என்று டாக்டரிடம் பரிசோதித்துக்கொண்டால் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். காரணம் உணவென்றால், டாக்டர் யோசனைப்படி உணவுமுறையை மாற்றிக்கொண்டாலே பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும்.

 நோய்தான் காரணம் என்றால், அது சரியாகும் வரை சிகிச்சை பெற வேண்டும். அடிக்கடி கெட்ட வாடையுடன் வாயு பிரிந்தால் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் மற்றும் கொலனோஸ்கோப்பி டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. வாயு பிரச்னைக்கு இப்போது நல்ல மருந்துகள் உள்ளன; சீக்கிரத்தில் குணப்படுத்திவிடலாம்.
சிலர் “எனக்கு வாயுவே பிரியாது” என்று பெருமைப்படுவார்கள். 
அதுதான் ஆரோக்கியம் என்று நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் அது ஆபத்தானது. காரணம் தெரியுமா? காசநோய், புற்றுநோய், சொருகல் நோய் போன்றவை குடலைத் தாக்கினால், அங்கு வீக்கம் ஏற்பட்டு அடைப்பு உண்டாகும். வாயு வெளியேற முடியாமல் அங்கு மாட்டிக்கொள்ளும். 
இது ரொம்பவும் சீரீயஸான பிரச்னை!
 உடனே கவனிக்க வேண்டும்.

வாயுவைக் கட்டுப்படுத்த!

* கிழங்குகளையும் பயறுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
* ஆவியில் அவித்த உணவுகளை உண்ணுங்கள்.
* வறுத்தது, பொரித்தது, ஃபாஸ்ட்ஃபுட், பாக்கெட் ஃபுட், ஸ்நாக்ஸ்
* அடிக்கடி வேண்டாம்.
* பாட்டில் பானங்களை மறந்துவிடுங்கள்.
* உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.
* தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
* வெற்றிலை-பாக்கு, பான் பராக், மது, புகை வேண்டாம்.
* டாக்டர் சொல்லாமல் அல்சருக்கும், பேதிக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடாதீர்கள்.
வாயு உண்டாக்குபவை.
மொச்சை, பட்டாணி, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லெட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், சிப்ஸ், நூடுல்ஸ், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், மசாலா மிகுந்த உணவுகள், முட்டை, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், வினிகர், பீர்... இவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

                                                                                          
                                                                                                                                           மருத்துவர்.கு.கணேசன்,
நன்றி:தினகரன்,  
=====================================================================================
ன்று,
டிசம்பர்-29.

 • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
 • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
 • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
 • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)
======================================================================================செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஹீமோகுளோபின் அதிகரிக்க...,,

உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானலும், பிறகு செய்து கொள்ளலாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றுவது, எதிலும் நாட்டமின்மை சாப்பிடவும் பிடிக்கலை என்று தள்ளப்போவது எல்லாமே இரத்தச் சோகை என்று அழைக்கப்படும்.
இவ்வளவு சத்துக்கள் எந்தெந்த சத்துக்கள் தேவையோ அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகின்றது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை.
மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.
8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி, உடலுக்கு சக்தியூட்டுகிறது.
நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
ஹீமோகுளோபின் அதிகரிக்க மருத்துவம்…
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு, எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மதியம், 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை, 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
பின், ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை நீங்களே அறிவீர்கள்.
======================================================================================
ன்று,
டிசம்பர்-27.
 • வடகொரியா அரசியலமைப்பு தினம்
 • பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
 • உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
 • தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
 • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)

=======================================================================================திங்கள், 26 டிசம்பர், 2016

இதயம் காக்க.......,!


பட்டாம்பூச்சி படபடப்பதற்கும் கடல் கொந்தளிப்பதற்கும் தொடர்பு உண்டு என்ற கேயாஸ் தியரி கேள்விப்பட்டிருப்போம். 
அதேபோன்றதுதான் நம் உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாடும். 
கல்லீரல், கணையம், இதயம் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உறுப்புகளாக நாம் உணர்ந்தாலும் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. 
இதனால்தான், ஏதேனும் ஓர் உறுப்பில் உண்டாகும் பாதிப்பு சம்மந்தமே இல்லாமல் மற்றொன்றையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 
இந்த உண்மையை அமெரிக்காவைச் சேர்ந்த துலானே(Tulane) பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர். 
பித்தப்பை கற்களுக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு என்று துலானே மாணவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆய்வில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். 
இதய நோய் கொண்ட 51 ஆயிரம் பேரை பரிசோதனை செய்தபோது அவர்களில் 23 சதவிகிதம் பேருக்குப் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் பித்தப்பை கற்கள் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்
பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பற்றியும் இதயம் காக்கும் வழிகள் பற்றியும் இதய சிகிச்சை மருத்துவர் அமல் லூயிஸிடம் பேசினோம்.‘‘American heart association journal இதழ் வெளியிட்டிருக்கும் அந்த ஆய்வை நானும் படித்தேன். 

பித்தப்பைக் கற்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள் என்ற எச்சரிக்கையை ஆய்வாளர்கள் இறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

World heart day என்று செப்டம்பர் 29ம் தேதியைக் கொண்டாடும் நேரத்தில் இது மக்களுக்கு நல்ல எச்சரிக்கை செய்தியாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பித்தப்பை கற்களுக்கும் இதய பாதிப்புக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இன்னும் ஆராயும்போது பல உண்மைகள் தெரியவரலாம்’’ என்றவரிடம் இதயம் காக்கும் எளிய வழிகள் பற்றிக் கேட்டோம்.

‘‘இதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளும். இதனால், ரத்த குழாய்களின் பைப் துருப்பிடித்தது போன்று காணப்படும்.

ஆனால், உள்ளுக்குள் நடக்கும் இந்த செயல் நமக்குத் தெரியாது. பெரும்பாலும் 20 வயதுகளிலேயே ரத்தக்குழாயில் கொழுப்பு ஒட்டிக்கொள்ளத் தொடங்கும். 

இவ்வாறு ரத்தக்குழாயில் ஒட்டிக்கொள்கிற கொழுப்பு அளவு குறைவாக இருந்தால் பாதிப்பு இல்லை. அதேபோல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலும் பாதிப்பு இல்லை. 
இதுபோல கொலஸ்ட்ரால் படிந்தாலும் 60, 70 வயதுவரை இதயத்தில் பெரிதாக எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் வாழலாம். அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டமும் சீராகவே இருக்கும்.
60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தாலும் பாதிப்புகள் பெரும்பாலும் வராது. ஆனால், 70 சதவீதத்துக்கும் அதிகமாக அடைப்பு இருக்கும்போதுதான் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், இதயத்தின் செயல்பாடு மெல்ல மெல்லக் குறையும். 
நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கும். 
மூச்சு இறைக்கும். 
ரத்தக்குழாயைக் கொழுப்பு முழுவதுமாக அடைத்துவிட்டால், எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பும் உண்டாகும்.

பித்தப்பைக்கற்களும் இதயபாதிப்புக்கு காரணம் என்பது தெரியவந்திருப்பதால் பித்தப்பையில் கற்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், தொடர்ந்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து வர வேண்டும். 

உடற்பயிற்சி செய்தல், உணவுக் கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட்டு வருவதன் மூலமாக, ரத்தகுழாயில் அடைப்பு உண்டாவதைத் தடுக்கலாம். 
அதேவேளையில், மாத்திரைகள் சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தகுழாய் அடைப்பை குணப்படுத்த முடியாது’’ என்றவரிடம் ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் போன்றவை எப்போது அவசியம் என்று கேட்டோம்.

‘‘ரத்தக்குழாயில் 70 சதவீதம் வரை அடைப்பு இருந்தாலும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. 70 சதவீதத்துக்கும் மேல் அடைப்பு இருந்தால், அதனை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் அடைப்பு உண்டானால், அப்பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, வேறு குழாய் பொருத்தி அடைப்பை சரி செய்வோம். 

அதேபோன்றுதான் ரத்தகுழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், Stent எனப்படும் சிறுகுழாயை ரத்தக்குழாய்க்கு உள்ளே இணைத்து, ரத்தகுழாயை விரித்து விடுவோம்.

இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ஸ்டென்ட்(Stent) சிகிச்சை முறையில், நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. உடலை அறுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. 

சிறுவயது தொடங்கி, 95 வயது உள்ளவருகும் இச்சிகிச்சையை செய்யலாம். கை அல்லது காலில் உள்ள ரத்தக்குழாய் வழியாக இச்சிகிச்சை செய்யப்படும். ஆரம்பத்தில் துளை போடும்போது மட்டும் வலி இருக்கும். அதன்பின்னர், வலி இருக்காது. 
சிகிச்சை முடிந்த  இரண்டே நாளில் வீட்டுக்கு செல்லலாம். 
வேலைக்கு செல்பவர்கள் ஒரு வாரத்தில் வேலைக்கு செல்லலாம். வண்டி ஓட்டலாம். இயல்பு வாழ்க்கைக்கு ஒரு வாரத்தில் திரும்பலாம். 
இதயத்தில் உள்ள ரத்தகுழாய்களில் உண்டாகும் அடைப்பு பெரிதாக அல்லது பல இட்ங்களில் இருந்தால், Stent பொருத்தியோ, ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் பலூன் செலுத்தியோ அடைப்பை சரிசெய்ய முடியாது. 
அது மாதிரியான நேரங்களில் பைபாஸ் சர்ஜரி செய்வதன் மூலம் அடைப்பை சரி செய்யலாம். இதயத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். அதிகம் அரிசி உணவு, எண்ணெய் பண்டங்கள், ரெட் மீட் என்று சொல்லப்படுகிற மட்டன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவில் காய்கறிகள் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. முட்டை சாப்பிடலாம். பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் ரத்தக்குழாயில் அடைப்பை  வரும்முன் தடுப்பது நல்லது. 
இதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தல் மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடக்க வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப், ஈசிஜி டெஸ்ட், Tread Mill Test(நடக்க வைத்து பரிசோதித்தல்) போன்ற உடல் பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைகளை 40 வயதுக்குப் மேல் உள்ள ஆண்களும், 45 வயதுக்குப்  மேல் உள்ள பெண்களும் அவசியம் செய்ய வேண்டும்.

 ஏனென்றால், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் 45 வயதுவரை சுரக்கும். இந்த ஹார்மோன் ரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். 
ஆண்களுக்கு இப்பாதுகாப்பு கிடையாது. எனவே, 40 வயதைக் கடந்த ஆண்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணுவது அவசியம்’’என்கிறார்.
                                                                                                               -விஜயகுமார்,
நன்றி:தினகரன்.
====================================================================================
ன்று,
டிசம்பர்-26.


 • ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)

 • பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது(1933)

 • ஆங் சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார்(1944)

 • சுனாமி பேரிடர் தினம்(2004)

========================================================================

======


ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இந்தியா வந்த ஏசு

ஏசுகிறிஸ்து   இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி என்று இன்னொரு கட்டுரையும்  அதன் வந்தது. சுருக்கம் இதோ:-
ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு  நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர்.
இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க.
ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம்.
அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும்.
இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு, உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது.
வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி துவைத்து பாடத்தையும் படி என்று குருகுல வாசம் செய்ய ஏழு வயதில் அனுப்பிவிட்டனர்.
பின்னர் 20 வயதில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டனர். இதற்குப் பின் கெட்ட வழியில் செல்வது கடினம்.
மேலும் வாத்தியார் வீட்டில் 13 ஆண்டுகளுக்கு தினமும் மிலிட்டரி ட்ரில்   போல செய்துவந்தது அதே நல்ல வழியில் செல்லவும் உதவியது.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தமிழ் பழமொழி. நல்லதானாலும் கெட்டதானாலும் சின்ன வயதில் படித்தது அவ்வளவு எளிதில் மாறாது.
அந்தக் காலத்தில் ஒரே குருவிடம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். அததகைய குருமார்களை குலபதி என்று பட்டம் கொடுத்து அழைப்பர்.
அது மட்டுமின்றி ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தட்சசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இந்திய நகரங்களில் மாபெரும் பல்கலைக் கழகங்களும் நடந்துவந்தன.
இந்த குருகுலவாசம் பற்றி ஈசன்னிகளுக்குத் தெரியும். அதனால் ஏசுவை இங்கே அனுப்பிவைத்தனர்.
ஈசன்னிகள் என்பது ஈச, ஈச்வர (இறைவன்) என்னும் மூலத்தில் இருந்து பிறந்த சொல் என்பது எனது துணிபு. இந்த யூதமதப் பிரிவு பற்றி பிளினி முதலியோர் கொஞ்சம் எழுதி வைத்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது: இந்தப் பிரிவினர் தினமும் குளிப்பார்கள் (இது பாலஸ்தீனத்தில் ஒரு அதிசயம்!!).
இவர்கள் இறை நாட்டம் உடைய யோகியர். இவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து கொள்வதில்லை (பிரம்மசாரி). சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்து யோகிகள் பற்றி என்ன என்ன சொல்வோமோ அததனையும் ஈசன்னிகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன.
இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் ஏசு. ஆகையால் அவர் குருகுல வாசத்துக்கு இமயமலைக்கு வந்ததில் வியப்பதற்கு ஒன்றுமிலை.
மேலும் காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் உண்டு. கி.மு 1000 ஆண்டில் இருந்த சாலமன்  காஷ்மீருக்கு வந்ததாக செவிவழிக் கதைகள் உள்ளன.
அவன் விக்ரமாதித்தன்போல பெரிய அறிவாளி. இது தவிர சிலுவையில் அறைபப்பட்ட மூன்றாம் நாள் ஏசு உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து 120 வயது வரை யோகி போல வாழ்ந்தார்.
காஷ்மீரில் அவரது சமாதி உள்ளது என்றும் ஒரு புத்தகம் வேறு வெளியாகி இருக்கிறது. யூதர்களின் 12 பிரிவுகளில் ஒன்று காஷ்மீருக்கு வந்தது என்ற ஐதீகமும் உண்டு.
இந்து மதப் புராணங்களில் எப்படிப் பல இருக்கின்றனவோ இப்படி ஏசு பற்றி புராணங்களும் மாறுபட்ட பைபிள் பதிப்புகள்) ஏராளமாக இருந்தன.
துருக்கியில் இருந்த கான்ஸ்டன் டைன்  என்ற மன்னன் ஒரு பைபிள் மகாநாடு கூட்டி எல்லா பைபிள்களையும் எரித்துவிட்டு ஒரே பைபிள் மட்டும் வைத்துக் கொண்டார்.
அதனால் ஏசு 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் என்ன செய்தார், எங்கே இருந்தார் என்பதெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது.
=======================================================================================
ன்று,
டிசம்பர்-25.

 • ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)

 • முகமது அலி ஜின்னா பிறந்த தினம்(1876)

 • இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம்(1924)

 • ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)========================================================================================
இஞ்சி
காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் என்பார்கள்.  இந்த இஞ்சியின் நற்குணம் அதிகம்.
இஞ்சியை தினமும் சேர்ப்பதால் சளி, ஆஸ்துமா, அஜீரணம், மலச்சிக்கல், வறட்டு இருமல், ஜலதோஷத்தால் உண்டான பாதிப்புகள், பித்தம் ஆகிய அனைத்தும் தீர்ந்துவிடும். 
ஆனால் கர்ப்பிணிகள், புதிதாக திருமணமாகி கர்ப்பம் தரித்தவர்கள், இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்கவேண்டாம்.
1. தினமும் காலையில் தேநீர் வைக்கும் போது பாலுடன் ஒரு சிறு துண்டு இஞ்சியை நன்றாக நசுக்கி பாலில் போடவும்.  பால் கொதித்தவுடன் தேநீர் தயாரித்து வடிகட்டும்போது இஞ்சியின் சக்கையும் வெளிவந்துவிடும்.  ஆனால் சாறு முழுவதும் இறங்கி நல்ல ருசியாகவும் உடலுக்கு நன்மையாகவும் இருக்கும்.
2. குழம்பில் தினமும் இஞ்சியை நசுக்கிசேர்த்துக்கொள்ளலாம்.
3. குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலில் இஞ்சியை நசுக்கி சாறு பிழந்து விடலாம்.
4. மறக்காமல் வீட்டில் இஞ்சி மிட்டாய்களை வாங்கி வைத்துவிட்டால் தினமும் சாப்பாட்டுக்கு பின் ஒரு மிட்டாய் சாப்பிட்டால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
இப்படி தினமும் இஞ்சி அல்லது சுக்கை உடலில் கலந்து விட்டால் உடல் நன்றாக இருக்கும். எந்தப்பிரச்சினைகளும் வராது.
=========================================================================================