மோடியும் கருப்புப்பண கேடியும்.?


==================================================================================
உலகில் பெரிய கமுதி மின்சக்தி கூடம் .

தமிழ்நாட்டில், ’கமுதி சோலார் திட்டம்’ அண்மையில் முடிக்கப்ப.ட்டுள்ளது . இந்த கமுதி  சூரிய (சோலார்) மின்சக்தி உற்பத்தி செய்யும் கூடம் தற்போது உலகின் மிகப்பெரிய கூடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை  கலிபோர்னியாவில் உள்ள டோபாஸ் சோலார் பார்ம் என்ற மின்சக்தி உற்பத்தி கூடம்தான்  உலகின் பெரிய சோலார் திட்டம் என்ற  இடம் வகித்திருந்தது. இது 550 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்துவந்தது.
கமுதி சோலார் கூடம் 648 மெகாவாட் தயாரிக்கும் திறன் உடையது.
கமுதி சோலார் கூடம், சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில், அதாவது 476 கால்பந்து மைதானத்துக்கு சமமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 
648 மெகாவாட் தூய்மையான, பசுமை சக்தியை உற்பத்தி செய்து சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் அளவிற்கு இதனால் முடியும். இந்த சூரிய மின்சக்தி திட்ட  கட்டுமான பணியின் செலவு ரூ  4,500 கோடி. 
இந்த சோலார் கூடத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் தனி சோலார் பானல்கள் உள்ளன. இவை தினமும் ரோபோக்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்படுகிறது. பின் அவை சூரிய ஒளியில் சார்ஜ் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. 

கமுதி சோலார் திட்டம் தமிழ் நாடு அரசின் மூலம்  பிரதமர் மோடியின் நண்பர் அதானி பவர் குழுமத்தால் கட்டப்பட்டுள்ளது. இதை முடிக்க அவர்கள் எட்டு மாதங்கள்  எடுத்துக் கொண்டுள்ளனர்.  . 
=====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?