ஞாயிறு, 30 ஜூன், 2013

நீதிபதி சதாசிவம்


"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,"

இந்திய தலைமை நீதிபதியாக  தமிழகத்தைச் சேர்ந்த   நீதிபதி சதாசிவம் பதவியேற்கிறார்.

 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தற்போது  அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா ஓய்வு பெற்ற பின் கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார்.
இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம்.
1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  தந்தை பழனிச்சாமி ,தாய் நாச்சாயி அம்மாள் .
சகோதரர்கள் சுப்ரமணியம், வேலுச்சாமி.
நீதிபதி சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி. மகன்கள் சீனிவாசன், செந்தில். 
அவரது தாய், நாச்சாயி அம்மாள் :-
"என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார்.
 அதையே, இன்று வரை தொடர்கிறார்.
 விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது.
கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார்.
 தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார்.
 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது."இவ்வாறு அவர்
தாய் நாச்சாயி அம்மாள்கூறினார்.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.ஆனால் இவர்கள் தமிழர்கள்  அல்ல.
சென்னைப் பல்கலைக்கழகம்  சென்னை சட்டக் கல்லூரியில் படித்த  நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். இரண்டாவது தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின் அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

 ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி சதாசிவம்.

சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு,
2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார்.
 டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார்.
 பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.
ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று சட்டக் கல்வியறிவு முகாம்களை கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.\
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தியாவை முழுக வைக்கும் கடன் ,இந்தியாவிற்கு "ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி" வெளிநாட்டு கடன் உள்ளது. 

இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள்.

இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி என்பது தற்போது நமது கையில் இருக்கிற மொத்த அன்னியச் செலாவணியில் 60 சதவீதம் ஆகும்.

இந்த 60 சதவீதம் என்பது, 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17 சதவீதமாகவே இருந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் திருப்பிச் செலுத்தும் சக்தி குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.வெளிநாட்டுக்கடன்கள் இந்த அளவுக்கு பெருகி இருப்பதற்கு 2004-ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருமளவு கடன்களும் காரணம்.

ஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடினமானதாக்கி விட்டால், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"ஏற்கனவே வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு 4.7 சதவீதம் சரிக்கட்டுவதற்கு மேலும் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது."
இன்னமும் நமது மத்திய அரசு சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் பணத்தை பறிமுதல் செய்து மீட்டு வரும் நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவருகிறது.காரணம் அப்பட்டியலில் பல அரசியல்வாதிகள்தான் முக்கிய இடம் பெறுகிறார்கள்.அதை மீட்டாலே லட்சம் கோடிகள் கணக்கை தாண்டி விடும்.
கடனை அடைப்பதுடன்,புதிய திட்டங்களையும் நிறைவேற்றலாம்.
வங்கிகளில் பல பகாசுர தொழிலதிபர்கள் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் ஆட்டையை போட்ட நிலுவையும் பல லட்சம் கோடிகள் வரும்.அவைகளை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தினால் கூட வெளி கடனை செலுத்தி விடலாம்.
பொருளாதாரப் புலிகள் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் நிர்வாகத்தில் அவர்கள் இதுவரை செய்த சீர்திருத்தங்களில் [?] நாட்டின் வெளிநாட்டு கடன் உயர்ந்ததுதான் மிச்சம்.பன்னாட்டு நிறுவனங்களை புகுந்து விளையாட விட்டதில்,பங்குகளை வாங்க ஊக்குவித்ததில் வந்த பக்க அல்லது பின் விளைவுதான் இன்றைய இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி.இதனால் உண்டாகியதுதான் இந்தியாவின் மரியாதை வீழ்ச்சி.இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மன்மோகன் -ப.சி.?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
“ஜனநாயக”  உளவாளி
                                                                                                                                        - ஆர்.பத்ரி,
உலகின் உயர்ந்த ஜனநாயகத்திற்கு சொந்தம் கொண்டாடும் அமெரிக்காவின் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (சூளுஹ) யின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னொடென் அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக அமெரிக்க அரசங்கம் அவரை கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவரோ உலகின் பல நாடுகளுக்கும் தஞ்சம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் முதலில் ஹாங்காங்கிலும், பிறகு ரஷ்யாவில் விமான நிலையத்தின் பயணிகள் ஓய்விடத்திலும் (கூசயளேவை ஹசநய) தங்கி, தனக்கான அடைக்கலம் தரும் நாட்டை தேடிக் கொண்டிருக்கிறார்.ஈக்வடார் நாடு ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளிக்கத் தயார் என முதலில் அறிவித்து, பின் அமெரிக்காவின் நிர்பந்தத்தின் காரணமாக நாங்கள் இது குறித்து ஆலோசிக்க சற்று கால அவகாசம் தேவை என அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளரான மைக்கேல் ஜூலியன் அசாஞ்சே ஏற்கனவே ஈக்வடார் நாட்டின் உதவியோடு பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளிக்கப்போகும் நாடு எது எனவும், ரஷ்ய விமான நிலையத்திலிருந்து எந்த நாட்டிற்கு செல்லும் விமானத்தில் அவர் ஏறப்போகிறார் என்பதையும், ஊடகங்களும், உலகமும் பரபரப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் அவர் அப்படி என்னதான் செய்தார் என்பதையும், ஜனநாயகத்தின் பாதுகாவலன் (!) அமெரிக்காவின் உண்மையான முகத்தையும் நாம் சற்றே கவனிப்போம்.
(NSA எனப்படும் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி எனும் தனியார் உளவு அமைப்பு, அமெரிக்க அரசாங்கத்திற்கு தேவைப்படும் அனைத்து உளவு ரகசியங்களையும் சேகரித்து தருவதற்காக 2001 அம் ஆண்டில் சீனியர் புஷ் நிர்வாகத்தில் இருந்த போது அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அந்நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஓர் ஊழியராக பணியாற்றியவர் தான் இந்த எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய உத்தரவின் மூலமும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான உளவு மற்றும் கண்காணிப்பிற்கான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் படியும் பல்வேறு உளவு ரகசியங்களை சேகரித்து வருகிறது இந்த நேஷனல் செக்யூரிடி ஏஜென்சி எனும் உளவு அமைப்பு.
முதலில் சர்வதேச அளவிலான உளவி ரகசியங்களை மட்டுமே கண்காணித்து வந்த இதன் பணி நாளடைவில் அந்நாட்டில் உள்ள மக்களின் ரகசியங்களையும் சேகரிக்கத் துவங்கிய போது தான் அரசாங்கத்தோடு முரண்பட்டு சொந்த நாட்டு மக்களையே கண்காணிப்பதா என கேள்வி கேட்டார் எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க ஜனநாயகத்தில் தான் ஒருவர் கேள்வி கேட்டால் ஆபத்தாயிற்றே.
 இனியும் அமெரிக்காவில் தங்கியிருந்தால் தனது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் தான் சொந்த மக்களுக்கு துரோகமிழைக்கும் வேலையை தூக்கிப் போட்டு விட்டு வெளியேறியுள்ளா ஸ்னோடென்.
பிரிசம் (PRISM) எனும் உளவு திட்டம்
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் மூலம் வரும் ஆபத்துக்களை கண்காணிப்பதற்காகவும், முன்னெச்சரிக்கையோடு தடுப்பதற்காகவும் என்ற பெயரில் பிரிசம் எனும் உளவு பார்க்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இயங்கி வரும் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் கணிணி நிறுவனங்களின் விபரங்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான “வெரிஜோன்” எனும் நிறுவன சந்தாதாரர்களின் அனைத்து தொலைபேசி விபரங்களும் முழுமையாக பெறப்படுகின்றன. சந்தாதாரர்களின் தொலைபேசி எண், முகவரி , யாருடன் பேசினார்கள் என்ற விபரம் என அனைத்து இந்நிறுவனம் மூலம் பெறப்படுகிறது.
வெளிநாட்டு அழைப்புகள் மட்டுமின்றி பல அமெரிக்கர்களின் உள்நாட்டு அழைப்புகள் கூட கண்காணிக்கப்படுகின்றன. வரும் ஜூலை 19 வரை நாள்தோறும் அனைத்து விபரங்களையும் அந்நிறுவனம் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் வழங்க வேண்டும் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் “எதேச்சதிகாரம்”
அமெரிக்க அரசின் ஆசீர்வாதத்தோடு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய உளவு விபரங்களை முதலில் எட்வர்ட் ஸ்னோடெனும், பின்பு ஊடகங்களும் வெளிப்படுத்திய சூழலில் அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தையும், ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. ஆனால் அமெரிக்க அரசோ நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
. அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் “ஜேம்ஸ் கிளாப்பர்”, நாடாளுமன்ற உளவு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் “மைக் ரோஜர்ஸ் “மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் மிகவும் அலட்சியமான முறையில் ஒருமித்த குரலில் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து உரையாற்றி வருகிறார்கள்.. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா.. ஜூனியர் புஷ் ஆட்சி காலத்தில் அமெரிக்க செனட்டராக பாரக் ஒபாமா இருந்தபோது இத்தகைய உளவு வேலைகளை ஆட்சேபித்து “பாதுகாப்பு என்ற பெயரால் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக” கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பாவம் அவர் அமர்ந்திருக்கிற வெள்ளை மாளிகையின் அதிபர் நாற்காலி, மக்களையும் வரலாற்றையும் மறந்து போக வைத்திருக்கிறது.
பிரிட்டனிலும்
இதே “பிரிசம்” எனும் உளவு திட்டம் பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு நிறுவனமான GCHQ நிறுவனத்தோடும் இணைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், கடந்த ஜூன் 2010 முதல் இத்தகைய ரகசிய உளவு செய்திகள் அந்நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஓயாமல் ஜனநாயகம் பேசிக் கொண்டும், சோசலிச நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு ஜனநாயகம் மீறப்படுகின்றன என ஆதங்கப்பட்டும், இதர நாடுகளில் பஞ்சாயத்து செய்து கொண்டும் இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் உண்மையான முக விலாசம் இதுதான். மற்ற நாடுகளில் நடந்தால் மனித உரிமை மீறல் எனவும் தங்கள் நாடுகளுக்குள் என்றால் “பாதுகாப்பிற்காக” எனவும் இரட்டை நாக்கில் பேசும் இந்த அரசுகள்.

- ஆர்.பத்ரி, 'நீலகிரி மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)']
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---

சனி, 29 ஜூன், 2013

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள்.
இப்போது அழகிரி அமுங்கி விட்டார்.
சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும்
வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார்.
கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 3 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், 15 விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தார். பொதுமக்களின்  மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பேஸ்புக் மூலம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். இவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.ஊரக பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்தார்.

சரியில்லாத பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அரசு கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் கொடுத்து தரமற்ற பணிகளை செய்ததாக புகார் எழுந்தது. இதில், விசாரணை நடத்தி, கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் முறையற்ற பரிந்துரைகளை கலெக்டர் ஏற்பதில்லை எனக் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து  கூட்டம் போட்டு கலெக்டரை மாற்ற வேண்டும் என மூத்த அமைச்சர்கள் குழுவிடம் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு கலெக்டரை பகைத்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தார். மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார். இதில் மேயருக்கும், கலெக்டருக்கும் மோதல் ஏற்பட்டது.ரிங் ரோட்டில் பில் இல்லாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

 முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிர்வாகத்தில் கலெக்டர் தலையீடுவதாக கூறி, கவுன்சில் கூட்டத்தில் கலெக்டரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முன்னிலையில் மேயர், மாநகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பணியேற்று ஒரு வருடம், ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக கடலூரில் சப் கலெக்டராக பணியாற்றும் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்சுல் மிஸ்ராவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் விசாரணை நிலை என்ன?
கிரானைட் குவாரியில் யி16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என முன்னால் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முறையாக விசாரணை நடத்தி 86 குவாரிகளில் முறைகேடு என கண்டுபிடித்தார். உரிய விசாரணைக்கு பிறகு போலீசார் 50க்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 40க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.ஏற்கனவே கிரானைட் விசாரணை அதிகாரியான ஜான்லூயிஸ் மாற்றப்பட்டார். தற்போது கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மாற்றப்பட்டதால் இதன் விசாரணை எப்படி போகும் என தெரியவில்லை. தற்போது இதில் இருக்கும் ஒரே அதிகாரி மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர்.
சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார்.
 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
 போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
என்னதான் ஆள்வோர் எண்ணப்படி நடந்து கொண்டாலும் கட்சிக்காரர்கள் வரவு-செலவுக்கு இடைஞ்சலாக இருந்தால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.இது இன்னொரு முறை நிருபணமாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்க நாணயம்- தங்க கட்டி விற்பனையை நிறுத்தம்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------
ஆபரண தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
 ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வீழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விலை நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை, கடும் சரிவை கண்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,470 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு, 91 ரூபாய் குறைந்து, 2,379 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 980 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 25,440 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 42.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 39,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்ற, 2011ம் ஆண்டு, நேற்றைய தேதியில், ஒரு கிராம், தங்கம், 2,072 ரூபாய்க்கும், ஒரு சவரன், 16,576 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு, இதே தேதியில், ஒரு கிராம் தங்கம், 2,811 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,488 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு, 432 ரூபாயும், சவரனுக்கு, 3,456 ரூபாயும் வீழ்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
suran
வரும், ஜூலைமுதல், நகை கடைகளில், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த, வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவடைந்து வருகிறது. நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் பங்களிப்பு, 70 சதவீதமும், தங்கம் பங்களிப்பு, 20 சதவீதமும் உள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 850 டன்னாகவும், சென்ற நிதியாண்டில், 800 டன்னாகவும் இருந்தது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, சுங்கவரி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மொத்த தங்கம் இறக்குமதியில், 20 சதவீதம், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளாக, விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகளை, முதலீட்டுநோக்கத்திற்காக மட்டுமே, வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, "தங்க நாணயம் விற்க வேண்டாம்' என்று, வங்கிகளுக்கு, மத்திய அரசு, அண்மையில் தெரிவித்திருந்தது.
தங்கம் பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. இதில், 10 சதவீதம் மட்டுமே, அமைப்பு சார்ந்தவை. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம், சென்னையில் விற்பனையாகிறது.
 ஒரு கிலோ தங்கம் விற்பனையில், 10 சதவீத பங்களிப்பை நாணயங்களும், தங்க கட்டிகளும் கொண்டுள்ளன.
தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது, வர்த்தகர்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
 தமிழகத்தில் உள்ள  நகை கடைகளிலும், ஜூலை முதல் வாரத்தில் இருந்து, தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனை இருக்காது .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெற்றிக்கு அடிப்படை

-----------------------------------

மனக் கட்டுப்பாடே!

--------------------------------

வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின் சுயகட்டுப்பாடே, வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான குழப்பங்களுக்கு ஆளாகிறார்.
 தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில் படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது.
 உங்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத் தரும்.
சுய கட்டுப்பாட்டின் சக்தியை நீங்கள் உணர வேண்டுமெனில், Marshmallow டெஸ்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வால்டர் மிஸ்செல் என்ற உளவியல் நிபுணரால், கடந்த 1972ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலையில், நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையே Marshmallow டெஸ்ட். Marshmallow என்பது ஒரு இனிப்பான தின்பண்டம்.
தனது செயல்பாட்டிற்கு, ஒரு வகுப்பறையில், நர்சரி பள்ளி மாணவர்களை அவர் திரட்டினார். வகுப்பின் ஆசிரியர் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த தின்பண்டத்தை வழங்கினார்.

 தின்பண்டங்களைப் பெற்ற குழந்தைகளிடம் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, வகுப்பின் ஆசிரியை வெளியே சென்று ஒரு சிறு வேலையை முடித்துவிட்டு வருவார். அதுவரை, அத்தின்பண்டத்தை குழந்தைகள் உண்ணலாம் அல்லது ஆசிரியர் வரும்வரை காத்திருக்கலாம். காத்திருக்கும் குழந்தைகளுக்கு, ஆசிரியர் வந்தபின், கூடுதலாக இன்னொரு தின்பண்டம் வழங்கப்படும் என்பதே அந்த நிபந்தனை.

ஆசிரியர் வெளியில் சென்று திரும்பிய பின்னர், குழந்தைகளைப் பார்த்தார். சில குழந்தைகள் தின்று முடித்திருந்தன. சில குழந்தைகளோ, பொறுமையாக காத்திருந்தன.

காத்திருந்த குழந்தைகளை, வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு சென்று பணிபுரியும் காலம் வரை, வால்டர் மிஸ்செல் கண்காணித்து வந்தார்.
சிறுவயதில், அந்த வகுப்பறையில், தின்பண்டத்தை உண்ணாமல் வைத்திருந்து, காத்திருந்த குழந்தைகள், மேல்படிப்பில் சிறந்து விளங்கியதோடு, நல்ல பணிவாய்ப்புகளைப் பெற்று, ஆரோக்கியமான உடல்நலத்தைக் கொண்டிருந்து, மற்றவர்களுடன் நல்ல உறவையும் பேணி வந்தார்கள் என்பதை அவர் கண்டறிந்தார்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள் உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடி-பாடி திரிந்து, இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
 இதன்மூலம், அவர்களின் தங்களின் எதிர்கால மற்றும் நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை தொலைக்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாணவரும், எப்போதுமே கட்டுப்பாட்டோடு இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்னொரு கூடுதல் தின்பண்டத்திற்கு காத்திருக்கும் பண்பானது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மற்றும் நேர்மறையாக இருத்தல் ஆகிய குணநலன்களை குறிக்கின்றன.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.
 எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.
எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்.
பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
 வெற்றி உங்களைத் தேடிவரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran
-

வெள்ளி, 28 ஜூன், 2013

"மோடி"[யின்] மந்திரம் ?


  தற்கொலைகள் ,
 ---------------------------
 தமிழ்நாடு முதலிடத்தில்.
 ----------------------------------------------------------------
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
 தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்திய தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773 ஆண்களும், 40,715 பெண்களும் உயிரை துறந்திருக்கின்றனர்.
தற்கொலை விகிதப்படி பார்த்தால் ஒரு இலட்சத்திற்கு 11.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
 ஒரு மணிநேரத்திற்கு 15 தற்கொலைகளும், ஒரு நாளைக்கு 371 தற்கொலைகளும் நடக்கின்றன. பாலின ரீதியில் 242 ஆண்களும், 129 பெண்களும் ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தேசிய குற்றப் பிரிவுத் துறை
இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகளில் மொத்தம் 16,927 தற்கொலைகள் நடந்த தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டிய மாநிலம் 16,112 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், 14,328 தற்கொலைகள் நடந்த ஆந்திரா நான்காம் இடத்திலும் உள்ளன. நகரங்கள் என்று பார்த்தால் 2,183 தற்கொலைகள் நடந்த சென்னை முதலிடத்தில் உள்ளது.
புதுச்சேரியில் மட்டும் ஒரு இலட்சம் மக்களில் 36.8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்திய அளவில் முதலிடம் ஆகும். 2012-ம் ஆண்டில் மட்டும் 541 நபர்கள் புதுச்சேரியில் தற்கொலை செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 24.9 ஆக உள்ளது. இது இந்திய அளவில் மூன்றாம் இடமாகும்.
இந்திய அளவில் குடும்பப் பிரச்சினைக்காக ஒரு நாளில் 84 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமூக, பொருளாதார காரணங்களினால் ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் போது பெண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மொத்த தற்கொலைகளில் திருமணம் செய்த ஆண்கள் 71.6 சதவீதமும், திருமணம் செய்த பெண்கள் 67.9 சதவீதமும் உள்ளனர். ஒவ்வொரு ஆறு தற்கொலைகளிலும் ஒரு தற்கொலையை திருமணம் முடித்து இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண் செய்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் சேர்ந்து இந்திய அளவில் 50.6 சதவீத தற்கொலைகளைக் கொண்டிருக்கின்றன.
தற்கொலை செய்து கொள்வோரில் 37 சதவீதம் பேர் தூக்கு போட்டும், 29.1 சதவீதம் பேர் விசம் குடித்தும், 8.4 சதவீதம் பேர் தீ வைத்தும் உயிரை விடுகின்றனர். கடந்த வருடம் மட்டும் 50,062 நபர்கள் தூக்கு போட்டு இறந்திருக்கின்றனர். அதில் ஆண்கள் மட்டும் 34,631 பேர்கள் ஆவர்.
சென்ற வருடம் 19,445 நபர்கள் விஷம் குடித்து இறந்திருக்கின்றனர். அதில் 12,286 பேர்கள் ஆண்கள் ஆவர். இதில் தமிழ்நாடு 3,459 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்ற வருடம் தீ வைத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11,438 ஆகும். இதில் பெண்கள் 7,326 பேர்கள் உள்ளனர். இதிலும் தமிழ்நாடு 2,349 பேர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் பெண்களின் எண்ணிக்கை 1,481 ஆகும்.
தீவைத்து இறப்போரில் முதலிடம் வகிக்கும் நகரமான கான்பூரில் சென்ற வருடம் 285 பேரும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னையில் 282 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்பவர்களின் சென்ற வருட எண்ணிக்கை 4,259. அதில் ஆண்களின் எண்ணிக்கை 3,554 ஆகும். 1,101 பேரை பறிகொடுத்த ஆந்திரம் இதில் முதலிடத்தில் இருக்கிறது.

தேசிய குற்றப்பதிவுத் துறையின் கணக்குப்படி 2011-ம் ஆண்டில் 1,35,585 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். 2012-ல் இது 1,35,445 ஆக உள்ளது. ஏறக்குறைய ஒரே எண்ணிக்கைதான். 2002-ம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டிவிட்டது. 2002-ம் ஆண்டில் 1,10,417 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.
அதன்படி பார்த்தால் இந்த பத்தாண்டுகளில் குறைந்த பட்சம் பதினைந்து இலட்சம் பேராவது தங்களது உயிரை மறித்திருக்க வேண்டும்.
இந்த விவரங்களை வைத்து சமூக ரீதியில் எங்கு ஏன் தற்கொலை நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலை அதிகம் உள்ளது. மது, கந்து வட்டி, மதிப்பெண் குறைவு, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பெண்களின் பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை பிரச்சனை காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. விசம் குடித்து தற்கொலை செய்வோரில் இந்திய அளவில் விவசாயிகள் கணிசமாக இருப்பார்கள்.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஆண்களை அதிகம் சார்ந்து இருப்பதால் அவர்களே பெண்களை விட அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கான்பூரில் தீ வைத்து செய்யப்படும் தற்கொலைகளில் வரதட்சணை மற்றும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வன்முறைகளுக்கும் இடமுண்டு. ஆதலாம் அது கொலையா, தற்கொலையா என்று சுலபத்தில் கண்டறிய முடியாது. பிற பின்தங்கிய மாநிலங்களில் தற்கொலைகள் தமிழகம் அளவுக்கு சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.
திருமணம் செய்த பிறகே மனிதர்கள் குடும்ப நிறுவனத்தை தனியாக நடத்தும் பொறுப்பேற்கிறார்கள் என்பதால் திருமணம் செய்தவர்கள் செய்யும் தற்கொலை அதிகமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு சமூகப் பின்னணியை கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது இது குறித்து விரிவாக எழுதுகிறோம். ஆயினும் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டுமே தற்கொலையில் முதலிடத்தில் இருக்கின்றன என்ற செய்தியை தமிழ் மக்கள் பாரதூரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
TN tops in suicides due to failure in love and exam
India saw 1,35,445 suicides last year
நன்றி : வினவு

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மோடி"யின்  "மந்திரம் "?
---------------------------------------------------------
"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."
ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
 அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
 துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
 ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.
ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான  கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

தங்கம்......கடன் வழங்ககூடாது !

ரிசர்வ் வங்கி உத்தரவு !!.

தங்கம் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக 50 கிராம் எடைக்கும் அதிகமான தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் பேரில் கடன் வழங்ககூடாது என ஊரக வங்கிகளுக்கும்  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

விலை மிகவும் சரிவடைந்திருந்ததையடுத்து மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக மிகவும் உயர்ந்து இருந்தது. தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் நம்நாடு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் கிராமங்களில் போதுமான அளவிற்கு வங்கி வசதி இல்லை. இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தில் கிராமங்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. எனவே தங்க நாணயங்கள் மீது கடன் வழங்குவதில் ஊரக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்கனவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்க பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகள் பேரில் கடன் வழங்ககூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே தடை உள்ளது. மத்திய அரசும் தங்கம் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதமாக அண்மையில் உயர்த்தியது.

 அனைத்திந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பும் தனது 42,000 உறுப்பினர்களை தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் விற்பனையை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தங்கம் இறக்குமதி முக்கிய காரணமாகும். 
இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றிற்கான தங்கம் இறக்குமதி தற்போது 3.60 கோடி டாலராக (ரூ.216 கோடி) குறைந்துள்ளது. 
 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் இது 13.50 கோடி டாலராக இருந்தது. ஆக தற்போது இறக்குமதி பன்மடங்கு குறைந்துள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 விடுதலைப் புலி- மூத்த போராளி மர்மமான முறையில் சாவு!
போர்க்களத்தில் விழுப்புண் அடைந்ததால் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேல் விடுதலைப் போராட்டத்திற்கு தன் வாழ்வை வாழ்வை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த மூத்த போராளி ஒருவர் சித்திரன் கந்தசாமி.
தனது இறுதி காலத்தில் அவரது உடல்நிலை காரணமாக விடுதலைப் போராட்டத்திலிருந்து தன்னை விடுவித்து வாழ்ந்து வந்தார்.
ஆயினும், முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பின் அவரையும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் சிறைப்பிடித்தன.
 பின்னர், புனர்வாழ்வு என்ற பெயரில், தொடர்ச்சியான மனஉளைச்சலை இவருக்கு உண்டுபண்ணியதோடு, சித்திரவதைகளையும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு இவர் மீது மேற்கொண்டது.
 
இதனால் , மனக்குழப்பத்துக்கு உள்ளான இவரை தடுப்பிலிருந்து விடுவித்தனர் சிறீலங்காப் படையினர். அதன் பின்னர் 49 வயதுடைய  இந்த மூத்த போராளி தனது குடும்பத்தினருடன், வடமராட்சியின் இமையாணன் பகுதியில்ல்வசித்து வந்தார்.
 
இந்நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சாவு ஒரு மர்மம் நிறைந்ததாக உள்ளதாக ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.
 
சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என போராளிகள் நலன் காக்கும் அமைப்பென தம்மை அடையாளப்படுத்தியுள்ள தரப்பினர் பரிஸ்தமிழ்.கொம்மின் வடமராட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------


வியாழன், 27 ஜூன், 2013

குற்றம் கண்டு பிடியுங்கள்,

  30 லட்சம் வெல்லுங்கள்.

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது.
கடைசியாக, விண்டோஸ்,8 சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளி யிடும் நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் சாப்ட்வேரில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத் தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட சாப்ட்வேர்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் சாப்ட்வேரில் புகுந்து வாடிக்கையா ளர்களின் ரூ.2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல் ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர்.
 இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சாப்ட்வேர்தான் இருந்தது.

இதனால் "விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல "என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது.
இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மேலும் மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக ரூ.6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்த பரிசுத் தொகை ரூ.59 லட்சமாகும்.
இனி வரும் காலங்களில் விண்டோஸ் சாப்ட்வேர்கள் அனைத்தும் இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடவும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------
CC, BCC என்றால் என்ன? 
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம்.ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.
சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??
Cc: Carbon Copy
நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.
Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி, Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீரிழிவு நோய்த்தடுப்பு மருந்து!

-------------------------------------------------


நீரிழிவு நோயின் ஒரு வகையான முதல்ரக நீரழிவு நோயை மாற்றுவதற்கான நோய்த் தடுப்பு மருந்தின் மாதிரி பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
80 நோயாளிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை குறித்து நாடுகடந்த மருத்துவ விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான தகவல்கள், புதிய நோய்த்தடுப்பு மருந்து இதற்கேற்றவாறு உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு பயிற்சி கொடுக்கும் என்று கூறுகின்றன.
இந்தச் சோதனையின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடலைத் தாக்குகின்ற பக்ரீரியாக்கள் மற்றும் வைரசுக்களை தாக்குவதற்கான பயிற்சியை உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு(முறைமைக்கு) பயிற்றுவிப்பதே நோய்த்தடுப்பு மருந்துகளின் செயற்பாடாகும்.
அந்தப் பயிற்சியின் மூலம் உடலைத் தாக்கவரும் கிருமிகளை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தாக்கி அழித்துவிடும்.
ஆனால், நீரிழி நோயைப் பொறுத்தவரை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலின் பாகங்களை தாக்குவதன் மூலம் அது உருவாகிறது. அதாவது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் கணயத்தில் உள்ள பீட்டா கலங்களை தாக்குவதால் அது ஏற்படுகிறது.
இந்த பீட்டா கலங்கள்தான் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கின்றன. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி அந்த பீட்டாக் கலங்களை தாக்கி அழித்துவிட்டால், இன்சுலின் சுரக்கமுடியாமல் போய் விடுகிறது.
இதன் மூலமே முதல் வகை நீரிழிவு நோய் உருவாகிறது.
ஆகவே இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய நோய்த்தடை மருந்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு, கிருமிகளை தாக்குவதற்கான பயிற்சியை கொடுப்பதற்குப் பதிலாக, அந்த நோய் எதிர்ப்புச் சக்தி செயற்படாமல் இருக்க அது பழக்குகிறது. ஆகவே குறித்த நோய் எதிர்ப்புச் சக்தி கணயத்தின் பீட்டாக் கலங்களை தாக்காது.
அதனால் இன்சுலின் தொடர்ச்சியாகச் சுரக்கப்பட, முதல் வகை நீரிழிவு நோயும் வராது.
இந்த புதிய நோய்த்தடுப்பு மருந்து இன்சுலினைச் சுரக்கும் குறித்த பீட்டா கலங்களைத் தாக்கும் வெண்குருதிச் சிருதுணிக்கைகளை செயற்படாமல் இருக்கச் செய்துவிடும்.
இந்தப் பரிசோதனை நல்ல பலனைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால், இரண்டாவது வகை நீரிழிவு நோய் ''கூடாத உணவுப் பழக்க வழக்கங்களால்'' ஏற்படுவதால், அதனை இந்த நோய்த்தடுப்பு மருந்தால் தடுக்க முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


வாரத்திற்கு 40 மணி நேரமே உழையுங்கள்.இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும்.
 வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும்.
உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.
வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும் நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும். , குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.
 இதுகுறித்து  மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.
 யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே மாறி விடுங்கள்.
அது மட்டுமல்ல .நீங்கள் சிறு அளவிலாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் .
உடற்பயிற்சி செய்தால் உடல் மட்டுமின்றி உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் என்பதை அதை செய்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும்.
உடற்பயிற்சியில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாக்க தனித்தனியாக பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க  மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன.

உடற்பயிற்சியை செய்யும் முன், முதலில் இந்த பயிற்சிகளின் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் பலன்  கிடைக்காது. விடாமுயற்சியோடு பயிற்சிகளை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். மனம் தளரவோ, ஒதுங்கி விடவோ கூடாது. மேலும்,  உடற்பயிற்சிக்கு தகுந்த சூழ்நிலை அவசியம்.

இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும். வீட்டில் ஜன்னலை திறந்து வைத்து கொள்ளுங்கள்.  பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க  வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கு இழுத்தலும் வெளியே விடுதலும் ஒரே சீராக நிதானமாக  நடைபெற வேண்டும்.

புதிதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இதற்காக பயிற்சியை  நிறுத்தி விடக் கூடாது. சிலர் சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.
 இது தவறானது.
சாப்பிட்டவுடன் ஒரு போதும் உடற்பயிற்சி செய்யக்  கூடாது. இதேபோல், பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது.

சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டு பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
 பயிற்சிகளை அவசரமாகவும்  படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாக செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப காலத்தில் குறைந்த  எண்ணிக்கையில், குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக்  கொண்டே வரவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

தந்தி போல ஒரு வசதி,


தந்தி சேவை முடிவுக்கு வர உள்ள நிலையில் அதே மாதிரியான சேவையை குறைந்த கட்டணத்தில்  நீண்ட காலமாக வழங்கி வருவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' தந்தி சேவையை போன்றே ''ஈ,போஸ்ட்'' என்ற மின், அஞ்சல் சேவையை வழங்கி வருகிறோம். ஒரு பக்க (ஏ4) செய்தியை அனுப்ப 10 ரூபாய் மட்டுமே கட்டணம். தந்திக்கு வசூலிக்கும் கட்டணத்தை விட இது குறைவான கட்டணமாகும். அனுப்ப விரும்பும் செய்தியை அச்சிட்டோ, எழுதியோ கொடுக்கலாம்.

அதனை ஸ்கேன் செய்து முகவரியில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அங்கு அதனை அச்செடுத்து வழக்கமான கடிதம் போல் சம்பந்தப்பட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும்.
 கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சலகங்களில் மட்டுமே இந்த வசதி.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
C.F.L .பல்புகள் உடைந்தால்,

 செய்ய வேண்டியவை...

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படும். 
ஒவ்வாமை  பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படும்.


 உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொறுங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

 வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

 கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்.

 உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் ,பாதுகாப்பாக மறுசுழற்சி குப்பை சேமிப்பு கிடங்கில் சேர்க்க வேண்டும் .
 சாதாரண குப்பைத் தொட்டியில் போட்டால் அதை சேகரிப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------புதன், 26 ஜூன், 2013

விலை உயரும் அபாயம்

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 இதையடுத்து பெட்ரோல்,டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்து அத்யாவசிப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

 சர்வ‌தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ‌ஏற்பவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது.

 சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

 காலை நேர வர்த்தகத்தின் போது ரூ.59.78 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு பகல் நேர வர்த்தகத்தின் போது மேலும் கடுமையாக சரிந்து ரூ.60.24 ஆக ஆனது.
 இது இந்திய பங்குச் சந்‌தைகளையும், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 எண்ணெய் நிறுவனங்கள் கூறுகையில், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 இதனால் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

இதன்படி தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
அதே போன்று டீசல் விலையை லி.50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 மேலும் சமையல் கேஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரக்கூடும் சூழ்நிலை உள்ளது.
.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகள் அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் .

 ஜூலை 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வரலாம் .

 இப்படி எரிபொருட்களின் விலை  உயர்த்தப்பட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணம் மட்டுமின்றி- அத்யாவசிய பொருட்களான அரிசி, பருப்பு ,காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பன்மடங்கு எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.--------------------------------------------------------------------------------------------------------------------------------------
'மஞ்சள் பூசிய முகம்'
-------------------------------

மஞ்சள் பூசிய பெண்கள் ரசாயன "கிரீம்' மோகத்தில், மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்... பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. அரைத்த மஞ்சளை பூசாமல், "டியூப்புக்குள்' அடைத்திருக்கும், ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர்  பெண்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள் பூசிய முகத்தை பார்க்க முடிந்தது.
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு, பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, காயவைத்து அரைக்க வேண்டும்.
 முகம், கை, கால்களில் பூசினால் தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்தவெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம் குறையும்.
* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.
* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும். சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.
 வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு கலந்து பூசலாம்.
* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ, காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை, அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.

* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக அலசினால் முடி பளபளக்கும்.

* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது.

 நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------