அம்மாவும் நீயே!- ,அய்யாவும் தானே?
"அம்மா " திட்டங்கள் இப்போது கடும் வாத-எதிர் வாதங்களை உருவாக்கியுள்ளது.
அம்மா உணவகங்களில் ஆரம்பித்த மலிவு அலை இப்போது 10 ரூபாய் மினரல் தண்ணீர் போத்தலில் வந்து நிலை கொண்டுள்ளது.
இன்னமும் அந்த அம்மா அலை பல்விடயங்க்களுக்கு நகரும் ஆபத்துள்ளது.
காய்கறிகளிலும்,20ரூபாய் அரிசியிலும் அது பாய்ந்துள்ளது.கருணாநிதியின் உழவர் சந்தைதான் உருமாறியுள்ளது.அதாவது மஞ்சள் -பச்சை,மரக்கலர் ஆகியுள்ளது.
இதன் மறு பக்கம் பார்த்தால் 2011 அம்மா ஆட்சிக்கு வரும் முன் இருந்த விலைவாசியிகளில்தான் இன்றைய அம்மா மலிவு பொருட்கள் விலை உள்ளது என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளாலாம்.
இன்னமும் பச்சையாக சொன்னால் கருணாநிதி கால விலைவாசியில் பொருட்களை தருவதே இன்றைய "அம்மா திட்டம் ".
அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையா?விளம்பரச் செலவை குறைத்தால் இன்னமும் பொருட்களை மலிவாக தரலாம்.
மொத்தத்தில் தான் ஆட்சிக்கு வந்த பின் தானே வரியை போட்டு ,தானே ஏற்றிய விலைவாசியில் இருந்து மக்களுக்கு பிச்சை போடுவதான முறையில்தான் இந்த மலிவு விலை திட்டங்கள் உள்ளன.
இந்த அளவு விலைகளை உயர்த்தியதே இந்த அம்மாவின் நிர்வாகம்தானே.
அதை மறைத்து மக்களிடம் பெயர் பெறும் வகையில்தான் இவைகள் உள்ளன.
விலைவாசியை கட்டுக்குள் வைத்தாலே இது போன்ற உணவகம்,20ரூபாய் அரிசி,தண்ணீர் போத்தல் விவகாரங்கள் தேவையில்லையே?
பிள்ளையை கிள்ளி விட்டவரே ,தொட்டிலை ஆட் டி நல்ல பெயர் எடுக்கும் அவலச்செயல் தானே.
அம்மா உணவக ள் இன் னும் சில நாட்கள்தான் என்று தெரிகிறது.
அத்திட்டத்திற்கு அரசு நிதியே ஒது க்கவில்லை.
அனைத்தும் அந்தந்த மாநகராட்சிகள் தான் செலவிட வேண்டும் .
கட்டிடங்கள் முதல் பலசரக்கு ,பணியாளர்கள் வரை.
தினசரி பல ஆயிரங்கள் இழப்பில் மாநகராட்சிகள் இப்போதே முழி பிதுங்கியுள்ளது. பழுதான தெரு விளக்கையே சரி செய்ய பணம் இல்லை என்பவர்கள்,ஊழியர்களுக்கு மாதாமாதாம் சம்பளம் போடவே தினறிவந்தவ்ர்கள் ,கையில்தான் மலிவு விலை உணவகங்கள் .
இனி நகராட்சியிடம் ஏதாவது வசதிகள்,தெருவை சீரமைக்க செய்யக்கோரி சென்றால் அவர்கள் திட்டுவதை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் அவர்கள் திட்டுவது நம்மை அல்ல என்பதயும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த 10 ரூபாய் மினரல் தண்ணீர் போக்குவரத்து கழகங்களின் பொறுப்பு.அவர்கள் ஒன்றும் இளித்த வாயர்கள் அல்ல.10 ரூபாய் இழப்புக்கு 20ரூபாயை பேருந்து கட்டணத்தில் கூட்டி விடுவார்கள்.இளித்தவாயர்கள் இப்போது பயணம் செய்பவர்கள்தான் என்றாகி விடுகிறது.
ஆக இந்த மலிவு விலை அம்மா தட்டங்கள் எல்லாமே மக்களை இன்னமும் கொடுமை படு த்தும் திட்டங்களாகவே உருமாறி விடும் அபாயத்தில்தான் நாம் அதாவது பாவப்பட்ட தமிழக மக்கள் இருக்கிறோம் .
இது போன்ற திட்டங்களே வேண்டாம் .இது மக்களை மேலும் இரந்துண்டு வாழ்வோர்களாக்கி விடுகிறது.
அதற்கு மாற்றாக வரிகளை குறைத்து ,விலைவாசிகளை குறையுங்கள்.
"பல ஆண்டுகள் பேசும் "ஆண்டு விழா சாதனை [?]விளம்பரங்களுக்கு 120 கோடிகள் கணக்கில் அரசுப் பணத்தை செலவிட்டு விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்த்து அப்பணத்தை மிச்சப் படுத்துங்கள் .
அவ்ளோதான் .
வயிற்றுக்கு உண்பது எப்படி?
---------------------------------------------
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
நன்றி:தமிழ்க் கதிர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------