அடுத்த பிரதமருக்கான வேட்பாளர்;மோடி






இந்தி யாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண் ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது.
மனுதர்மம் குறிப்பிடுகிறது முதலில் பார்ப்பனன், பிறகு சத்திரி யன், அடுத்து வைசியர், இறுதியாக சூத்திரர்கள் பகுத்தறிவற்ற விலங்கு களிடம்கூட இல்லாத இந்த பாகுபாட்டை ஆரியர்கள் தங்களின் வயிறு வளர்க்க உழைப்பில்லாமல் வாழ்நாள் முழுக்க உண்டுகொழுக்க வழிகண்டு அதை சட்டமாக எழுதி வைத்தனர். வடக்கே அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார் போன்றோர் இதை எதிர்த்து வெற்றி கண்டனர். சில ஆண்டுகளாக அடங்கி இருந்த இந்த மனுதர்ம கோடரி மீண்டும் தன்னுடைய மழுங்கிப்போன கூர் முனையை தீட்டிக்கொண்டு புறப் பட்டுள்ளது. கூர்முனையை தீட்டுவது மனுவின் புதல்வராக தன்னை உலகிற்கு காட்டிக்கொள்ளும் (இந்து மக்களின் பாதுகாவலன்) மோடியின் மாநிலமான குஜராத்தில் தான்;   அதுவும் தலைநகரின் அருகில்,  அகமதாபாத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தன்வாதா (ப்ஹவியா வட்டம்) இந்த ஊரில் உள்ள பஞ்சாயத்துத் தண்ணீர் தொட்டியில் ஜாதீய பாகுபாட்டை நேரடியாக பறைசாற்றும் வாக்கியம் உள்ளது. முக்கியமாக தலித்து களுக்கு எதிரான ஜாதி வன்மம் இதில் அடங்கியுள்ளது.  இப்படி பாகுபாடு பார்ப்பது தேசிய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குட்பட்டது. ஜாதிவாரியாக நேரம்
காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்,
காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.
நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்தவருக்கு என எழுதியுள்ளனர்.  இந்தக் கிராமத்தின் பஞ்சாயத் துத் தலைவர் நிமிஷா தோனியா என்ற பெண் ஆவார், ஆனால் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; பஞ்சாயத்து நிர்வாகம் அனைத்தையும் அவரது கணவர் ப்ரதாப்சிங்தோனியா தான் நிர்வகிக்கிறார்.
இந்த வாசகம் எழுதியதைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது? பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வந்ததைத்தான் செய்கிறோம். இதில் ஜாதிவன்மம் என்று பெயர் சொல்லி நீங்கள் தான் புதிய பிரச்சினையை கிளப்புகிறீர்கள். இந்த ஊரில் உள்ள எந்த தலித்தாவது இது குறித்து ஒன்றுமே சொல்வது கிடையாது. எங்கள் ஊர்மக்களுக்கு தெரியும், எப்படி வாழ்வது என்று. பத்திரிக்கையாளர்களான நீங்கள் வந்து புதிதாக எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டாம், என்கிறார். பஞ்சாயத்துத் தலைவர் எங்கே?
உங்கள் மனைவி தானே பஞ்சாயத்துத் தலைவர், அவர் எங்கே எனக் கேட்டதற்கு, அவர் எதற்கு, அதுதான் நான் இருக்கிறேனே, என்று சர்வசாதாரணமாகக் கூறி யவர், மேலும்  ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார்.
இங்கு மட்டுமல்ல; குஜராத்தில் எந்த ஊருக்கும் சென்று பாருங்கள் இப்படித்தான் இருக்கிறது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை; மக்கள் தங்கள் பணிகளை கவனிக்கிறார்கள் என்கிறார். இது குறித்து நகர நிர்வாக அதிகாரியுடம் கேட்டபோது, அவர்  நகரத்தின் அருகில் இருப்பதால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடம் செல்பவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காகத்தான் இந்த முறை, இதில் ஜாதிப்பாகுபாடு என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை, வீட்டில்கூட பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனை அனுப்பிவிட்டுத் தான் பிற குழந்தைகளை கவனிக் கிறோம் என்கிறார்.
குழாய்களிலும் ஜாதி,
அதுமட்டுமல்ல இந்த ஊரில் குடிநீர் எடுத்துச்சொல்லும் குழாய் கள் கூட தொட்டியில் இருந்தே 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் ஜாதிக்காரர்களுக்கு அவர்களின் தெருவிற்கென தனியாகக் குழாய் கள். அவை; அவர்களின் வீட்டின் குளியலறை வரை நீள்கிறது. பிற் படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக குழாயும், தலித் மக்களுக்கு என்று தனியாக குழாயும் உள்ளது. தலித் மக்கள் ஊருக்கு வெளியில் வாழ்வதால் அங்கு ஒரே ஒரு குழாய் தான் அதுவும், எல்லோருக்கும் சென்ற பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு சில குடங்கள் கூட தலித் குடும்பத்தின ருக்கு கிடைப்பதில்லை,  தன்வாதா கிராமத்தில் மற்ற இனத்தாரை விட தலித் மக்கள்தான் அதிகம் வசிக் கின்றனர்.
எட்டாண்டுகளாக,
இதுகுறித்து அந்தக் கிராம தலித் குடும்பத்தார் கூறும் போது புதிதாக பஞ்சாயத்து வந்தபிறகு கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிலைதான், முதலில் ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; ஆகையால் நாங்கள் தூரத்தில் உள்ள குளங்களில் சென்று தண்ணீர் கொண்டு வருவோம். ஆனால் இன்று குழாய் போட்ட பிறகு ஏதோ தண்ணீர் கிடைக்கிறது. இந்தப் பாகுபாட்டை கூறி நியாயம் கேட்டு கிளம்பினால், எங்களுக்கு இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகும் என்றார்.  மேலும் சில நாள்களாக எங் களுக்கு மறைமுகமாக மிரட்டல்கள் வர ஆரம்பித்து விட்டன. உங்க ளுக்குத் தண்ணீர் கிடைக்கிறதா? கிடைக்கவில்லை என்றால் கூறுங் கள்; அதை விட்டுவிட்டு புகார் கூறுவது போன்ற நடவடிக்கை எடுத்தால் இருக்கிற தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என் கிறார்கள். நகரத்திற்கு செல்லும் பேருந்தில்கூட எங்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்கள், கேட்டால் என்ன கலெக்டர் வேலைக்கா செல் கிறீர்கள்? தெருக்கூட்டத்தானே செல்கிறீர்கள்? அதற்கு அவசரமாக போகத்தேவையில்லை என்று சொல் கிறார்கள், என அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் கூறுகிறார்கள்,
முதல்வர் மோடிக்கு தெரியும்.
இந்தப் பாகுபாடு குறித்து பல முறை முதலமைச்சர் நரேந்திரமோடி யுடன் டுவிட்டரிலும், ஈ மெயிலிலும் புகார் கூறிவிட்டோம், இடையில் சில அதிகாரிகள் பஞ்சாயத்துத் தலை வரின் வீட்டிற்கு வந்து இப்படி செய்யக்கூடாது என வாய்மொழியாக சொல்லிவிட்டு, விருந்து சாப்பிட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள், ஆனால் இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது என்றார் நவவிசர்ஜன்(புதியமாற்றம்) என்ற தொண்டு இயக்கம் நடத்திவரும் கீரிதி ராத்தோட்.




"நீரிழிவு நோய்"

--------------------------

 உங்கள் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது !

--------------------------------------------------------------------------------- 

இன்று உலகில் பெரும்பாலான மனிதர்களை வாட்டி வதைக்கும் ஒரு வியாதியாக நீரிழிவு காணப்படுகின்றது. இந்நோயின் தன்மை மட்டும் அதன் பாதிப்பு என்ன என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்திருப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு மற்றும் தத்தமது அன்றாட செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதுபோல தமது கண்களிலும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். காரணம் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆமாம் பெரும்பாலும் 5 முதல் 10 வருடங்கள் தொடர்ச்சியாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கும், இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும், நீரிழிவுடன் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும், நீரிழி நோயுடன் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மதுபானம் அருந்துபவர்கள் போன்றோருக்குத் தான் கண்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு கண் வைத்தியரிடம் உங்களது கண்களை கட்டாயம் பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

ஏனென்றால் நீரிழிவு சம்பந்தமான கண் நோய் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. அவ்வாறு நீரிழிவு தொடர்பான கண் நோய் ஏற்படுமாயின் அதன் ஆரம்ப நிலையில் எந்தவிதமான அறிகுறிகளையும் அது காட்டாது. அதுபோலவே பார்வை குறைவைக் கூட அது ஏற்படுத்தாது. எனவே நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு அந்நோயுடன் தொடர்புடைய கண் இருக்கின்றதா? என்பதை சரியாக உணர்ந்துகொள்ள கூட முடியாது.
நீரிழிவு நோய் எவ்வாறு கண்களை பாதிக்கின்றது என்று பார்க்கும் போது, நீரிழிவு நோயாளர்களின் கண்களில் காணப்படும் குருதிக் குழாய்களில் அந்நோயானது பல்வேறு வகையான பாதிப்புக்களை உருவாக்குகின்றது. இதனால் விழித்திரை வீக்கமடைவதுடன் குருதி பெருக்கமும் ஏற்படுகின்றது. இதனால் கண்களில் இரட்டைப் பார்வை ஏற்படுவதுடன், கண் இமை மற்றும் வெள்ளை தோல் என்பன கிருமி தொற்றுக்குள்ளாகி கண்புரை நோய் உட்பட கண்களில் பல குறைபாடுகளையும் இந்நீரிழிவு நோய் ஏற்படுத்துகின்றது.
சிலவேளைகளில் குருதியில் குளுக்கோசின் அளவு சரியாக இருக்கின்ற பட்சத்திலும் கூட கண்களில் நீரிழிவுடன் தொடர்புடைய பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்வதற்கும் நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையேனும் தங்களது கண்களை ஒரு கண் வைத்தியரிடம் காட்டுவது மிகவும் நல்லது. இல்லையேல் ஆகக்குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு தடவையேனும் கண் வைத்தியரை நாடுவதன் மூலம் கண்களில் நீரிழிவு சம்பந்தமான நோய்கள் உள்ளனவா என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.


ஆரம்பத்திலேயே இந்நோய் தொடர்பாக அவதானித்து வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவதன் மூலம் எதிர்காலத்தில் கண்களில் ஏற்பட போகும் பாரிய பாதிப்புகளை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே நீரிழிவு சம்பந்தமான கண் நோய் ஒருவருக்கு ஏற்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதென்றால் அதனை சிகிச்சை முறைகளின் மூலம் கூட கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் உங்கள் கண்களை ஒரு கண் வைத்தியரிடம் காட்டுவது மிகவும் நல்லது.

-தம்பி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?