என்னய்யா நடக்குது..
தேர்வாணையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன. முறைகேடாக தேர்வு எழுதி தேர்வான சிலரை தகுதிநீக்கம் செய்வது, சில இடைத் தரகர்களை கைது செய்வது என விசாரணையின் திசை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் உயரதிகாரிகள் தொடர்பில்லாமல் இத்தகையதொரு வலைப்பின்னல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்வர்களை குறிப்பிட்ட தேர்வுமய்யத்தில் எழுத ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் சாதாரண பதிவறை எழுத்தருக்கு கிடையாது என்பது உலகறிந்த உண்மை. வெறும் இரண்டு,மூன்று பேர்கள் மட்டும் சேர்ந்து இப்படி முறைகேடு செய்யும் அளவு பலகீனமானதா தேர்வாணையம்.? தற்போது காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் ,குருப்-2 தேர்விலும் கூட பல முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஒரு காவல் அதிகாரி குடும்பமே தேர்வில் வெற்றி பெற்று முறைகேடு வெளியான நிலையில் அந்த காவல் அதிகாரி தலைமறைவாகிவிட்டார். ஆனால் வழக்கம் போல அடி நிலையில் உள்ள சிலரை மட்டும் பலிகடாவாக்கி விட்டு உயர்மட்டத்தில் உள்ளவர்களை தப்பிக்க விட்டால் இத்தகைய முறைகேடுகள் தொடர்வதை ஒருபோதும் ...