ஆன்மிக அரசியல் அசிங்கங்கள்

தமிழக மக்களை கொடுமைப்படுத்தும் எவ்வளவோ சட்டங்களை மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ளது.வருகிறது.
தி.முக. உட்பட எதிர்கட்சிகள்,மக்கள் மட்டுமின்றி கலைஞர்கள் கமல்ஹாசன்,சித்தார்த்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,கார்த்தி,ஜிவி பிரகாஷ் உன் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு சுய்கின்றனர்.அதற்காக ஆளுங்கட்சிகளின் அடக்குமுறைகளையும் சந்திக்கின்றனர்.ஆனால்
இவை எதையுமே கண்டுகொள்https://www.patrikai.com/rajinis-message-is-false-outlook-journalist-g-c-sekar-exposed/ளாமல் கோடிபளை குவிக்கும் நடிப்பிலேயே கவனமாக இருந்தவர்,இருப்பவர் நடிகர் ரசினிகாந்த்.
அதுகூட பரவாயில்லை.போராடும் மக்களை போராடக்கூடாது,போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்று புத்திமதி சொல்லித்திரிந்தார்.
தனது படங்கள் வரும்போதுதான் ஓடவைக்க சில விதண்டாவாதங்களை சொல்பவர் இவர்.
தற்போது துக்ளக் 50 ஆண்டு விழாவில் 1971 ல் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலை நிர்வாணமாகக்கொண்டு வரப்பட்டது.செருப்பு மாலை போடப்பட்டது என பிதற்றினார்.
அதை துக்ளக் மட்டுமே வெளியிட்டதாகவும் அந்த இதழ் கிடைக்காமல் பிளாக்கில் பத்து ரூபாய் துக்ளக்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்கினார்கள் என்றும் பெருமையாகவும் கூறினார்1971ல் துக்ளக் விலை ஐம்பது பைசாதான் என்ற உண்மையே தெரியால் உளறியுள்ளார்.
மேலும் அப்போது ஆண்ட திமுக பெரியாரின் இச்செயலால் பொதுத்தேர்தலில் கடுமையான பின்னடவை அடைந்த்தாகவும் சரடை அவிழ்த்துள்ளார்.
அதுவரை132 உறுப்பினர்களுடன் ஆட்சி செய்த திமுக அத்தேர்தலில்தான் இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக 182 இடங்களில் வென்று சட்டமன்றத்தில் 90%பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
நடிகர் ரசினிகாந்தின் இந்த பொய்யான தகவல்களை கண்டித்து மன்னிப்பு கேட்க்க் கூறியவர்களிடம் "தன்னிடம் 2017ல் இந்து குழும்ம் வெளியிட்ட out look பத்திரிகை கட்டுரை ஆதாரம் உள்ளதாகவும்,மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதெனவும் அகம்பாவத்துடன் செய்தியாளர்களிடம் பதில் கூறினார்.
இதில் பல பொய்கள்.
அவுட் லுக் ஆங்கிப்பத்திரிகை இந்து வெளியிடுவதில்லை.
1995ல் மும்பையில் துவக்கப்பட்ட ஆங்கில வார இதழ்.
அதில் 2017ல் வந்த கட்டுரைதான் ரசினிக்கு ஆதாராமாம்
1971ல் தமிழகத்தில் நடந்த நிகழ்வுக்கு 2017ல் ஆங்கிலப் பத்திரிகையில் ஒருவர் எழுதிய கட்டுரைதான் ஆதாரமாம்.ஏன் அன்றைய செய்தி வெளியிட்ட துக்ளக்கை ஆதாரமாக காட்டவில்லை.
ரசினிக்கு அரசியல் கற்றுத்தரும் குருமூர்த்திதானே துக்ளக் நடத்துகிறார்.அவரிடம் அன்றைய துக்ளக் இதழையும் அதன் பின் வந்த இதழ்களையும் கேட்கலாமே.
கேட்டால் அந்த பொய்செய்தியை வெளியிட்டதற காக சோ வருத்தம் தெரிவித்த உண்மையும் வெளிவந்துவிடுமே.
ஆக மொத்தத்தில் மீதேன் எடுக்க மக்கள்,சுற்றுச்சூழல் துறை கருத்து கேட்கத்தேவையில்லை என்ற மக்கள் விரோத சட்டத்தை பாஜக அரசு வெளியடுகிறது.அன்று ஊடகங்கள் அதை குறித்து செய்திகளை வெளியிடும்,மக்கள் கோபம் மோடி அரசை நோக்கி ஒட்டுமொத்தமாகத்திரும்பும்.இவைகளைத்தவிர்க்கவே நடிகர் ரசினிகாந்து மூலம்  மன்னிப்பு கேட்க முடியாது என கூறி தமிழக மக்களின் உணர்வுகளை மடைமாற்றவே இந்நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்ற ஐயம் உண்மையாக உண்டாகியுள்ளது.அதுதான் காவி அரசியல் பாணி.
இனி 

துக்ளக் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாடு குறித்து பேசினார். அப்போது, பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் ராமர் அவமதிக்கப்பட்டதாக சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் என்றும் பேசினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர், அரசியல் கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும், இதை நான் சொல்லவில்லை அவுட்லுக் கட்டுரையே சொல்கிறது என்றும் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரஜினி.
இந்நிலையில், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணி தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் பெரியார் மீது ஜனசங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் பெரியாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பெரியார் மீதான ஜனசங்க வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகக் கூறியுள்ளார்.




மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்துள்ள பேட்டியில், “பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் துக்ளக் சோ-வை சாட்சியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரை நான் தான் குறுக்கு விசாரணை செய்தேன்.
அப்போது சோ, எனக்கு சொல்லப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டுதான் துக்ளக் பத்திரிகையில் எழுதினேன். மற்றபடி நேரடியாக அந்த நிகழ்வு பற்றி தனக்குத் தெரியாது என்றும் பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பான விசாரணை முடிந்தபிறகு நீதிபதிகள், பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் எதுவும் இல்லை. பேரணியில் உருவப்படம்தான் கொண்டு வந்தார்கள். முன்பகை காரணமாக ராமர் உருவப் படத்தின் மீது செருப்பை வீசவில்லை. அதனால் இதைக் குற்றமாக கருத முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்” எனத் தெரிவித்தார்.





மேலும் இதுதொடர்பான விசாரணையின் போது காலை 11 முதல் 2 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரைக்கும் சோ-வை தான் குறுக்கு விசாரணை செய்ததாகவும், இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணத்தில் உள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே 1971-ம் ஆண்டு பேரணி நடந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்திலேயே இல்லை எனவும், துக்ளக் இதழில் மட்டுமே வெளியான செய்தியை வைத்து நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவலை தெரிவிப்பதாகவும் அந்த பேரணியின்போது செய்தி சேகரிக்கச் சென்ற அப்போதைய செய்தியாளர் திருவேங்கடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று
 #ரஜினியாவது மயிராவது
#ரஜினி மென்டல்
என்றவைதான் டுவீட்டர் முன்னணி#வாசகங்கள்
-------------
https://www.patrikai.com/rajinis-message-is-false-outlook-journalist-g-c-sekar-/
--------------------------
சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக விமர்சித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த காலக் கட்டத்தில் வெளியான துக்ளக் இதழை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.
image

பெரியார் நடத்திய அந்தப் பேரணி தொடர்பாக, 1971-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதியிட்டு துக்ளக் இதழ் வெளியாகி இருந்தது. இந்து கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களின் புகைப்படங்களும், ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்படுவதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படமும் அந்த இதழில் வெளியிடப்பட்டது. மேலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தலைப்பிட்டு, இதுபோன்ற ஊர்வலத்தை வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள் என அப்போதைய திமுக ஆட்சியையும் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
image
இதனிடையே 1971-ஆம் ஆண்டு பேரணி நடந்த காலக்கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்திலேயே இல்லை எனவும், துக்ளக் இதழில் மட்டுமே வெளியான செய்தியை வைத்து நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதாகவும் கூறுகிறார் அந்த பேரணியின்போது செய்தி சேகரிக்கச் சென்ற அப்போதைய செய்தியாளர் திருவேங்கடம்.
_________

இதனிடையே பெரியார் பேரணி நடத்திய காலத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நாளிதழ் செய்தியில் இந்துகளை புண்படுத்தும்படியாக எந்த நிகழ்வும் நடக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?