என்னய்யா நடக்குது..

தேர்வாணையத்தில்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன.
 முறைகேடாக தேர்வு எழுதி தேர்வான சிலரை தகுதிநீக்கம் செய்வது, சில இடைத் தரகர்களை கைது செய்வது என விசாரணையின் திசை நகர்ந்து கொண்டிருக்கிறது.  ஆனால் உயரதிகாரிகள் தொடர்பில்லாமல் இத்தகையதொரு வலைப்பின்னல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. 

தேர்வர்களை குறிப்பிட்ட தேர்வுமய்யத்தில் எழுத ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் சாதாரண பதிவறை எழுத்தருக்கு கிடையாது என்பது உலகறிந்த உண்மை.
வெறும் இரண்டு,மூன்று பேர்கள் மட்டும் சேர்ந்து இப்படி முறைகேடு செய்யும் அளவு பலகீனமானதா தேர்வாணையம்.?
தற்போது காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் ,குருப்-2 தேர்விலும் கூட பல முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
ஒரு காவல் அதிகாரி குடும்பமே தேர்வில் வெற்றி பெற்று முறைகேடு வெளியான நிலையில் அந்த காவல் அதிகாரி தலைமறைவாகிவிட்டார்.
ஆனால் வழக்கம் போல அடி நிலையில் உள்ள சிலரை மட்டும் பலிகடாவாக்கி விட்டு உயர்மட்டத்தில் உள்ளவர்களை தப்பிக்க விட்டால் இத்தகைய முறைகேடுகள் தொடர்வதை ஒருபோதும் தடுக்க முடியாது. அடி முதல் நுனி வரை தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படும் போதுதான் இனிமேல் தேர்வு எழுதப் போகிற லட்சக்கணக்கான மாணவர்களு க்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை வரும்.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் சில குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த மையங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் நியமனத்தை ரத்து செய்து விட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி நிர்வா கம் கூறுகிறது. ஆனால் டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பின்புலம் கொண்டவர்கள்- என மாநில அளவில் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னல்  போல செயல் பட்டு தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிறது.
காவலர் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு போன்றவற்றிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என வெளியாகும் தகவல்கள், நேர்மையாக படித்து தேர்வு எழுதியவர்களை கலக்கமுறச் செய்கிறது. அதேநேரத்தில் முறைகேட்டைப் பயன்படுத்தி அரசுப் பணியில் எத்தனை கருப்பு ஆடுகள் நுழைந்துள் ளன என்பதும் மர்மமாகவே உள்ளது. 
குரூப்-4 தேர்வில் மட்டும்தான் முறைகேடு நடந்தது. மற்றவை அனைத்தும் முறையாக நடந்தது என்பதை நம்ப முடியாத நிலையே உள்ளது.
நாளுக்கு நாள் வேலையின்மை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலை யின்மையை போக்குவதற்கான உருப்படியான திட்டம் எதுவும் மத்திய, மாநில ஆட்சியாளர்களி டம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்பட்டு வருவதால் அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பும் சுருங்கி வருகிறது. இந்நிலையில், அரசுப்பணிகளுக்கான அறிவிப்பு வரும் போது, நூற்றுக்கும் குறைவான இடங்களுக்கு கூட லட்சக்கணக்கில் விண்ணப் பிக்கும் நிலை உள்ளது. அதிலும் கூட சிலர் புகுந்து முறைகேடு செய்வது என்பது சகித்துக் கொள்ள முடியாத கொடுமையாகும்.
முறைகேடு நடந்த விதம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. முழுமையான, நேர்மையான விசாரணை நடத்துவதன் மூலமே முறைகேட்டின் மூலத்தைக் கண்டறிந்து எதிர் காலத்தில் தடுக்க முடியும். 
முடியவில்லை யென்றால்  அரசுப்பணிகளை பகிரங்க ஏலத்தில் விடும் நிலை உருவாகிவிடும்.
----------------------------
அரசு அனுமதித்த வழிப்பறிக் கும்பல்.
சாலைகளின் மேம்பாட்டிற்காக நெடுஞ் சாலைகளில் வரி வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள்  இன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் அடித்துப் பறிக்கும் அடாவடி சாவடிக ளாக மாறியிருக்கிறது.   மக்களுக்கு அவசியமான சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டி யது அரசின் கடமை. ஆனால் இன்று  இவை அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து அரசே வியாபாரம் செய்து வருகிறது. ஒரு வாகனம் புதி தாக வாங்கும் போதே சாலை வரி என வசூலித்து விடுகிறார்கள். பின் ஏதற்காக மீண்டும் சாலைக ளில் வழிமறித்து கட்டணம் வசூலிக்க வேண்டும்? சாலை வரியாக வசூலிக்கப்பட்ட தொகை எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. 
இந்தியா முழுவதும் சாலைகளில் 540 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தமிழ கத்தில் டட்டும் 47 சுங்கச்சாவடிகள் அமைந்திருக் கின்றன. இந்த 47 சுங்கச்சாவடிகளில் 30 சுங்க சாவடி கள் சாலை அமைக்க செலவிட்ட நிதியை விட கூடுதலாக வசூலித்து முடித்து விட்டனர். ஆனா லும் இந்த சாலைகளில் தொடர்ந்து சுங்கக் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கொள்ளை போதாது என்று  வருடந்தோறும் 20 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தியும் வசூலிக்கின்றன. வரு டந்தோறும் வாகன எண்ணிக்கை அதிகரிப் பிற்கு ஏற்ப சுங்க கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்பது விதி. அரசின் புள்ளிவிபரப்படி வருடத்திற்கு 20 சதவிகிதம் வாகனங்கள் அதி கரிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து  20 சத விகிதம் குறைத்துத்தான் சுங்கம் வசூலிக்க வேண்டும். ஆனால் இங்கோ தலைகீழாக நடக்கிறது.
உதாரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடி 2005ம் ஆண்டு அமைக்கப்பட்டது.  ரூ. 536 கோடியில் போடப்பட்ட சாலைக்கு கடந்த 15 ஆண்டுகளில் ரூ. 2000 கோடி வசூலிக்கப்பட்டி ருக்கிறது. ஆனாலும் முடிவின்றி வசூல் தொடர்கிறது. இந்த முறைகேட்டில் அரசிற்கும் பங்கு இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த சுங்கச் சாவடியை  சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அடித்து நொறுக்கிய நிகழ்வு அரங்கேறியது. 
இதுபோன்ற சம்பவம் பலநாள்  கோபத்தின் ஒரு வெளிப்பாடு என்பதை அரசு உணர்ந்து அதற் கேற்ப பிரச்சனையை அணுக வேண்டும். ஏதோ ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சனை என்று சுருக்கிவிடக் கூடாது.  உண்மையில் சுங்க சாலைகளில் ஒப்பந் தப்படி எந்த விதிமுறைகளையும் ஒப்பந்ததாரர் கள் பின்பற்றுவதில்லை. ஆனால் கட்டணத்தை மட்டும் எல்லாவற்றுக்கும் சேர்த்து வசூலிக் கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாலைகளுக்கு, ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தையும் நாங்களே கட்டிவிடுகிறோம்; அனைத்து சுங்கச்சாவடிக ளையும் எடுத்துவிடுங்கள் என அரசிடம் பல முறை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கோரி வருகிறது.  ஆனால் அதனை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.  இங்கு பிரச்சனையே கூட்டு களவாணி முதலாளித்துவம்தான். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தானே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களின் வழிப்பறி கொள்ளைக்கு விளக்கு பிடிப்பதற்கல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?