இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 26 ஜூன், 2019

பாஜகவால் உயிருக்கு ஆபத்து?

காவிரி ஆணையமா?கர்நாடகாவின் கைத்தடியா?


ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.
“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.காவிரி ஆணையம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது?
 காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார்.
இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.  எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை.
மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை.

 காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை.
காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.

காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது.
தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.

குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை.
மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை.
கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.

இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு.
வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.

கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.காவிரிப் பிரச்சினை
குறுவை சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது.
இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?


தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம்.
ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா.

இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.
தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை.
குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.


காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. 

தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.
அதற்காகவே காவிரியில் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக செயல்படுகிறது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல.
தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.
ரஹீம்


----------------------------------------------------------------------------------------------------------------------------------
 லவாசா உயிருக்கு பாஜகவால் ஆபத்து?
இந்திய தேர்தல் ஆணையமானது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, அப்பட்டமாக பாஜக ஆதரவு நிலையெடுத்தது. 
எதிர்க்கட்சிகள் இதுபற்றி வெளிப் படையாகவே குற்றச்சாட்டுக்களை வைத்தும் நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இந்நிலையில்தான், மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா என்பவரே, தேர்தல் ஆணையம் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரதமரின் பிரச்சாரம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்ற கருத்தை, சக அதிகாரிகளான சுனில்அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர்கவனத்திலேயே கொள்ள மறுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தல் முடியும் வரை, ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும்அறிவித்தார்.பாஜகவால், தேர்தல் ஆணையர்களுக்கு உள்ளேயே மோதல் ஏற்பட்டது, மக்களவைத் தேர்தலின் போது விவாதத்தையும் கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எழுதிய குறிப்புகள் என்ன?
என்று கேட்டு,அண்மையில், புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விகார் துர்வே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.

பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையர் லவாசா தெரிவித்த கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
 
குறிப்பாக, பிரதமர் மோடியின் 2019 ஏப்ரல் 1 வார்தா உரை, ஏப்ரல் 9 லாத்தூர் உரை, ஏப்ரல் 21-ஆம் தேதி பதன், பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை, ஏப்ரல் 25 அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகியவற்றின் மீது, அசோக்லவாசா, தெரிவித்த கருத்து என்ன?
என்று விகார் கேட்டிருந்தார்.

மேலும் லவாசாவின் குற்றச் சாட்டுக்கள் அடிப்படையில், பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
 என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குத்தான் தேர்தல் ஆணையம் தற்போது ‘பதில்’ என்ற பயமுறுத்தல் ஒன்றை செய்துள்ளது.
“இதுபோன்ற தகவலை வெளியிடுவது என்பது ஒரு சிலரின் உயிருக்கு ஆபத்தாகவோ, அல்லது அவர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகவோ அமையலாம்” என்று விகாருக்கு அளித்த பதிலில் ஆணையம்தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒருவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் தகவல்களைத் தரவேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், அசோக் லவாசா, மோடி மீது வைத்த புகார்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்தபதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது.
 தேர்தல் ஆணையர் ஒருவர் கூறிய புகாரை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால், பிரதமர் மோடி மற்றும்
பாஜகவால் அசோக் லவாசாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று தேர்தல் ஆணையமே கருதுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நம்பிக்கைத்தன்மை இழந்த...

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
நீண்ட நெடிய தேர்தல் காலம் மே 19 இல் முடிவிற்கு வந்த பின், தேர்தல் முடிவிற்காக தேசம் மூச்சடக்கி காத்திருந்தது.
 அந்த நாள் 23 மே. இருந்தபோதிலும், தேர்தலிற்கு பின்னான இடைப்பட்ட காலம் அமைதியா னதாக இல்லை.
 முன்னெப்போதுமில்லாத கசப்புணர்வும், பிரிவுத்தன்மையும் இத்தேர்தலின் அடையாளங்களாக இருந்தன. அவை தேர்தல் கணிப்புகளில் வெளிப்பட்டு, பங்குச் சந்தையிலும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கி, தொலைக்காட்சி நிலைய விவாதங்களிலும் சூட்டை கிளப்பின.

பிரச்சாரத்தின் கடுமையால் இது வியப்பளிக்க வில்லை.
பெரும்பாலான தேர்தல் கணிப்புகள் பாஜக விற்கு சாதகமாக இருந்ததால், விவாதங்கள், முந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி பிழையாயின என்பதை சுற்றியே இருந்தன.
ஒப்புகை சீட்டு (விவிபேட்) இயந்திரத்துடன் இணைந்து செயல்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தே மிக முக்கிய விவாதங்கள் இருந்தன.
எதிர்க்கட்சிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாகக் கூட இந்த விவாதங்கள் இருந்திருக்கலாம். வாக்குச் சீட்டு முறைக்கே மாறிட வேண்டுமென சில  எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் கோரின.
மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவைகளில் பல வந்தன.
மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மைக்கு தேர்தல் ஆணையத்தின் உறுதியில் திருப்தியுறாத 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின.

நீதிமன்றம் சொல்லாததும் - தேர்தல் ஆணைய மவுனமும்
மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்படுதல் என்கிற முன்மொழிவு,  ஒப்பு நோக்கில் அதிக நம்பத்தன்மை தந்து, பிரச்சனையின் தீர்விற்கான வழியையும் தரும் என்பதால்,இரு சுற்றில் பரிசீலித்த உச்சநீதிமன்றம் இதனை ஏற்றுக் கொண்டது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஐந்து வாக்குச் சாவடிகளில் இவ்வாறு சரிபார்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.ஆனால் அந்த ஐந்து வாக்குசாவடிகளின் தேர்வு எவ்வாறு செயல்படும் என்பதை நீதிமன்றம் சொல்லாமல் விட்டு விட்டது.

 அதில் ஒரு தெளிவின்மையால், வாக்கு எண்ணிக்கை துவக்கத்திலேயே இந்த மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்படுதலை ஒருங்கி ணைந்த எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கோரி விவாதித்தன.இந்த கோரிக்கை பொருள் பொதிந்த ஒன்று.
ஏதாவதொன்றில் இவை இரண்டின் எண்ணிக்கையும் ஒத்ததாக இல்லையெனில், முழுவதுமாக அவை சரி பார்க்கப்பட்டாக வேண்டும்.ஆனால் தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டது. இவ்வாறான சரிபார்ப்பு பற்றி இன்று வரை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை.

பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் தோற்றுவாய்
1990 இல் பொதுத்துறை நிறுவனங்களான எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (ECIL), பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) ஆகியவை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை உருவாக்கி பரிசோதித்து பார்த்தன.
1998-2001 இல் இந்த இயந்திரங்கள் அறி முகப்படுத்தப்பட்டன.
 2004 இல் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்து பொது மற்றும் சட்டமன்ற  தேர்தல்களில் பயன் படுத்தப்படுகின்றன.
இருந்தபோதிலும் இந்த இயந்திரங்களின் செயல்பாட்டின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே பல சுற்று கூட்டங்கள் நடந்துள்ளன.
 அவை தொழில்நுட்ப செய்முறை விளக்கங்களுடன் கூடியவை. அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம், அதிலுள்ள சில்லுகளும் (chips), நுண் செயலிகளும் (micro controllers) மோசடியாக ஊடுருவி திருத்தம் செய்ய முடியா தவை எனவும் வடிவமைப்பு, உற்பத்தி, வாக்குச்சாவடி வாரி யான, தொகுதிவாரியான  நிறுவல் ஆகியவை, அவை சூழ்ச்சி யாக கையாளுவதற்கு அப்பாற்பட்டது என உறுதி செய்வ தாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மற்ற நாடுகளைப்போலன்றி, இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இணைய வழி அணுகலுக்கு அப்பாற்பட்டது எனவும், மைக்ரோ கண்ட்ரோலர் வடிவ மைப்பு இதற்கென்றானது எனவும், தனித்த அடையாளம் கொண்டதெனவும், மீள் நிரலாக்க மென்பொருள் சூழல் ஏதுமற்றதெனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
ஆனால், தாங்கள் தேர்வு செய்ததுதான் பதிவாகி உள்ளதா என்பதை வாக்காளர்களே பார்க்க முடியாமைதான் விவிபேட் இயந்திரம் 2014 இல் வருவதற்கு காரணமானது.
இன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இதனால் தாங்கள் தேர்வு செய்ததுதான் பதிவாகி உள்ளதா என்பதை வாக்காளர்களே பார்க்க முடிந்தாலும், இன்னும் கேள்விகள் அப்படியே உள்ளன. காரணம் மொத்த வாக்களிப்பிற்கும் இரு இயந்திரங்களின் ஒத்திசைவினை சரி பார்ப்பதற்குமான விகிதம் என்பது மலைக்கும் மடுவிற்குமானது.
இந்த பின்ணணியில்தான், எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் நிராகரித்தது நம்பிக்கையின்மைக்கு வலு சேர்க்கிறது.
 அதிகரிக்கும் சந்தேகம்
 இவ்வாறான சந்தேகம் சில வருடங்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பாஜக வின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி அவர்களே மின்னணு வாக்கு பதிவு இயந்தி ரங்கள் மீதான நம்பகத்தன்மையின் மீது கடுமையான ஐயப் பாட்டினை உரத்த குரலில் எழுப்பினார்.
அவரே வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். இதன் மீதான இரு பக்கவாதத்தின் அடிப்படை இவைதான். ஒரு பக்கம் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் செலவு குறைவு; மறு பக்கம் வெளிப் படைத் தன்மை, சரி பார்ப்பு, ரகசியம் இன்மை.

வாக்களிப்பது, பதிவாவது, அவற்றை எண்ணுவது ஆகிய வாக்களிக்கும் செயல்முறையில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவது அவ்வளவு முக்கியமானதா?
 மக்களின் விருப்பத்தின் பேரில் அமைந்த அரசிற்கு சட்டப்பூர்வ தன்மையை ஜனநாயகம் வழங்குகிறது. மக்களின் விருப்பம் என்பது ரகசிய வாக்களிப்பு முறையில் வெளிப்படுத்தப்படுகிறது.

வாக்குகள் பதிவாவதும், எண்ணப்படுவதும் முறையாக நடந்தால் மட்டும் போதாது; அவ்வாறு பதிவாவது மற்றும் எண்ணப்படும் செயல்முறை பெருமளவிலான பொதுமக்களால் அணுகப்படக்கூடியதாகவும், சரிபார்க்க கூடியததாகவும் இருக்க வேண்டும். இது ஒரு வாக்கு கூட வேறுபடுவதை ஏற்க முடியாததாக்குகிறது.
இது ஒரு கற்பனாவாத கோரிக்கை அல்ல, உலகெங்கி லும் உள்ள ஜனநாயக நாடுகளால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த முக்கியமான பிரச்சனையின் முக்கியத்துவம்தான், மிகுந்த நேர்மையான 66 முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரச்சனை மீதான தேர்தல் ஆணையத்தின் கேள்விக் குள்ளாகும் பதிலை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான அவர்களின் எதிர்வினையை பேச வைத்துள்ளது.

மூன்று முக்கிய கேள்விகள்:
 1
 ஈ சி ஐ எல் மற்றும் பி இ எல் தயாரித்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையும், தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையும் ஒன்றாக இல்லை என்பது இக்கேள்விகளில் முதலாவதாகும்.
இந்த எண்ணிக்கை வேறுபாடு தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனு செய்து பெற்ற தகவலாகும். ஆர்டிஐ ஆவணங்கள் கடுமையான நிதி முறைகேடுகளைத் தவிர, கொள்முதல், வைத்திருத்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வாங்கிய எண்ணிக்கை, வைத்திருந்த எண்ணிக்கை,  பயன்படுத்துதல் ஆகியவற்றில் வெளிப்படையான வேறுபாடுகளை வெளிப்படுத்தின.
எடுத்துக்காட்டாக, 1989-90 மற்றும் 2014-15- க்கு இடையில் 10,05,662 இயந்திரங்களைப் பி இ எல் இடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
 1989-90 மற்றும் 2016-17 க்கு இடையில் ஈ சி ஐ எல் இலிருந்து 10,46,644 இயந்திரங்களைப் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.
மறுபுறம், 1989-90 ஆண்டு களுக்கு இடையில் 19,69,932 இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியதாக பி.இ.எல் பதிவு செய்தது. இதேபோல், ஈ.சி.ஐ.எல் 19,44,596 இயந்திரங்களை வழங்கியதாகக் கூறுகிறது.

 இரண்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட புள்ளி விவரங்க ளுக்கும் தேர்தல் ஆணையத்திடமிருந்து  பெறப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் இடையிலான வித்தியாசம் வெளிப் படையானது.
அதிகப்படியான இயந்திரங்கள் எங்கே?
 வினாக்களுக்கு பதில் கிடைக்காது. தேர்தலின் போது சமூக மற்றும் பிரதான  ஊடகங்களில் பரவலாக செய்தி ஒன்று வலம் வந்தது.
 வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மற்றும் வி.வி.பி.ஏ.டி கொண்ட வாகனங்கள் விரைந்து சென்றதுதான் அந்த செய்தி.அத்துடன் இந்த கேள்வியை இணைத்துப்பாருங்கள்.
2

வாக்களிக்கப்பட்ட வாக்குகளுக்கும், ‘குயின்ட்’ மற்றும் ‘நியூஸ்க்ளிக்’ ஆகிய இரண்டு வலை இணையதளங்களால் கணக்கிடப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வித்தியாசம் பற்றியது.
தேர்தல் ஆணையவலைத்தளத்தால் வெளியிடப்பட்ட தரவை ஒப்பிட்டு பார்த்தால்,அவர்களின் கணக்கீடுகள் கவலை அளிக்கின்றன. கேள்விகளில் சிக்கிய தேர்தல் ஆணையம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் ஒரு மறுப்பு வெளியிட்டது. நாடு முழுவதும் தனிப்பட்ட தலைமை அதிகாரி களால் சமர்ப்பிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் உண்மை யான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் அல்ல.
முன்னதாக வெளியிடப்பட்ட வாக்களிப்பு புள்ளிவிவரங்கள் (மற்றும் சில நிகழ்வுகளில், அகற்றப்பட்டவை) ஒரு தற்காலிக இயல்பு டையவை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
எவ்வாறாயினும், இந்த சட்டரீதியான மறுப்பு ஏன் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்பது கேள்வி. இந்த ‘மறைமுகவாக்குகள்’ குறித்த சர்ச்சை; வாக்குப்பதிவு மற்றும் எண்ணப்பட்ட வாக்குபுள்ளிவிவரங்களுக்கிடையிலான முரண்பாடு, தேர்தல் ஆணையமே ஏற்படுத்திக் கொண்ட சிக்கலாகும். சிக்கல்களை தெளிவுபடுத்துவதில் தேர்தல் ஆணையத்தின் தோல்வி நிச்சயமாக மக்கள் மனதில் அமைதியின்மையை அதிகப்படுத்தியுள்ளது.
3
நடந்து முடிந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, பி இ எல்/ ஈ சி ஐ எல் தயாரித்தளித்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மற்றும் வி விபேட் ஆகியவற்றில் பதிந்துள்ள கம்ப்யூட்டர் சிப் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் பற்றியது கடைசியான மிக முக்கிய பிரச்சனை.
பல கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனியான என் எக்ஸ் பி தயாரித்தளித்த சிப்ஸ் தான் பயன்படுத்தப்பட்டது என்பது பி இ எல் அறிவித்தது.
ஆனால் ஈ சி ஐ எல் அதன் தயா ரிப்பிற்கான மைக்ரோ கண்ட்ரோலர் தயாரித்தளித்தது யார் என்பதை வெளியிட மறுத்து விட்டது.

மூன்று வித மெமரி...
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலர்கள் ஒரு முறை மட்டுமே புரோக்கிராம் செய்யக்கூடியவை என்பதை எப்போதும் இரு நிறுவனங்க ளும் தொடர்ந்து சொல்லி வந்தன.

இருந்த போதிலும் அவற்றை தயாரித்தளித்த என் எக்ஸ் பி கம்பெனியின் வெப்சைட் அது தயாரிக்கும் மைக்ரோ கண்ட்ரோலர்களுக்கு மூன்று வித மெமரி உண்டு என்றும் அவை எஸ் ஆர் ஏ எம், எஃப் எல் ஏ எஸ் ஹெச் மற்றும் இ இ பி ஆர் ஓ எம் என்றும் குறிப்பிடுகிறது.
எஃப் எல் ஏ எஸ் ஹெச் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சிப்பினை ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்யக்கூடியவை என கூற முடியாதென்கின்றனர். இதனில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திட அதில் பயன்படுத்தப்பட்ட மூல குறியீட்டின் (source code)  விரிவான தகவலை பொது வெளியில் வைக்கலாமா என தகுதியான அதிகாரியிடம் ஆலோசனை பெற மத்திய தகவல் ஆணையம் செய்த செப்டம்பர் 2018 பரிந்துரை மீது இன்று வரை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுமில்லை. எதுவும் நடக்கவுமில்லை.
தகவல் அறியும் உரிமைபடி கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு விவாதங்கள் தொடர்ந்து நடக்கலாம். இதன் மீதான நம்பிக்கை என்பது முக்கியமாக பதிவு செய்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதில்தான் உள்ளது.

முடிவுரைக்கு பதிலாக
மக்களின் நம்பிக்கை பெற மறுக்க முடியாத வண்ணம் பதில் கண்டாக வேண்டும்.
ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் கேள்விக்குள்ளானதே தேர்தல் ஆணயத்தின் செயல்பாடே. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள்  324 ஆவது பிரிவின் கீழ் தேர்தல் ஆணை யத்திற்கு பெரும் அதிகாரங்களை வழங்கி அதன் மூலம், போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கிடவும் நியாயமான மற்றும் சுதந்திர மான தேர்தலை உத்தரவாதப்படுத்தவும் ஒரு வலுவான மற்றும் தன்னதிகாரமான பங்கை தேர்தல் ஆணை யத்திற்கு வழங்கினர்.

இந்த விதியின் கீழ் இயற்றப்பட்ட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் இந்த தன்னதிகாரமான தன்மையை உறுதிப்படுத்துவதற்காக  மாறிவரும் காலங்கள் மற்றும் ஜனநாயகத் தன்மையின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சூழலைக்கெடுத்த மாற்றங்கள்
எவ்வாறாயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல மாற்றங்கள் சூழலைக் கெடுத்துவிட்டன.
அவற்றில் முதலாவதும்  முக்கியமானதும்  அரசியல் கட்சிகளுக்கு யாரிடமிருந்து நிதி வந்தது என்பது வெளிப்படாமலேயும் மற்றும் வரம்பற்ற நிதியினை  பெருநிறுவனங்கள் அள்ளித்தரவுமான தேர்தல் பத்திரங்கள்.  இந்த புதிய ஏற்பாட்டில்பொதிந்துள்ள பெரு நிறுவன சலுகைசார் கூட்டாளிகளால் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் ரூ .60,000 கோடி செலவிடப்பட்டதாக ஊடக ஆய்வு மையம் (சி.எம்.எஸ்) அறிக்கை காட்டுகிறது, அதில் பாஜக சுமார் 45 சதவீதம் செலவிட்டுள்ளது. இது ஒரு சம தள வாய்ப்பினையா காட்டுகிறது?
அதேபோல், தேர்தல் நடைபெற்றபோது மாதிரி நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம்  அமல்படுத்திய விதம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
 சிபிஐ (எம்) உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அளித்த ஏராளமான மனுக்க ளுக்கு பதிலேதும் இல்லை. மாதிரி நடத்தை விதிமுறை களை மீறுவது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட கட்டளைகளையே பிரதம மந்திரி மீறுவது தொடர்பானது.
 இவை வகுப்புவாத அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரம் மற்றும் இந்திய இராணுவ சாதனை யின் மீது உரிமையைக் கோருவது தொடர்பானது. இதனால் அவரது ஆளுமையை தேசத்தின் மற்றும் அதன் மக்களின் ‘உச்சபட்ச பாதுகாவலர்’ என்று பாஜக காட்ட இது உதவியது!

எவ்வாறாயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல மாற்றங்கள் சூழலைக் கெடுத்துவிட்டன. அவற்றில் முதலாவதும்  முக்கியமானதும்  அரசியல் கட்சிகளுக்கு யாரிடமிருந்து நிதி வந்தது என்பது வெளிப்படாமலேயும் மற்றும் வரம்பற்ற நிதியினை  பெருநிறுவனங்கள் அள்ளித்தரவுமான தேர்தல் பத்திரங்கள்.  இந்த புதிய ஏற்பாட்டில்பொதிந்துள்ள பெரு நிறுவன சலுகைசார் கூட்டாளிகளால் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் ரூ .60,000 கோடி செலவிடப்பட்டதாக ஊடக ஆய்வு மையம் (சி.எம்.எஸ்) அறிக்கை காட்டுகிறது, அதில் பாஜக சுமார் 45 சதவீதம் செலவிட்டுள்ளது.

இது ஒரு சம தள வாய்ப்பினையா காட்டுகிறது? அதேபோல், தேர்தல் நடைபெற்றபோது மாதிரி நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம்  அமல்படுத்திய விதம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
சிபிஐ (எம்) உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அளித்த ஏராளமான மனுக்க ளுக்கு பதிலேதும் இல்லை. மாதிரி நடத்தை விதிமுறை களை மீறுவது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட கட்டளைகளையே பிரதம மந்திரி மீறுவது தொடர்பானது.
இவை வகுப்புவாத அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரம் மற்றும் இந்திய இராணுவ சாதனை யின் மீது உரிமையைக் கோருவது தொடர்பானது.
 இதனால் அவரது ஆளுமையை தேசத்தின் மற்றும் அதன் மக்களின் ‘உச்சபட்ச பாதுகாவலர்’ என்று பாஜக காட்ட இது உதவியது!

நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: பாலச்சந்திரன்

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 25 ஜூன், 2019

விரால் ஆச்சார்யா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் முற்றியதன் காரணமாகவே, விரால் ஆச்சார்யா ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவே உண்மை என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையில், மத்திய பாஜக அரசுதலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை முதன்முதலில் மக்கள் முன்பு வைத்தவர் விரால் ஆச்சார்யா ஆவார்.

“மத்தியில் ஆளும் மோடி அரசானது,பொருளாதாரத்தில் ‘டி-20’ கிரிக்கெட் ஆடமுயற்சிப்பதாகவும், இது நீண்டகாலம் நிலைக்காது” என்றும் கடந்த 2018 அக்டோபரிலேயே பொதுநிகழ்ச்சி ஒன்றில் விரால் ஆச்சார்யா பேசியிருந்தார்.
“சர்வதேச முதலீட்டாளர்களின் (பெருமுதலாளிகளின்) அன்பைப் பெறுவதற்காக, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை, மத்திய அரசு காவுகொடுக்க முயற்சிக்கிறது; கடன் வழங்குவதில் சிலவங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர்.
விரால் ஆச்சார்யா

நாட்டின் பரிவர்த்தனை அமைப்புக்கு புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் வாயிலாக ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரங்களை குறைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித் தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும்” என்று அவர் கூறியிருந்தார்.

“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள், நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதாரத் தீயை மூட்டி, ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை குறைத்ததற்காக ஒரு
நாள் வருத்தப்படும். சட்டத்தை மீறிசெயல்படும் செயல்களுக்கு மத்திய அரசு உரிய விலை கொடுக்க வேண்டியதுஇருக்கும்” என்றும் விரால் ஆச்சார்யா பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியைக் கேட்டு, மத்திய அரசு நிர்ப்பந்தம் அளித்துவந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே விரால் ஆச்சார்யா
இவ்வாறு கூறியிருந்தார்.
 அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாமல் இருந்தபோது, அவருக்குப் பதில்விரால் ஆச்சார்யா துணிந்து உண்மைகளை போட்டுடைத்தார்.
அப்போதே விரால் ஆச்சார்யாவுக்கு, மத்திய பாஜக அரசின் நெருக் கடி ஆரம்பித்து விட்டது.

“ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும், அவரது சக அதிகாரிகளும் மத்தியஅரசு கூறுவதைத்தான் கேட்க வேண்டும்;இல்லாவிட்டால் தாராளமாக வேலையை விட்டுச் செல்லலாம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி மகாஜன் தெரிவித்தார்.
“உர்ஜித் படேல், தனக்கு கீழுள்ள அதி
காரிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்” என்றும் அவர் மிரட்டல் விடுத்தார்.
அதேகாலகட்டத்தில், ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்-காரர்கள், ரிசர்வ் வங்கியின் இயக்கு
நர்களாக மத்திய அரசால் நியமிக்கப் பட்டனர்.

 உர்ஜித் படேல், விரால் ஆச் சார்யா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதற்காக இந்த நியமனங்கள் செய்யப்பட்டன.

 மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், கடந்த 2018 டிசம்பர் 10-ஆம் தேதி, தனதுபதவிக்காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்தொடர்ச்சியாகவே, உர்ஜித்படேல் ராஜினாமா செய்து, சரியாக 6 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில்,ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரானவிரால் ஆச்சார்யாவும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.


மத்தியில் கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பதவிநீட்டிப்பு தரப்படாமல் கடந்த 2016 செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியேற் றப்பட்டார். ரகுராம் ராஜனுக்குப் பதில் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல் 2018 டிசம்பரில் அவராகவே பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய மறுநாளே,பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சுர்ஜித் பல்லா, ஓட்டம் பிடித்தார்.
முன்னதாக 2017 ஆகஸ்டில், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியாவும், 2018 ஜூனில், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தஅரவிந்த் சுப்பிரமணியனும் பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

 இந்த வரிசையிலேயே தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜெய் கொலைராம் ?
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர்,இந்துத்துவா வெறிக்கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்துக் கடவுள்களைப் புகழ்ந்து,‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ என்று கூறுமாறு மிரட்டி, விடிய விடிய அடித்துத் துன்புறுத்தியதில், முஸ்லிம் இளைஞர் இறந்து போயுள்ளார்.

ஜாம்ஷெட்பூர் அருகே சீரேய் கேலா-கர்சாவன் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரிஸ் (22).
இந்தமுஸ்லிம் இளைஞனை, வெறிக் கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ கூறுமாறு மிரட்டியுள்ளது.

 தப்ரிஸ் அவர்களின் மிரட்டலுக்கு இணங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றதாக தப்ரிஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, அருகிலிருந்த மின்கம்பத்தில் கட்டிப் போட்டு, விடிய விடிய சுமார் 7 மணிநேரம் அடித்துத் துன்புறுத்தி கொடூரசித்ரவதை செய்துள்ளது.
இதை பலரும் வீடியோ எடுத்து,சமூக ஊடகங்களில் வெளியிடவே, தகவலறிந்த போலீசார், தப்ரிஸை அந்த கும்பலிடம் இருந்து புதன் கிழமை காலையில் மீட்டுள்ளனர்.
அப்போது, இளைஞன் தப்ரிஸ் சுயநினைவில்லாமல் இருந்துள்ளார்.

அவரை ஜாம்ஷெட்பூரில் உள்ள சதார் மருத்துவமனையிலும், பின்னர்டாடா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, தப்ரிஸ் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஜாம்ஷெட்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ரிஸின் சாவுக்கு காரணமான, இந்துத்துவா வெறிக்கும்பல் மீது போலீசார் ‘ஐ.பி.சி. 302’ மற்றும் ‘295ஏ’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பணம் என்றால் வரும்  என்றால் மட்டுமே அரசு இயங்கும்.?
மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் அவர்களின் குடிநீர் தேவையை தனியார் பள்ளி நிர்வாகங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அமைச்சர் கூறுவது முற்றிலும் சரியே. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்க ளுக்குத் தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஊருக்குத்தான் உபதேசம் என்கிற கதைபோல உள்ளது.
 தனியார் பள்ளிகளுக்கு சொல்லப்படும் அறிவுரை அரசு பள்ளிகளுக்கு பொருந்தாதா என்ன?
மே மாத இறுதியிலேயே பள்ளிக் கூடங்கள் திறக்கும் தேதி பற்றிய குழப்பநிலை உருவானது.
 கடும் வெயில் சூழல் நிலவுவதால் ஜூன் மாதம் 3ஆம் தேதி திறக்கவிருந்த பள்ளிக் கூடங்கள் ஜூன் 10ஆம் தேதியன்று திறக்கப் படும் என்று தகவல் வெளியானது.
மீணவர்கள் என்பதை மாணவர்கள் என படிக்கவும்.


ஆனால் அமைச்சர் செங்கோட்டையனோ இல்லை, இல்லை.
3ஆம் தேதியே பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என்றும் குடிநீர் பற்றாக் குறை ஏதுமில்லை என்றும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவசர அவசர மாக மறுத்தார். 
அத்துடன் பள்ளிகளின் அடிப் படை வசதிகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்படும் என்றும் ஓங்கியடித்தார். 
ஆனால் நிலைமை இன்னும் சீரானபாடில்லை. அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் 10 அன்று திறக்கப்படும் என்று காலநிலை கருதி அறிவிக்கப்பட்டது. 

ஆனால் செங்கோட்டையனோ பிடிவாதமாக ஜூன் 3 அன்றே பள்ளிகளை திறக்க உத்தர விட்டார். 
அதன் விளைவையே இன்று மாண வர்கள் அனுபவித்து வருகின்றனர்.
 வழக்கமாக பள்ளிக்கூடங்கள் துவங்கிய தும் புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு விடும். 
ஆனால் இந்த முறை 2,3,4,5 வகுப்பு மாண வர்களுக்கு இன்னும் புதிய பாடத்திட்ட புத்த கங்கள் வழங்கப்படவில்லை. 
இன்னும் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கெனவே பாடப்புத்த கங்களை தயார்ப்படுத்துவதில் அக்கறை காட்டா ததும் தீவிர தயாரிப்புப் பணிகளில் ஈடுபடாததுமே இப்போது வரை புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக் காரணம்.

  இதுதவிர கடந்த 2017- 18 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதற்கே இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்கிறார் அமைச்சர்.
அப்படி யானால், 2018-19ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கொடுப்பார்கள்?
தமிழக ஆட்சியா ளர்கள் தங்களின் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள காட்டிய அக்கறையில் சிறிதும் பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்து வதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போனதில் ஆச்சரியமில்லை.

 தமிழக அமைச்சர்கள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் மிக,மிகக் குறையாகவே செயல்படுகிறார்கள். பணம் வரும் பணிகளை மட்டுமே உடனுக்குடன் செய்கிறார்கள்.மக்கள் நலன் பணியென்றால் திமுக செய்யலாமே.ஏன் முன்பு செய்யவில்லை என்றுதான் சொல்லி குறட்டை விடுகிறார்கள்.அல்லது டெல்லி போய் விடுகிறார்கள்.
அதனால் பள்ளி வளாகங்கள் கவலையில் இருப்பதுதான் இன்றைய சோகம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோழர் அசோக் .
எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற அச்சத்துடனும், கனத்த இதயத்துடனும் அசோக் வீட்டுக்கு புறப்பட்டோம் நானும் கற்பகமும் ராஜகுருவும். வீட்டு வேலியில் பறந்து கொண்டிருந்த செங்கொடியே அவனது வீட்டின் அடையாளம்.
 எங்களது வாகன சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து அசோக் அம்மாவின் அழுகுரல் பீரிட்டது, நிலை குலைந்து போனோம். அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்து அந்த அழுகுரல் உச்சத்தை அடைந்தது. தாமிரபரணியாக கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆறுதல் பகிர எங்களிடமும் அத்தருணத்தில் கண்ணீர் மட்டுமே இருந்தது. அம்மாவின் அழுகையை நிறுத்த முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் அவரே ஏதோ முடிவெடுத்தவராக சட்டென்று அழுகையை நிறுத்தி கம்பீரமானார். வார்த்தைகள் அம்பென தெறித்தன. எங்கள் கிராமத்தில் இதுவரை 6 தலித்துக்களை சாதி வெறியர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த பாழாய் போன சாதி வெறிக்கு என் மகன் அசோக்கே கடைசி பலியாக இருக்கட்டும்.
 அதற்காக கட்சி எத்தனை போராட்டம் நடத்தினாலும் நானும் கலந்து கொள்கிறேன்.

 துயரத்தைக் கடந்து சாதி வெறிக்கெதிராக அவரது கோபம் கொப்பளித்தது.
ஏதோ போராட்டத்திற்குப் போகிறான், கட்சி கொடி ஏற்றுகிறான், மாநாட்டுக்குப் போகிறான் என நான் நினைத்திருந்தேன்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் என் மகன் இவ்வளவு பெரிய தலைவனாக இருந்திருக்கிறான் என்பதை அவன் இறந்த பின் தெரிந்து கொண்ட அம்மாவாயிருந்திருக்கிறேனே...
என் மகன் வயதில் எத்தனை பிள்ளைங்க, எத்தனை தலைவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். என் மகனுக்காக இத்தனை பேரா?
 மீளா துயரிலும் முகத்தில் பெருமிதம் தோன்றி மறைந்தது.

புத்தகம், புத்தகம், புத்தகம். புத்தகமே அவன் உயிர்மூச்சு. வீட்டில் புத்தகத்துடன் தான் அவனை பார்க்க  முடியும்.
கம்பெனியில் வேலை முடிந்து கட்சி ஆபீஸ் போய், போராட்டம் ஒன்ன முடிச்சு எவ்வளவு சோர்வா வந்தாலும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்காமல் தூங்க மாட்டான்.
 காலேஜ் படிக்கும் போது கூட கண் முழித்து படிக்கவில்லையே மகனே என்று கேட்டால், கல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு என்பான், என சொல்லிக் கொண்டே அவன் படித்து முடித்த புத்தகங்களை கட்டுக்கட்டாக, அள்ளி வந்து எங்கள் கண் முன்னால்  குவித்தார்.

  அவன் சம்பளத்தின் ஒரு பகுதியை புத்தகம் வாங்கவே செலவு செய்வான்.
ஏதோ அம்பேத்கர் புத்தகமாமே. 37 இருக்காம். அதில கொஞ்சம் தான் வாங்கீருக்கேன். மிச்சமெல்லாம் வாங்கனும்மா. கொஞ்சம் என் சம்பளத்தை எதிர்பார்க்காம சமாளிச்சுக்கோம்மா என்றான், என்றவர் புத்தக அலமாரியை காட்டினார்.
 டாக்டர் அம்பேத்கரின் நூல் தொகுப்பு ஆறு புத்தகங்கள் அசோக்கின் அலமாரியை அலங்கரித்தன.
பேச்சினூடே
"மகனே அசோக்கு! இந்த புத்தகங்களையெல்லாம் உன் கண்கள் இனி எப்போது படிக்கும்? என்னைப் போலவே இந்த புத்தகங்களும் உன்னைத் தேடுமடா" என கதறினார்.

அசோக் உடல் அடக்கத்திற்கு பெட்டிக்குள் வைக்கப்பட்ட போது அவளது தம்பி ஓடிச் சென்று அம்பேத்கர் தொகுப்பு புத்தகம் ஒன்றை எடுத்து வந்து பெட்டி க்குள் அசோக்கில் தலைமாட்டில் வைத்ததை தோழர் கே.ஜி.பாஸ்கரன் நினைவு கூர்ந்தார்.

 என் மகன் என்னிடம் வாஞ்சையாய் சமையல் கற்றுக் கொண்டான்.
நானும் கற்றுக் கொடுத்தேன்.
எங்கு மாநாடு, பேரணி, பொதுக் கூட்டம் என்றாலும் அவனே 20 பேருக்கு புளிச்சாதம் செய்வான்.
 வேனில் ஏற்றுவான். பறந்து விடுவான்.
இனி என் மகன் எந்த மாநாட்டுக்கு செல்லப் போறான்?
 மகனின் வாழ்க்கை குறித்து எத்தனை பெருமிதம் அசோக்கின் அம்மா ஆவுடையம்மாவுக்கு.

 இன்று ஆவுடையம்மாவுக்கு சாதி, மதம், இனம், மொழி, புவியியல் எல்லை கடந்து எத்தனை, எத்தனை பிள்ளைகள். தோழமை உறவுகள்.
 மீண்டும் வருகிறோம் என்றவாறு தற்காலிகமாக விடைபெற்று புறப்பட்டோம்.

கட்சியின் பிள்ளையை இழந்த நமக்கு யார் ஆறுதல் தெரிவிப்பது?
எல்லையற்ற கலக்கத்துடன் வீதியில் கால் வைத்தோம். கால்கள் தடுமாறின.
 மண்ணின் மீதும், மக்களின் மீதும் அளவற்ற பிரியம் கொண்டு இளம் வயதிலேயே, வீரச்சமரில் உயிர்நீத்த சே, பகத்சிங்... என அத்தனை ஆதர்சங்களும் கண்முன் வந்து எங்கள் தோள்களைத் தொட்டு, கலங்காதீர் தோழர்களே!

இதோ நாங்கள் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எங்களோடு தான் இருக்கிறான் அசோக். உங்கள் செயல்களில் இனி அவனும் வாழ்ந்து கொண்டேயிருப்பான் என்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

 

 

திங்கள், 24 ஜூன், 2019

காவு கேட்கும் பரிந்துரை!

"இனி, குழந்தைகள் பள்ளிக்கல்வியில் நான்கு கட்டத்தேர்வுகளை எழுத வேண்டும். 8ஆம் வகுப்பு முடித்த மாணவ/ மாணவியர் தான் விரும்பும் ஏதாவது ஒரு தொழிற்கல்வியைத் தேர்வு செய்துபடிக்கலாம் எனவும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
இதனால், பெரும்பான்மையான ஏழை, எளிய மாணவ/மாணவியர் பொதுக்கல்வி  பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும்."
திருவாளர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற 30.05.2019 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவறிக்கையினை வெளியிட்டு அதன் மீது கருத்து சொல்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.  கஸ்தூரி ரங்கன் குழு தனது அறிக்கையினை கடந்த ஆண்டு இறுதியில் (15.12.2018) மத்திய அரசிற்கு அளித்திட்ட போதிலும், அதனை உடனே வெளியிட்டு கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மத்திய அரசு ஆறு மாதங்கள் ஏன் தாமதப்படுத்தியது என்பது விளங்கவில்லை. 478 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கை பள்ளிக்கல்வி, உயர்கல்வி, கூடுதல் முக்கியத்துவம் உடைய பகுதிகள் மற்றும் கல்வி முறையில் மாற்றம் என நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிகளில் வரைவறிக்கை
இந்தியா போன்ற பல மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில், தேசிய முக்கியத்துவம் உடைய கல்விக் கொள்கை உருவாக்கும் போது, அனைத்துப் பகுதி மக்களின் கருத்தும் பங்கேற்பும் அவசியம். இந்த அறிக்கை மீது நாடு முழுவதும் ஒரு பரந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்த அறிக்கையை அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.  அனைத்து பிராந்திய மொழிகளிலும் இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதோடு, அதன் மீது விவாதிக்க போது மான கால அவகாசம் அளித்திட வேண்டுமென கல்வி யாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இந்தக் கல்விக்கொள்கை மீது அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து வரைவறிக்கையினை செழுமைப்படுத்திட முடியும்.

மறக்கடிக்கப்பட்ட கல்விக் குழுக்கள்
புதிய கல்விக்கொள்கை தொடர்பான இவ்வறிக்கை கொள்கை அறிக்கையாக இல்லாமல் ஒரு ‘பிரச்சார முழக்கம்’ போல் இருப்பதாக பல கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
 இவ்வறிக்கையில், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக எடுத்திட்ட முயற்சிகள் பற்றிய பரி சீலனை ஏதும் இல்லை. இதற்கு முன்னர் வந்த கல்வி தொடர்பான அனைத்துக் குழு அறிக்கைகளிலும், பிரபல மான கல்விக் குழுக்களான பேரா.இராதாகிருஷ்ணன் குழு மற்றும் கோத்தாரி குழுக்கள் பரிந்துரைத்த பல விசயங்கள் (கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு; தாய்மொழி வழிக்கல்வி/ பொது நிதியில் கல்வி/ அருகமைப்பள்ளி) இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிக்கையில் இவை ஏதும் இடம் பெறவில்லை.
 பண்டைய இந்தியக் கல்வி முறையையும் பாஸ்கரா, சுஷ்ருதா, ஆரியபட்டா போன்ற அறிஞர்களைப் பற்றி சிலாகித்துப் பேசும் இவ்வறிக்கை, அதிலிருந்து நேரடியாக கல்வி நவீன தாராளமயம் அமலாகத் துவங்கிய 1990 காலகட்டத்திற்குத் தாவி விடுகிறது. 1947 – 1970 கால கட்டத்தில், இந்தியாவில் கல்வி வளர்ச்சி எண்ணிக்கை அடிப்படையிலும் தரத்தின் அடிப்படையிலும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியைப் பெற்றது.

அதற்கு அடிப்படைக் காரணம் அரசு நிதியில் வழங்கப்பட்ட பொதுக்கல்வியாக இருந்தது.
1970களுக்குப் பிறகு கல்வி பெறுவோர் அதிகரித்த நிலையில், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக தொடர்ந்து வந்த அரசுகள் தனியார்மயத்தினை ஊக்குவித்தது. அது இன்று முழுமையாக வணிகமயமாகி யுள்ளது. இந்த வளர்ச்சிப்போக்கினை இந்த வரை வறிக்கை முற்றிலுமாக தவிர்த்துவிட்டது. இந்தியக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கிடப் பரிந்துரைக்கும் இந்த வரைவறிக்கையில், அரசு நிதியில் கல்வியைப் பரிந்துரைத்த இராதாகிருஷ்ணன் மற்றும் கோத்தாரி குழு  அறிக்கைகள் பற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்று விட்டுவிட்டார்கள் போல.

பழம்பெருமையை தூக்கிப் பிடிக்கும் அறிக்கை 
21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கான துடிப்பான அறிவுச் சமூகத்தை உருவாக்க உதவும் வகையில் இந்தியாவை மையப்படுத்திய கல்விக் கொள்கையை வகுப்பதைத் தனது வழிகாட்டு நெறியாகக் குறிப்பிடுகிறது. ஆனால், சாதிய அடிப்படையில் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி மறுத்திட்ட பண்டைய இந்தியக் கல்வி முறையை சிறந்த பாரம்பரியம் கொண்டிருந்ததாக அறிக்கை சிலாகிக்கிறது.
வேத காலத்திலேயே, இந்தியர்கள் ஆயகலைகள் அனைத்திலும் சிறந்திருந்ததாகவும், கணிதம், வானவியல், உலோகவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உலகிற்கே வழிகாட்டுபவர்களாக இருந்ததாகக் கூறுகிறது. எண் கணிதத்தில் இலட்சம், கோடிக்கு அடுத்ததாக பல அளவீடுகள் இருந்ததாக வும் கூறப்பட்டுள்ளது. மத ரீதியான புரோகிதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மொழி யினையும் அதன் மூலம் சமஸ்கிருத இலக்கியங்களைப் படித்து இந்தியக் கலாச்சாரத்தினையும் பண்பாடு மற்றும் மதிப்பீடுகளை இந்திய இளைஞர்கள் பெற வேண்டுமென அறிக்கை கூறுகிறது.
இத்தகைய பரிந்துரை மாணவ - மாணவியர் மத்தியில்  அறிவியல் கண்ணோட்டத்தினை ஏற்படுத்த உதவாது. மாறாக பிற்போக்கான மனோநிலைக்குத்தான் இளை ஞர்களைத் தள்ளும்.

பள்ளிக்கல்வியும் தொழிற்கல்வியும்
பள்ளிக்கல்வி தொடர்பான இந்த அறிக்கை, கோத்தாரி குழு பரிந்துரைத்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 10+2 கல்வி முறையை 5+3+3+4 என மாற்றி அமைத்துள்ளது. கல்வி பெறும் வயது ஐந்திலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டு முன்பருவப் பள்ளி மூன்று வயதில் துவங்குகிறது. எல்.கே.ஜி/யு.கே.ஜி எனும் பாலர் பள்ளிகள் நடைமுறையில் இருந்தாலும், குழந்தைக்கல்வி தொடர்பான ஆய்வாளர்கள் அதனை எதிர்த்தே வருகிறார்கள்.
கல்வியில் சிறந்து விளங்குகின்ற பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கான கல்வி 6 வயதில் தான் துவங்குகிறது என குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் முன்பருவப்பள்ளி என்பது அதிகம் வணிக மயமாகியுள்ள நிலையில், முன்பருவப் பள்ளிக்கல்வியின் தேவை குறித்த விவாதம் அவசியமாகிறது.  இனி, குழந்தைகள் பள்ளிக்கல்வியில் நான்கு கட்டத் தேர்வுகளை எழுத வேண்டும்.
 8ஆம் வகுப்பு முடித்த மாணவ/ மாணவியர் தான் விரும்பும் ஏதாவது ஒரு  தொழிற்கல்வியைத் தேர்வு செய்து படிக்கலாம் எனவும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மையான ஏழை, எளிய மாணவ/மாணவியர் பொதுக்கல்வி பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும். தொழிற்கல்வி தொடர்பாக அரசின் முந்தைய முன்னெடுப்புக்கள் (தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் சமுதாயக் கல்லூரிகள்) என்னவாயின என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளிக்கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டு மென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பள்ளி வளாகங்கள்
ஒரு ஊர்/கிராமம்/சிறு நகரம் என ஒரு பகுதியில் உள்ள  அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கிய பள்ளி வளாகம் உருவாக்கப்படும் என அறிக்கை கூறுகிறது. அப்பள்ளி  வளாகம் கட்டிடம், நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வுக்கூடம், தனித்திறன் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
இதன் மூலம் ஆசிரியர்களையும் பள்ளிக்கட்டமைப்பு வசதி களையும் அதிகபட்சம் பகிர்ந்து பயன்படுத்தலாம் என அறிக்கை கூறுகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணிசமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்கள் தகுதியுடையவர்களாக இல்லை.
அனைத்துப் பள்ளிகளுக்கும் தகுதியுடைய ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைக் கேட்டால், பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பள்ளி வளாகம் யோசனையை வரை வறிக்கை முன் வைக்கிறது. மேலும் இதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிக்கையில் ஏதும் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வளாக நிர்வாகக் குழு இதற்கான நிதியினை திரட்டும் என அறிக்கை கூறுகிறது.
இது நடைமுறை சாத்தியமற்றது.
  பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் என்ற பெயரில் உள்ளூர் அரசியல்வாதி பள்ளி நிர்வாகத்தில் தலையிடு வதையும், பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெற்றோரிடம் (கட்டாய) கட்டண வசூல் செய்வதையும் நடைமுறையில் பார்க்கிறோம். அனைத்துப் பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதோடு, பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பினை மேம்படுத்திட மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்வதே இதற்குத் தீர்வு. அதன் மூலம் மட்டுமே தரமான கல்வியை உத்தரவாதப்படுத்த முடியும்.

தாய்மொழி வழிக் கல்வி
இந்த அறிக்கை எட்டு வயதிற்குள்ளான குழந்தை களுக்கு தாய் மொழி தவிர மூன்று மொழிகளைக் கற்றுத் தரப் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம் கற்கவே சிரமப்படும் நிலையில், கூடுதலாக மூன்று மொழிகள் ஏக காலத்தில் கற்றுக் கொடுப்பதென்பது கடினமானதும் நடைமுறை சாத்தியமில்லாததாகும்.
 பல நாடுகளில், பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழி மட்டுமே. மேலும், அனைத்துப் பாடங்களும் தாய்மொழி வழியே பயிற்றுவிக்கப்படுகிறது.
அது அறிவியல் பூர்வ மானதும் கூட. நம் நாட்டில் தான்
இனியும் பயிற்றுமொழி ஆங்கிலமா? தமிழா? என்ற விவாதம் நடைபெறுகிறது.
கோத்தாரி குழு உள்ளிட்ட பல்வேறு கல்விக் குழுக்கள் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த வரைவறிக்கையில் பயிற்றுமொழி பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

உயர்கல்வியில் தலை கீழ் மாற்றம்
இந்த வரைவறிக்கை உயர்கல்வித்துறையில் பெரும்  விளைவை ஏற்படுத்தும் மாற்றங்களை முன் மொழிந் துள்ளது. உயர்கல்வியில் பல பிரிவுகளாக உள்ள பொதுக் கல்வி, மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில் நுட்பம், கல்வியியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் இனி ஒருங்கிணைக்கப்படவுள்ளது. ஏற்கனவே இதனை நிர்வகித்து வந்த மருத்துவக் கவுன்சில், பார் கவுன்சில், யு.ஜி.சி போன்றவை இனி அந்தந்த துறைகளில் கல்வித் தரத்தினை உத்தரவாதப்படுத்தும் வேலையை மட்டும் செய்யும்.
 உயர்கல்வி முழுமையையும் பிரதம மந்திரி தலை மையில் ராஷ்ட்ரிய ஷிக்‌ஷா ஆயோக் என்ற 20 பேர் கொண்ட அமைப்பு நிர்வகிக்கும். உயர்கல்வி முழுவதையும் ஒரு குடையின் கீழ் மையப்படுத்தவும் முயற்சியாகும் இது.  மேலும், இனி எந்த ஒரு உயர்கல்விப் படிப்பில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்படுத்தவுள்ள தேசிய தேர்வு முகமை இந்த  நுழைவுத் தேர்வுகளை நடத்தும். அனைத்துக் கல்லூரி களுக்கும் தன்னாட்சி வழங்கப்படும். பல்கலைக்கழக இணைவு முறை இனி கிடையாது. அந்தந்தக் கல்லூரிகளே பட்டங்களை வழங்கலாம். கல்லூரிகள் கல்விக் கட்ட ணங்களை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரே கல்வி நிறுவன வளாகத்தில் அனைத்துப்பிரிவு உயர்கல்வி படிப்புகளையும் வழங்கலாம்.
 இத்தகைய பரிந்துரைகள் மூலம், உயர்கல்வியை முழுவதுமாக கார்ப்பரேட் மயமாக்கிட ஏதுவாகும். அடுத்த தாக, இந்திய உயர்கல்வியை சர்வதேச உயர்கல்விச் சந்தை யோடு இணைத்திடும் பரிந்துரை ஒன்றையும் இந்த வரை வறிக்கை கூறியுள்ளது.
இனி அனைத்து இளநிலைப் பட்டப்படிப்புகளும் ஒரே மாதிரி நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். மேலை நாடுகளில், இளநிலை பட்டப்படிப்பு என்பது 4 ஆண்டுகள். இந்திய உயர்கல்வியை உயர்கல்வி உலகச்சந்தையுடன் இணைப்பதற்கான பரிந்துரை இது.
 இந்திய மாணவர்கள் பட்டப்படிப்பினை முடிக்க கூடுதல் ஒரு ஆண்டு படிக்க வேண்டும். அவர்களுக்கு இரட்டைப்பட்டம் வழங்கப்படும்.

மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு
இந்திய அரசியல் சாசனப் பிரிவுகளின் படி, கல்வி மத்திய மற்றும் மாநில அரசுகள் பரஸ்பரம் இணைந்து செய லாற்ற வேண்டிய துறையாகும். ஆனால் இந்த அறிக்கை யில் உள்ள பல அம்சங்கள் கல்வியை மையப்படுத்தும் போக்கிலேயே உள்ளது.
இந்த அறிக்கையை எழுதியவர்கள் அதனை கருத்துக் கேட்பதற்காக பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டு மென்று கூட யோசிக்கவில்லை.
ஹிந்தி பேசாத மாநி லங்களில் நடைமுறையிலுள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக்கொள்கையை திணித்திட முயற்சி நடக்கிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவி நடத்தி வருகிறது.
உயர்கல்வி தொடர்பாக முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் நீட் தேர்வு. கல்வியை மாநிலப்பட்டியலில் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த வரைவறிக்கை மையப்படுத்துதல் என்ற எதிர்த்திசையில் பயணிக்கிறது.

காலாவதியாகும் சமூக நீதிக் கோட்பாடு
இந்த வரைவறிக்கையில், மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் சமூக நீதியைக் காத்திடும் வகையில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இட ஒதுக்கீடு இல்லை யென்றால், பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட மாணவர்கள்  உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பது இயலாததாகிவிடும்.
மேலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் கட்டாய மாதலால், பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது மேலும் பாதிக்கும்.  அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டண நிர்ணயத்தில் தலையிடாது. இதன் காரணமாகவும் பலர் தரமான உயர்கல்வி படிப்பினை பெற முடியாத நிலை ஏற்படும். கல்வி  நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தி லொரு பகுதியை ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை கொடுத்திட அறிக்கையில் கூறப்பட்டிருந் தாலும், அது பெரும் விளைவு ஏதும் ஏற்படுத்தாது என்பதை எல்லோரும் அறிவர்.    தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவறிக்கை ஒரு கொள்கை அறிக்கையே அல்ல. கொள்கை அறிக்கை என்பது சுருங்கச் சொல்லிப் புரிய வைப்பது. 20 -30 பக்கங்களில் சொல்ல வேண்டிய கொள்கை அறிக்கையை 476 பக்கங்களில் சொல்லியதன் மூலம் ஆட்சியாளர்கள் மக்களைக் குழப்பியிருக்கிறார்கள்.
பழைமைவாதக் கருத்தாக்கங்கள், ஆதாரமில்லாத செய்திகள், தவறான வாதங்கள், நிரூபிக்கப்படாத தகவல்கள் போன்றவற்றோடு கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதற்கான வழிமுறைகளையும் இந்த வரைவறிக்கை முன்மொழிகிறது. இந்த அறிக்கையின் பல அம்சங்கள் இந்திய அரசின் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், சமத்துவம், அறிவியல் கண்ணோட்டம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதிக்கும் பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.
 இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் அதன் விழு மியங்கள் மீதும் பற்றுக் கொண்டுள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஒருமித்து இதனை எதிர்த்து வலுவான குரல் எழுப்பிட வேண்டும்.

கட்டுரையாளர் : தேசியச்செயலாளர், அய்பெக்டோ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மோடி மசூதி 
பெங்களூரில் உள்ள முஸ்லிம்கள்  மோடியின் பெயரால் உள்ள மசூதி கட்டடியுள்ளனர் என பொய்யான தகவலை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

பிரதமராக மோடி 2014 ல் பதவியேற்ற நாளில் இருந்தே பொய்யான தகவல்கள் பரப்பப் பட்டு வருகின்றன. 
 அதில் ஒன்று மோடியின் பெயரால் உள்ள மசூதி.  
மோடி மசூதியின் உண்மை பின்னணி தெரியாமல்அப்பொய் செய்தியை படத்துடன் இன்னும் பரப்புகின்றனர்.

உண்மையில் அந்த மசூதி கட்டப் பட்டு 170 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் பிரதமர் மோடியின் வயது 69 மட்டுமே. என்கிறார் அந்த மசூதியின் தலைமை இமாம் குலாம் ரப்பானி.

175 வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் அப்துல் கபூர் மோடி என்பவரால் கட்டப் பட்ட மசூதி இந்த மசூதி, 

அப்துல் கபூரின் பெயருடன் ஒட்டியுள்ள மோடி என்பதை சுட்டி மோடி மசூதி என பெயரிட்டுள்ளனர்.
தற்போது அந்த மசூதி புதுப்பிக்கப் பட்டு புதிதாக தோற்றமளிப்பதோடு அதில் குறிப்பிட்டுள்ள மோடி மசூதி என்பதை சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 1932 - சயாம் (தாய்லாந்து) வரலாற்றின் திருப்புமுனையான, ரத்தமில்லாத ‘1932 புரட்சி’, தாய்லாந்தின் 800 ஆண்டுகால ‘முழுமையான முடியாட்சியை’ முடிவுக்குக்கொண்டுவந்து, ‘அரசியல்சட்ட முடியாட்சியை’ உருவாக்கியது.
1782இல் சயாமில், முதலாம் ராமா அரசரால் சாக்ரி மரபின் ஆட்சி உருவானது. சயாமின் ஒருசில பகுதிகளில் இங்கிலாந்தும், பிரான்சும் ஆதிக்கம் செலுத்தினாலும்கூட, மற்ற தென்கிழக்காசிய நாடுகளைப்போல, சயாம் எந்த மேற்கத்திய நாட்டின் ஆதிக்கத்திற்கும் ஆட்படவில்லை.

 மேற்கத்திய நாடுகளால், கீழை நாடுகள் நாகரிகமடையாத, அறியாமையுடைய, தாழ்ந்த நாடுகளாகச் சித்தரிக்கப்பட்டதால், தங்கள் நாட்டை நவீனமயமாக்குவதற்காக, எளிய மக்களின் பிள்ளைகள் உட்பட ஏராளமானவர்களை மேற்கத்திய நாடுகளில் கல்விபயிலச் செய்தனர் நான்காம், ஐந்தாம் ராமா அரசர்கள்.


அவ்வாறு கல்விகற்றுத் திரும்பியவர்களுக்கு, தங்கள் நாட்டின் நிலை மிகவும் மோசமானதாகத் தெரிந்தது. இங்கிலாந்தில் பட்டம் பெற்றவரான ஆறாம் ராமா அரசர் வஜ்ரவூத், சயாமின் முதல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதுட்பட, பல புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதில் ஒன்று, எளிய மக்களை அதிகாரமிக்க அரச பதவிகளில் அமர்த்தியது.
 இது, அரச குடும்பத்தினரை எரிச்சலுக்குள்ளாக்கியது.
அவர் மறைவுக்குப்பின் அவரின் சகோதரர் பிரஜாதிபோக், ஏழாம் ராமாவாக முடிசூடினார்.
 இவர், ஐந்தாம் ராமாவின் கடைசி(33ஆவது) மகன்(77 குழந்தைகளில் 76ஆவது)!
இவ்வளவு இளவரசர்களின் ஆடம்பர செலவுகளால் அரசின் கருவூலம் காலியாக இருந்தது.
 மக்கள் நலப்பணிகளுக்காக செல்வந்தர்களுக்கு அரசர் வரிவிதித்ததை அரச குடும்பத்தினரே விரும்பவில்லை.

மக்களாட்சியை அமைக்க பிரஜாதிபோக் விரும்பினாலும், பெரும்பகுதி மக்களுக்குக் கல்வியறிவில்லாததால் பயனிருக்காது என்பதால், நிர்வாக அவையை உருவாக்கினார்.
ஆனால், அதனை ஆளும் வர்க்கத்தினரே ஆக்கிரமித்ததுடன், ஏற்கெனவே பதவியிலிருந்த எளியோரையும் வெளியேற்றினர்.
 தங்கள் நாட்டைச் சீரமைக்க, மேற்கத்திய நாடுகளில் படித்துக்கொண்டிருந்தவர்கள் 1927இல் உருவாக்கிய அமைப்பு, கானா ராட்சடான் கட்சியாக(மக்கள் கட்சி) உருவாகி இப்புரட்சியை நடத்தியது.

ஏற்கெனவே, மக்களாட்சி அமைக்க விரும்பியவரான பிரஜாதிபோக், அரசியல் சட்ட முடியாட்சியை ஏற்றுக்கொண்டதால், அன்று மாலையே சயாம் இயல்புநிலைக்குத் திரும்பியது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 23 ஜூன், 2019

உதட்டை தேய்க்கும் அமைச்சர்

  உள்ளங்காலை தேய்த்தாலாவது........
"அரசாணைகளால் மட்டும் எந்த பணிகளும் செய்துவிட முடியாது. 
அந்த ஆணைகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். 
சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரிகளில் இன்னமும் 
 தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. 
ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை."
“பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழு வதும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம்” என்கிறார் முதல்வர் பழனிசாமி.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் 828 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த வருடம் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டே குடிதண்ணீருக்கு அலைகிறோம்?


ஏரிகளை விழுங்கிய முதலைகள்
சென்னைக்கு நீர் ஆதாரமானவை நுங்கம்பாக்கம் ஏரி, (தற்போதைய வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்),
தேனாம் பேட்டை ஏரி,
வியா சர்பாடி ஏரி,
முகப்பேர் ஏரி,
திருவேற்காடு ஏரி,
ஓட்டேரி,
மேடவாக்கம் ஏரி,
பள்ளிக் கரணை ஏரி,
போரூர் ஏரி,
ஆவடி ஏரி,
கொளத்தூர் ஏரி,
இரட்டை ஏரி,
வேளச்சேரி ஏரி,(100  அடி சாலை, ரானே கம்பெனி, பீனிக்ஸ் மால்),
பெரும் பாக்கம் ஏரி.
பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
 கல்லுக்குட்டை ஏரி,
 வில்லிவாக்கம் ஏரி,
பாடியநல்லூர் ஏரி,
வேம்பாக்கம் ஏரி,
பிச்சாட்டூர் ஏரி,
திரு நின்றகூர் ஏரி,
பாக்கம் ஏரி,
 விச்சூர் ஏரி,
 முடிச்சூர் ஏரி,
சேத்துப் பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
 செம்பாக்கம் ஏரி.
சிட்லபாக்கம் ஏரி ,
 போரூர் ஏரி,
மாம்பலம் ஏரி,
 கோடம் பாக்கம் டேங்க் ஏரி,
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்,
ஆலப்பாக்கம் ஏரி,
வேப்பேரி,
விருகம் பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்க ளுக்கான குடியிருப்பு),
கோயம்பேடு சுழல் ஏரி, (கோயம் பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட்,மெட்ரோ ரயில் நிலையம்)
அல்லிக்குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என இப்பட்டியல் இன்னும் நீளூம்.

இவை அனைத்தும் பழைய சென்னையில் இருந்த ஏரிகளாகும்.
அதாவது, 1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன.
 2013 கணக் கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன.
இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை.
இப்போது 96 சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை.
இதை கண்டுபிடித்து மீட்டெடுக்க வேண்டியது முதல மைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமையாகும். அ
ந்தக் கடமையை செய்தாலே குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண  முடியும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்க ளும் நிபுணர்களும்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதிபதிகள் எஸ். மணிக் குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது ‘அரசு ஆணைகள் பிறப்பித்து நிதி ஒதுக்கினால் மட்டும் போதுமா?

 நீர்நிலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தீர்களா?
அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்ற  நீதிமன்ற உத்தரவு நிறை வேற்றப்பட்டதா?
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண இதுவரை மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
 மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?’ என்று  சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆனால் எந்தப் பணியையும் செய்யவில்லை, அப்படி என்றால் எந்த துறை என்ன வேலை செய்கிறது என்பது தெரிய வில்லை என்றும் அரசுக்கு குட்டு வைத்தனர்.
அதோடு நின்றுவிடவில்லை.
அரசாணைகளால் மட்டும் எந்த பணி களும் செய்துவிட முடியாது.
அந்த ஆணைகளை அதிகாரி கள் அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரியை நானே நேரில் சென்று பார்த்தேன். அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புக ளும் அகற்றவில்லை என்று கூறி மக்கள் படும் துயரத்துக்கு சாட்சியாக நின்றார். நீர் மேலாண்மையை இந்த அரசு முறையாக கடைப் பிடிப்பதும் கிடையாது. இதற்கும் ஏராளமான உதார ணங்கள் உள்ளன.

 24 மாநிலங்களில் நீர் மேலாண்மையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் சென்னை, தில்லி, ஐதராபாத், பெங்களூரு உள்பட 21 பெருநகரங்களில் நிலத்தடி நீர் முழுமையாக தீர்ந்து விடும் என்ற அதிர்ச்சித் தகவலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

உட்புகுந்த கடல் நீர்...
நிதி ஆயோக் அறிக்கையில் கூறி இருப்பது போன்ற ஒரு நிலைமை சென்னைக்கு எப்போதும் ஏற்படாது என்று சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜ் அன்றைக்கு கூறினார். சென்னை கடல் சார்ந்த இடம் என்பதால் நிலத்தடி நீர் எப்போதும் பூஜ்ஜியத்திற்கு செல்லாது.
 இங்கே நிலத்தடி நீர் குறைந்தவுடன் கடல் நீர் உள்ளே புகுந்துவிடும்.
பல இடங்க ளில் கடல் நீர் உள்ளே புகுந்து விட்டது.
 ஆனால் கோவை, நாமக்கல் போன்ற பிற பகுதிகளில் நிலத்தடி நீர் முழுமை யாக வற்றி விடுவதற்கு வாய்ப்பு உண்டு என்றார் அவர்.
 ஆனால், தற்போது, சென்னையில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பஞ்சத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. வீட்டின் உரிமையாளர்கள் 300 முதல் 500 அடிவரை போர்வெல் அமைத்தும் பல இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

சென்னை போன்ற நகரங்களில் நிலத்தடியில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் மிகப்பெரிய சூழலியல் சீர்கேடு களுக்கு வழி வகுத்து விட்டது.
இது கடந்த 25 ஆண்டுக ளாக இருந்து வரும் அச்சுறுத்தல். சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் 1076 கிலோ மீட்டர் கடல் பகுதி முழுக்க இருக்கி றது.
ஏற்கனவே நாகப்பட்டினத்தில் கடல் நீர் உள்ளே வந்து விட்டது.
சென்னையில் மரக்காணம் வரையிலும் கடல் நீர் உள்ளே வந்து விட்டது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும், இதிலிருந்து தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.


சுரண்டுவதற்கே திட்டங்கள்!
நிலத்தடி நீர் பிரச்சனையில் இருந்து சென்னை மக்கள் தப்பிக்க என்னதான் வழி?
ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை மீட்டெடுக்க வேண்டும்.
 அப்போதுதான் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியும்.

சென்னையில் பொழி யும் ஒவ்வொரு மழைத்துளியும் எங்கே செல்கிறது என்பதை  துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுதான் நிலத்தடி நீர் வளத்திற்கான ஒரே தீர்வு.
அரசாங்கத்தால் எவ்வளவு பெரிய திட்டங்கள்  வேண்டுமானாலும் நினைத்த வுடன் முடித்துவிட முடியும். ஆனால், ஒரு ஏரியை அரசால் உருவாக்க முடியுமா?
ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா?
 முடியவே முடியாது.
இவை இயற்கை நமக்கு அளித்தி ருக்கும் செல்வங்கள். அவற்றை இழந்ததற்கான விலையை  இப்போது சென்னை நகரம் அனுபவித்து வருகிறது. என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இது முழுக்க முழுக்க உண்மையாகும்?.

சென்னையில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த தட்டுப்பாடு இயற்கையானது அல்ல. மனிதர்களால், ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கும். ஒவ்வொரு பருவத்தின்போதும் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைப்பதற்கான நீர் மேலாண்மை அறவே கிடையாது.
இதை செய்யத் தவறிய ஆட்சியா ளர்கள், கடல்நீரை குடிநீராக்கும் 450 எம்எல்டி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை கொண்டு வந்தனர்.
இவை அனைத்தும் 60 முதல் 70 விழுக்காடு உற்பத்தி திறன் கொண்ட வையாகும். ஒவ்வொரு நாளும் கடல்நீரை குடிநீராக சுத்தி கரித்து விட்டு மீண்டும் அதிக உப்பு கலந்த நீரை கடலிலேயே விடுகின்றனர்.
இதன் மூலம் கரையில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல்வளம் பாதிக்கப்படுவதோடு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. மீனவர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

 விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் அரசின் கணக்குப்படி சுமார் 4100 ஏரிகள்  உள்ளன.
இந்த ஏரிகளில் 150 டிஎம்சி தண்ணீரை சேமிக்க வேண்டும்.
மழை நீரை சேமிப்பதன் மூலமே வெள்ள அபாயத்தை குறைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையின் சூழல் பன்மடங்கு வளரும்.
 கடல்நீர்  சுத்திகரிப்பு மையங்கள் மூலம் கடல் வளமும் பாதிக்காது. குறைந்தது மூன்று வருடங்களுக்கு தண்ணீரைத் தேக்க முடியும். இயற்கையான வழிகளே இவ்வளவு இருக்கின்றன.

முழு பூசணியை....
ஆனால்,இதை எதையும் செய்ய இந்த அரசு தயாராக இல்லை. தலைவிரித்தாடும் வறட்சியால் குடிநீருக்காக சென்னைவாசிகள் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகமே தவித்துக் கிடக்கிறது. வெளியூர்களிலிருந்து தலைநகர் சென்னைக்கு வரும் பயணிகள் தங்குவதற்கான விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன.
 தற்போது, தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் மூடப்பட்டன.

தண்ணீர் பிரச்சனையால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொது மக்கள் பயன்படுத்தும் இலவச மற்றும் கட்டண கழிப்பறைகள் சில மணி நேரமே திறக்கப்படுகிறது.

ரூ.1200க்கு கிடைத்த டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 5 ஆயிரம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை.
அந்தளவுக்கு நிலை மை படுமோசமானதால் தொழிற்சாலைகள், ஐடி நிறுவ னங்கள், சிறு- நடுத்தர உணவகங்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக் ்குறையால் கழிப்பறை மூடப்படுகிறது என்று பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டது.
 குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ‘மதிய உணவு’நிறுத்தப்படுகிறது.
சிரமத்திற்கு மன்னிக்க வும் என வாடிக்கையாளருக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக சென்று கொண்டி ருப்பதால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பலவும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சில நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின் றன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிகளை செய்து முடிக்கும்படி கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் புலம்பு கிறார்கள்.

உதட்டை தேய்ப்போர்...

சென்னை மட்டுமல்லாது திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, கரூர், ஈரோடு, சிவகங்கை, தூத்துக்குடி, விருது நகர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் என ஏராளமான மாவட்டங்களில் குடிநீருக்கு திண்டாடி வரும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
தண்ணீர் லாரிக்கு பின்னால் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
சாலை எங்கும் காலிக்குடங்களுடன் அலைந்து திரிந்து கொண்டே உள்ளனர் மக்கள்.
 ஆனால்  தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை.

தண்ணீர் கேட்டு போராடினால் ‘கேஸ்’ போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என காவல்துறை மிரட்டு கிறது.  இதோடு மட்டுமின்றி, மெட்ரோ வாட்டர் கிடைக்கா மல் லாரி தண்ணீர் பிடிப்பதில் துவங்கும் குழாய் சண்டை, போர்வெல் அமைத்துள்ள உறவினர்கள், அக்கம்- பக்கத்தி னர் வீடுகளுக்கு சென்று ஒரு குடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்காத கோபத்தில் சமூக பிரச்சனைகளும் தலைதூக்கி யுள்ளன.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு என்னதான் செய்யப் போகிறது என்று மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.


ஆனால், "இப்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இயற்கையானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இதை விடக் கடுமையான வறட்சி நிலவியது.
அதையே சமாளித்த ஆட்சி எங்கள் ஆட்சி.
 எதிர்க்கட்சிகள் கூறுவது போல சென்னை மாநகரில் நாளொன் றுக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் எப்போதும் விநியோகம் செய்தது கிடையாது.
அதிகபட்சமாக ஒருமுறை மட்டும் 830 எம்எல்டி வழங்கியி ருக்கிறோம். தற்போது 525 எம்எல்டி தான் வழங்க முடி கிறது. ஆனாலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வில்லை.
 இது அனைத்தும் எதிர்க் கட்சிகள் கிளப்பிய புரளிதான்.
இதுபோன்று தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம்"
 என உள்ளாட்சித்துறை மிரட்டல் விடுக்கிறார்.

 வெற்றுப்பேச்சு பேசி “உதட்டை தேய்க்கும் அமைச்சர் உள்ளங்காலை தேய்த்தாலாவது” சிறுபலன் கிடைக்க வாய்ப்புண்டு.
                                                                                                                                 நன்றி:தீக்கதிர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஷ்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நோவோஸிப்ரிக்ஸில் ஸ்டாலின் சிலையை ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியுள்ளது. 
 யுத்தத்தின் மூலம் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த ஜெர்மனி ஹிட்லரின் நாஜிப் படைகளை வெற்றிகண்ட மே 9 அன்று ஜோசப் ஸ்டாலினின் சிலை நிறுவப்பட்டது.

 ரஷ்யாவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்டாலினின் இதுபோன்ற 10 உருவச் சிலைகள்  நிறுவப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரன் ஸ்டாலினுக்கு ரஷ்ய மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது.

2016 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பின்படி 54 சதவீதமாக இருந்த மக்கள் ஆதரவு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 40 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு
 பறிபோகும் ஆபத்து.!
மோடி அரசானது, ‘இ-பைக்’ (E-Bike) திட்டத்தைக் கொண்டு வரும் முடிவில் தீவிரம் காட்டி வருவதாகவும், இதனால்,ஆட்டோ மொபைல் துறையில், 40 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இவ்விவகாரத்தில் பஜாஜ், டிவிஎஸ் போன்ற பெருநிறுவனங்களே, மோடி அரசின் நடவடிக்கைகளால் கொதித்துப் போயிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, தொழில் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அவர்கள், இ-பைக் திட்டத்தைப் பொறுத்தவரை, ஓரணியில் திரண்டு, நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், மோடி அரசு செய்யும் விஷயங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
தொழிற்துறையினரைப் பொறுத்தவரை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவை ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது இன்னும் முழுமையாக மாறவில்லை.

இந்நிலையில்தான், மோடி அரசு கையிலெடுத்திருக்கும் ‘இ பைக்’ மற்றொருபுதிய பிரச்சனையாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து பெட் ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க, மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல 150 சிசி-க்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாகத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.
 மோடி அரசின் திட்டத்தைஅறிந்த உடனேயே, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள், தங்களின் சிரமங்களைச் சொல்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.“இவ்வாறு தடாலடியாக அரசு இ-பைக் (E-Bike)-க்கை கொண்டு வரநினைப்பது, மக்களுக்கு மட்டும் பெரும் சுமையாக இருக்காது.
ஒட்டு மொத்தஇந்திய ஆட்டோமொபைல் துறையையே தடம் புரட்டிவிடும். இந்த ஆட்டோமொபைல் துறையை நம்பி இருக்கும் 40 லட்சம் ஊழியர்களின் வேலைகள் முழுமையாக பறி போகும்” என டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கொதித்துள்ளார்.

“இந்தியாவில் இ-பைக்குகள் வரலாம், ஆனால் அந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
அப்போது தான் இ-பைக் மாற்றத்தினால் ஏற்படும் லாப நஷ்டங்களை சரிகட்ட முடியும்” என்று கூறியிருக்கும் வேணு ஸ்ரீனிவாசன், “இந்த மாற்றம் நிலையானதாக, நீண்டநாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய டெக்னாலஜி கொண்டதாக இருக்க வேண்டும்” எனவும் கூறி இருக்கிறார்.
“ஏற்கெனவே, இந்திய ஆட்டோமொபைல் துறை, ‘பாரத் ஸ்டேஜ் 6’-க்காக நிறைய செலவு செய்திருக்கிறது; வரும் ஏப்ரல் 2020-இல் இருந்து ‘பாரத் ஸ்டேஜ் 6’ வாகனங்களைத்தான் விற்க வேண்டும் என்பதால், இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, இப்போதுதான் உற்பத்தி ஆலைகளை எல்லாம் மாற்றி அமைத்துள்ளோம்.
அவ்வாறிருக்கும்போது, இப்போது திடீரென இ-பைக் மட்டும் தான் விற்கவேண்டும் என்று சொன்னால் என்னசெய்வது?
என்று ஆட்டோ மொபைல்துறை அனலிஸ்டுகளும் குரலெழுப்பியுள்ளனர்.

“இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 7 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் விற்கின்றன. 150 சிசி-க்கு கீழான இருசக்கர வாகன விற்பனையைக் எடுத்துக் கொண்டால், ஓராண்டுக்கு 1 கோடியே 90 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனை நடக்கிறது.
 இரு சக்கர வாகன விற்பனையில் இருந்து மட்டும் சுமார்
1 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவின் ஜிடிபி கணக்கில் ஏறுகிறது.
அப்படியிருக்க, திடீரென இ-பைக் சட்டம் கொண்டு வந்தால் என்ன செய்வது..?
இந்தியாவில் பெரிய அளவுக்கு, இ-பைக் பயன்பாடு இன்னும் வரவில்லை.

அதையும் மீறி, மிகவேகமாக இ-பைக்குகளை கொண்டு வர, இந்தியஆட்டோமொபைல் துறையில் நமக்குநல்ல அனுபவமோ அல்லது ‘இ-பைக்’-குகளுக்கான தேவையோ இப்போதைக்கு இல்லை.
மேலும், இந்திய மூன்றுசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருப்பது பஜாஜ் ஆட்டோ தான். இந்தஆட்டோக்களில் இயற்கை எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கே போதுமான எரிவாயு நிரப்பும் பங்குகள் இந்தியாவில் இல்லை.
அப்படியிருக்கும்போது, அன்றாடம் மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான சார்ஜிங் பாயிண்டுகளையே ஏற்படுத்தாமல், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் அனைத்தையும் இ-பைக்-க்குகளாக மாற்றப் போகிறோம் என்றால்... எப்படிவிற்க முடியும்?” என்று பஜாஜ் நிறுவனமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
 பீகார் மாநிலத்தின் கிராமமான ஹரிவன்ஷ்பூரில், குடிநீர் மற்றும் அடிப்படை பிரச்சனையை வலியுறுத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதி மக்கள், எங்கள் பகுதி எம்.எல்.ஏக்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5000, எம்.பி மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.15,000 பரிசு அளிக்கப்படும்’ என அறிவிப்பு வெளியிட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் பேசும்போது,
“நாங்கள் தினசரி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
ஆனால் எங்கள் தொகுதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எங்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை. மூளைக்காய்ச்சல் நோய் காரணமாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் எங்கள் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ்வான் 5 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். இந்த அரசியல்வாதிகள் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்.
தேர்தலில் வென்ற பிறகு ஓட்டு போட்டதற்கு நன்றி மட்டும் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் எங்களை மறந்துவிடுகிறார்கள்” என்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 22 ஜூன், 2019

பென்சிலை திருடியிருந்தால் கூடதெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேர் திடீரென பாஜக-வுக்குத் தாவியுள்ள நிலையில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையை ஏவி, பாஜக இவர்களை வளைத்துப் போட்ட உண்மை வெளிவந்துள்ளது .

பாஜகவுக்கு தாவிய தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேரும் தொழி லதிபர்கள் ஆவர். 
இவர்களில் 2 பேர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை சோதனைகளில் சிக்கியவர்கள்.  

பாஜக எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நர சிம்ம ராவ் கடந்த நவம்பர் மாதம், மாநிலங்களவையின் நடவடிக்கை கமிட்டிக்கு கடிதம் ஒன்றை  எழுதியிருந்தார்.

 அதில், தெலுங்கு தேசம் எம்.பி.க்களான சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி இருவரும் ‘ஆந்திராவின் விஜய் மல்லையாக்கள்..’ என்றும், ‘இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி இருந்தார்.

அந்த சி.எம். ரமேஷையும், ஒய்.எஸ். சவுத்ரியையும்தான் பாஜக தற்போது தங்கள் கட்சியில் சேர்ந்து, ‘புனிதவான்களாக’ மாற்றியுள்ளது.
இவர்களில் சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ரெய்டு மூலம், விசாரணையில் சிக்கியிருப்பவர்கள்.
சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானி இடையேயான மோதலிலும் சி.எம்.ரமேஷ் பெயர் அடிபட்டது.

வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக ஒய்.எஸ். சவுத்ரி ஏற்கெனவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்துக்குள் இருப்பவர் ஆவார். 

இந்நிலை யிலேயே அவர்களை வழக்குகளைக் காட்டி அச்சுறுத்தியே  பாஜக தன்பக்கம்இழுந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.காரணம் மாநிலங்கவையில் பாஜக பெரும்பாண்மையை  அதிகரிக்கவேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.

இவ்வாறு தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களை வளைத்ததன் மூலம், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் பாஜக பழிவாங்கி இருப்பதாக கூறப்படுகிறது
.
 ஏனெனில், கடந்த ஆட்சியின்போது, மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சி தெலுங்குதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா ,சிக்கிம்,திரிபுரா என்று மாற்றுக்கட்சியினரை பாஜகவாக்க மாற்ற அமுலாக்கத்துறை,சிபிஐ,மத்திய புலனாய்வுத்துறை மற்றும் நீதித்துறை என அனைத்தையும் அமித்ஷா அடியாட்களாகப் பயன்படுத்துகிறார்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்கள்,எம்.பி கள் வாழ்க்கை வரலாறே அலசப்படுகிறது உள்துறையினரால்.

"பள்ளி காலத்தில் பக்கத்துக்கு பையன் புழுக்கைப்பென்சிலை விளையாட்டாகத் திருடியிருந்தால் கூட அதை வைத்து மிரட்டி கட்சிமாறவைக்கிறார்கள் அமித் ஷாக்கள்,"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்டிப்பாக மராட்டி படிக்கணும்.
மகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இவர்  பாஜக கட்சிக்காரர் .
தேவேந்திர பட்னாவிஸ்


சிபிஎஸ்இ, மற்றும் பன்னாட்டு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள ஐபி பள்ளிகள் இது தொடர்பாக மாநில அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் மராத்தி மொழியைக் கட்டாயப் பாட மாக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்று பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவசேனா எம்எல்ஏ நீலம் கோர்ஹே, பன்னாட்டு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்திமொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து பட்னாவிஸ் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் மராத்தி மொழியை கற்பிப்பதில் பள்ளிகள் சுணக்கம் காட்டி வரு கின்றன.சில பள்ளிகள் இந்தியை கட்டாயமாக்குவதாகவும்,மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாகவும் எங்க ளுக்குத் தகவல்கள் வருகின்றன; எனவே, இதற்கான சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்படும்” என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்தி யைக் கட்டாயப்பாடம் ஆக்கும் மத்திய அரசின் கல்வித்திட்ட முயற்சிக்கு எதிராக, தமிழ்நாடு  மற்றும் தென்மாநிலங்கள் மட்டுமன்றி, பாஜக ஆளும் மகாராஷ்டிரமாநிலத்திலும் போராட்டங் கள் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த பின்னணியிலேயே தான் பாஜக முதல்வராக இருந்த போதிலும் பட்னாவிஸ், மராத்தி மொழி மீது அக்கறைகாட்டியுள்ளார்.
அதை இங்குள்ள அடிமை வம்ச ஆட்சியினர் உணர்வார்களா?
வேடிக்கை என்னவென்றால் தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக அதிமுக ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.
இவருடைய அதிமுகவே அங்கிருந்துதான் வந்தது என்பதையும்,அதில்தான் தான் அமைச்சராக குப்பைக்கொட்டிக்கொண்டிருப்பதையும் மறந்துவிட்டார் ஜெயக்குமார்.
நாற்காலி,ஊழல் மோகம் எப்படியெல்லாம் மனிதர்களை புலம்பவைக்கிறது.?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தன்னைத் தானே.....
தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜா சிங். பாஜக-வைச் சேர்ந்த இவர் மத வெறி மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதில் பெயர் போனவர்.

இந்நிலையில், ராஜா சிங் எம்எல்ஏ, ஹைதராபாத் நகரின் ஜுமீரத் பஜார் என்ற பகுதியிலுள்ள முச்சந்தியில், நள்ளிரவு 1 மணிக்கு, யாருக்கும் தெரியாமல் அவந்தி பாய் லோத் என்ற மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்து அரசியின் சிலையை நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.
 பாஜக-வினரைத் திரட்டி இந்த வேலையைச் செய்துள்ளார்.

 தகவலறிந்து வந்த காவல்துறையினர், அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர்.
ஆனால் சிலையை வைத்தே தீருவோம் என்று பாஜக-வினர், காவல்துறையினருடன் தகராறு செய்து, தள்ளு முள்ளுவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, காவல்துறையினர் தன்னைத் தாக்கி, தலையில் காயம் ஏற்படுத்தியதாக ராஜா சிங் குற்றம்சாட்டினார். தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனையிலும் சேர்ந்தார்.
 பாஜக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்தார்.

ஆனால், ராஜா சிங் காவல்துறையினரால் தாக்கப்படவில்லை; அவரை அவரே கல்லால் அடித்துக் கொண்டு, மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக காவல்துறை ஆணையாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
போலீசார் கூறுவது போலவே, அந்த வீடியோவில், ராஜாசிங் அவராகவே கல்லால் அடித்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம், சிலைப்பிரச்சனையை வைத்து வன்முறையைத் தூண்டிவிட முயன்ற பாஜக எம்எல்ஏ-வின் சதித்திட்டம் அம்பலமாகி இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தத் தேர்தலில் 
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி
 மட்டும் வென்றிருந்தால் 
இந்த விளமபரமே வந்திருக்காது.
  
 முற்றும் திறந்தவரின் யோகா தினம்.